என் மலர்

  சினிமா

  மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
  X

  மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமிக்கு மிமிக்ரி கலைஞர் அனூப்புக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. #VaikomVijayalakshmi
  கண் பார்வை இல்லாவிட்டாலும், தனது வசீகர குரலால் ரசிகர்களை ஈர்த்தவர் வைக்கம் விஜயலட்சுமி. இவர் சிறந்த வீணை இசைக்கலைஞரும் ஆவார். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள வைக்கம் பகுதியைச் சேர்ந்த இவருக்கு வயது 35 ஆகிறது. 

  பார்வை குறைபாடு உள்ள விஜயலட்சுமி, தனது தனித்துவமான குரலுக்காகவும், பாடும் திறனுக்காகவும் பலராலும் போற்றப்படுபவர். மலையாளத்தில் ‘செல்லுலாய்டு’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘பாகுபலி’, ‘வீரசிவாஜி’, ‘என்னமோ ஏதோ’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

  இவருக்கும், மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இவர்கள் நிச்சயதார்த்தம் வைக்கத்தில் உள்ள விஜயலெட்சுமி வீட்டில் எளிமையாக நடைபெற்றது. இதில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். வைக்கம் விஜயலெட்சுமி - அனூப் திருமணம் அடுத்த மாதம் அக்டோபர் 22-ந் தேதி வைக்கம் மகாதேவர் கோவிலில் நடக்கிறது.  வைக்கம் விஜயலெட்சுமியின் வாழ்க்கை கதை மலையாளத்தில் சினிமாவாக தயாராகிறது. இந்த படத்தில் கேரளாவில் மீன் விற்று படித்து பிரபலமான கல்லூரி மாணவி ஹனான் நடிக்கிறார். #VaikomVijayalakshmi

  Next Story
  ×