என் மலர்
சினிமா

இளையராஜா 75 நிகழ்ச்சி - தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான செலவு உள்ளிட்ட கணக்குகளை தாக்கல் செய்ய தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Ilayaraja75 #Vishal #ProducersCouncil
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மனுவில் இளைராஜா நிகழ்ச்சிகான செலவு குறித்த தகவல் ஏதும் இல்லை என்று கூறிய நீதிபதிகள் நாளை மறுநாள் இளைராஜா நிகழ்ச்சிக்கான செலவு உள்ளிட்ட நிகழ்ச்சி சம்பந்தமான கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும் இளைராஜா 75 இசை நிகழ்ச்சியை ஏன் ஒத்திவைக்கக் கூடாது என்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், ஏற்பாடுகள் முடிந்து விட்டதால் நிகழ்ச்சியை நிறுத்த முடியாது என்று தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. #Ilayaraja75 #Vishal #ProducersCouncil
Next Story






