என் மலர்

  சினிமா

  வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலட்சுமி
  X

  வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலட்சுமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் திருமணம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #Varalakshmi #Rumours
  சிம்பு ஜோடியாக போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானாவர் வரலட்சுமி. பாலா இயக்கத்தில் இவர் நடித்த தாரை தப்பட்டை படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார்.

  தொடர்ந்து விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, மிஸ்டர்.சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் வரலட்சுமி சண்டக்கோழி 2, சர்கார் படங்களில் வில்லியாகவும் நடித்தார். 

  இவரும் விஷாலும் காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுத்தார்கள். தொடக்கத்தில் இதுபற்றி பேசாத வரலட்சுமி, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில்,  நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை.

  விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை என்று கூறியிருந்தார்.


  இந்த நிலையில், வரலட்சுமிக்கு திருமணம் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த வரலட்சுமி, எப்போதும் போல வருடத்தின் இறுதியில் வேலையில்லாத சிலர் எனக்கு திருமணம் என்ற வதந்தியை பரப்பி வருகிறார்கள். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் சினிமாவில் தான் கவனம் செலுத்தப் போகிறன். அடுத்த ஆண்டு பார்க்கலாம். வதந்தியை பரப்புவது யார் என்று எனக்கு தெரியும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

  இதற்கிடையே விஷாலுக்கு ஆந்திர பெண்ணுடன் திருமணம் நடைபெறவிருக்கும் செய்தி வெளியாகி இருப்பதால், இருவரைப் பற்றிய காதல் கிசுகிசுக்ககளும் முடிவுக்கு வந்துள்ளன. #Varalakshmi #Rumours

  Next Story
  ×