என் மலர்

  சினிமா

  மீண்டும் காதல் வலையில் திரிஷா? - ட்விட்டர் பதிவால் பரபரப்பு
  X

  மீண்டும் காதல் வலையில் திரிஷா? - ட்விட்டர் பதிவால் பரபரப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தன்னுடைய ட்விட்டரில் செய்த பதிவால் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். #Trisha #TrishaKrishnan
  தமிழ் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. ‘மௌனம் பேசியதே’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் திரைத்துறைக்கு அறிமுகமாகி 15 வருடங்களுக்கு மேல் ஆகியும் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருந்து வருகிறார்.

  தற்போது இவரது நடிப்பில் ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘1818’, ‘96’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படப்பிடிப்பு இல்லாததால் நியூயார்க்கிற்கு சுற்றுலா சென்றார் திரிஷா. அங்கு உயரமான கட்டிடத்தில் நின்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

  இந்நிலையில், தற்போது ‘A table for two ❤️❤️’ என்று பதிவு செய்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், திரிஷா காதல் வலையில் விழுந்து இருப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் பதிவு செய்து வருகிறார்கள். மேலும் யார் அது? என்று கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.  திரிஷா இதற்கு முன் தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவரை காதலித்து, திருமணம் வரை சென்று நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது. 
  Next Story
  ×