என் மலர்

  சினிமா

  பாலியல் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தும் ஜி.வி.பிரகாஷ் படக்குழுவினர்
  X

  பாலியல் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தும் ஜி.வி.பிரகாஷ் படக்குழுவினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘வாட்ச்மேன்’ படக்குழுவினர், பாலியல் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தியிருக்கின்றனர். #Watchman
  விஜய் இயக்கத்தில் ‘வாட்ச்மேன்’ என்னும் படம் உருவாகி இருக்கிறது. டபுள் மீனிங் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் வரும் 12-ந்தேதி வெளியாக இருக்கிறது. இந்த பட நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசியதாவது:-

  ‘இந்த படம் முழுக்க குழந்தைகளோடு குடும்பமாக ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் வித்தியாசமான முறையில் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். முக்கியமாக பொள்ளாச்சியில் சமீபத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டனர்.

  இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் அந்த நகரின் முக்கிய இடங்களில் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்த இருக்கிறார். வாட்ச்மேன் பொள்ளாச்சி நகரத்தையே கண்காணிப்பார்’.

  இவ்வாறு அவர் பேசினார்.  தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் பேசும் போது, ‘பொள்ளாச்சியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தொடக்கம் தான். இதுபோல பல நல்ல வி‌ஷயங்கள் செய்ய உள்ளோம். கோடைகாலம் என்பதால் ஆங்காங்கே வெயிலில் தவிக்கும் சிறு வியாபாரிகளுக்கு குடை அமைத்து தர உள்ளோம். சென்னை நகரம் முழுக்க கேமரா பொருத்தி கண் காணித்ததால் குற்றங்கள் குறைந்து இருக்கின்றன என்று கேள்விபட்டோம்.

  அதனால் தான் இந்த யோசனை வந்தது. எங்களை பார்த்து பலர் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிசிடிவி கேமரா அமைக்க முன்வந்தால் மகிழ்ச்சி அடைவோம்’ என்றார்.

  நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, ‘நல்ல வி‌ஷயம் செய்கிறீர்கள். நாங்கள் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். பாதுகாப்புக்கு நீங்கள் எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள். என்னால் முடிந்த உதவிகளை நான் செய்வேன். இந்த படம் குழந்தைகளை மகிழ்விக்கும். நாச்சியார், சர்வம் தாளமயம் படங்களுக்கு பிறகு இந்த படம் எனக்கு பெரிய பெயரை ஏற்படுத்தி கொடுக்கும்’ என்றார்.

  வரும் 10-ந்தேதி புதன் கிழமை பொள்ளாச்சியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஜீ.வி. பிரகாஷ், இயக்குனர் விஜய் கலந்துகொள்கிறார்கள்.
  Next Story
  ×