என் மலர்

  சினிமா

  சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
  X

  சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சூர்யாவின் 38-வது படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க துவங்கி விட்டதாக கூறப்படும் நிலையில், சுதாவுடன் ஜி.வி.பிரகாஷ் எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Suriya38
  சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் சூர்யா 37 படத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். 

  இந்த இரு படங்களை முடித்த பிறகு சூர்யா, `இறுதிச்சுற்று' படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

  சமீபத்தில் அளித்த பேட்டியில், சூர்யா படம் குறித்து பேசிய ஜி.வி.பிரகாஷ், சூர்யா 38 படம் ஆயிரத்தில் ஒருவன் மாதிரி ஒரு வித்தியாசமான கதையாக உருவாக இருப்பதாகவும், இந்த படத்தின் இசையும் ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்றும் கூறியிருந்தார்.  இந்நிலையில், சுதா கொங்காரா, ஜி.வி.பிரகாஷ் எடுத்துக் கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி சூர்யா படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #Suriya38

  Next Story
  ×