என் மலர்
சினிமா

சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையில் சரோஜாதேவி வேடத்தில் நடிக்க பிரபல நடிகையிடம் படக்குழுவினர் அணுகி உள்ளனர். #SarojaDevi
மறைந்த ஆந்திர முதல் மந்திரியும் தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை 2 பாகங்களாக எடுக்கின்றனர். இதில் என்.டி.ஆர் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். கிருஷ் டைரக்டு செய்கிறார். என்.டி.ராமராவ் மனைவி பசவதாரம் கதாபாத்திரத்தில் வித்யாபாலன் வருகிறார்.
சந்திரபாபு நாயுடுவாக ராணாவும் கிருஷ்ணாவாக மகேஷ்பாபுவும் நடிக்கிறார்கள். என்.டி.ராமராவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்த சாவித்திரியாக நித்யாமேனனும் ஸ்ரீதேவியாக ரகுல்பிரீத் சிங்கும் நடிக்கின்றனர். இதுபோல் என்.டி.ராமராவ் ஜோடியாக நடித்துள்ள சரோஜாதேவி வேடத்துக்கும் நடிகை தேர்வு நடக்கிறது.
சரோஜாதேவி தமிழ், கன்னடம், தெலுங்கில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அன்றைய காலகட்டத்தில் இந்திய பட உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தமிழில் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன் ஜோடியாகவும் அதிக படங்களில் நடித்தார். அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்றெல்லாம் பட்டங்கள் பெற்றார்.

என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையில் சரோஜாதேவி வேடத்தில் நடிக்கும்படி அனுஷ்காவை படக்குழுவினர் அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அனுஷ்கா தற்போது உடல் எடை குறைப்பில் தீவிரமாக உள்ளார்.
Next Story






