என் மலர்

  சினிமா

  மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
  X

  மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய சினிமாவையே உலுக்கிய மீ டூ இயக்கம் குறித்து மஞ்சிமா மோகனிடம் கேட்ட போது, தனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றும், இது போன்ற சம்பவங்களை தான் அனுபவித்ததும் இல்லை என்று கூறினார். #ManjimaMohan
  அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகன், தற்போது கவுதம் கார்த்திக் ஜோடியாக தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

  திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடைபெற்று வருவதை எதிர்த்து மீ டூ இயக்கம் உருவாகியுள்ளது. இந்த இயக்கம் வந்த பின் திரைத்துறையில் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த மஞ்சிமா, “ எனக்கு இது பற்றி தெரியாது. இது போன்ற சம்பவங்களை நான் அனுபவித்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை.  இவர்களில் சிலரது அனுபவங்கள் நம்பக்கூடியதாகவும், சிலரது குற்றசாட்டுகள் நம்ப முடியாத அளவிலும் உள்ளன. ஆனால் இதைக் கேட்ட போது பெரும் கொந்தளிப்பே உருவானது” என்று கூறியுள்ளார். இந்தியில் வெளியான குயின் படம் ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் மலையாளத்தில் ஸம் ஸம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. அதில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்குவர உள்ளது. #ManjimaMohan #MeToo #MeTooIndia

  Next Story
  ×