என் மலர்
சினிமா

ஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுப்பு
நிபுணன் படத்தில் தன்னுடன் நடிக்கும் போது அர்ஜுன் தவறாக நடந்துக்கொண்டார் என்று ஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு அர்ஜுன் மறுத்துள்ளார். #Arjun
இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் வருகின்றன.
சமீபத்தில் குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சினி உள்ளிட்டோரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பிரபல நடிகர் அர்ஜுன், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பாலியல் குற்றச்சாட்டை கூறினார்.

இதற்கு நடிகர் அர்ஜுன் தனது இணையதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தாம் எந்த பெண்ணிடமும் இதுவரை தவறாக நடந்ததில்லை எனவும், ஸ்ருதியின் குற்றச்சாட்டின் பின்னணியில் யாரோ இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






