என் மலர்

  சினிமா

  எனக்கு கிடைக்காதது என் மகனுக்கு கிடைக்கவே சந்திரமௌலி படத்தில் நடித்தேன் - கார்த்திக்
  X

  எனக்கு கிடைக்காதது என் மகனுக்கு கிடைக்கவே சந்திரமௌலி படத்தில் நடித்தேன் - கார்த்திக்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மிஸ்டர்.சந்திரமௌலி படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தது குறித்து நடிகர் கார்த்திக் மனம் திறந்து பேசினார். #MrChandramouli #Karthik
  தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று புகழப்பட்ட கார்த்திக் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து மகன் கவுதமுக்கு அப்பாவாகவே மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நடித்துள்ளார். அவரிடம் பேசியதில் இருந்து...

  நான் கவுதமை வைத்து படம் இயக்குவதற்காக கதை எழுதிக் கொண்டிருந்தேன். அந்த கதை அவருக்கு தெரியாது. ஒருநாள் என்னிடம் வந்து ஒரு கதை கேட்கறீங்களா? என்று கேட்டார். சம்மதித்தேன். திருவை அறிமுகம் செய்துவிட்டு சென்றுவிட்டார். கதை மிகவும் பிடித்ததால் சம்மதித்தேன். நானும் அப்பாவும் சேர்ந்து நடித்ததில்லை. நான் நடிக்க தொடங்கும்போதே அப்பா மறைந்துவிட்டார். அந்த ஏக்கம் எனக்குள் இருந்தது. தனிமையாகவே என்னுடைய சினிமா வாழ்க்கை வேகமாக ஓடியது. அதை சரி செய்ய என்னுடன் நடிக்கும் மூத்த நடிகர்களுடன் மனம் விட்டு பேசுவேன். இப்போது கவுதமிடம் பேசி அவர்கள் உலகத்தை புரிந்துகொள்கிறேன். நிஜ வாழ்க்கையில் நாங்கள் எப்படியோ அப்படித்தான் படத்திலும் வாழ்ந்து இருக்கிறோம். 8 வயதிலேயே என்னை பிரிந்துவிட்டார். இப்போதுதான் நாங்கள் நெருக்கமாக பேசிக்கொள்கிறோம். கவுதம் நடிப்பதை ரசிக்க தொடங்கி விட்டேன்.

  இல்லை. அதில் அப்பா மகன் உறவே இல்லை. அது முற்றிலும் வித்தியாசமானது.

  மகன் காதல் காட்சிகளில் நடிப்பதை பார்த்து பொறாமை இல்லையே?

  இல்லவே இல்லை. நான் நடிக்கும் போது இப்படி எல்லாம் இல்லையே... மகன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி தான். பொறாமை எல்லாம் இல்லை.  உங்கள் குரலை மிமிக்கிரி பண்ணுபவர்கள் பற்றி?

  நான் நன்றாக தானே பேசுகிறேன். நான் நடிக்கும்போது இப்போது இருப்பது போல டிராக் வைத்து டப்பிங் பேச முடியாது. ஒருமுறை தவறு செய்தால் முழுமையாக பேசவேண்டும். அப்படி டப்பிங் பேசி பேசித் தான் என் குரல் அப்படி ஆனது. சிலர் என் குரலை மிமிக்கிரி செய்யும்போது அப்படியா இருக்கிறது? என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன்.

  இந்த படத்தின் படப்பிடிப்புக்கு நீங்கள் சரியான நேரத்துக்கு வந்ததாக இயக்குனர் கூறினாரே?

  நான் 2002 க்கு முன்பு அப்படி இருந்ததில்லை. 2002க்கு பின் சில படங்களில் அப்படி ஆனது. நான் அப்படி இருந்திருந்தால் இத்தனை படங்களில் நடித்திருக்க முடியுமா? சிலர் என்னை தவறாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

  இதை அவரிடம் தான் கேட்க வேண்டும். 32, 34 வயதில் திருமணம் செய்வார் என நினைக்கிறேன். நாளைக்கே ஒரு பெண்ணை அழைத்து வந்து திருமணம் செய்துகொள்வதாக கூறினாலும் நான் சம்மதிக்க தயாராக இருக்கிறேன்.

  கவுதம் பற்றி அதிகம் கிசுகிசுக்கள் வரவில்லையே?

  அந்த அளவுக்கு சாமர்த்தியமாக இருக்கிறார் போல. #MrChandramouli #Karthik
  Next Story
  ×