என் மலர்
சினிமா

முதல் முறையாக ஒரே திரையில் சல்மான் கானுடன் தோன்றும் கமல்ஹாசன்
முதல் முறையாக நடிகர் கமல்ஹாசனும், பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கானும் ஒரே திரையில் தோன்றுகிறார்கள். #KamalHaasan #SalmanKhan
கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வரூபம் 2’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி உள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படம் இந்தியில் இந்தியில் `விஸ்வரூப் 2' என வெளியாக இருக்கிறது. இயக்குனர் ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிடுகின்றனர்.
இந்தி வெளியீட்டுக்கான புரமோஷன் பணிகளில் தற்போது இறங்கி இருக்கிறார் கமல். இதற்காக சல்மான்கான் தொகுத்து வழங்கும் `தஸ் கா தம்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் கமல்ஹாசன். திரையில் இருவரும் இணைந்து தோன்ற இருப்பது இதுவே முதன் முறை.

ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. #Vishwaroopam2
Next Story






