என் மலர்

  சினிமா

  பியார் பிரேமா காதல் படத்தின் டிரைலர் படைத்த சாதனை
  X

  பியார் பிரேமா காதல் படத்தின் டிரைலர் படைத்த சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் டிரைலர் புதிய சாதனை படைத்திருக்கிறது. #PyaarPremaKaadhal
  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்து வரும் படம் `பியார் பிரேமா காதல்'. 

  இளன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், பாகுபலி படத்தை வெளியிட்ட 'கே புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரிக்கின்றனர். காதல் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 

  இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை ஜூலை 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.  இந்த டிரைலர் வெளியிட்ட 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள். பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையாக இப்படத்தின் டிரைலர் வரவேற்பு பெற்றிருப்பது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. 
  Next Story
  ×