search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஷால் படத்தில் கார்த்தி
    X

    விஷால் படத்தில் கார்த்தி

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிகர் கார்த்தியும் இணைந்து பணியாற்றி இருக்கிறார். #Vishal #Karthi #Sandakozhi2
    விஷால் நடிப்பில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சண்டக்கோழி 2’. முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமியே இதையும் இயக்கியுள்ளார்.

    அக்டோபர் 18-ந்தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தியும் இணைந்து பணியாற்றியுள்ளார். இதுகுறித்து இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சண்டக்கோழி-2”வில் வாய்ஸ் ஓவர் கொடுத்ததற்காகவும் இப்படக்குழுவில் இணைந்தமைக்காகவும் கார்த்திக்கு எனது சிறப்பு நன்றிகள்” எனக் கூறியுள்ளார்.

    இந்தப் பதிவால் கார்த்தி ரசிகர்களும் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடிகர் கார்த்தி வெறும் வாய்ஸ் ஓவர் மட்டும்தான் கொடுத்திருக்கிறாரா அல்லது படத்திலும் நடித்திருக்கிறாரா எனும் விபரம் இனிமேல்தான் தெரியவரும்.

    லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘பையா’ படத்தில் ஏற்கெனவே நடித்திருக்கிறார். விஷாலும் கார்த்தியும் இணைந்து பிரபுதேவா இயக்கத்தில் வெள்ளை ராஜா கறுப்பு ராஜா என்ற படத்தில் நடிக்க இருந்து அந்த படம் கைவிடப்பட்டது.
    Next Story
    ×