என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா

X
வன்முறை சம்பவங்கள் குறித்து பேசாமல் இருப்பது ஏன்? அமிதாப் பச்சனுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி
By
மாலை மலர்2 May 2018 4:46 PM GMT (Updated: 2 May 2018 4:46 PM GMT)

பிரபல மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து பேசாமல் இருப்பது ஏன்? என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார். #PrakashRaj
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட பல மொழிகளில் திரைபடங்களில் நடித்து வருபவர் பிரகாஷ்ராஜ். இவருடைய நண்பரும், பிரபல பத்திரிகையாளருமான கவுரிலங்கேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டு வாசலில் துப்பாக்கியால் சுட்டக் கொல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் ராஜ் பல சமுதாய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
சமீபத்தில் சிறுமிகள் கடத்தல், பலாத்காரம், கொலைகள் அதிகம் நடப்பதற்கு நடிகர் பிரகாஷ் ராஜூம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இவர் தனது சக நடிகர்கள் பலரும் இதை எதிர்க்காமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளை காப்போம் என்னும் மத்திய அரசின் இயக்கத்துக்கு பிரபல மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு நல்லெண்ண தூதராக இருந்து வருகிறார். இருப்பினும் இதுவரை அமிதாப் பச்சன் பெண்கள் பாலியல் குற்றங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து பிரகாஷ் ராஜ் கேள்விகள் கேட்டுள்ளார். இதற்கு பிரகாஷ்ராஜ் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:
நீங்கள் பெரிய மனிதர். உங்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். எதிர்கால தலைமுறை உங்களை பார்த்து சமூகம் அபாயத்தில் இருந்தபோது நீங்கள் ஏன் அமைதி காத்தீர்கள்? என்று உங்களை கேட்கக்கூடாது.
ஐயா, உங்கள் குரலுக்கு அதிகம் மதிப்பு உள்ளது. தயவு செய்து ஏதாவது பேசுங்கள். பேசாமலிருப்பதற்கு தங்கள் வயதும், முதுமையும் ஒரு காரணம் என பொய்யான காரணங்கள் கூற வேண்டாம். நீங்கள் கவிதைகள் அறிந்த அற்புத மனிதர். உங்கள் குரல் தற்போது தேவைப்படுகிறது.
உங்களிடமிருந்தும் யாரும் எதையும் எடுத்துச் செல்ல முடியாது. சொல்லப்போனால் நீங்கள் தான் பலரை காப்பாற்றி வருகிறீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் உதவி புரியவில்லை எனினும் தங்கள் மனதில் உள்ளதை தெரிவிக்கலாமே.
இந்த சம்பவங்களை கேட்கும்போது நான் உடைந்து போகிறேன். இதுபற்றி பேசுவதும் பேசாததும் உங்கள் விருப்பும் என்பது உண்மையே. ஆனால், நீங்கள் இதைப் பற்றி பேசியதெல்லாம் இந்த தகவல்கள் அசிங்கமானது என்பதும் இதைப்பற்றி பேசுவது அசிங்கமானது என்பது மட்டுமே ஆகும்.
இந்த துயருக்கு உள்ளானவள் எனது மகள் அல்லது யாருடைய மகளாகவும் இருக்கலாம். அதை மனதில் கொண்டு சிறிது வாயை திறக்கலாமே?
இவ்வாறு அந்த பதிவில் பிரகாஷ் ராஜ் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
