என் மலர்

  சினிமா

  8 வருடத்திற்குப் பிறகு தனுஷுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்
  X

  8 வருடத்திற்குப் பிறகு தனுஷுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்காக 8 வருடத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் அவருடன் இணைந்திருக்கிறார். #Dhanush #GVPrakash
  ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

  படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் ஒரு பாடலை நடிகர் தனுஷை பாட வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மேலும் 8 வருடங்களுக்கு தனுஷ் என்னுடைய இசையில் பாடியிருக்கிறார் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார்.

  இதற்கு முன்னதாக காற்று வெளியிடை படத்தின் நாயகி அதிதி ராவை ஒரு பாடலை பாட வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #Jail #GVPrakashKumar #Dhanush
  Next Story
  ×