என் மலர்
சினிமா

ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
உச்ச நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல் இருவருமே ஹீரோவாகவே நடிச்சிட்டுப் போகட்டும் என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார். #Rajini #Kamal
சுகாசினி தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டும் நடிக்கிறார். மற்றபடி கணவர் மணிரத்னத்துக்கு பக்கபலமாக இருக்கிறார். ஒரு பேட்டியில் அவரிடம் ரஜினி, கமல் போன்ற ஹீரோக்கள் இன்னும் ஹீரோக்களாகவே நடிக்கிறார்களே என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்திருக்கும் அவர் `16 வயதினிலே' படத்துல கமலோ, ரஜினியோ ஹீரோவா இருந்தாங்களா? ‘அபூர்வ ராகங்கள்’ படத்துல ரஜினி ஹீரோவா இருந்தாரா? இல்லையே... நாகேஷ் நடிச்ச எல்லா படங்களிலும் ஹீரோவா இருந்தாரா? ஹீரோயின் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. இன்னும் சொல்லப்போனா, இப்ப ஹீரோயினா இல்லாததால ரொம்ப சந்தோஷமா இருக்கு.
கலர் கலரா டிரஸ் போட்டுட்டு, நிறைய மேக்கப் போட்டுட்டு டான்ஸ் ஆடுற வேலையெல்லாம் இல்லாம, நடிக்கிற கேரக்டர் கொடுக்கும்போது சந்தோஷமாதான் இருக்கு. கமல்கூட நான் ஜோடியா நடிச்சதில்லை. ரஜினியோடு நடிச்சிருக்கேன்.

மற்றபடி என்னோடு ஹீரோவா நடிச்சு இப்பவும் ஹீரோவா நடிக்கிறவங்களை பார்த்து சந்தோஷமா இருக்கு.
அவங்க ஹீரோவா நடிச்சிட்டுப்போகட்டுமே... பரவாயில்லை. இது வாழ்க்கைதானே...’ என்று பதில் அளித்திருக்கிறார்.
Next Story






