என் மலர்
சினிமா

நடிகர், கிரிக்கெட் வீரர், இப்போ டாக்டரா? தமன்னா ஆவேசம்
ஒருநாள் நடிகர், மற்றொரு நாள் கிரிக்கெட் வீரர், இப்போது டாக்டரா என்று தனது திருமணம் பற்றிய வதந்திக்கு ஆவேசமாக கூறியிருக்கிறார் தமன்னா. #Tamanna
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் விரைவில் டாக்டர் ஒருவரை தமன்னா திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் சமூகவலைத்தளத்திலும் இச்செய்தி பரவலாக பகிரப்பட்டு வந்தது.
இதையறிந்த தமன்னா, தனது சமூக வலைதளத்தில் ஒரு அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஒருநாள் நடிகர், மற்றொரு நாள் கிரிக்கெட் வீரர், இப்போது டாக்டர். இந்த வதந்திகள் நான் ஏதோ கணவரை தேடி கடைகடையாக அலைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆதாரமற்ற செய்திகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்.
நான் இப்போது மகிழ்ச்சியாக தனியாக இருக்கிறேன், என்னுடைய பெற்றோரும் மாப்பிள்ளை தேடும் படலத்தில் இல்லை. இப்போதைக்கு என் காதல் எல்லாம் என்னுடைய சினிமா பணிகள்தான். நான் பட ஷூட்டிங்கில் தீவிரமாக இருக்கும் போது எங்கிருந்து இது போன்ற வதந்திகள் கிளம்புகின்றன என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) July 27, 2018
இது மரியாதைக் குறைவானது. நான் எப்போது அந்தப் பாதையில் செல்வேன் என்பதை நானே உலகிற்கு அறிவிப்பேன். திருமணம் புனிதமானது. எனவே, இது பற்றி இத்தனை யூகங்கள் தேவையில்லை. நான் மீண்டுமொருமுறை உறுதியாகக் கூறுகிறேன்.
என் திருமணம் இப்போதைக்கு இல்லை, இவை அனைத்தும் யாரோ ஒருவரது கற்பனையாகும். வதந்திகள் உடனடியாக நிறுத்தப்பட்டாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தமன்னா பதிவு செய்திருக்கிறார். #Tamannah
Next Story