என் மலர்
சினிமா
X
குறும்படத்தில் நடிக்கும் விஜய் மகன் சஞ்சய்
Byமாலை மலர்25 Sept 2018 2:51 PM IST (Updated: 25 Sept 2018 2:51 PM IST)
வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடிச் சென்ற விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது குறும்படம் ஒன்றில் நடித்து வருகிறார். #Vijay #Sanjay
விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் நடிகராக களம் இறங்குவார் என்று தகவல் வெளியானது.
அதை உண்மையாக்கும் வகையில் சஞ்சய் நடித்த குறும்படம் ஒன்றின் டீசர் வெளியாகி உள்ளது. விஜய் தான் நடித்த வேட்டைக்காரன் படத்தில் தனது மகன் சஞ்சய்யை ஒரு பாடலுக்கு நடனமாட வைத்தார். திரையுலகில் மகனைக் களமிறக்கும் முயற்சி என்று அப்போது அது பேசப்பட்டாலும் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவில்லை.
தனது நண்பர்களுடன் இணைந்து தற்போது சஞ்சய் குறும்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தக் குறும்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. ‘ஜங்ஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் வீடியோ கேம் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. #Vijay #Sanjay
Next Story
×
X