என் மலர்
சினிமா

படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த தனுஷ்
பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாரி 2’ படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது நடிகர் தனுஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. #Dhaush #Maari2
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாரி 2’. பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இதில் டோவினோ தாமஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கும் தனுஷுக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக வலது காலிலும், இடது கையிலும் தனுஷுக்கு அடிபட்டு விட்டது. உடனே படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்தார்கள்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராவும் நடிக்கிறார்கள். #Maari2 #Dhanush
Next Story






