என் மலர்

  சினிமா

  அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படம்
  X

  அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கவிருக்கும் நிலையில், படம் பெரும்பாலும் அமெரிக்காவில் உருவாகுவதாக கூறப்படுகிறது. #Dhanush #KarthikSubbaraj
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வட சென்னை, மாரி 2 படங்களுக்கு பிறகு அசுரன் படப்பிடிப்பில் தனுஷ் பிசியாக இருக்கிறார்.

  கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இழுபறியில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் ஒருவழியாக தணிக்கை சான்றிதழ் பெற்று திரைக்கு வர காத்திருக்கிறது.  சில மாதங்களுக்கு முன்பு, தனுசை வைத்து கார்த்திக் சுப்புராஜ் ஒரு படத்தை இயக்கப்போவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் இருவருமே வேறு படங்களில் பிசியாகிவிட்டனர். இதனால் அவர்கள் இருவரும் இணைய வேண்டிய படம் கைவிடப்பட்டதாக சில செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படம் கைவிடப்படவில்லை. தனுஷ் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் தற்போது முழுவீச்சில் கதை எழுதி வருகிறார்.

  விரைவில் எழுத்துப் பணிகள் நிறைவுபெற்று ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருக்கிறது. படத்தின் பெரும்பாலான பகுதிகள் நியூயார்க் நகரில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருக்கிறது. #Dhanush #KarthikSubbaraj

  Next Story
  ×