என் மலர்
சினிமா

தெலுங்கு படத்தில் பிரசாந்த் - ரசிகர்கள் வருத்தம்
பொயாபதி சீனு இயக்கத்தில் ராம்சரன் நடிப்பில் உருவாகி வரும் ‘வினய விதய ராமா’ படத்தில் பிராந்த் நடித்துள்ளதை பார்த்த அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்துள்ளனர். #VinayaVidheyaRaama #Prasanth
ராம் சரண், கியாரா அத்வானி நடித்த ‘வினய விதய ராமா’ தெலுங்குப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை பொயாபதி சீனு இயக்கி உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசரைப் பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.
படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் டீசரில் இரண்டு இடத்தில் வருகின்றன. அதில் ஒரு காட்சியில் ராம் சரணுக்கு பின்னால் நடந்து வரும் நான்கு பேரில் ஒருவராக பிரசாந்த் வருகிறார். இதைப் பார்த்த பிரசாந்த் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

நடிகர் பிரசாந்த் ’வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை பல வெற்றிப் படங்களில் நடித்த பிரசாந்த் தமிழில் இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #VinayaVidheyaRaama #Prashanth
Next Story






