என் மலர்
சினிமா

குத்தாட்டம் போட்டு குருநாதருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விமல், விதார்த், பசுபதி, சோம சுந்தரம்
கூத்துப்பட்டறையின் நிறுவனர் முத்துசாமியின் மறைவுக்கு நடிகர்கள் விமல், விதார்த், பசுபதி, சோம சுந்தரம் உள்ளிட்ட பலர் குத்தாட்டம் ஆடி இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். #NaMuthuSwamy
கூத்துப்பட்டறையின் தந்தை என்று சினிமா பிரபலங்களால் அழைக்கப்படும் ந.முத்துசாமி நேற்று (24.10.18) காலமானார். தற்போது சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலர் இவர் பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள்.
நாசர், பசுபதி, விஜய் சேதுபதி, விமல், பாபிம் சின்ஹா, சோம சுந்தரம், உட்பட பலர் இவரது கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள்.
நேற்றைய தினம் அவர், மறைந்த செய்தி வெளியானதும் அனைத்து நடிகர்களும் முத்துசாமியின் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் கமல்ஹாசன் அவருக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் விமல், பசுபதி, விதார்த் உள்ளிட்ட பலர் குத்தாட்டம் ஆடி அவருக்கு கலை அஞ்சலி செலுத்தினார்கள். நடு ரோட்டில் நடிகர்கள் ஆவேசமாக நடனமாடிய வீடியோ காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.
Next Story