என் மலர்
சினிமா

அவரைவிட சிறப்பாக என்னால் இயங்க முடியாது - சுருதி ஹாசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான சுருதி ஹாசன், தனது அப்பா நான்கு வயதில் இருந்து சினிமா துறையில் இருப்பதால், அவரைவிட சிறப்பாக என்னால் இயங்க முடியாது என்று கூறியுள்ளார். #ShrutiHaasan
சுருதி ஹாசனை கடந்த சிலகாலமாக திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. மும்பையில் நடந்த பேஷன் ஷோவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ருதி, “என்னை நானே, சுய பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது.
அதற்காகத்தான் இந்த ஒரு ஆண்டு இடைவெளி எடுத்தேன். ஒரு ஆண்டு முழுவதும், எந்தப் படங்களிலும் நடிக்காமல் என் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை ஆய்வு செய்தேன். இப்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டேன். என் அப்பாவுடன் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளேன். என் அம்மாவுடன் நடிக்க விரும்புகிறேன்.
நானும் அம்மாவும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை விரைவில் ஆரம்பிக்க உள்ளோம்” என்று கூறியுள்ளார். திறமையான நடிகர்களின் மகள் என்பதால், திரையில் தோன்றும் போது அந்த அழுத்தம் உங்களுக்கு அதிகமாகிறதா என்ற கேள்விக்கு, “இது எனது வாழ்க்கை.

நான் அவர்களைப் பெருமைப்படுத்தவே விரும்பினேன். எனது கடினமாக உழைப்பைக் கண்டு அவர்கள் பெருமைப்படுவதாக அறிகிறேன். நான் எனது சொந்த முயற்சியில் இயங்கிக் கொண்டிருக்கிறேன். அப்பா நான்கு வயதில் இருந்து இந்தத் துறையில் இருக்கிறார். அவரைவிட சிறப்பாக என்னால் இயங்க முடியாது என எனக்குத் தெரியும்” என்று கூறி இருக்கிறார். #ShrutiHaasan
Next Story






