என் மலர்tooltip icon

    சினிமா

    ராம்கோபால் வர்மா இயக்கத்தில் சசிகலா வாழ்க்கை வரலாறு படமாகிறது
    X

    ராம்கோபால் வர்மா இயக்கத்தில் சசிகலா வாழ்க்கை வரலாறு படமாகிறது

    பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சசிகலாவின் வாழ்க்கை படமாக உருவாகி இருக்கும் நிலையில், அதற்கான பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாக வர்மா கூறியிருக்கிறார். #SasikalaBiopic
    தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். ஆந்திராவில் என்.டி.ஆர் வாழ்க்கையை மையமாக வைத்து அவரது மகன் பாலகிருஷ்ணா நடித்து, தயாரித்த படங்களான ‘என்.டி.ஆர் கதாநாயகுடு’ மற்றும் ‘என்.டி.ஆர் மகாநாயகுடு’ 2 படங்களும் படுதோல்வியை சந்தித்தன. இதனை தொடர்ந்து ராம் கோபால் வர்மா தனது இயக்கத்தில் ‘லட்சுமியின் என்.டி.ஆர்’ என்ற படத்தை இயக்கத் தொடங்கினார்.

    பாலகிருஷ்ணா தயாரித்த படத்தில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை நல்லவிதமாக காட்டி இருப்பதாகவும், ஆனால் தான் உண்மைத் தகவல்களை வைத்து இயக்கி வருவதாகவும் ராம்கோபால் வர்மா தரப்பில் தகவல் வெளியானது.

    இதனால் ஆந்திர அரசியல் களத்தில் பெரும் சர்ச்சை உருவானது. ஆந்திராவில் படம் வெளியிட தடை விதிக்கப்பட்டது. ஆந்திராவில் வெளியிடுவது தொடர்பாக ராம்கோபால் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறார்.

    இந்த சர்ச்சை ஒரு பக்கம் இருக்க ராம்கோபால் வர்மா சசிகலா வாழ்க்கை வரலாற்றையும் கையில் எடுத்துள்ளார். ‘அறிவிப்பதில் சந்தோ‌ஷப்படுகிறேன். விரைவில்’ என்று ட்வீட் செய்து அதனுடன் சசிகலா பயோபிக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.


    ராம் கோபால் வர்மாவின் இந்த திடீர் அறிவிப்பு சமூக வலைதளத்திலும் பெரும்சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

    ராம்கோபால் வர்மா 2017-ம் ஆண்டு ‘சசிகலா’ பயோபிக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் அதற்குப் பிறகு பல்வேறு படங்களை இயக்கி வந்ததால், ‘சசிகலா’ பயோபிக் குறித்து எந்த வொரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.

    ராம்கோபால் வர்மா சசிகலா பற்றி கூறும்போது ‘சசிகலா படம், சசிகலாவின் பின்புலம் பற்றிய கதையின் கதையாக இருக்கும். ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலாவின் சிறை அறைக்கு வரும் என நான் நிச்சயமாக நினைக்கிறேன். போயஸ் கார்டன் பணியாளர்கள் சொன்னதின் படி, ஜெயலலிதா, சசிகலாவுக்கு இடையே இருந்த உறவுக்குப் பின் இருக்கும் உண்மை, நினைத்துப் பார்க்க முடியாத அளவு இருக்கிறது. அதை என் படத்தில் காட்டுவேன்’.

    இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்து இருக்கிறார். #SasikalaBiopic

    Next Story
    ×