என் மலர்
சினிமா

வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
இம்சை அரசன் படப் பிரச்சனையால் மற்ற படங்களில் நடிக்க முடியாமல் இருக்கும் வடிவேலு, ஏற்கனவே ஒப்பந்தமாகியிருக்கும் படத்திலும் நடிக்க முடியாததால் இயக்குநர் சுராஜ் வடிவேலுவுக்காக காத்திருக்கிறார் #ImsaiArasan #Vadivelu #Suraj
ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது படக்குழு. இது தொடர்பாக வடிவேலு எந்த விளக்கமும் அளிக்காமல் தாமதப்படுத்தியதால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை முடியும் வரை, வேறு எந்தவொரு படத்திலும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியது தயாரிப்பாளர் சங்கம்.

இதன் காரணமாக வடிவேலுவிடம் கதை சொல்லி ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் இந்த பிரச்சினைக்கு எப்போது முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முக்கியமாக இயக்குனர் சுராஜ் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறார்.
விமல், பார்த்திபன், வடிவேலு நடிக்க இவர் இயக்கும் படத்தின் முதல்கட்டப் பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்க தயார் நிலையில் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் இன்னும் வடிவேலு பிரச்சினை தீராததால், தன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க முடியாமல் காத்துக் கொண்டிருக்கிறார். #ImsaiArasan #Vadivelu #Suraj
Next Story






