என் மலர்

  சினிமா

  ஆண்ட்ரியாவின் திடீர் முடிவு
  X

  ஆண்ட்ரியாவின் திடீர் முடிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆண்ட்ரியா தற்போது தெலுங்கில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார். #Andrea
  கடந்த ஆண்டு வெளியான ‘அவள்’ திரைப்படத்தை தொடர்ந்து ஆண்ட்ரியா நடிப்பில் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனால் தமிழில் அவர் நடித்த 2 பெரிய படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளன.

  கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த பூஜா குமாருக்கு இணையாக ஆண்ட்ரியாவுக்கும் வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வெளியாகவுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் முதல் பாகத்தை விட அதிகக் காட்சிகளில் நடித்துள்ளார்.

  அந்தப் படத்தில் நாட்டியம் ஆடிய ஆண்ட்ரியா இந்தப் படத்தில் ராணுவ உடையில் வலம் வருகிறார். வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வட சென்னை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   தெலுங்கில் சரண் தேஜ் இயக்கி கதாநாயகனாக நடிக்கும் ‘ஆயுஷ்மான் பவா’ படத்தில், ஜெனிபர் என்ற பாப் பாடகியாக நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் தொடங்கவுள்ள படப்பிடிப்பில் ஆண்ட்ரியா இணையவுள்ளார். தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தவும் முடிவு செய்துள்ளார்.
  Next Story
  ×