search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் மஞ்சிமா மோகன்
    X

    என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் மஞ்சிமா மோகன்

    தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகும் என்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணாவின் மனைவி வேடத்தில் மஞ்சிமாக மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #NTRBiopic #ManjimaMohan
    சிம்புவுக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். பொதுவாகவே கவுதம் மேனனின் படங்களில் கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளும் பேசப்படுவது வழக்கம். அது இப்படத்தின் வாயிலாக மஞ்சிமா மோகனுக்கும் கிடைத்தது.

    தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் சத்ரியன், உதயநிதியுடன் இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடித்தாலும், அவருக்கான வரவேற்பு அதன்பிறகு பெரிதாக இல்லை. தற்போது அவருக்கு தமிழில் கவுதம் கார்த்திக்குடன் நடிக்கும் தேவராட்டம் படம் மட்டுமே உள்ளது.

    இந்நிலையில் தெலுங்கில் தற்போது உருவாகி வரும் என்.டி.ஆர் வாழ்க்கைப் படத்தில் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணாவுக்கு மனைவியாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உருவாகி வரும் இப்படத்தில் இணைவதன் வாயிலாக தெலுங்கில் தனது இரண்டாவது படத்தில் நடிக்க உள்ளார் மஞ்சிமா.



    ஏற்கனவே அச்சம் என்பது மடமையடாவின் தெலுங்கு பதிப்பான ‘சாகசம் ஸ்வாசகா சகிக்கோ’வின் மூலம் தெலுங்கில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #NTRBiopic #ManjimaMohan

    Next Story
    ×