என் மலர்

  சினிமா

  தாதா இயக்குனருடன் இணையும் ஆரவ்
  X

  தாதா இயக்குனருடன் இணையும் ஆரவ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிக்பாஸ் மூலம் புகழ் ஆரவ் தற்போது ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை தாதா இயக்குனர் இயக்க இருக்கிறார். #Arav
  கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகத் தேர்வானவர் ஆரவ். இவர் ‘ஓ காதல் கண்மணி’, ‘சைத்தான்’ ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது ‘மீண்டும் வா அருகில் வா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

  இந்நிலையில், முதன்முதலாக ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஆரவ். இவர் நடிக்க இருக்கும் புதிய படத்தை ‘தாதா 87’ என்ற படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்.  ‘தாதா 87’ படத்தில், சாருஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தப் படத்தில் ஜனகராஜ் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
  Next Story
  ×