search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மீடூ இயக்கம் உள்நோக்கம் கொண்டது - மோகன்லால்
    X

    மீடூ இயக்கம் உள்நோக்கம் கொண்டது - மோகன்லால்

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால், மீடூ இயக்கம் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார். #Mohanlal #Metoo
    தமிழ் திரையுலகில் பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது மீ டூ புகார் கூறியதை அடுத்துப் பரபரப்பானது. அதே போல் கேரள திரையுலகிலும் நடிகை ஒருவர் கடத்தப்பட்ட விவகாரத்திலிருந்து அங்கிருக்கும் நடிகைகள் திரையுலகில் பெண்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகள் பற்றி பேசி வருகின்றனர்.

    இந்நிலையில், மீ டூ விவகாரம் குறித்து கருத்துக் கூறியுள்ளார் நடிகர் மோகன்லால். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட மலையாள திரையுலகம் வரும் டிசம்பர் 7ஆம் தேதி துபாயில் கலை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிகழ்விற்கான ஏற்பாடு வேலைகளுக்காக துபாய் சென்றுள்ள நடிகர் மோகன்லால் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மீ டூ விவகாரம் பற்றி பேசும் போது, “மலையாள சினிமா உலகில் இதுபோன்ற பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீ டூவை ஒரு இயக்கமாக நீங்கள் நினைக்கக் கூடாது. அது உள்நோக்கம் கொண்டது. அது ஒரு டிரெண்ட். பாலியல் குற்றம் சொல்வது ஒரு பே‌ஷனாக மாறிவிட்டது. எந்த ஒரு சிக்கலுக்கும் ஒரு ஆயுட்காலம் உண்டு. பாலியல் சச்சரவுகள் திரைப்படங்களில் மட்டுமல்ல... வாழ்வில் எல்லா இடங்களிலும் நடக்கலாம்” என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×