என் மலர்
சினிமா

எல்.கே.ஜி. படத்திற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு - ஆர்.ஜே.பாலாஜி கிண்டல்
ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் எல்.கே.ஜி. படத்தின் போஸ்டர் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், படத்திற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #LKG #RJBalaji #PriyaAnand
ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்.கே.ஜி. நடப்பு அரசியலை கிண்டல் செய்து உருவாகும் இந்த படத்தில் அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபு இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் இருந்து முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது.
தரமான சம்பவம் 1 என்று குறிப்பிட்டு ஆர்.ஜே. பாலாஜி போஸ்டர் ஒன்றை நேற்று வெளியிட்டார். இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ள படம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நினைவுபடுத்துவது போல் அமைந்ததால் அ.தி.மு.க. வினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகி பிரவீன் குமார் டுவிட்டரில் ‘எல்.கே.ஜி’ படம் ரிலீசானால் பாலாஜியின் கட் அவுட்டுக்கு செருப்பு அபிஷேகம் பண்ணப்போவதாக தெரிவித்தார். இந்த டுவீட்டை பார்த்த ஆர்.ஜே. பாலாஜி ’இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா அண்டாவாக செருப்பு அபிஷேகம் செய்யுங்கள்’ என்று பதில் அளித்தார்.
இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா, அண்டவா பண்ணி நம்ம Mass ah காமிங்க...!🤣😎 https://t.co/HkNjFjzr6q
— LKG (@RJ_Balaji) January 23, 2019
இதற்கிடையே சிம்பு ரசிகர்கள் ஆர்.ஜே. பாலாஜியை, அ.தி.மு.க.
நிர்வாகியை மட்டும் கிண்டல் செய்யுங்கள். தேவை இல்லாமல் எங்கள் அண்ணன் சிம்புவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
லியோன் ஜேம்ஸ் இசையில் முதல் பாடல் குடியரஜ தினத்தன்று ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #LKG #RJBalaji #PriyaAnand
Next Story