என் மலர்

  சினிமா

  என்கவுண்டர் போலீசாக அதிரடி ஆக்‌ஷனில் விக்ரம் பிரபு
  X

  என்கவுண்டர் போலீசாக அதிரடி ஆக்‌ஷனில் விக்ரம் பிரபு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் `துப்பாக்கி முனை’ படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #ThuppakkiMunaiTeaser #VikramPrabhu
  ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் `துப்பாக்கி முனை’. இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். 

  60 வயது மாநிறம் படத்தை தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, எல்.வி முத்துகணேஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீசர், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. டீசரில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வலம் வருகிறார் விக்ரம் பிரபு. போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.   துப்பாக்கி சத்தமும், தோட்டாக்களும் டீசர் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன. வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விக்ரம் பிரபுவுடன் ஹன்சிகா நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

  இந்தப் படத்தின் டீசரை, விக்ரம் பிரபு ரசிகர்கள், சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை இந்த டீசரை சுமார் 9 லட்சம் பேர் பார்த்துள்ளனர். #ThuppakkiMunaiTeaser #VikramPrabhu

  Next Story
  ×