என் மலர்
சினிமா

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Sivakarthikeyan #PSMithran
விஷாலின் `இரும்புத்திரை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பி.எஸ்.மித்ரன், தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிசியாகி இருக்கிறார்.
இந்த நிலையில், பி.எஸ்.மித்ரனின் அடுத்த படத்தில் உதயநிதி நடிப்பதாகவும், அடுத்து கார்த்தி நடிப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், மித்ரன், அதை மறுத்தார். இந்த நிலையில், மித்ரன் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதிரடி, ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக இந்த படம் உருவாக இருப்பதாகவும், இந்த படத்தை 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது. சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் `சீமராஜா' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #SK15 #Sivakarthikeyan #PSMithran
Next Story






