search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியன் 2 படக்குழு
    X

    வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியன் 2 படக்குழு

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Indian2 #KamalHaasan
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‌1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சத்திற்கு எதிராக இந்தப் படம் உருவாகியிருந்தது.

    22 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமல் - ‌ஷங்கர் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

    தனது அரசியல் பணிகளுக்கு இடையே படத்துக்காக உடல் அமைப்பை மாற்றி அமைக்கும் பணியில் கமல் தீவிரம் காட்டி வருகிறார்.

    திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் முடிவடைந்து, படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களையும் தேர்வு செய்துவிட்டனர். கடந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தள்ளிப்போனது. இதற்கிடையே இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனை மறுத்த படக்குழுவினர், இந்தியன்-2 படப்பிடிப்பு வருகிற 18-ந் தேதி தொடங்கும் என்றும் அறிவித்து உள்ளனர். 



    படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் சில வாரங்கள் அங்கு முகாமிட்டு படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். உக்ரைனில் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    இதில் சிம்பு கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். தனக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்றவேண்டாம் என்றும், கதைக்கு என்ன தேவையோ அது இருந்தால் போதும் என்றும் அவர் பெருந்தன்மையுடன் சொன்னதாக படக்குழுவினர் கூறுகிறார்கள். முதல் பாகத்தில் நடித்த நெடுமுடி வேணு சி.பி.ஐ. அதிகாரியாக வருகிறார்.

    இந்தியன் முதல் பாகம் முடிவில் 80 வயது முதியவராக வரும் கமல்ஹாசன் விபத்தில் சிக்கி மாயமாவது போன்றும், வெளிநாட்டில் இருந்து அவர் போன் செய்வது போன்றும் முடித்து இருந்தனர்.

    அதில் இருந்து இரண்டாம் பாகத்தின் கதை தொடங்கும் என்று தெரிகிறது. இந்த படத்திலும் கமல்ஹாசன் வயதானவராகவும், இளைஞராகவும் 2 வேடங்களில் வருகிறார். #Indian2 #KamalHaasan #Shankar #KajalAggarwal

    Next Story
    ×