என் மலர்

  சினிமா

  அடுத்த ஆட்டத்துக்கு தயார் - புதிய படத்தில் ஒப்பந்தமான சமந்தா
  X

  அடுத்த ஆட்டத்துக்கு தயார் - புதிய படத்தில் ஒப்பந்தமான சமந்தா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கு என முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா அடுத்ததாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #Samantha
  திருமணத்துக்கு பிறகும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் சமந்தா. அவரது நடிப்பில் இந்த ஆண்டின் முதல் பாகத்தில் வெளியான ரங்கஸ்தலம், இரும்புத்திரை, நடிகையர் திலகம் என்று அடுத்தடுத்து 3 படங்களும் வெற்றி பெற்றன. சமந்தா நடிப்பில் அடுத்ததாக சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் மற்றும் யூ-டர்ன் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. 

  இதில் யு-டர்ன் படத்தின் மூலம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் சமந்தாவும் இணைந்திருக்கிறார். மேலும் அடுத்தடுத்த படங்களிலும் கதாநாயகர்களுக்கு ஜோடியாக அல்லாமல், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கவே சமந்தா ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.   இந்த நிலையில், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை ஒன்றில் சமந்தா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரிசாயா இந்த படத்தை இயக்குகிறார். இவர் தனது திரைக்கதையை சமந்தாவிடம் கூற, அவர் உடனே நடிக்கச் சம்மதித்துள்ளார். கதாநாயகியை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. #Samantha

  Next Story
  ×