என் மலர்
சினி வரலாறு
கமலஹாசன் நடித்த "காக்கிச்சட்டை'' படத்தில் வில்லனாக நடித்த சத்யராஜ், மேலும் புகழ் பெற்றார். படத்தில் அவர் பேசிய `தகடு தகடு' வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

"24 மணி நேரம்'' படத்தின் வெற்றிக்குப் பிறகு, சத்யராஜின் வில்லன் நடிப்பை ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதன் பிறகு அவருக்கு `ஜாக்பாட்'டாக அமைந்த படம்தான் "காக்கிச்சட்டை.''
தனது கலையுலக வாழ்க்கை பற்றி சத்யராஜ் கூறியதாவது:-
"சினிமாவில் நான் அதுவரை போராடிய போராட்டம், "24 மணி நேரம்'' படத்திற்குப் பிறகுதான் ஒரு முடிவுக்கு வந்தது.
இந்தப் படத்துக்குப் பிறகு, என் கேரக்டர்களில் நான் பேசவேண்டிய வசனத்தை சொல்லும் இயக்குனர்கள், "இதுதான் வசனம். இதை உங்க ஸ்டைலில் பேசிக்கொள்ளுங்கள்'' என்று சுதந்திரம் கொடுத்து விட்டார்கள். எனக்குத் தெரிந்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா இருவரும்தான் காட்சிக்கேற்ப தங்கள் சொந்த டயலாக்கையும் சேர்த்துக் கொள்வார்கள். இந்த சினிமா ஜாம்பவான்களுக்கு கிடைத்த வாய்ப்பு எனக்கும் கிடைத்தது நிஜமாகவே சந்தோஷமாயிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில், கமல் சார் நடித்த "காக்கிச்சட்டை'' படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் `வில்ல' பாஸாக வரும் நான் என் சகாவிடம், `தகடு எங்கே?' என்று கேட்க வேண்டும். நான் வசனம் பேசிய வேகத்தில் `தகடு தகடு' என்று இரண்டு முறை சொல்லிவிட்டேன்.
இந்தக் காட்சியில் என் நடிப்பை பார்த்த டைரக்டர் ராஜசேகர், "ஆஹா! அற்புதம். இப்படியே பண்ணுங்க'' என்றார். கமல் சாரும் என் நடிப்பை ரசித்துவிட்டு, "இதே மாதிரி படம் முழுக்க பேசினால், நன்றாக இருக்குமë'' என்று கூறினார்.
சொன்னால் நம்பமாட்டீர்கள். ஏற்கனவே அதற்கு முன் எடுத்த சில காட்சிகளை, மீண்டும் "தகடு தகடு'' என்று பேச வைத்து திரும்ப எடுத்தார்கள்.
டைரக்டர் நினைத்திருந்தால் "ஒரு தடவைதானே தகடு என்று சொல்ல வேண்டும். ஏன் இரண்டு முறை சொன்னீர்கள்?'' என்று கூறிவிட்டு `ரீடேக்' எடுக்கலாம். ஆனால், நான் இருமுறை கூறியதை அவர் ரசித்தார்; அதுமாதிரியே பேசவேண்டும் என்றார். படத்தின் கதாநாயகன் கமல் சாரும் என் வசன உச்சரிப்பை ரசித்தார். இதனால் படம் முழுக்க, நான் "தகடு தகடு'' என்று பேசினேன்.
"காக்கி சட்டை'' பெரிய அளவில் வெற்றி பெற்றது. எனக்கும் நல்ல பெயர்.
இந்த சமயத்தில் என்னை சந்தோஷப்படுத்திய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அப்போது சென்னை தேவி காம்ப்ளக்ஸ், உதயம் காம்ப்ளக்ஸ் எல்லா தியேட்டர்களிலுமே நான் நடித்த "காக்கிச்சட்டை'', "நான் சிகப்பு மனிதன்'', "பிள்ளை நிலா'', "நீதியின் நிழல்'' முதலிய படங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
நானும் என்னைத் தேடிவந்த படங்கள் எதையும் விட்டுவிடவில்லை. 6 வருஷ சினிமா பசியாயிற்றே! `காய்ஞ்ச மாடு கம்பங்கொல்லையில் விழுந்த கதையாக', தேடிவந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்று இரவு - பகலாக நடித்துக்கொண்டிருந்தேன்.
ஏற்கனவே நான் எடுத்திருந்த ஒரு முடிவுகூட, என் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது. சின்னச்சின்ன வேடங்களில் நான் போராடிக்கொண்டிருந்தபோது, ஒரு முறை பட அதிபர் சின்னப்பதேவரை சந்தித்தேன். அவர் எங்கள் ஊர்க்காரர். திறமையால் படிப்படியாக வளர்ந்து, சினிமாவில் உயரத்துக்கு வந்தவர். அவரை வீட்டில் சந்தித்து நடிக்க வாய்ப்பு கேட்டேன். அவர் எடுத்த எடுப்பில், "பல்டி அடிக்கத் தெரியுமா?'' என்று கேட்டார். நமக்குத்தான் நாலைந்து படங்களில் பல்டி அடித்த அனுபவம் இருக்கிறதே! அவர் வீட்டு போர்டிகோ முன்பிருந்த சிமெண்ட் தரையிலேயே பல்டி அடித்துக் காட்டினேன்.
நான் அடித்த `பல்டி'யில் திருப்திப்பட்டவர், பிறகுதான் "எந்த ஊரு?'' என்று கேட்டார். "கோயமுத்தூர்'' என்று சொன்னதுதான் தாமதம். "முருகா முருகா'' என்று தலையில் அடித்துக் கொண்டார். "ஏன் முருகா உனக்கு இந்த வேலை?'' என்று கேட்டார்.
நான் அவரிடம், "இல்லீங்க! நாலைஞ்சு படம் நடிச்சாச்சு. இனிமே இதை விட்டுட்டுப் போக முடியாது'' என்றேன்.
சிறிது நேரம் யோசித்தவர், "இப்போது நான் ரஜினியை வைத்து `அன்புக்கு நான் அடிமை' என்று ஒரு படம் எடுத்துக்கிட்டிருக்கிறேன். அதில் மோகன்பாபு வில்லன். அவர்கூட நாலு பேர் வருவாங்க. அதுல ஒருத்தனா உன்னை போடச் சொல்லவா?'' என்று கேட்டார்.
`நம்ம ஊர்க்காரனாக இருக்கிறான். நடிக்க வந்து சிரமப்பட்ட மாதிரி தெரியுது. அதனால் நம்ம படத்திலும் ஒரு வேஷம் கொடுப்போமே' என்று அவர் மனதில் எழுந்த பரிதாப உணர்வின் அடிப்படையில்தான் தனது படத்தில் எனக்கு அப்படியொரு கேரக்டரை சொன்னார்.
அந்த அன்பைப் புரிந்து கொண்ட நானும், "இல்லீங்க! இதுக்கு மேல, கூட்டத்தில் நிற்கிற மாதிரி நடிச்சா சரியா இருக்காது'' என்று சொல்லி பெரிய கும்பிடு போட்டு வந்துவிட்டேன்.
இதை இப்போது எதற்காகச் சொல்கிறேன் என்றால், கூட்டத்தில் ஒரு ஆளாக நடிக்க நான் ஒப்புக் கொண்டிருந்தால் தொடர்ந்து அதுமாதிரி வாய்ப்புகள்தான் வந்திருக்கும். நானும் சினிமாவில் இருந்தபடியே காணாமல் போயிருப்பேன்.
தேவர் சாரிடம் எனக்கு இப்படியான அனுபவம் என்றால், சிவாஜி சாரிடம் வேறு மாதிரி! என் சித்தப்பா துரைராஜ் சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். நான் சினிமாவுக்கு வர விரும்பிய நேரத்தில் சிவாஜி சாரை மட்டும் பார்க்கப் போயிருந்தால், என் சித்தப்பாவிடம் அவருக்கு இருக்கும் உரிமையில் என்னை ஊருக்கு அனுப்பி வைத்திருப்பார். ஆக, நான் யாரென்று சொல்லாமலே படங்களில் ரசிகர்கள் பேசுகிற அளவுக்கு வந்த நேரத்தில், என் 10-வது படமாக அவருடன் `ஹிட்லர் உமாநாத்' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் படத்தின் முதல் இரண்டு நாட்கள் அவரைப் பார்த்ததும் மரியாதை செய்வேன். நடிப்பேன். மூன்றாவது நாள், கொஞ்சம் அவருடன் பேசுவதற்கு கிடைத்த இடைவெளியில் எங்கள் குடும்ப பின்னணி பற்றி அவரிடம் சொல்லிவிட்டேன். "ஊரில் தொழில் பண்ணி ஓஹோன்னு இருக்கலாம். அதை விட்டுட்டு படவா இங்கே என்ன சுத்திக்கிட்டிருக்கே?'' என்று சிவாஜி சார் திட்டினார்.
நான் சிவாஜி சாருடன் நடிக்கும் இந்தப்படம்தான் என் முதல் படம் என்று நினைத்ததால் இந்த திட்டு.
நான் அவரிடம், "10 படம் வரை நடிச்சாச்சு. இனிமேல் வேறு தொழில் பண்ண முடியாது. நான் ஆரம்பத்தில் உங்களை பார்க்க வந்திருந்தா அப்பவே சித்தப்பாவுக்கு தகவல் சொல்லி என்னை ஊருக்கு அனுப்பியிருப்பீங்க. அதனால்தான் உங்களை பார்க்க வராமல் இருந்தேன்'' என்றேன்.
என் கலை ஆர்வத்தை சிவாஜி சாரும் புரிந்து கொண்டார். அதன் பிறகு அவரது படங்களில் எனக்கும் சிபாரிசு செய்யத் தொடங்கிவிட்டார். தொடர்ந்து அவரது `நீதியின் நிழல்', `சிரஞ்சீவி' போன்ற படங்களில் வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. அதன்பிறகு சிவாஜி சாரின் `அன்னை இல்லம்' வீட்டுக்கு உரிமையுடன் போக ஆரம்பித்தேன். சிவாஜி சாரின் பிள்ளைகள் ராம்குமாரும், பிரபுவும் எனக்கு நல்ல நண்பர்களாகி விட்டார்கள். இந்த வகையில் நானும் `அன்னை இல்ல'த்தின் புதல்வன் ஆகிவிட்டேன்.
நடிப்பில் எனக்கென்று ஒரு பாணி அமைந்து, அதையே ரசிகர்களும் ரசிக்கத் தொடங்கியிருந்தபோது, டைரக்டர் மணிரத்னத்தின் `பகல் நிலவு' படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. நான் என் பாணியில் நடிக்கப்போக, அவரோ "எனக்கு இது வேணாம்! வேற மாதிரி வேணும்'' என்கிறார்.
"என்ன இது? இவர் என் கேரியரையே மாற்றி விடுவார் போலிருக்கிறதே! இனி புதுசாக ஒரு படத்தில் வித்தியாசமாக நடிக்கத்தான் வேண்டுமா!'' என்கிற அளவுக்கு மணிரத்னத்தின் அந்த கேரக்டர் என்னை யோசிக்க வைத்தது.
தயாரிப்பாளர் சத்யா மூவீஸ் தியாகராஜனிடம் கூட இது விஷயமாய் என் மனக்குறையை வெளியிட்டேன். அவர் என்னிடம், "இவர் ரொம்பத் திறமையான டைரக்டர்! அவர் கேட்கிற மாதிரி நடிச்சுக் கொடுங்க! அப்புறம் பாருங்க!'' என்றார்.
கதர் சட்டை, கதர் வேஷ்டியில் அரசியல் தலைவராக நான் அந்தப் படத்தில் நடித்தேன். அதாவது மணிரத்னம் சார் விரும்பிய பாணியில் என் நடிப்பு அமைந்தது. படம் வெளியானபோது, மிரட்டலான அந்த கேரக்டரையும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
"ஒரு டைரக்டரின் நடிகன்'' என்ற முறையிலும் நான் வெற்றி பெற்றேன்.''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

டைரக்டர் மணிவண்ணன் இயக்கிய "நூறாவது நாள்'' படத்தில் மொட்டைத்தலை வில்லனாக நடித்து பிரபலமானார் சத்யராஜ். இதைத் தொடர்ந்து, அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. ஒரே ஆண்டில் 27 படங்களில் நடித்தார்.

தனது கலைப்பயணத்தின் வளர்ச்சி குறித்து சத்யராஜ் கூறியதாவது:-
"வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக இருந்த நேரம். அப்படிக் கிடைத்தாலும், திறமையை வெளிப்படுத்த முடியாத சின்ன ரோல்கள்தான் வந்து கொண்டிருந்தன.
இப்படி உள்ளும் புறமுமாய் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜனின் அறிமுகம் கிடைத்தது.
ஆர்.சுந்தர்ராஜன் அப்போது "பயணங்கள் முடிவதில்லை'' என்ற பெரிய வெற்றிப்படம் கொடுத்திருந்தார். என்னை ஒரு நடிகனாக மட்டுமின்றி ஒரே ஊர்க்காரன் (கோவை) என்ற அளவிலும் என்னை அவர் தெரிந்து வைத்திருந்தார். ஒருமுறை கோவைக்கு ரெயிலில் போனபோது, மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம், அடுத்து எடுக்கப்போகும் படத்தின் கதையைக் கூறினார். நான் அந்தக் கதை தொடர்பாக எனது கருத்துக்களைக் கூறினேன். அப்போது அவர், `உங்களுக்கும் நல்ல கதை ஞானம் இருக்கிறதே' என்று சொல்லி வியந்தார். அதோடு, `நீங்கள் ஏன் கதை விவாதத்தில் கலந்து கொள்ளக்கூடாது' என்றும் கேட்டார்.
கதை விவாதத்தில் கலந்து கொண்டால், அதற்கென்று தனி சன்மானம் எதுவும் கிடையாது. என்றாலும் டைரக்டர் சொன்னது என்னை உற்சாகப்படுத்தி விட்டது. என்னாலும் கதையை உருவாக்க முடியும் என்று அவர் கருதியதால், மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்த சந்தோஷ வேகத்தில், சினிமாவுக்கான ஒரு கதையை நானே தயார் செய்தேன். கிரைம் -ஆக்ஷன் கதை. இதே காலகட்டத்தில் எனக்கு நண்பராகி இருந்த டைரக்டர் மணிவண்ணனிடம் இந்தக் கதையை சொன்னேன்.
அவர் என்னிடம் `நன்றாகத்தான் இருக்கிறது. இதை பிறகு திரைக்கதையாக தயார் செய்யலாம். என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதை கேளுங்கள்' என்று கூறி, ஒரு கதையை சொன்னார்.
ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம் ரெயிலில் சொன்ன கதை மோகன், நளினி, விஜயகாந்த் நடிக்க "சரணாலயம்'' என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருந்தது. மணிவண்ணன் சொன்ன கதையை படமாக்க எஸ்.என்.திருமால் முன்வந்தார்.
இப்போது, எனக்குள் நடிப்பைவிட டைரக்ஷன் ஆர்வம் அதிகமாகி விட்டது. ஒரு கதை தயார் செய்யும் அளவுக்கு வந்துவிட்டேனே! இந்தக் கதையை டைரக்ட் செய்து, டைரக்ஷன் பக்கம் போய்விடலாம் என்று நினைத்தேன்.
நண்பர் மணிவண்ணன் சொன்ன கிரைம் சப்ஜெக்ட்தான் "நூறாவது நாள்'' என்ற பெயரில் படமானது. இந்தப்படத்தின் கதை விவாதத்துக்கு மணிவண்ணன் என்னையும் அழைத்திருந்தார். படத்தின் கிளைமாக்சில் ஒரு மொட்டை வில்லன் வருவதாக காட்சி வைத்திருந்தார். இந்த கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தபோது, அந்த வேடத்தில் நான் நடிப்பது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.
நான்தான் டைரக்ஷன் கனவில் இருக்கிறேனே! அதனால் கொஞ்சம் தயங்கவே செய்தேன். விஜயகாந்த் "சரணாலயம்'' படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரிடமும் நான் உருவாக்கிய கதையை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்துப்போய், அதைப் படமாக்கலாம் என்று சொல்லி விட்டார்.
இந்த நேரத்தில்தான் நூறாவது நாள் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தது.
நான் தயங்கினாலும் மணிவண்ணன் விடவில்லை. எனக்கு மேக்கப் போட்டுப் பார்த்தார். "ஆலிவுட் நடிகர் மாதிரி இருக்கீங்க, தலைவா!'' என்றார்.
இதனால் நம்பிக்கை வந்தது, சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு சலூனில் மொட்டை அடித்துக் கொண்டேன். மொட்டை கெட்டப்பில் என் கேரக்டர் படமாக்கப்பட்டபோதே, அந்த கேரக்டர் பேசப்படும் என்பது தெரிந்தது.
படம் வெளியானது. பெரிய வெற்றி. என் மொட்டை கேரக்டரும் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்தப்படம் வெளிவந்த சமயத்தில், ஜெயப்பிரகாஷ் என்பவர் 7 கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர், "நூறாவது நாள் படத்தைப் பார்த்த பிறகே இப்படி கொலை செய்யும் எண்ணம் வந்தது'' என்று சொல்லப்போக, படத்துக்கு இன்னும் `பப்ளிசிட்டி' ஆகிவிட்டது! இந்தப்படம் வெளியான சமயத்தில் குழந்தைகள் என்னை நெருங்கவே பயப்பட்டார்கள்!
இந்த வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் மணிவண்ணன் சூட்டோடு சூடாக அதே நிறுவனத்துக்கு, "24 மணி நேரம்'' என்று ஒரு படம் பண்ணினார். இதிலும் மோகன் -நளினிதான் ஜோடி. ஆனால் இதன் கதையமைப்பு வில்லனுக்காகவே உருவான கதை மாதிரி அமைந்திருந்தது.
இந்தக் கதையில் வரும் வில்லன் கேரக்டரில் முதலில் நான் நடிப்பதாகவே இல்லை. நான் மணிவண்ணன் சாரிடம், "படத்தின் ஜீவனே இந்த வில்லன் கேரக்டர்தான். `வீணை' பாலச்சந்தர் நடித்தால் நல்லா இருக்கும்'' என்றேன்.
மணிசார் என்னைப் பார்த்தார். அவர் என்ன நினைக்கிறார் என்பது புரியாமல், "வீணை பாலச்சந்தர் இல்லாவிட்டால் நம்ம நம்பியார்சாமி நடிக்கட்டும்'' என்றேன்.
அந்த கேரக்டரின் முக்கியத்துவம் தெரிந்து நான் இப்படி சொல்லிக் கொண்டிருக்க, அவரோ, `நீங்களே நடிச்சிருங்க தலைவா' என்றார்.
அந்த கேரக்டரில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என்று அவர் எண்ணினாலும், அவர் என் மீதான அக்கறையில்தான் அப்படிச் சொல்கிறார் என்று நான் நினைத்தேன். அதனால் அவரது விருப்பத்தை மறுக்கும்விதமாக, `தயாரிப்பாளர் திருமால்சார் அதற்கு ஒப்புக்கொள்ளமாட்டார். அந்த அளவுக்கு இது ஹீரோவுக்கு இணையான கேரக்டர்'என்றேன்.
அப்போதும் டைரக்டர் மணிவண்ணன் என்னை விடவில்லை. நேராக தயாரிப்பாளரை போய்ப் பார்த்தவர், `படத்தில் வரும் வில்லன் கேரக்டரில் சத்யராஜை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்' என்று சொன்னார். தயாரிப்பாளரும், `தாராளமாக நடிக்கட்டும்' என்று பச்சைக்கொடி காட்டினார்.
வில்லனுக்கு புது இலக்கணம் வகுத்த அந்த கேரக்டர்தான் என்னை ரசிகர்களிடம் முழுமையாக கொண்டு சேர்த்தது. இந்தப் படத்தில் நான் அடிக்கடி பேசும், "என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே'' என்ற வசனம், பட்டித்தொட்டிவரை கூட பிரபலம் ஆனது.
இந்த படத்துக்குப் பிறகு நான் பிஸி நடிகனாகி விட்டேன். காலை 7 மணி தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை தினமும் 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு பிஸியாகி விட்டேன். 1985-ம் ஆண்டில் மட்டும், நான் நடித்து 27 படங்கள் ரிலீஸ் ஆயின.
இப்படி பிஸியாக இருந்தாலும் நான் உருவாக்கி வைத்திருந்த கதையை `அம்போ' என்று விட்டுவிட முடியவில்லை. டைரக்டர் மணிவண்ணன் தெலுங்கில் படம் இயக்கப்போன நேரத்தில் என் கதையை இயக்கினார். `தர்ஜா தொங்கா' என்ற பெயரில் (தமிழில் `கவுரவத் திருடன்') உருவான அந்தப் படத்தில் சுமன் -விஜயசாந்தி நடித்தார்கள். இந்தப் படத்தில் நான் கதாசிரியர் மட்டுமே. படம் வெளியாகி 6 சென்டர்களில் நூறு நாட்களை தாண்டி ஓடியது.
இந்த வகையில், ஒரு சினிமா கதாசிரியராகவும் ஜெயித்த சந்தோஷம் எனக்கு.
இந்தப்படத்தின் கதைக்காக டைரக்டர் மணிவண்ணன் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தார். தமிழில் `மர்ம மனிதன்' என்ற பெயரில் `டப்' செய்யப்பட்டு வெளியானது.''

டி.என்.பாலு டைரக்ட் செய்த "சட்டம் என் கையில்'' படத்தில் கமலஹாசனுக்கு வில்லன் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்தார்.

முதல் படத்தில் அறிமுகமானது குறித்து சத்யராஜ் கூறியதாவது:-
"டைரக்டர் டி.என்.பாலு என்னைப் பார்த்த பார்வையில் நான் வில்லனாக தெரிந்திருக்கிறேன். மறுநாள் நான் அவரை சந்தித்தபோது, ''விக்கி என்றொரு வில்லன் கேரக்டர் இருக்கிறது. சின்ன கேரக்டர்தான். பண்ணுங்கள்'' என்றார்.
நானும் நடிக்கும் நேரத்துக்காக காத்திருந்தேன். முதல் நாள் எனக்கு டயலாக் எதுவும் இல்லை. மலையில் இருந்து ஓடிவருகிற மாதிரி எடுத்தார்கள்.
இந்தப்படத்தில் டைரக்டர் எனக்கு கொடுத்த முதல் வசனம் "எனக்கு இப்ப நேரம் நல்லா இருக்கு.''
வில்லனுக்குப் போய் இப்படியொரு டயலாக்கா என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கதைப்படி, நான் செய்கிற கொலைக்கு கதாநாயகன் மாட்டிக் கொள்வார். அதனால், "இப்ப எனக்கு நேரம் நல்லா இருக்கு. அதனால்தான் நான் செய்த கொலைக்கு அவன் மாட்டிக்கிட்டான்'' என்ற வசனத்தை தந்து பேசச் சொன்னார்கள்.
ஏற்கனவே டைரக்டர் டி.என்.பாலு என்னிடம், "பைட் தெரியுமா?'' என்று கேட்டபோது, "தெரியும்'' என்று சொல்லிவிட்டேன். நடிக்க வந்த மூன்றாவது நாளே சென்னை வளசரவாக்கத்தில் இருந்த `ஜெய்' தோட்டத்தில் சண்டைக்காட்சி எடுப்பதாகச் சொன்னார்கள். அப்போதே எனக்கு உள்ளுக்குள் உதறல் ஆரம்பித்து விட்டது. நமக்குத்தான் `சினிமா பைட்' தெரியாதே!
அதனால், ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா சங்கரை சந்தித்து உண்மையை சொல்லி விட்டேன். அவரும் பெருந்தன்மையுடன் தனது அசிஸ்டெண்டை என்னுடன் மெரினா பீச்சுக்கு அனுப்பி வைத்தார். அந்த உதவியாளர் எனக்கு பீச் மணலில் `சினிமா பைட்' கற்றுக் கொடுத்தார். அதாவது கதாநாயகனிடம் அடிவாங்குவது போல் நடிக்கும்போது அடிவாங்காமல் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார்! அப்போதுதான், ஸ்டண்ட் காட்சியில் `டைமிங்' எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன்.
மறுநாள் படப்பிடிப்பில் கமல் சாருடன் சண்டைக்காட்சி. முந்தின நாள் பெற்ற பயிற்சி உதவியாக இருந்தது.
பொதுவாக, சண்டைக் காட்சியின்போது `வாட்ச்' போட்டு நடிக்க மாட்டார்களாம். அது எனக்குத் தெரியாது. சண்டைக்காட்சி முடிந்த நேரத்தில், நான் போட்டிருந்த 600 ரூபாய் வாட்ச் உடைந்து போய்விட்டது! கமல் சார் இதைப்பார்த்ததும் `அடடா! உங்களிடம் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். கம்பெனி வாட்சை போட்டுக்கொண்டு சண்டைக்காட்சியில் நடித்திருக்கலாமே'' என்றார்.
இப்படி 600 ரூபாய் வாட்சை உடைத்துவிட்டு, நடிப்புக்கு 500 ரூபாய் `செக்' வாங்கினேன். 1975 வாக்கில் 500 ரூபாய் என்பது பெரிய தொகை. அந்த செக்குக்காக பாங்கியில் கணக்கு ஆரம்பித்தேன். முதல் சம்பளத்தில் அம்மா, சின்னம்மாவுடன் என் 5 தங்கைகளான கல்பனா, ரூபா, நந்தினி, அகிலா, அபராஜிதா ஆகியோருக்கும் புடவைகள் எடுத்துக் கொடுத்தேன்.
முதல் படமே நூறாவது நாள் கண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. இந்த விழாவை சென்னை நிïஉட்லண்ட்ஸ் ஓட்டலில் கொண்டாடினார்கள். கலைஞர் தலைமை தாங்கி விருதுகள் வழங்கினார். எனக்கும் கேடயம் கிடைத்தது.
இதற்கிடையே, தயாரிப்புத் துறையில் நான் பணியாற்றிய "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' படம் ரிலீஸ் ஆயிற்று. இந்தப் படத்தில் சிறு வேடத்தில் நடித்தும் இருந்தேன். அதனால் டைட்டில் கார்டில் நடிகர்கள் பட்டியலில் `நடிகர் சத்யராஜ்' என்று வரும். டெக்னிஷியன் பட்டியலில் அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ரெங்கராஜ் பி.எஸ்.சி. என்று வரும்.
பெற்றோர் எனக்கு வைத்த பெயர் ரெங்கராஜ்தான். சினிமாவில் அறிமுகமாகும் போது, எனக்கு நானாக வைத்துக்கொண்ட பெயர்தான் சத்யராஜ். அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் மகன் பெயர் சத்யன். (இப்போது சத்யனும் நடிகராகி விட்டார்) அந்த `சத்ய'னில் இருந்து `சத்ய'வையும் ரெங்கராஜில் இருந்து `ராஜை'யும் எடுத்துக்கொண்டு சத்யராஜ் ஆகிவிட்டேன்!
நடிகனாக சத்யராஜ் என்றிருந்தாலும், அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ஒரிஜினல் பெயரை கல்வித் தகுதியுடன் போட விரும்பினேன்.
இப்படி ஒரு படத்தில் 2 பெயரில் தனித்தனி பிரிவில் பெயர் வந்தது அனேகமாக எனக்கு மட்டும்தான் இருக்கும்.
"சட்டம் என் கையில்'' படம் நன்றாக ஓடியும், தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. நடிகர் சிவகுமார் சிபாரிசில் "முதல் இரவு'', "ஏணிப்படிகள்'' போன்ற படங்கள் கிடைத்தன. டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் தனது "காதலித்துப்பார்'' என்ற படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.
"முதல் இரவு'' படத்தை தயாரித்த கோவை செழியன் எனக்கு தூரத்து உறவினர். ஆனாலும் நடிகர் சிவகுமார் அண்ணன்தான் என்னை படக்கம்பெனிக்கு அழைத்துச் சென்று வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இதெல்லாம், திருப்பூர் மணி ஆபீசில் தங்கிக்கொண்டு, தயாரிப்பு வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தபோது நடந்தது.
டைரக்டர் பி.மாதவன் அப்போது "தங்கப்பதக்கம்'', "வியட்நாம் வீடு'' என்று சிவாஜி படங்களை இயக்கி, பெரிய பெயரோடு இருந்தார். அவர் சிவகுமார் - ஷோபா நடித்த "ஏணிப்படிகள்'' படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நடிகர் சிவகுமார் அண்ணன் உபயத்தில் ஷோபாவின் அண்ணன் வேடம் எனக்கு கிடைத்தது. அதுவரை நான் நடித்த படங்களில், என்னை `பளிச்'சென்று வெளிப்படுத்திய படம் இதுதான்.
என்றாலும், இந்தப்படத்தில் நடித்த போது இன்னொரு காரியமும் செய்தேன். படத்தின் வில்லன் ஜெய்கணேஷின் "பைக்'' சேஸிங் காட்சியில், அவருக்கு நான் `டூப்' ஆக நடித்தேன். ஏற்கனவே கார் ஓட்டிய அனுபவம் எனக்கு இருந்ததால், இந்த `பைக்' சேஸிங் சிறப்பாக அமைந்தது.
நான் பல போராட்டங்களைக் கடந்துதான் நடிகனானேன். வந்த பிறகும் கிடைத்ததோ வில்லத்தனமான வேடங்களே. அதிலும் `கொஞ்ச நேர' வில்லன்தான் அதிகம்.
`இப்படியான கேரக்டர்களில் நடிக்கத்தான் சினிமா சினிமா என்று அலைந்தாயா!' என்று என்னிடம் உறவினர்கள் வருத்தத்துடன் கூறினார்கள். அவர்களின் `அப்செட்'டுக்கு மத்தியிலும், தொடர்ந்து சினிமாவில் நான் நீடிக்கக் காரணம், அண்ணன் மாதம்பட்டி சிவகுமார்தான். என் வளர்ச்சியில் என் அளவுக்கு அவருக்கும் நம்பிக்கை இருந்தது.
சினிமாவில் சின்னதாய் ஒரு வளர்ச்சி நிலையில் நான் இருந்த சமயத்தில், வீட்டில் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். பெண் பார்க்க அவசியமில்லை. மாதம்பட்டி சிவகுமார் அண்ணனின் அக்கா மகள்தான் எனக்கு மணப்பெண் என்று, ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தார்கள்.
பெண்ணும் பிறந்தது முதலே எனக்குத் தெரிந்தவர். குழந்தை பிறந்து தொட்டிலில் போட்டிருந்தபோது, நான் போய் எட்டிப் பார்த்தேன். அப்போது பெண்ணின் அப்பா (என் மாமா சண்முகசுந்தரம்) என்னிடம், "மாப்பிள்ளை இப்போதே பெண்ணைப் பார்க்க வந்துவிட்டார்'' என்று கிண்டல் செய்திருக்கிறார்.
இப்படி உறவு முறையில் பெண் இருந்தாலும், சினிமாவில் சொந்தக் காலில் நின்ற பிறகுதான் திருமணம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

நாடகத்தில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார் சத்யராஜ். ஆனால் கிடைத்ததோ தயாரிப்புத் துறையில் நிர்வாகம் பார்க்கும் வாய்ப்பு!

இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-
"கோமல் சுவாமிநாதன் இயக்கிய "ஆட்சி மாற்றம்'', "சுல்தான் ஏகாதசி'', "கோடுகள் இல்லாத கோலங்கள்'' என்ற மூன்று நாடகங்களிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த மூன்று நாடகத்திலும் நடித்ததற்காக எனக்கு நாடகம் ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் 30 ரூபாய் தந்தார்கள்.
இந்த 30 ரூபாயில் 10 ரூபாய்க்கு சுவீட் வாங்கினேன். என்னை நாடகத்தில் சேர்த்துவிட்ட நடிகர் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போனேன். நடிப்புக்கு கிடைத்த என் முதல் சம்பளத்தில் அவர் வீட்டுக்கு சுவீட் வாங்கிப்போக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படிச் செய்தேன்.
நான் எம்.ஜி.ஆர். ரசிகன் அல்லவா! எம்.ஜி.ஆர். கொடுத்து கொடுத்து சிவந்த கரம் கொண்டவர். அதனால் 5 ரூபாயை, தர்மத்துக்கு கொடுத்தேன். மீதி பணத்தில் நண்பர்களுடன் சினிமாவுக்கு போனேன்.
நான் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போன காலகட்டத்தில் சூர்யா, கார்த்தி இருவருமே குழந்தைகள். இந்தக் குழந்தைகளும் வளர்ந்து இன்றைக்கு நடிக்க வந்துவிட்டார்கள்! கார்த்தி நடிக்க வரும் முன்பாக ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறார். முதல் மாத சம்பளத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு `சுவீட்' வாங்கிக்கொண்டு வந்தார்! அப்போதுதான் என் முதல் சம்பளத்தில் நான் அவர்கள் வீட்டுக்கு `சுவீட்'வாங்கிப்போனதை சிவகுமார் அண்ணன் தனது பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
நாடகத்தில் அவ்வப்போது 10 ரூபாய் சம்பளம் வந்து கொண்டிருந்தது. பணம் குறைவாக இருக்கிறதே என்று நான் கவலைப்படவில்லை. அண்ணன் மாதம்பட்டி சிவகுமார் கொடுத்த பணம்தான் இருக்கிறதே. அதை முழுவதுமாக செலவழிக்க நாளாகும். அந்த அளவுக்கு, சிக்கனமாகவே என் செலவுப் பட்டியலை வைத்துக்கொண்டேன்.
விவேகானந்தா பிக்சர்ஸ் என்ற கம்பெனி சார்பில் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'' போன்ற படங்களை தயாரித்த திருப்பூர் மணி, அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் நண்பர். அவரது மைத்துனர் கே.பாலு, அந்த நாட்களில் என் நண்பராகி விட்டார். பின்னாளில் இவர் பிரபு நடிக்க மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த "சின்னத்தம்பி'' படத்தை தயாரித்தார். பாலு என்னிடம் சினிமா வாய்ப்பு வரும்போது நிச்சயம் நடிக்க வைப்பதாக சொன்னார்.
அப்போது நான் சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் மாதம் 85 ரூபாய் வாடகையில் ஒரு அறையில் இருந்தேன். என் சைசுக்குதான் அந்த அறை இருக்கும். காலை முழுசாக நீட்டி படுக்க முடியாத அளவுக்கு இருந்தது அந்த அறை.
ஒருநாள் என்னைப் பார்ப்பதற்காக என் தங்கை கல்பனாவும், தங்கை கணவர் அர்ஜ×ன் மன்றாடியாரும் அங்கே வந்துவிட்டார்கள். என் அறையை பார்த்த இருவருமே கண் கலங்கிவிட்டார்கள்.
அவர்கள் அப்படி கலங்கியதற்கு காரணம் இருக்கிறது. கோயமுத்தூரில் உள்ள எங்கள் வீடு 5 கிரவுண்டு கொண்டது. ஊரில் இருந்த செல்வாக்குக்கு தொழில் துறையில் ஈடுபடலாம். உறவு முறையில் யாரைக் கேட்டாலும் தொழில் தொடங்க உதவுவார்கள். இப்படி செல்வமும் செல்வாக்குமாய் இருக்க வேண்டியவன் இப்படி எங்கோ ஆறு அடி ரூமுக்குள் அரைகுறையாக முடங்கிக் கிடக்கவேண்டுமா என்ற கவலை அவர்களுக்கு.
என் சித்தி இந்திராணி (அம்மாவின் தங்கை) சித்தப்பா துரைராஜ். ஊரில் சித்தி குடும்பமும் எங்களுடன்தான் இருந்தது. அம்மா மாதிரியே என் மேல் அன்பு காட்டி வளர்த்தவர் சித்தி. நான் சென்னையில் சரியான இருப்பிடம்கூட இல்லாமல் சிரமப்படுவதாக சித்தப்பாவுக்கு சொல்லப்பட்டதும், அவர் உடனே சென்னைக்கு வந்து விட்டார். "கோவைக்கு வா! உனக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்கிறேன்'' என்று அழைத்தார். நான்தான் சித்தப்பாவிடம் பிடிவாதமாக, "நிச்சயம் சினிமாவில் எனக்கு வாய்ப்பு வரும். அதுவரை முயற்சி செய்கிறேன்'' என்று சொல்லிவிட்டேன்.
நாடகத்திலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் எழுத்தாளர் மணியன் நடத்திய பத்திரிகையில் சிறுகதைக்கு முக ஓவியப்போட்டி அறிவித்தார்கள். ஓரளவு நல்ல முகவெட்டு கொண்டவர்களை மாடலாக ஏற்றுக்கொண்டு அந்த முகங்களை தொடர் கதைக்குள் கொண்டு வருவார்கள். இப்படி பத்திரிகை மூலம் பிரபலமாகும் முகம், நாளடைவில் சினிமா வாய்ப்புக்கும் உரியதாகி விடும்.
சரி, இதாவது நடக்கட்டும் என்று என் மாதிரியே நல்ல வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்த நண்பர் ராஜ்மதனும் நானும் அந்த `ஓவிய முகத் தேர்வுக்கு போனோம். (இந்த ராஜ்மதன் ரஜினிக்கும் மிகச்சிறந்த நண்பர்) ஏராளமான பேர் திரண்டு வந்திருந்த இந்த போட்டியில் நாங்கள் முதல் ரவுண்டிலேயே ஓரம் கட்டப்பட்டோம்.
வெறுத்துப்போயிற்று எனக்கு. ஒரு பத்திரிகையில் படம் வரையக்கூட உதவாத நம் முகத்தை வைத்து சினிமாவில் எப்படி நடிக்கப்போகிறோம் என்றுகூட தோன்றியது. என்றாலும் சினிமா முயற்சியில் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை. முயன்று பார்ப்போம். ஆனது ஆகட்டும் என்ற மனநிலையில் சினிமா வாய்ப்புக்கு முயன்று கொண்டிருந்தேன்.
திருப்பூர் மணி விவேகானந்தா பிக்சர்ஸ் பட நிறுவனம் தொடங்கி சிவகுமாரை கதாநாயகனாக்கி "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' படம் எடுக்க இருந்தார். படத்தில் அவருக்கு ஜோடி சுமித்ரா. சுருளிராஜன் - மனோரமாவும் படத்தில் இருந்தார்கள்.
இந்த படத்துக்கு என்னை புரொடக்ஷன் வேலை பார்க்கச் சொன்னார், திருப்பூர் மணி. சினிமாவுக்கும் எனக்கும் அதுவரை இருந்த இடைவெளியை இந்த வேலை குறைக்கும் என்ற நம்பிக்கையில் வேலையை ஒப்புக்கொண்டேன்.
இந்த சமயத்தில் பிரபல கேமிரா மேனாக இருந்த என்.கே.விஸ்வநாதனிடம் கே.பாலு உதவியாளராகச் சேர்ந்தார். பாலு மூலம் எனக்கு என்.கே.விஸ்வநாதன் சாரின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகம், பிறகு நட்பாகியது. அவரிடம், "நீங்க ஒர்க் பண்ற படங்களில் ஏதாவது ரோல் இருந்தா சொல்லுங்க'' என்று கேட்டுக்கொண்டேன். `சரி' என்றவர், "எதற்கும் உங்களை பல கோணங்களில் படம் எடுத்து போட்டோ ஆல்பம் ரெடி செய்து கொள்ளுங்கள். டைரக்டர் யாராவது அழைக்கும்போது உங்களை வெளிப்படுத்த இந்த ஆல்பம் உதவும்'' என்றார்.
பிரபல கேமிராமேன் இப்படி சொன்னால் போதாதா? உடனே "ஸ்டில்ஸ்'' ரவியிடம் விஷயத்தை சொல்லி, படங்கள் எடுத்தேன். அவர் போட்டுக்கொடுத்த படங்களை பார்த்ததும் நொந்துபோனேன். புகைப்பட கோணத்தில் என் படம் படுகேவலமாக இருந்தது. இந்த படங்களை சினிமா கம்பெனியில் கொண்டு போய் காட்டினால் கிடைக்கிற வாய்ப்பும் கிடைக்காது என்பது தெளிவாக புரிந்தது. அதனால் அந்தப் படங்களை தூர எறிந்துவிட்டு, பட சான்ஸ் தேடுவதை தொடர்ந்தேன். ஒருவேளை என் உயரம், அதற்கான பர்சனாலிட்டியை பார்த்துகூட ஒரு வாய்ப்பு வரலாம். போட்டோவைக் கொடுத்து, அதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்!
டைரக்டர் டி.என்.பாலு அப்போது "சட்டம் என் கையில்'' என்ற படத்தை இயக்கினார். கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம். அந்த படத்தில் ஒரு சின்ன ரோல் இருப்பதாக கேமராமேன் என்.கே.விஸ்வநாதன் சார் என்னை அழைத்துப் போனார்.
அப்போது ஏவி.எம். ஐந்தாவது புளோரில் "சட்டம் என் கையில்'' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கமல் - ஸ்ரீபிரியா நடிக்க ஒரு பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார், டைரக்டர்.
பாடல் காட்சியை முடித்து விட்டு என்னை அழைத்தார், டி.என்.பாலு. அப்போதுதான் கமலஹாசனை முதன் முதலாக நேரில் பார்த்தேன். "இவ்வளவு அழகாய் இருக்கிறாரே. இவரெல்லாம் நடிக்கும்போது நாமும் ஊரில் இருந்து நடிக்க வந்திருக்கிறோமே!'' என்று எனக்குத் தோன்றியது.
என்னைப் பார்த்த டைரக்டர், போட்டோ எடுத்துப் பார்க்கவில்லை (பார்த்திருந்தால் அவ்வளவுதான்) என்னிடம், "கார் ஓட்டத்தெரியுமா?'' என்று கேட்டார். ஊரில் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்ததால் "தெரியும் சார்'' என்றேன்.
அப்போதே மனசுக்குள் ஒரு பயம். "நடிக்கத் தெரியுமா?'' என்று கேட்காமல், "கார் ஓட்டத் தெரியுமா?'' என்று கேட்கிறாரே, என்ன அர்த்தம்? ஒருவேளை படக்கம்பெனிகளுக்கு கார் ஓட்டும் டிரைவராக தேர்வு செய்யப் போகிறாரோ என்னவோ என்று உள் மனதில் உதறல் ஆரம்பித்தது.
ஆனால் டைரக்டர் அடுத்த கேள்வியாக "பைட் (சண்டை) தெரியுமா?'' என்று கேட்டு உடனடியாக என் டென்ஷனை குறைத்தார். உடனே நான் "நான் `கராத்தே'யில் பிளாக் பெல்ட் சார்'' என்றேன்.
உண்மையில் புரூஸ்லி நடித்து அப்போது வெளிவந்திருந்த "எண்டர் தி டிராகன்'' படத்தை பார்த்த பிறகு, எல்லாருக்கும் வருகிற `கராத்தே' ஆசை எனக்கும் வந்தது. அதனால் ஒரு ஆறு மாத காலம் கராத்தே கற்றுக்கொண்டேன். ஆனால் `பெல்ட்' எல்லாம் வாங்கவில்லை. அந்த வகையில் டைரக்டரிடம் சொன்னது மட்டும் பொய்.
"டயலாக் பேசுவியா?'' டைரக்டரின் அடுத்த கேள்வி.
"பேசுவேன் சார்!''
"சின்னதாய் ஒரு வில்லன் வேஷம் இருக்கு. நாளைக்கு காலையில் வந்துரு'' என்றார், டைரக்டர்.
நாளை முதல் சினிமாவில் நடிகனாகப் போகும் சந்தோஷத்தில் அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.''

75 படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ், பாரதிராஜாவின் "கடலோரக் கவிதைகள்'' மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். 100-க்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்ததுடன், "வேதம் புதிது'', "பெரியார்'', "ஒன்பது ரூபாய் நோட்டு'' போன்ற படங்களில் மாறுபட்ட குணச்சித்திர வேடங்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.
75 படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ், பாரதிராஜாவின் "கடலோரக் கவிதைகள்'' மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். 100-க்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்ததுடன், "வேதம் புதிது'', "பெரியார்'', "ஒன்பது ரூபாய் நோட்டு'' போன்ற படங்களில் மாறுபட்ட குணச்சித்திர வேடங்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். படிக்கிற நாட்களில் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தவர் சத்யராஜ்.
எம்.ஜி.ஆர். ரசிகர், எப்படி நடிகரானார்? அதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-
"அடிப்படையில் எங்களுடையது விவசாயக் குடும்பம். கோவை டவுன் பகுதியில் எங்கள் வீடு இருந்தது. அப்பா டாக்டராக இருந்தார். என் சிறு வயதில் அப்பா -அம்மா இருவரும் கருத்து வேறுபாட்டில் பிரிந்து விட்டார்கள். நான் வளர்ந்ததெல்லாம் அம்மாவிடம்தான்.
சிறு வயதில் சினிமாதான் என் பொழுதுபோக்கு. அந்த வயதில் அதிகம் பார்த்தது எம்.ஜி.ஆர். படங்கள்தான். தனது வீரதீர சாகச நடிப்பால் என்னை எம்.ஜி.ஆர். வெகுவாகக் கவர்ந்து விட்டிருந்தார்.
நான் 5-வது படிக்கும்போது எம்.ஜி.ஆர். நடித்த "வேட்டைக்காரன்'' படத்தை எத்தனை தடவை பார்த்தேன் என்பது எனக்கே நினைவில்லை.
பள்ளிப்படிப்பு முடித்ததும் கோவை அரசு கலைக்கல்லூரியில் "பி.எஸ்.சி''யில் சேர்ந்தேன். இதில் `பாட்டனி'யை சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தேன். படிப்பில் பெரிசாக சொல்ல ஒன்றுமில்லை. பாஸ் பண்ணினதே பெரிய சாதனைதான்!
அப்போது, அந்தப் படிப்புக்கு அதிகபட்சமாக மாதம் 250 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கும். ஆனால், அதுகூட கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. வேலை பார்த்துத்தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இல்லை. ஏற்கனவே, வசதியான குடும்பம். ஆனால் என் சின்ன வயசில், குடும்ப சூழல் காரணமாக நிலபுலன்களையெல்லாம் விற்றுவிட்டதால், விவசாயத்தில் இறங்க முடியாத நிலை.
எனக்கு அண்ணன் முறையான `மாதம்பட்டி' சிவகுமார் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்தார். இவர் தவிர, எங்க ஊரில் இருந்து நடிக்க வந்தவர் நடிகர் சிவகுமார். இவர்கள் இரண்டு பேரும் தான் எனக்குத் தெரிந்த சினிமா சம்பந்தப்பட்டவர்கள்.
நான் பார்த்த முதல் ஷூட்டிங்கே சிவகுமார் அண்ணன் நடிச்ச "அன்னக்கிளி'' படம்தான். பண்ணாரியம்மன் கோவிலை அடுத்த `தெங்கு மரகடா' என்ற கிராமத்தில், "அன்னக்கிளி'' படத்தின் ஷூட்டிங் நடந்தது. நான் என் நண்பர்கள் ஏழெட்டு பேருடன் ஷூட்டிங் பார்க்கப் போனேன். பிரியாணி, சிக்கன் வறுவல் என்று பார்சல் கட்டி எடுத்துச் சென்றோம். அந்த ஊரிலோ, சுற்று வட்டாரத்திலோ லாட்ஜ் வசதியெல்லாம் கிடையாது. என்றாலும் நாங்களும் அங்கிருந்த படப்பிடிப்பு குழுவினரோடு சேர்ந்து 2 நாள் தங்கினோம்.
சிவகுமார் அண்ணனும் அப்படி அங்கே ஒரு வீட்டில் தங்கியிருந்தார். படப்பிடிப்பு இடைவேளையில் அவரை சந்தித்துப் பேசியபோது, பலநாள் பார்த்து பழகியது போல் பேசினார். நம்ம ஊரில் (கோவை) இருந்து ஒருத்தர் பெரிய நடிகராக இருக்கிறார் என்ற சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது.
சின்ன வயசிலேயே நன்றாக `மனப்பாடம் பண்ணுகிற ஆற்றல்' எனக்கு இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களைப் பார்த்தால், அதில் வருகிற வசனங்களை அப்படியே கடகட என்று சொல்வேன். டைரக்டர் ஸ்ரீதரின் "காதலிக்க நேரமில்லை'' படத்தில் டி.எஸ்.பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்ற போர்ஷன் எனக்கு ரொம்ப பிடிச்சது. அப்போது அது இசைத் தட்டாகவே வந்தது. வாங்கி கேட்டுக்கேட்டு முழு வசனமும் எனக்கு மனப்பாடம்.
அதோடு நடிகர்கள் எப்படிப் பேசுவார்களோ அதே ஸ்டைலில் `மிமிக்ரி' பண்றதையும் விளையாட்டாய் கற்றுக்கொண்டேன்.என் சினிமா ஆர்வம், வசனம் பேசுகிற அளவுக்கு வளர்ந்து, `மிமிக்ரி'யிலும் முன்னேறியது. இது அண்ணன் மாதம்பட்டி சிவகுமாருக்குள் ஒரு எண்ணத்தை எழுப்பியிருந்தது. "இவன் சினிமாவில் நடிக்கலாம் போலிருக்கிறதே'' என்று கருதியவர், ஒருநாள் என்னிடம் கேட்டும்விட்டார். "வசனம் நல்லா பேசறே! மிமிக்ரியில் ஒவ்வொருத்தரோட மேனரிசத்தையும் கொண்டுவரே! நீ ஏன் சினிமாவுக்கு வரக்கூடாது?'' என்றார்.
அண்ணன் அப்போது சினிமா தயாரிப்பாளராக ஆகாத நேரம். அவரிடம், "அண்ணே! அம்மா ஒத்துக்க மாட்டாங்களே'' என்றேன். அப்ப இருந்த காலகட்டத்துல, சினிமாவுக்குப் போனா பையன் கெட்டுப்போயிடுவான் என்பது அம்மா எண்ணமாக இருந்தது.
"அம்மாவின் அனுமதி பெற்று உன்னை நான் சென்னைக்கு அழைத்துச் செல்கிறேன். முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லையே'' என்று அண்ணன் கூறினார். சொன்னதுபோல அவர்தான் என்னை சென்னைக்கு அழைத்தும் வந்தார். ஒரு `மொபட்' வண்டி வாங்கி என்னிடம் தந்தவர், கையில் 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்தார். "சினிமா கம்பெனிகளில் போய் வாய்ப்பு கேட்க இந்த வண்டியை பயன்படுத்திக்கொள். பணம் தீர்ந்ததும் வாங்கிக்கொள்'' என்றார்.
அன்றைய 1975-ம் ஆண்டுவாக்கில் என்ன தான் அதிகமாய் செலவழித்தாலும் மாதம் 500 ரூபாய்க்கு மேல் செலவாகாது. எனவே, அண்ணன் கொடுத்த 5 ஆயிரம் ரூபாய் எனக்கு மிகப்பெரிய தொகையாக இருந்தது.
நடிகர் சிவகுமார் அண்ணன் சென்னையில்தானே இருக்கிறார். அவரிடம் கேட்டால் சினிமா வாய்ப்பு பற்றிய ஐடியா கிடைக்கும் என்று தோன்றியது. அவரது வீட்டு அட்ரஸ் கண்டுபிடிச்சு போய் பார்த்தேன்.
நான் நடிப்பதற்காக சென்னை வந்து இருப்பதை சொன்னதும், "முதலில் உனக்கு ஒரு வேலை தேடிக்கொள். வேலையில் கிடைக்கிற வருமானம் செலவுக்கு கைகொடுக்கும். வேலை பார்த்துக்கொண்டே நடிக்கவும் முயற்சி செய்யலாம். வெறுமனே சினிமாவுக்கு மட்டும் முயற்சி செய்து, உடனடியாக வாய்ப்பு கிடைக்காவிட்டால் சிரமம். சிலருக்கு ஐந்து வருஷத்துக்குப் பிறகுதான் சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சிலர் 10 வருஷம் தாண்டியும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆகவே முதலில் வேலையை தேடிக்கொள். நானும் எனக்குத் தெரிஞ்ச கம்பெனிகளில் உனக்காக சொல்லி வைக்கிறேன்'' என்றார்.
அப்போது எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் `சேவா ஸ்டேஜ்' நாடகக் குழுவில் இருந்து கோமல் சுவாமிநாதன் பிரிந்து `ஸ்டேஜ் பிரண்ட்ஸ்' என்ற புதிய நாடக குழுவை தொடங்கி நடத்தி வந்தார். அந்த நாடக குழுவில் சிவகுமார் என்னை சேர்த்து விட்டார். சஹஸ்ரநாமத்தின் நாடக குழுவில் இருந்துதான் நடிகர் முத்துராமன், நடிகை தேவிகா இருவரும் சினிமாவுக்கு வந்திருந்தார்கள். எனவே சினிமாவுக்கு முன்னோடியாக நாடகம் இருக்கட்டும் என்று, கோமல் சாரின் குழுவில் சேர்ந்து கொண்டேன்.
அதற்காக ஹீரோ வேடத்தில் நடித்தேன் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். சின்னச்சின்ன கேரக்டர்கள்தான். நாடகம் முடிந்த பிறகு சம்பளமாக பத்து ரூபாய் தருவார்கள். இவர்கள் நடத்திய "கோலங்கள் இல்லாத கோடுகள்'' நாடகத்தில்தான் முதன் முதலாக நடித்து பத்து ரூபாய் சம்பளமும் வாங்கினேன்.
நான் `பி.எஸ்.சி' பட்டதாரிதானே தவிர, சரளமாக ஆங்கிலம் பேச வராது. பெரிய கம்பெனிகளில் இண்டர்வியூவுக்குப் போனால், அவர்கள் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பதில் சொல்ல வேண்டும். இதற்காக வேலை வாய்ப்பை தவிர்த்து வந்தேன். ஆங்கிலத்தில் பேசினால், தப்பும் தவறுமாக பேசி விடுவேனோ என்ற பயம்தான் என்னை ஆங்கில உரையாடலுக்குள் விடாமலேயே வைத்திருந்தது. இப்போதும்கூட அதே நிலைதான்.
சமீபத்தில் கோவாவில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு நான் நடித்த "பெரியார்'' படமும் தேர்வாகி இருந்தது. நானும் போயிருந்தேன். அங்குள்ள நிகழ்ச்சி அமைப்பாளர்கள் என்னிடம், "படத்தில் நடித்தது பற்றி பேசுங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்கள்.
சர்வதேச விழாவில் ஆங்கிலத்தில்தானே பேசியாக வேண்டும். எனக்குத்தான் ஆங்கிலத்தில் சரளமாக பேச வராதே! அதனால் தயங்கினேன். நிர்வாகிகளிடம் உண்மையை கூறினேன். "வேண்டுமானால் ஆங்கிலத்தில் எழுதி மேடையில் படிக்கட்டுமா?'' என்று கேட்டேன். அவர்கள் சரி என்று சொன்ன பிறகு, ஆங்கிலத்தில் எழுதி வைத்துத்தான் மேடையில் படித்தேன்.''

"நண்பா நண்பா'' படத்தில் குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக, அகில இந்திய ரீதியில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது, சந்திரசேகருக்கு கிடைத்தது.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சந்திரசேகர் கூறியதாவது:-
"நான் டிவியிலும் தொடர்ந்து சினிமாவிலும் கால்பதித்த நேரத்தில், டைரக்டர் ஜெயபாரதி இயக்கிய கலைப்படமான "குடிசை''யில் அரசியல் பிரமுகராக நடித்தவருக்கு `டப்பிங்' பேசினேன். இதைத்தொடர்ந்து டைரக்டர் ஜெயபாரதி என் நண்பரானார்.
நட்பு ரீதியாக ஒருநாள் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, "ஒரு கதை இருக்கிறது. இரு நண்பர்கள் பற்றிய கதை. படித்துப்பாரேன்'' என்று சொல்லி `ஸ்கிரிப்டை' கொடுத்தார். இடுப்புக்கு கீழே எந்த இயக்கமும் இல்லாத ஒருவனுக்கும், அவன் நண்பனுக்குமான பாசப்போராட்டமே கதை.
கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அதை படமாக்கும் வேலைகள் உடனே தொடங்கின. உடல் நிலை பாதிக்கப்பட்ட நண்பனாக நானும், என்னை பராமரிக்கும் நண்பனாக சார்லியும் நடித்தோம்.
எங்கள் வளசரவாக்கம் வீட்டிலேயே
20 நாள் படப்பிடிப்பு நடந்தது. படுக்கையில் இருந்தபடி நடித்தேன். இந்த 20 நாட்களும் வீட்டில் யாருடனும் பேசுவது கிடையாது. ஒரு கட்டத்துக்கு மேல் வீட்டில் பொறுக்க முடியாமல், "இது ரொம்ப ஓவரா இருக்கே'' என்று உரிமைக்குரல் எழுப்பி விட்டார்கள். "படம் முடிந்ததும் பாருங்கள். என் மவுனம் புரியும்'' என்றேன்.
படம் முடிந்தது. முதல் பிரதியை என் குடும்பத்தினரும் பார்த்தார்கள். படம் முடிந்ததும் என் மனைவி என்னிடம், "படத்தில் உங்கள் கேரக்டரை பேச வைக்கத்தான் எங்களிடம் கூட பேசாமல் இருந்தீர்களா?'' என்று சொல்லி கலங்கி விட்டார். "இதுவரை நாங்கள் பார்த்த நடிகர் சந்திரசேகர் வேறு; இந்தப் படத்தில் வருகிற சந்திரசேகர் வேறு'' என்றும் சொன்னார்கள்.
2003-ல் "நண்பா நண்பா'' ரிலீசானது. படத்தில் என் நடிப்புக்கு சிறந்த துணை நடிகருக்கான மத்திய அரசின் தேசிய விருது கிடைத்தது.
விருது கிடைத்த செய்தி உறுதியான அன்று, அதிகாலையில் முதல் போன் டாக்டர் கலைஞரிடம் இருந்து வந்தது. "செய்தியைப் பார்த்தேன். தேசிய விருது பெற்ற அன்புத் தம்பிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்'' என்று அவர் வாழ்த்தியபோது, பூரித்துப்போனேன்.
இந்த விருதை அன்றைய ஜனாதிபதி அப்துல்கலாம் கையால் பெற்றேன். அப்போது நான் அவரிடம், "உங்கள் ஊர் ராமேஸ்வரத்தில் நான் நாடகத்தில் நடித்திருக்கிறேன். சினிமாவில் என் நடிப்பிற்காக உங்கள் கையால் விருது வாங்கியதை பெருமையாகக் கருதுகிறேன்'' என்றேன்.
இந்த விருதை நான் பெற்றபோது சிறந்த கவிஞருக்கான விருதை பெற வந்த கவிஞர் வைரமுத்து என்னிடம், "பொதுவாக நம் பக்கத்து நடிகர்களுக்கு இம்மாதிரியான விருதுகள் கிடைப்பது என்பது அரிதாகவே இருந்து வருகிறது. ஆனால் கரிசல்காட்டு மண்ணில் இருந்து வந்த நீங்களும், நானும் இன்று நம் பிறந்த மண்ணுக்கு இந்த விருதுகள் மூலம் பெருமை சேர்த்து விட்டோம்'' என்று நெகிழ்ச்சியாக சொன்னார்.
இந்த நேரத்தில் சினிமாவில் என்னை நடிகனாக அறிமுகப்படுத்திய என் குருநாதர் பாரதிராஜாவை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.''
இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
சந்திரசேகர், தனது நடிப்பின் உச்சமாக "கலைஞர்'' ஆக நடித்ததை கருதுகிறார். கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை
21/2 மணி நேர நாடகமாக உருவாக்கி நடித்து கலைஞரின் பாராட்டை பெற்றார்.
இதுபற்றி சந்திரசேகர் கூறியதாவது:-
"நான் தலைவருடன் பேசும்போது அவரது அங்க அசைவுகளை உன்னிப்பாக கவனிப்பேன். ஒருநாள் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, "தலைவரே! வருகிற மாநாட்டில் உங்கள் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து ஒரு நாடகம் போட்டால் என்ன?'' என்று கேட்டேன். அப்படிக் கேட்டதற்கு காரணம், நான் அவர் எழுதிய "நெஞ்சுக்கு நீதி'' தொடரை பலமுறை படித்து ரசித்து வியந்திருக்கிறேன். என் கோரிக்கையை தலைவர் ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து கலைஞரின் 25 வயசு, 48 வயசு, 60 வயசு, 80 வயது காலகட்டங்களில் அவரது தோற்றத்தை நானே ஏற்று நடிப்பதற்கான வேலையில் இறங்கினேன்.
3 மாதம் இதற்கென ரிகர்சல் நடந்தது. நாடக வடிவாக்கத்துக்கு என் மனைவி முழு ஒத்துழைப்பு தந்தார்.
நாடகம் தயாரானபோது தலைவரிடம், "முதலில் நீங்கள் மட்டும் பாருங்கள். திருத்தம் இருந்தால் சரிசெய்து மேடையில் அரங்கேற்றுகிறேன்'' என்றேன்.
தலைவருடன் பேராசிரியர், ஆற்காடு வீராசாமி ஆகியோரும் பார்த்தார்கள். 21/2 மணி நேரம் நாடகம் நடந்தது. முதல் மனைவி பத்மாவதியின் மரணக் காட்சியின்போது, கலைஞர் கண்ணாடியைக் கழற்றி கண்ணீரைத் துடைத்துக் கொண்டதை பார்த்தேன்.
நாடகம் முடிந்ததும், "ஒரு குறையுமில்லை. சிறப்பாக இருக்கிறது'' என்றார். அப்போதே எனக்கு நடிப்பில் 3 தேசிய விருது வாங்கியது போலிருந்தது. இந்த நாடகம் திண்டுக்கல்லில் நடந்த தி.மு.க. மாநாட்டில் இடம் பெற்றது. லட்சக்கணக்கான பேர் பார்த்து ரசித்தார்கள்.''
இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
சந்திரசேகரின் கட்சி ஈடுபாடு, திண்டுக்கல் "எம்.பி'' தொகுதியில் கலைஞர் அவரை நிறுத்தும் அளவுக்கு ஆனது. இந்த தேர்தலில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு நழுவிப் போயிற்று.
என்றாலும், "தொகுதியில் பிரசாரத்தின்போது தலைவர் மீதான மக்களின் நம்பிக்கையை பார்க்க முடிந்தது. என்னை `எம்.பி'யாக்க விரும்பியது அவரின் அன்பு. அதற்கு ஒரு தொண்டனாக என்றும் தலைவணங்குவேன்'' என்கிறார், சந்திரசேகர்.
நடிகர் சந்திரசேகர் 2 வருடங்களுக்கு முன்பு தனது பெயரை `வாகை' சந்திரசேகர் என மாற்றிக்கொண்டார்.
இதுபற்றி அவர் கூறும்போது, "சொந்த ஊர் வாகைக்குளம் கிராமம் என்பதால், இதில் இருந்து `வாகை'யை எடுத்துக்கொண்டேன். ஊருக்கும் பெருமை சேர்த்த மாதிரி இருக்கட்டுமே என்ற எண்ணம்தான் இதற்கு காரணம். அதோடு `வாகை' என்ற சொல்லுக்கு `போரில் வென்ற வீரனுக்கு சூட்டப்படும் மாலை'யைக் குறிப்பதாகவும் ஒரு அர்த்தம் வருகிறது. தமிழக மக்களின் கலைப் பார்வையில் நடிகனாக என்னை ஏற்றுக்கொண்டு இன்றளவும் என்னை நேசித்தும் வருகிறார்கள். மக்கள் மனங்களில் நìன்றவன் என்ற முறையில் அதை `வெற்றியாக' உணர்த்தும் `வாகை'யை பெயருக்கு முன்னதாக சேர்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் வைத்துக் கொள்ளலாம்.''
இவ்வாறு `வாகை' சந்திரசேகர் கூறினார்.

நடிகர் சந்திரசேகர் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ஜெகதீஸ்வரியை மணந்தார். இவர் "பி.ஏ'' ஆங்கில இலக்கியம் படித்தவர்.

"இரவு பகலாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டம். எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன.
நடிகர் திலகம் சிவாஜி சாரின் குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு பெண் வீட்டார் என்னைப்பற்றி அவரது வீட்டில் விசாரித்திருக்கிறார்கள். சிவாஜி சாரும், "நல்ல பையன். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கிறான். தாராளமா பெண் கொடுக்கலாம்'' என்று சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். சிவாஜி சாரின் மகன்கள் ராம்குமாரும், பிரபுவும் என்னுடைய நல்ல நண்பர்கள். அவர்களும் "சந்துருவுக்கு (சந்திரசேகர் என்பதன் சுருக்கம்) தாராளமாகப் பெண் கொடுக்கலாம்'' என்று அப்பாவின் கருத்தை வழிமொழிந்திருக்கிறார்கள்.
1987-ல் குன்றத்தூர் கோவிலில் என் திருமணம் நடந்தேறியது. திருமண நாளில் குன்றத்தூர் மலையைச் சுற்றிலும் இருந்து மக்கள் கூட்டமாக வந்து வாழ்த்தினார்கள். சினிமா நட்சத்திரங்கள் பலரும் வந்திருந்தார்கள்.
திருமண வரவேற்புக்கு டாக்டர் கலைஞர் வந்திருந்து வாழ்த்தினார்.
என் மனைவி ஜெகதீஸ்வரி கல்லூரியில் "பி.ஏ'' ஆங்கில இலக்கியம் படித்தவர். அவர் கல்லூரிப் படிப்பின்போது ஆஸ்டலில் தங்கிப் படித்திருக்கிறார்.
ஆஸ்டல் மாணவிகளுக்கு மாதம் ஒரு சினிமாப்படம் திரையிட்டுக் காட்டுவார்களாம். ஒருமுறை நான் நடித்த "சிவப்பு மல்லி'' படம் போட இருந்திருக்கிறார்கள். அந்தப் படம் பார்க்க ஜெகதீஸ்வரியின் தோழி அவரை அழைத்திருக்கிறார். "நம்ம ஊர்க்காரர் நடிச்ச படம்'' என்று தோழி சொல்ல, ஜெகதீஸ்வரியோ, "சந்திரசேகர் நடிச்ச படமா? கிராமத்து ஆளை பிடிச்சிட்டு வந்து நடிக்க வெச்ச மாதிரி இருக்கு. ஊர்ல உழுதுக்கிட்டு இருந்தவரை நடிக்க வெச்சிட்டாங்க'' என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு ஒருநாள் இதை என்னிடம் சொன்ன ஜெகதீஸ்வரி, "உங்களைப் பற்றிய என் கணிப்பு அப்போது இப்படி இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. பகுத்தறிவு சிந்தனை, மனித நேயம் நிறைந்தவர் நீங்கள்'' என்று பாராட்டியபோது ஒரு நடிகனாக அல்ல, கணவனாக பெருமைப்பட்டேன்.
1989-ல் எங்களுக்கு இரட்டைக் குழந்தைகளாக சிவஹர்ஷன் - சிவரஞ்சனி பிறந்தார்கள்.
மனைவி மதுரை மண்ணுக்கே உரிய வீரத்திலும் சிறந்திருக்கிறார். ஒருமுறை ஈரோட்டில் ஒரு கிராமத்தில் தி.மு.க. மேடையில் பேசிக் கொண்டிருக்கிறேன். பத்து மணி தாண்டிய நிலையில் நான் பேசிக்கொண்டிருந்த மேடையை நெருங்கிய ஒரு போலீஸ் அதிகாரி, "சீக்கிரம் பேச்சை முடியுங்கள்'' என்றார்.
ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சுரிமைக்கு தடையா? பொங்கிவிட்டேன். அப்புறம்தான் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ்காந்தி பலியான சம்பவம் தெரிந்தது. கிராமம் என்பதால் தகவல் தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறது.
ஒருவழியாக அவசர அவசரமாக ஈரோட்டில் நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு விரைந்தேன். நள்ளிரவை நெருங்கிய அந்த நேரத்தில் ஈரோடு நகரமே தீப்பிடித்து எரியும் காட்சியை கண்டு அதிர்ந்தேன். இதற்குள் என்னைப்பார்த்துவிட்ட ஒரு கும்பல் லாட்ஜ் வரை என்னைத் துரத்தியது. அப்போது எனக்குத் துணையாக இருந்த தி.மு.க. நண்பர் இளஞ்செழியன், அவரது தோட்ட வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். இதனால் அன்று நேரவிருந்த ஆபத்தில் இருந்து தப்பினேன்.
காலையில் என்னிடம் போனில் தொடர்பு கொண்ட ஜெகதீஸ்வரி, "பத்திரமாய் இருக்கீங்களா?'' என்று கேட்டார். "இங்கே நாங்களும் பத்திரம்தான்'' என்றார்.
அவர் சொன்னதன் உட்கருத்து அதன் பிறகே புரிந்தது. அதாவது கட்சிக்காரன் என்ற முறையில் என்னைத் தாக்க ஈரோட்டில் முயற்சி நடந்தது போலவே, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள என் வீட்டிலும் தாக்குதல் முயற்சி நடந்திருக்கிறது. 8 அடி உயர காம்பவுண்டு சுவர் கொண்ட வீடு என்பதால், வெளியில் இருந்து வீட்டுக்குள் ஒரு கும்பல் கல்வீசித் தாக்கியிருக்கிறார்கள். ஜன்னலில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியிருக்கின்றன.
இந்தத் தகவலை மனைவி என்னிடம் பகிர்ந்து கொண்டபோது, "பிறகு எப்படித்தான் சமாளித்தீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர், "அவங்க வீசின கல்லையே எடுத்து திரும்ப வெளியில் வீசினோம். கொஞ்ச நேரத்தில் வந்தவங்க ஓடிட்டாங்க'' என்றார். இக்கட்டான நேரத்தில் சமாளிக்கத் தெரிந்த ஒரு வீரப்பெண்மணியாகவே என் மனைவி ஜெகதீஸ்வரி என் கண்களுக்கு அப்போது தெரிந்தார்.''
இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
ஏவி.எம். நிறுவனம் தயாரித்த "சம்சாரம் அது மின்சாரம்'' என்ற படத்தை டைரக்டர் விசு இயக்கினார். படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் சந்திரசேகருக்கும் முக்கிய வேடம். படத்தில் நடிக்க அழைக்கப்பட்டது தனி அனுபவம் என்கிறார், சந்திரசேகர்.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
"ஒருநாள் கிஷ்மு (டைரக்டர் விசுவின் தம்பி) என்னைப் பார்க்க வந்தார். ஒரு படம் பண்றோம். விசுதான் டைரக்டர். நீங்க நடிக்கணும்'' என்றார்.
விசு அப்போது "குடும்பம் ஒரு கதம்பம்'', "மணல் கயிறு'' என்று வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து வளர்ந்திருந்த நேரம். அவருடைய படத்தில் நடிக்க அழைப்பு என்றதுமே திருப்தி. என்றாலும், "படத்தில் என் கேரக்டர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?'' என்று கிஷ்முவிடம் கேட்டேன்.
அவரும் சளைக்காமல், "எங்கள் படத்தில் நீங்கள் நடித்த பிறகு இதுவரை நீங்கள் சேர்த்து வைத்துள்ள பெயரோடு இன்னமும் அதிக பெயர் தேடிவரும்'' என்றார்.
பதிலுக்கு நான், "சாரி சார்! நான் கதை கேட்காமல் நடிக்கிறதில்லை'' என்றேன்.
நான் இப்படிச் சொன்னதும் கிஷ்மு பதிலுக்கு, "நம்புங்க சார்! உங்களுக்கான கேரக்டர்ல நிச்சயம் நீங்க பிரகாசிப்பீங்க. இதுக்கு மேலும் உங்களுக்கு சந்தேகம்னா மொத்த ஸ்கிரிப்ட்டும் ரெடியா இருக்கு. தரேன். படிச்சுப் பாருங்க'' என்றார்.
இந்த வார்த்தை என்னைத் தொட்டது. கதை மேல் வைத்திருந்த அவரது நம்பிக்கை என் கேரக்டர் மீது இருக்கத்தானே செய்யும்! உடனே மறுப்பேதும் இன்றி ஒப்புக்கொண்டேன்.
இந்தப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றதோடல்லாமல், சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் (தங்கப்பதக்கம்) பெற்றுத்தந்தது. படத்தில் நடித்த அத்தனை பேரின் அந்தஸ்தும் உயர்ந்தது.
இந்த நட்பு இறுகிப்போனதில் தொடர்ந்து "புயல் கடந்த பூமி'', "அவள் சுமங்கலிதான்'' என்று விசு சாரின் பல படங்களில் நடித்தேன்.
டைரக்டர் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் நான் நடித்த "ராஜாங்கம்'' படம் மறக்க முடியாதது. படத்தில் நான் ரவுடி. ஒரு பங்களாவுக்குள் நடக்கிற இந்தக் கதையில் எனது ஜோடியாக விஜயசாந்தி நடித்தார். இதே ஆர்.சி.சக்தியின் "கூட்டுப் புழுக்கள்'' படத்திலும் நடித்தேன்.
எனக்கொரு ராசியோ அல்லது என் அணுகுமுறையோ ஒரு டைரக்டரின் படத்தில் நடித்த பிறகு அதே டைரக்டரின் அடுத்தடுத்த படங்களுக்கும் நிச்சயம் அழைப்பு வந்துவிடும். டைரக்டர்கள் விசு, ராம.நாராயணன், ஆர்.சி.சக்தி, மணிவண்ணன் போன்ற இயக்குனர்கள் படங்களில் எனக்கொரு கேரக்டர் நிச்சயம் என்கிற அளவுக்கு தொடர்ந்து அவர்கள் இயக்கும் படங்களில் வாய்ப்பு வந்து கொண்டிருந்தது.
இவ்வாறு கூறினார், சந்திரசேகர்.
கலைத்துறையில் நண்பர்களுடன் ஆண்டுக்கொரு முறை சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு வருவது சந்திரசேகர் வழக்கம். 9 வருடங்களுக்கு முன்பு நடிகர் சந்திரசேகரும், டைரக்டர்கள் ராம.நாராயணன், கோலப்பன், நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட நண்பர்களுடன் சபரிமலைக்கு வேனில் புறப்பட்டார். இந்த பயணத்தின்போது விபத்து ஏற்பட்டு அதில் காயமின்றி கலைக்குழுவினர் மீண்டனர். அதுபற்றி சந்திரசேகர் கூறியதாவது:-
"முறைப்படி விரதம் இருந்து மலைக்கு புறப்பட்டோம். மஹீந்திரா வேனில் 4 நாட்களுக்கு தேவையான புளியோதரை கட்டிக்கொண்டு பயணித்தோம். வேனில் டிரைவர் சீட் அருகில் ஐயப்பன் படத்தை வைத்து, மாலை அணிவித்து இருந்தோம்.
வேன் சென்னையைத் தாண்டியதும் ஆளுக்கு ஆள் ஒரே ஜோக் மழைதான். அதிலும் எஸ்.எஸ்.சந்திரன் இருந்தால் காமெடிக்கு கேட்கவா வேண்டும்? திருச்சி தாண்டிய பிறகும் இந்த நகைச்சுவை மழை நின்றபாடில்லை. எங்கள் ஜோக்குக்கு டிரைவரும் சிரித்தபடி வாகனத்தை ஓட்டினார்.
விடியற்காலை நேரம் திடீரென ரோட்டின் மையத்தில் இரண்டு மாடுகள் குறுக்கே வர, டிரைவர் அடித்த `சடன் பிரேக்'கில், வண்டி அருகில் இருந்த பெரிய குளத்தருகே குட்டிக்கரணம் அடித்தது.
ஆனாலும் பாருங்கள். ஐயப்பன் படம் உடையவில்லை. போட்டிருந்த மாலை சிதறவில்லை. நாங்கள் சாப்பிட வைத்திருந்த புளியோதரை கூட அப்படியே இருந்தது. ஒரு வழியாக அங்கு வந்தவர்கள் உதவியுடன் வேனை தூக்கி நேராக நிமிர்த்தியபோது, உடனே ஸ்டார்ட்டும் ஆனது! பக்திப்பூர்வமான ஒரு பயணத்தின்போது, எதற்கு கிண்டலும் கேலியுமான விஷயங்கள் என்று அந்த ஐயப்பனே எங்களுக்கு இப்படி ஒரு `ஷாக் ட்ரீட்மெண்ட்' கொடுத்தது போல் உணர்ந்தோம். அதன்பிறகு சபரிமலைக்கு போய்விட்டு வரும் போது கூட, அதாவது சென்னையில் வீடு வந்து சேரும் வரையில் ஜாலியாக ஒரு வார்த்தைகூட நாங்கள் பேசாமல் வந்தோம். இந்த பயணத்தின்போது எங்கள் வாயில் இருந்து உதிர்ந்ததெல்லாம் "சாமியே சரணம்'' கோஷம் மட்டும்தான்.''

கலைஞர் மு.கருணாநிதி கதை- வசனம் எழுதிய "தூக்குமேடை'' படத்தில், சந்திரசேகர் நடித்தார். 20 பக்க வசனத்தை ஒரே "டேக்''கில் பேசி நடித்தார்.

கலைஞரை சந்தித்தபோது நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி சந்திரசேகர் கூறியதாவது:-
"நான் தலைவரை (கலைஞர்) மிக அருகில் சந்தித்தது அப்போதுதான். பார்த்ததுமே என்னிடம் ரொம்ப நாள் பழகியவர் போல பேசத்தொடங்கி விட்டார். "சுமை'', "சிவப்பு மல்லி'', "பாலைவனச்சோலை'' படங்களெல்லாம் பார்த்தேன். ரொம்ப அருமையாக நடிக்கிறாய்'' என்று பாராட்டினார். இப்படிப் பாராட்டியதோடு நில்லாமல், "சிவாஜி, எஸ்.எஸ்.ஆருக்குப் பிறகு நல்ல தமிழை உன் மூலம் கேட்க முடிகிறது. நல்ல தமிழ் பேசும் நடிகராகத் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கிறாய்'' என்று கூறினார். அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும், பரவசத்தையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.
கொஞ்சம் இடைவெளியில், என் குடும்பம் பற்றியெல்லாம் அக்கறையுடன் விசாரித்தவர், என்னை அழைத்த நோக்கம் பற்றி பேசினார். "தூக்குமேடை நாடகத்தை திரைப்படமாக எடுக்கலாம் என்றிருக்கிறேன். நீ நடித்தால் அதை படமாக எடுக்கலாம்'' என்றார்.
"நீங்கள் இப்படி கேட்டதற்கு பதிலாக, `நீ நடிக்க வேண்டும்' என்று உத்தரவே போட்டிருக்கலாம். அதை என் பாக்கியமாக கருதி நடிப்பேன். நான் இப்படி உரிமையுடன் சொல்லக்காரணம், நானும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவன்'' என்றேன்.
கலைஞர் என்னை ஆச்சரியமாக பார்த்தார். "உன் படங்களைப் பார்த்து நீ கம்யூனிஸ்டு என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். நம் ஆளா? மகிழ்ச்சி. மகிழ்ச்சி'' என்றார்.
"தூக்கு மேடை'' படத்தில் நான் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மறுநாளே பத்திரிகையாளர் சந்திப்பில் "தூக்கு மேடை'' படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கும் தகவலை சொன்னார் கலைஞர்.
தூக்குமேடை நாடகமாக நடிக்கப்பட்டபோதே அதற்கு பக்கம் பக்கமாக வசனம் உண்டு என்பது எனக்குத் தெரியும். படத்திலும் அதே வசனங்கள்தானே.
படப்பிடிப்பு தொடங்கி, மோகன் ஸ்டூடியோவில் காட்சிகள் படமாகிக் கொண்டிருந்தன. ஒருநாள் நான் ஒரே டேக்கில் 20 பக்க வசனம் பேசும் காட்சியை எடுக்க இருந்தார்கள். இப்போது மாதிரி முதலில் நடித்து விட்டு பிறகு "டப்பிங்'' பேசும் வசதியெல்லாம் அப்போது கிடையாது. நடிக்கும்போதே, வசனத்தை பேசியாக வேண்டும். நான் வசனம் பேசத் தயாராக இருந்தபோது, தலைவர் திடீரென்று வந்துவிட்டார். அவரைப் பார்த்ததும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அவரிடம், "தலைவரே! உங்கள் முன்னாடி பேசினால் தடுமாறி விடுவேன்'' என்றேன்.
அவரும் புரிந்து கொண்டார். டைரக்டர் அமிர்தத்தை அழைத்து, "நல்லபடியா பண்ணுங்க'' என்றவர், சில ஆலோசனைகளை கொடுத்து விட்டு செட்டில் இருந்து கிளம்பிப் போனார்.
அடுத்த கணமே 20 பக்க வசனத்தையும் ஏற்ற இறக்கத்தோடு ஒரே டேக்கில் பேசி முடித்து விட்டேன். அந்த சந்தோஷத்தில் ஒரு காபி சாப்பிடலாம் என்று செட்டுக்கு வெளியே வந்தால், `ஹெட்போனை' தலையில் மாட்டியபடி நான் பேசிய வசனத்தை தலைவர் கேட்டுக்கொண்டிருந்ததை கண்டு எனக்கு ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது. தனது படைப்புக்கு உயிர் கொடுக்கும் வசனம் எந்த மாதிரி வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பிய அவருடைய ஆர்வத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.
இந்தப்படம் வளரும்போது எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் கலைஞரின் படத்தில் நான் நடித்ததால், "சந்திரசேகருக்கு எதற்கு கட்சி முத்திரை?'' என்ற சலசலப்பும் ஏற்பட்டது. "இந்தப் படத்தில் நடிக்கக்கூடாது'' என்று போனில் சிலர் மிரட்டவும் செய்தனர். நான் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. "நான் தி.மு.க. காரன். என் தலைவர் அழைத்து நடிக்கச் சொன்னார்; நடிக்கிறேன். அதற்கு எந்த மாதிரியான எதிர்ப்பு வந்தாலும் சந்திக்க தயார்'' என்று பதில் சொன்னேன்.
"முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரை ஒருமுறை சந்தித்துப் பேசுங்கள்'' என்று அன்றைய அமைச்சர் ஒருவர் கூட போனில் என்னிடம் கூறினார்.
இப்படி நான் உறுதியாக நின்றதால் கலைஞருக்கு என் மீது ரொம்பவே பிரியமாகி விட்டது. தூக்குமேடை ரிலீசான பிறகு `தலைவர்' என்பதையும் தாண்டி "அப்பா'' என்று அழைக்கும் அளவுக்கு நானும் அந்த அன்பில் ஐக்கியமாகி விட்டேன்.
இப்படி தலைவருடன் நெருக்கம் காட்டிய பிறகு, முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளும் விழாக்களை தவிர்த்தேன். விசு டைரக்ஷனில் பெரும் வெற்றியை எட்டிய ஏவி.எம்.மின் "சம்சாரம் அது மின்சாரம்'' படத்தின் விழாவுக்கு கூட நான் போகாததற்கு இதுதான் காரணம்.
இருந்தாலும் ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு போயிருந்தபோது அவரிடம் மாட்டிக்கொண்டேன்! நான் டைரக்டர் ஆர்.சி.சக்தியுடன் மண்டபத்துக்குள் நுழைந்த நேரத்தில், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். காரில் வந்து இறங்கினார். மண்டப வாயிலில் அவருக்கு முன்னதாக போய்விட்ட நான், மேற்கொண்டு அவர் போவதற்காக ஒதுங்கி நிற்கும்படி ஆயிற்று. அப்போது என் அருகில் நடிகர் சாருஹாசன், டைரக்டர் ஆர்.சி.சக்தி, கதை-வசன கர்த்தா ஏ.எல்.நாராயணன் ஆகியோர் இருந்தார்கள்.
எம்.ஜி.ஆர். எங்களை தாண்டிச் சென்றபோது, முதலில் சாருஹாசன் அவருக்கு வணக்கம் செய்ய, பதிலுக்கு எம்.ஜி.ஆரும் வணங்கினார். அடுத்தவர் ஆர்.சி.சக்தி, அவரும் வணங்க, எம்.ஜி.ஆரும் வணங்கினார். மூன்றாவதாக என் முறை! இப்போது அவரைப் பார்த்து கைகுவித்தேன். 5 நொடிகள் என்னையே உற்று நோக்கியவரிடம் வேறு எந்தவித ரியாக்ஷனும் இல்லை. என் அருகில் நின்ற ஏ.எல்.நாராயணனை அழைத்துக்கொண்டு மண்டபத்துக்குள் போய்விட்டார்.
அரசியலில் `எதிரும் புதிரும்' நிலை சகஜம். கலைஞரும், எம்.ஜி.ஆரும் கலைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். கலைத்துறையில் இருந்தபோது மிகச்சிறந்த நண்பர்களாகவும் இருந்தார்கள். அரசியலுக்கு வந்த பிறகும் நீடித்த நட்பு, ஒரு காலகட்டத்தில் பிரிவில் முடிந்தது. அந்த மாதிரியான காலகட்டத்தில், எதிர்க்கட்சி தலைவரின் விருப்பம் ஏற்று நான் அவரது லட்சியப்படைப்பான `தூக்குமேடை' படத்தில் நடித்ததை முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரிடம் யாராவது முரண்பட்ட கண்ணோட்டத்தில் சொல்லியிருக்க கூடும். அதைத்தொடர்ந்து என்னை சந்திக்க விரும்பி விடப்பட்ட அழைப்பையும் தவிர்த்து விட்டதால், இயல்பாக என் மீது அவருக்கு கோபம் இருந்திருக்கலாம். அதனால்தான் அன்றைய திருமண மண்டபத்தில் என்னைப் பார்த்ததும் ஒன்றும் பேசாமல் போயிருக்கலாம். அரசியலில் இதெல்லாம் சகஜம்தான் என்று, எம்.ஜி.ஆரின் அன்றைய மவுனத்தை எடுத்துக்கொண்டேன்.
"தூக்குமேடை'' படத்தில் நடித்த பிறகு, தேர்தல் கூட்டங்கள், மாநாடுகள் என்று தி.மு.க. மேடையில் பேசத்தொடங்கினேன். வாரம் ஒரு முறை தலைவரை சந்திப்பேன். கடந்த 25 வருஷமாய் என் ஒவ்வொரு பிறந்த நாளிலும் குடும்பத்துடன் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவதையும் வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன்.''
இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
டைரக்டர் கிருபாசங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த மணிவண்ணன் "கல்லுக்குள் ஈரம்'' படத்தில் இருந்து பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். அவரிடம் தொடர்ந்து நாலைந்து படங்கள் பணியாற்றிய பிறகு "கோபுரங்கள் சாய்வதில்லை'' படம் மூலம் இயக்குனரானார். அந்தப் படம் அவருக்குப் பெரிய பெயர் வாங்கித் தந்தது.
மணிவண்ணன் இயக்கிய "இங்கேயும் ஒரு கங்கை'' படத்தில் சந்திரசேகருக்கு `பாகப்பிரிவினை' சிவாஜி மாதிரி அற்புதமான வேடம். இந்தப்படம் சந்திரசேகரின் நடிப்பை புதிய கோணத்தில் வெளிப்படுத்தி ரசிகர்களை ரசிக்க வைத்தது. மணிவண்ணனுக்கும் தனக்குமான நட்பு பற்றி சந்திரசேகர் கூறியதாவது:-
"நானும் மணிவண்ணனும் சென்னையில் சுற்றாத இடமே இல்லை. நடிப்பதற்கு நானும், இயக்குனராவதற்கு அவரும் முயன்ற அந்த காலக்கட்டத்தில் எங்களையும் ஒருவர் வாழ்த்தி பசியும் ஆற்றினார். அவர் பட அதிபர் கே.ஆர்.ஜி. எங்கள் சினிமா தாகத்தைப்பற்றி முழுக்க தெரிந்தவர் அவர். எப்போதாவது ரொம்பவே பண நெருக்கடி ஏற்பட்டால், நடந்தே போய் அவரை பார்ப்போம்.
"வணக்கம் முதலாளி'' என்போம். எங்கள் பட விஷயங்களை ஆர்வமாய் கேட்பவர், "நல்ல வருவீங்கடா! தன்னம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள்'' என்பார். அப்படிச் சொல்வதோடு மட்டும் நின்று விடாமல் 500 ரூபாய் பணத்தை எடுத்து எங்கள் கையில் திணிப்பார்.
1975-ம் வருடவாக்கில் 500 ரூபாயின் மதிப்பு மிக அதிகம்.
சினிமாவில் வளர்ந்த நிலையில் நானும் மணிவண்ணனும் சந்தித்துக் கொண்டாலும், எங்கள் எதிர்காலத்தை `வாழ்த்தாக' முன்கூட்டியே சொன்ன தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. பற்றி மறக்காமல் நினைவு கூர்வதுண்டு. சினிமாவில் நான் சந்தித்த அபூர்வ மனிதர் கே.ஆர்.ஜி.''
இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
திரைப்பட கல்லூரியில் பயின்ற இளைய தலைமுறை கலைஞர்களை ஊக்குவித்தவர், சந்திரசேகர். அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்து விட்டு இயக்கும் நோக்கத்துடன் படத் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொல்லிக் கொண்டிருந்தார், சின்னச்சாமி என்ற இளைஞர்.
புதியவர்கள், அதுவும் மாணவர்களாக இருந்து சினிமாவில் கற்றவர்கள் என்பதால் திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து படம் இயக்க தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள். சந்திரசேகர் படப்பிடிப்பில் இருந்த நேரத்தில் நண்பர் ஒருவர், "திரைப்படக் கல்லூரி மாணவர் ஒருவர் ஒரு கதை வைத்திருக்கிறார். கேளுங்கள்'' என்று சொல்லி அந்த மாணவரை அனுப்பி வைத்தார். அன்றைய படப்பிடிப்பு முடிந்து சந்திரசேகரும் கதை கேட்டார். 2 1/2 மணி நேரமும் கதை சொன்ன திரைப்படக் கல்லூரி மாணவரான சின்னச்சாமி, சந்திரசேகரை ரொம்பவே ஆச்சரியமாய் உணரவைத்தார். இதுபற்றி சந்திரசேகர் கூறுகிறார்:-
"சின்னச்சாமி சொன்னது அதுவரை நான் கேட்டிராத கதை. படத்தில் வருகிற மாதிரி காட்சி காட்சியாக வரிசைப்படுத்தி கதை சொன்னார். கதை கேட்டு முடித்ததும், நான் அவரிடம் "நீங்க சொன்னதுல பாதியை படமா எடுத்தாக்கூட படத்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்'' என்றேன்.
நான் விஜயகாந்திடம், "இன்ஸ்டியூட் மாணவர் சொன்ன கதை அற்புதம். நீங்கள் கதாநாயகனாக நடித்தால் உங்கள் சினிமா கேரியரில் பெரிய மாற்றம் ஏற்படும்'' என்றேன்.
விஜயகாந்த் என் வார்த்தையை நம்பினார். கால்ஷீட் கொடுத்தார். படம் "ஊமை விழிகள்'' என்ற பெயரில் தயாராகி திரைக்கு வந்தபோது, பிரமாண்ட வெற்றியை அடைந்தது. சின்னச்சாமி என்ற அந்த இயக்குனர் `ஆபாவாணன்' என்ற பெயரில் பிரபலமானார். அவரது அடுத்த படமான "செந்தூரப்பூவே'' படமும் விஜயகாந்துக்கு பெரிய வெற்றி தேடித்தந்தது. இந்தப் படங்களில் எனக்கும் முக்கிய கேரக்டர் கிடைத்து, பெயரும் கிடைத்தது.
இதன் பிறகு திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து "உழவன் மகன்'' என்று சொந்தப்படமே எடுத்தார், விஜயகாந்த். அதுவும் வெற்றி.
இந்த வகையில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்க ஒரு வகையில் நான் காரணமாக இருந்ததில் இன்றளவும் எனக்கு பெருமைதான்.''

பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட சந்திரசேகர், "பாலைவனச்சோலை''யில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். அதைத்தொடர்ந்து, பல வெற்றிப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.

கதாநாயகன் அந்தஸ்தை எட்டிய அந்தக் காலக்கட்டம் பற்றி, சந்திரசேகர் கூறியதாவது:-
"புதிய வார்ப்புகள்'' படத்தில் பெரிய கேரக்டர் இல்லை என்றாலும், ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள்.
பாரதிராஜா தனது அடுத்த படமான "நிழல்கள்'' படத்தில், முன்னேறத் துடிக்கும் இசையமைப்பாளன் கேரக்டரை தந்தார். திறமை இருந்தும் முன்னேற முடியாமல் முட்டுக்கட்டைகளை மட்டுமே சந்திக்கும் இளம் இசையமைப்பாளனின் வாழ்க்கைப் போராட்டம் என் நடிப்புக்கு புதுசு. என்னை அந்த கேரக்டரில் பார்த்த டைரக்டர் பாரதிராஜா, "சேகர்! உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு'' என்று மட்டும் சொன்னார். டைரக்டர் இப்படிச் சொன்ன பிறகு, அந்தக் கேரக்டர் என்னுடன் ஒன்றிப்போய் விட்டது. இரவும் பகலும் அந்த கேரக்டர் பற்றிய சிந்தனையிலேயே இருந்தேன்.
இந்த இசையமைப்பாளன் ஜெயித்தால், வசதியான வாழ்க்கைக்கு வருவான் என்பதைக் காட்ட ஒரு பாடல் காட்சி வைத்திருந்தார், பாரதிராஜா. "மடை திறந்து தாவும் நதியலை'' என்ற அந்த பாடலினூடே, "நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்! இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்'' என்ற வரிகள் வரும். இந்த வரிக்காக காரின் பின்சீட்டில் கோட்-சூட் போட்டு பணக்கார தோரணையுடன் `555' சிகரெட்டை நான் ஸ்டைலாக புகைத்துக்கொண்டு போவதாக ஒரு காட்சி எடுத்தார். இந்தக் காட்சியின்போது நான் இருந்த காரை பாரதிராஜாவே ஓட்டினார்.
இந்தக் காட்சி முடிந்ததும் டைரக்டர் பாரதிராஜா என்னிடம், "நடிக்கணும்னு சான்ஸ் கேட்டு என்கிட்ட வந்தே. நானும் கொடுத்தேன். இன்றைக்கு கோடீஸ்வர தோற்றத்தில் உன்னை கார்ல உட்கார வெச்சு நான் கார் ஓட்டறேன். சினிமா ஏற்படுத்திய மாற்றம் பார்த்தாயா?'' என்று கேட்டு சிரித்தார்.
"நிழல்கள்'' படம் இளம் கலைஞர்களின் கனவை கனவாகவே வைத்து விட்டதால், படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்றார்கள். என்றாலும் ஒரு நல்ல இயக்குனரின் நல்ல படத்தில் நடித்த திருப்தி எனக்கு.
பாரதிராஜாவின் "கல்லுக்குள் ஈரம்'' படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான், டைரக்டர் ராம.நாராயணன் என்னை சந்தித்தார். "முழுக்க முழுக்க உங்க மேலேயே போகும் கதை'' என்று சொல்லிவிட்டு, அப்போதே படத்தின் கதையையும் கூறினார். படத்துக்கு "சுமை'' என்று பெயர் வைத்திருப்பதையும் சொன்னார். `ஒரு ஏழைக் குடும்பத்தின் மூத்த மகன், தம்பி, தங்கைக்காக தன் வாழ்க்கையை, உருகும் மெழுகுவர்த்தியாக்கிக் கொள்கிறான்' என்ற பின்னணியில் அமைந்த அந்தக் கதையில் மூத்த மகனாக உணர்ந்து நடித்தேன். படம் பெரிய வெற்றி.
"சுமை'' படத்தை சென்னை அமைந்தகரையில் உள்ள லட்சுமி தியேட்டரில் பார்க்கப் போயிருந்தேன். படத்தின் கடைசியில் நான் இறந்து போகும் காட்சியுடன் படம் முடியும். படம் முடிந்து வெளியே வந்ததும் படம் பார்க்க வந்திருந்த தாய்மார்கள் என்னை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டபடி, "நீ நல்லா இருக்கணும் ராசா!'' என்றார்கள். அந்த அன்பில் நானும் உருகிப்போனேன்.
இந்தப் படத்துக்குப் பிறகு, எனக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் "பாலைவனச்சோலை.'' டைரக்டர்கள் ராபர்ட் - ராஜசேகர் இயக்கினார்கள்.
படத்தில் நான், ராஜீவ், தும்பு, ஜனகராஜ், தியாகு என 5 நாயகர்கள். டைரக்டர்களில் ராபர்ட் சீனியர். எங்க பெரியண்ணன் மாதிரி ஆலோசனை சொல்வார். ராஜசேகர் எங்க செட். நண்பர் மாதிரி பழகுவார். 24 மணி நேரமும் படம் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். எப்போதும் அவருடன் இருப்போம்.
இந்தப் படத்தை, கமலிடம் உதவியாளராக இருந்த ஆர்.வடிவேல் தயாரித்தார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்ததும், தயாரிப்பாளர் எங்களை அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்வார். மணக்க மணக்க சாப்பாடு போடுவார். அடுத்து தலையணை பெட்ஷீட் வரும். ஓய்வு நிலையில் அடுத்த நாள் எடுக்க வேண்டிய காட்சி பற்றி டைரக்டர்கள் விளக்குவார்கள். யாருக்காவது மறுநாள் முக்கிய `சீன்' என்றால், அதை ஸ்பெஷலாக விளக்கி, அந்தக் காட்சிக்கு ஏற்றபடி நடிகர்களை தயார்படுத்துவார்கள்.
படத்தில் 5 ஆண்களை சுற்றி புதிய கோணத்தில் அமைக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை ரசிகர்களை ரொம்பவும் கவர, "பாலைவனச்சோலை'' 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.
படத்தில் "மேகமே மேகமே'', "ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு'', "பவுர்ணமி நேரம் பாவை ஒருத்தி'' போன்ற பாடல்களும் ஹிட் ஆயின.
"சுமை'' படத்தின்போதே டைரக்டர் ராம.நாராயணன் எனக்கு நண்பராகவும் ஆகிவிட்டார். பாலைவனச்சோலை படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு மாலைப்பொழுதில் என்னை அழைத்து "எர்ர மல்லு'' என்ற தெலுங்குப்படத்தை போட்டுக் காண்பித்தார். 2 ஹீரோக்களின் பின்னணியில் அமைந்த கதை. "இந்தப் படத்தை தமிழில் ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கிறது. `சிவப்பு மல்லி' என்று பெயர் வைத்திருக்கிறேன்'' என்றார், ராம.நாராயணன்.
தெலுங்கில் சந்திரமோகன் நடித்த கேரக்டரில் என்னை ஒப்பந்தம் செய்தார். இன்னொரு கேரக்டருக்கு நடிகர் சிவகுமாரை `பிக்ஸ்' பண்ணினார்.
சிவகுமாருக்கு முரட்டு கேரக்டர். படத்தின் விளம்பரம் தொடர்பாக இரண்டு பேரும் வருகிற மாதிரி சில ஸ்டில்கள் எடுக்க டைரக்டர் விரும்பினார். ஆனால் இரண்டு பேருமே பிஸியாக இருந்ததால் தனித்தனியாக `ஸ்டில்' எடுத்தார்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கி வரும் கதாநாயகனை எதிரிகள் கத்தியால் குத்திவிட, ரத்தத்தால் மல்லிகைப்பூ சிவப்பு நிறமாகும் என்று `சிவப்பு மல்லி'க்கு விளக்கம் சொன்னார், டைரக்டர். அந்த சீனை சொன்னதும் சிவகுமார், "நான் அந்த கேரக்டரில் நடிக்கிறேனே'' என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ராம.நாராயணன் "உங்களுக்கான கேரக்டர் வேறு. அந்த கேரக்டர் வேறு. எனவே நீங்கள் முரட்டு கேரக்டரில் நடிப்பதே சரியாக இருக்கும்'' என்று சொல்லிவிட, நட்பு ரீதியாகப் பேசி, படத்தில் இருந்து சிவகுமார் விலகிக்கொண்டார்.
மறுநாள் படத்தின் பூஜை. எதிர்பாராத விதமாக சிவகுமார் படத்தில் இருந்து விலகிக் கொள்கிறார். ராம.நாராயணன், ஒரு இரவுக்குள் ஒரு ஹீரோவை ஒப்பந்தம் செய்தாக வேண்டிய நிலையில் இருந்தார். இந்தக் கேரக்டருக்கு யார் சரியாக இருப்பார்கள் என்று யோசித்தவர், ராஜபாதர் தெருவில் உள்ள தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த விஜயகாந்தை எழுப்பி, அப்போதே ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்து, ஸ்டில் எடுக்க ஏற்பாடு செய்தார். நானும் விஜயகாந்தும் அரிவாள் - சுத்தி சகிதம் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தோம்.
திட்டமிட்டபடி படம் எடுப்பதில் ராம.நாராயணன் திறமையானவர். 18 நாளில் "சிவப்பு மல்லி'' படத்தின் வசனப்பகுதியை எடுத்து முடித்து விட்டார். படத்தில் நானும் விஜயகாந்தும் பாடுவதாக வரும் "எரிமலை எப்படி பொறுக்கும்? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?'' என்ற பாடல் காட்சியை ஏவி.எம். காலனியில் எடுத்தார்கள். பாடலில் இருந்த நெருப்பு வரிகள் படத்துக்கு பக்கபலமாக அமைந்தது. படம் வெற்றி பெற்றது.
கதைப்படி, இந்தப் படத்தின் ஹீரோ நான்தான். எனவே விஜயகாந்தை விடவும் சம்பளமும் எனக்குத்தான் அதிகம்!
இந்தப்படம் வந்த பிறகு என் மீது கம்யூனிச முத்திரை விழுந்து விட்டது. `தொழிலாளர் தோழன்' என்கிற மாதிரியான படத்தின் காட்சியமைப்புகள் ரசிகர்கள் என்னை "தோழரே'' என்று அழைக்கும் அளவுக்குப் போயிற்று.
தொடர்ந்து படங்களின் எண்ணிக்கை அதிகரித்தன. "வீட்டுக்காரி'', "பட்டம் பறக்கட்டும்'', "இனிமை இதோ இதோ'', "அர்ச்சனை பூக்கள்'', "பூம்பூம் மாடு'' என பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன். ஹீரோவா, கேரக்டர் ரோலா கதையின் முக்கியத்துவம் கருதி எந்த வேடத்தையும் ஏற்று நடித்தேன்.
இந்த காலகட்டத்தில் அடுத்தடுத்து ஐந்தாறு வருடங்களில் வருஷத்துக்கு 15 படம் நடித்த ஹீரோ நான்தான். அந்த வருஷங்களில் அதிக படங்களில் நடித்த ஹீரோவும் நான்தான்.
ஒருநாள் கலைஞர் வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. கலைஞரின் செயலாளர் சண்முகநாதன் என்னிடம், "தலைவர் (கலைஞர்) உங்களை பார்க்க விரும்புகிறார்'' என்று தெரிவித்தார்.
எனக்கு உடம்பு சிலிர்த்து விட்டது. எந்தத் தலைவரை ஊரில் சிறுவனாக இருந்த காலகட்டங்களில் பார்க்கத் துடித்தேனோ, எந்த தலைவர் பிரசாரத்துக்கு ஊர் வந்தால் அவர் பேச்சைக் கேட்டு மகிழ அவர் கார் போகிற இடமெல்லாம் மூச்சு விடாமல் ஓடித் துரத்தினேனோ அந்த தலைவர் என்னைப் பார்க்க விரும்புவதாக சொன்னால் எனக்கு எப்படி இருக்கும்?
மறுநாள் காலையில் ஒருவித பரவசத்துடன் கலைஞரின் வீட்டுக்குப் போனேன்.

சினிமாவில் நடிக்க விரும்பிய சந்திரசேகருக்கு, முதலில் நாடகங்களில் வாய்ப்பு கிடைத்தது. 4 வருடங்களில் படிப்படியாக முன்னேறி நாடக கதாநாயகனாக உயர்ந்தார்.

நாடகத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து சந்திரசேகர் கூறியதாவது:-
"முதலில், சாதாரணமாக தலைகாட்டி விட்டுப் போகும் வேடங்கள்தான் கிடைத்தன. அதுவே போதும் என்றிராமல், நாடகத்தின் ஒட்டுமொத்த கேரக்டர்கள் பற்றியும், அந்த கேரக்டர்களுக்கான வசனங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். ஏற்ற இறக்கங்களோடு பேசிப் பார்த்தேன்.
ஒரு நாடகத்தில் யாராவது ஒருவர் வராமல் இருந்தால் அவருக்குப் பதிலாக நான் நடிக்கும் அளவுக்கு தேர்ந்திருந்தேன். அதனால்தான் சின்ன வேடத்தில் தோன்றிய அதே நாடகத்தில், கதாநாயகன் வேடம் வரை வர முடிந்தது.
நடிப்பு என்பது எனக்குள் வெறியாகவே மாறிப்போனதால், ஊர் ஊராக நாடகம் போடப்போகிற இடத்தில்கூட, ரசிகர்கள் கிடைத்தார்கள். சீர்காழியை அடுத்த கோவில்பத்து என்ற ஊரில் எங்கள் நாடகக் குழு கேம்ப் போட்டிருந்தபோது வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. அதாவது பகல் முழுக்க காய்ச்சலாக இருக்கும். மாலை 6 மணி ஆனதும், காய்ச்சல் விட்டுவிடும்!
பகலில் காய்ச்சல் காரணமாக சாப்பிட முடியாத நிலை. இரவில் நாடகத்தில் நடித்தாக வேண்டும். `பசி'யையும், காய்ச்சலையும் மறந்து ஏற்ற கேரக்டரோடு ஒன்றி விடுவேன். ரசிகர்களின் கரகோஷம்தான் எனக்கு சாப்பாடு!
ஒரு மாதம் இப்படி நீடித்த அந்த மர்மக் காய்ச்சலில், உடம்பு பாதியாகிவிட்டது.
எனக்கு எப்போதுமே சுய மரியாதை உணர்வு அதிகம். நாடக கம்பெனி முதலாளி கொஞ்சம் முரட்டுக் குணம் கொண்டவர். அவரை பார்த்தாலே நாடகக் குழுவில் உள்ள அத்தனை பேரும் பயப்படுவார்கள். நான் மட்டும் இதில் விதிவிலக்கு. முதலாளி என்ற மரியாதை உண்டு என்றாலும், `தேவையில்லாமல் ஏன் பயப்பட வேண்டும்' என்று நினைப்பேன்.
இந்த என் சுய மரியாதைக்கும் ஒரு நாள் சோதனை வந்தது. ஒருநாள் மேக்கப் ரூமில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த முதலாளி என்னை அழைத்தார். "டீ வாங்கிட்டு வாப்பா'' என்றார்.
வழக்கமாக வரும் டீக்கடை பையன் அன்று வரவில்லை என்பதால்தான் என்னிடம் `டீ' வாங்கி வரச்சொன்னார். என்றாலும் அவர் கேட்ட தோரணை என் தன்மானத்தை உசுப்பி விட்டது. உடனே நான் அவரிடம், "உங்களுக்கு டீ வாங்கிட்டு வர்றது என் வேலையில்லை. நடிக்கிறதுதான் என் வேலை'' என்று சொல்லிவிட்டேன்.
நான் இப்படிச் சொன்னதும் மேக்கப் ரூமில் இருந்த நடிகர்கள் முகத்தில் ஒருவித பதட்டம் தெரிந்தது. அடுத்து முதலாளியின் `ரியாக்ஷன்' என்ன மாதிரி இருக்குமோ என்பதில் ஏற்பட்ட பயம் அது.
ஆனால் நடந்தது என்ன தெரியுமா? முதலாளி என் பதிலை சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டார். நான் `டீ' விஷயமாக அவரிடம் பேசியதை காட்டிக் கொள்ளாமல், வேறு சப்ஜெக்ட் பற்றி பேசத் தொடங்கி விட்டார்.
நாடகத்தில் நடித்த காலக்கட்டத்தில் என் குரல் சன்னமாக இருக்கும். குரல் கம்பீரமாக இருக்க, தொடர்ந்து பேசி பயிற்சி பெற விரும்பினேன்.
எங்கள் நாடகம் நடக்கும் இடத்தைச் சுற்றி 50 கிராமங்களுக்கு மேல் இருக்கும். காலை நேரத்தில் இந்த கிராமங்களுக்கு வண்டி கட்டி மைக்கில் நாடகம் பற்றி அறிவிப்பார்கள். இப்படி மைக்கில் அறிவிக்கும் பொறுப்பை, நானாகக் கேட்டு பெற்றுக்கொண்டேன்! காலை 10 மணிக்கு இப்படி அன்பார்ந்த பெரியோர்களே! என்று ஆரம்பித்தால், அது முடிய மாலை 6 மணி ஆகிவிடும்.
அதன் பிறகு 61/2 மணிக்கு தொடங்கும் நாடகத்தில் நடிக்கத் தயாராக வேண்டும். இப்படி பகல் முழுக்க `மைக்'கில் கத்திப் பேசிவிட்டு, நாடகத்திலும் உணர்ச்சி மயமான காட்சிகளில் நடிக்கும்போது வாயில் இருந்து ரத்தம் கசியும். ஆனாலும் இப்படியான கடினப் பயிற்சிதான், என் குரலை வளமாக்கியது.
மழை சீசனில் நாடகம் நடத்த முடியாது. அதனால் ஊருக்குப்போய் விடுவேன். அப்பாவிடம் என் நாடக அனுபவங்களை சொல்லுவேன். ராஜாதேசிங்கு நாடகத்தில் தேசிங்காக நடித்ததை அப்பாவிடம் சொன்னபோது "தேசிங்காக நடித்துக்காட்டு'' என்றார் அப்பா. உடனே வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் தேசிங்குராஜனாகவே மாறி அப்பாவிடம் நடித்துக்காட்டினேன்.
கண் கலங்கிப்போன அப்பா என்னிடம், "நடிக்கணும்னு ஆசைப்பட்டே! அதில் திறமை இருந்தாதான் வரமுடியும். இப்போது உன் திறமையில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நிச்சயம் நீ சினிமாவிலும் ஜெயிப்பாய். நீ சிங்கக் குட்டியடா!'' என்று சொன்னபடி என் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
ஆனால், என் சினிமாக் கனவு பலிக்கும் முன்பே அப்பா இறந்து போனார்.
வீட்டில் நான்தான் கடைசிப் பையன். அப்பா இறந்ததற்கு மொட்டை போட்டு, 16-ம் நாள் காரியம் முடியும் வரை வீட்டில் இருந்தேன். அதன் பிறகு திருவெண்காட்டில் நடந்த எங்கள் நாடகத்துக்குப் போனேன்.
அந்த நாடகத்தில் எனக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். ஒரு காட்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வேகத்தில் தொப்பியைக் கழற்றிவிட்டேன். என் மொட்டைத் தலையைப் பார்த்து, ரசிகர்கள் சிரித்து விட்டார்கள். உடனே நான் நடிப்பதை நிறுத்திவிட்டு, ஒலிபெருக்கியில் ரசிகர்களிடம் பேசினேன். "பலதரப்பட்ட வேடங்களில் என் நடிப்பை பார்த்திருப்பீர்கள். இந்த போலீஸ் கேரக்டரில் என் நடிப்பைத்தாண்டி நீங்கள் சிரிக்கிற காரணம், என் அப்பாவின் மரணத்துக்காக நான் போட்ட மொட்டை. இது தந்தையின் இழப்புக்காக ஒரு மகனின் கடமை. அந்தக் கடமையை முடித்து விட்டுத்தான் உங்கள் முன்பாக மேடையேறியிருக்கிறேன். இதற்குப் பிறகும் என் மொட்டைத் தலைக்காக நீங்கள் சிரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்'' என்றேன்.
நான் பேசி முடித்ததும் ரசிகர்கள் மத்தியில் ஒரு அசாதாரண அமைதி நிலவியது. சிலருடைய கண்கள் கலங்கியிருந்தன. என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு நடித்து முடித்தேன்.
எனக்கு அப்போது 20 வயதுதான். அந்த ஊரில் இருந்துதான் சினிமாவில் நடிக்க சென்னைக்கு புறப்பட்டேன். திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு மல்லிகைப்பூ ஏற்றி வந்த லாரியில், மல்லிகை வாசனையை முகர்ந்து கொண்டே சென்னை வந்து சேர்ந்தேன்.
அது 1975-ம் வருஷம். அப்போதுதான் டெலிவிஷன் மக்களிடையே அறிமுகமாகியிருந்தது. நான் மைலாப்பூர் மாங்கொல்லையில் உள்ள, ஒரு லாட்ஜில் மாதம் 150 ரூபாய் வாடகையில் தங்கியபடி சினிமா வாய்ப்புக்கு முயன்றேன்.
அப்போது சென்னை டெலிவிஷனில் பணியாற்றிய கவிஞர் தஞ்சை வாணனின் நட்பு கிடைத்தது. அவரது நாடகங்கள் டெலிவிஷனுக்காக சீரியலாக உருவானபோது, எனக்கும் வாய்ப்பு கொடுத்தார். மாதம் ஒரு டெலிவிஷன் நாடகம் கிடைத்தது. நாடகத்தில் நடிக்க எனக்கு கிடைத்தது 75 ரூபாய்.
நான் நடித்த முதல் நாடகம் ஒளிபரப்பான நாளில் அதை டிவியில் எப்படியாவது பார்த்துவிட ஆசை. நான் இருந்த லாட்ஜ் ரூமில் டெலிவிஷன் கிடையாது. எனவே அப்போது எனக்கு அறிமுகமாகியிருந்த ஆர்ட் டைரக்டரின் வடபழனி வீட்டுக்கு நானும் அவரும் மைலாப்பூரில் இருந்து பஸ்சில் புறப்பட்டோம்.
பஸ் வடபழனி வந்து சேரவும், நாடகம் ஒளிபரப்பாகும் நேரம் வரவும் சரியாக இருந்தது. அங்கிருந்து ஓட்டமாய் ஓடி, நான் வாசலில் கால் வைத்தபோது தெரிந்தது என் முகம்தான். அப்போதுதான் நான் நடித்த காட்சி டிவி திரையில் ஓடிக்கொண்டிருந்தது. என் முகத்தை நானே திரையில் பார்த்தது அதுதான் முதல் தடவை என்பதால், அந்த நேரத்தில் ஏற்பட்ட என் பரவச உணர்வை என்னால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியவில்லை. அப்போதே சினிமாவில் நடித்து ஜெயித்து விட்ட மாதிரி அப்படி ஒரு சந்தோஷம்.
இப்படி டிவி நாடகங்கள் தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் தஞ்சை வாணனிடம் இருந்து நாடகத் துறை இன்னொருவர் கைக்கு மாறிவிட்டது. அவருக்கு ஏனோ என்னை பிடிக்காமல் போயிருக்கிறது. அடுத்த நாடகத்தில் நடிப்பதற்காக அவரை சந்தித்தபோது, "கேரக்டர் இருக்கிறது'' என்றார். மற்ற நடிகர் - நடிகைகளுக்கு இன்னின்ன கேரக்டர் என்று சொன்னவர், என்னிடம் மட்டும் எதுவும் சொல்லவில்லை. கடைசியில் எனக்கு கிடைத்தது "இறந்து போன கணவனின் அசரீரி குரல்!''
அதாவது, நாடகத்தில் என் குரல் மட்டும்தான் ஒலிக்கும். நான் பேச வேண்டிய வசன பேப்பரை உதவி இயக்குனர் என்னிடம் நீட்டியபோது, எனக்கு வந்ததே கோபம். "இது டிவி நாடகம். ரேடியோ நாடகத்துக்குத்தான் குரல் தேவை'' என்று சொன்னபடி, அந்த பேப்பரை வீசி எறிந்தேன்.
இந்த விஷயம் புது டிவி இயக்குனருக்கு போக, என்னை வரச்சொன்னார். போனேன். என்னைப் பார்த்ததும், "எல்லோருடைய முன்னிலையிலும் ஸ்கிரிப்ட் பேப்பரை தூக்கி வீசினாயாமே?'' என்று கேட்டார். என்னை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரே இப்படியொரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார் என்பது புரிந்தது.
"நடிப்பாயா? மாட்டாயா?'' என்று கேட்டார்.
"முடியாது'' என்றேன்.
டிவி நாடகம் கை நழுவியது.
காலம் மாறியது
அன்று என்னை விரட்டி அடித்த அதே டிவி டைரக்டர்,
5 ஆண்டுகள் கழித்து என்னை கை குலுக்கி பாராட்டிய சம்பவமும் நடந்தது.
பாரதிராஜா இயக்கத்தில் நான் நடித்த "நிழல்கள்'' படத்தின் பிரத்தியேக காட்சி மைலாப்பூரில் உள்ள "மேனா'' தியேட்டரில் நடந்தது. படம் பார்த்த முக்கிய பிரமுகர்கள் டைரக்டர் பாரதிராஜாவுக்கு கைகொடுத்து வாழ்த்து சொல்கிறார்கள். அப்போது ஒரு கரம் என் பக்கம் நீளுகிறது. பார்த்தால் டிவி இயக்குனர். "வாழ்த்துக்கள்! பிரமாதமா நடிச்சிருக்கீங்க'' என்று கை குலுக்கி வாழ்த்தினார்.

சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்சியால் நடிகரானவர் சந்திரசேகர். ஹீரோ, குணசித்ரம், வில்லன் என்று எந்த கேரக்டரிலும் தன்னை இயல்பாக வெளிப்படுத்திக் கொள்ளும் சந்திரசேகர், சினிமாவில் ஏற்று நடிக்காத கேரக்டர்களே இல்லை. 28 வருடங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தொடர்ந்து நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

சந்திரசேகருக்கு சொந்த ஊர் திண்டுக்கல்லை அடுத்த வாகைக்குளம். திண்டுக்கல்லில் உள்ள டட்லி பள்ளியில்தான் ஆரம்பப்படிப்பு. பள்ளியில் ஆறாவது படிக்கும்போது, மற்ற மாணவர்களிடம் இல்லாத ஒரு திறமை இவரிடம் இருந்தது. அதாவது பாடம் நடத்தும் ஆசிரியர்களின் `மேனரிசம்' என்னவோ, அதை அப்படியே உள்வாங்கி, அந்த ஆசிரியர் பாடம் நடத்தி விட்டுப் போனதும் அதை அப்படியே நடித்துக் காட்டுவார்!
இப்படி நடிக்க ஆரம்பித்தவருக்கு, நிறைய சினிமா பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தினமும் வீட்டில் காய்கறி வாங்க கொடுக்கும் காசில் கமிஷன் பார்த்து அதை படம் பார்க்க வைத்துக் கொள்வார். 25 பைசா தேறினால் ஒரு படத்துக்கான கட்டணம் ஆகிவிடும். சைக்கிள் பாசுக்கு 5 பைசா. 30 பைசாவுக்குள் படம் பார்க்கும் கனவு நிறைவேறி விடும். இதனால் எப்போது கையில் 30 பைசா தேறுகிறதோ, அன்றெல்லாம் வகுப்புக்கு `கட்' அடிக்க ஆரம்பித்தார்.
படம் பார்த்து முடித்த பிறகு படத்தில் நடித்தவர்கள் பற்றி அறிய ஆசை ஏற்பட்டது. திண்டுக்கல் பஜாரில் ஞாயிறு தோறும் பிளாட்பாரத்தில் புத்தக கடை போடப்பட்டிருக்கும். அந்தக் கடையில் "பேசும் படம்'', "பிலிமாலயா'' முதலிய சினிமா பத்திரிகைகளும் இருக்கும். தேடிப்பிடித்து அதை படிக்கும் சந்திரசேகர், நடிகராகவேண்டும் என்ற கனவை தனக்குள் விதைத்துக் கொண்டது அப்போதுதான்.
கலைஞரின் "பராசக்தி'', "மனோகரா'' வசனங்கள் அவரைக் கவர்ந்தன. அந்த வசனங்கள் அவருக்கு மனப்பாடம்.
1965-ல் தி.மு.கழகம் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அப்போது 6-வது படித்துக் கொண்டிருந்த சந்திரசேகர் தன் சக மாணவர்களுடன் கலந்து கொண்டார்.
11-வது வகுப்பை முடித்த சந்திரசேகரின் அண்ணன் பாண்டியன் ஓவியக் கல்லூரியில் சேர சென்னை புறப்பட்டார். அண்ணனின் சென்னைப் பிரவேசத்தில் சந்திரசேகர்தான் அதிகம் மகிழ்ந்தார். சென்னையில்தான் அவரை கலையால் ஆட்டி வைக்கும் நடிகர் - நடிகைகள் இருக்கிறார்கள்.
அண்ணனின் சென்னை பிரவேசம் தன்னை எப்படி பரவசப்பட வைத்தது என்பதை சந்திரசேகர் கூறுகிறார்:-
"சென்னை வந்த அண்ணன் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து விட்டார். எனக்கு எஸ்.எஸ்.எல்.சி. (அப்போதைய 11-ம் வகுப்பு) முடிந்ததும் சென்னை வந்து நடிப்புக் கல்லூரியில் சேர ஆசை. அண்ணன் ஏற்கனவே சென்னை வந்துவிட்டதால், எனக்கும் வீட்டில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அப்பாவிடம் என் ஆசையை சொன்னபோது, "முதலில் டிகிரி (பட்டப்படிப்பு) முடி! அப்புறம் பார்த்துக்கலாம். ஒரு டிகிரி இருந்தால் நிச்சயம் உனக்கு சோறு போடும்'' என்றார் அப்பா.
அப்பா சொன்னதை தட்ட முடியவில்லை. அதனால் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் சேர விண்ணப்ப படிவம் வாங்கப்போனேன். அதற்கும் பெரிய கூட்டம். வரிசையில் நின்றேன். கடைசியாக எனக்கு முன்நின்று கொண்டிருந்த 2 பேர் பணம் கட்டிவிட்டால் அடுத்து நான்தான் கட்ட வேண்டும்.
அப்போது மறுபடியும் என் மனத்திரை சினிமா பக்கமாக ஓடியது. கல்லூரியில் சேர்ந்து விட்டால் 3 ஆண்டுகளுக்கு சினிமாவை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எனவே "படிப்பா, நடிப்பா?'' என எனக்குள் கேட்டுக்கொண்டு தடுமாறி நின்ற நேரத்தில் எனக்கு முன்னதாக நின்றவரும் பணத்தை கட்டிவிட்டார். அடுத்து நான். இப்போது என் சினிமா ஆசை வென்றது. எனக்குப்பின் நின்றவருக்கு வழிவிட்டுவிட்டு, வரிசையை விட்டு வெளியே வந்தேன். விண்ணப்ப படிவத்தை கிழித்துப் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். பீஸ் கட்ட அப்பா கொடுத்த பணத்தை திரும்பக் கொடுத்தேன். கொடுக்கும்போதே அழுகை வந்துவிட்டது.
"ஏண்டா என்னாச்சு?'' அப்பா கேட்டார்.
நான் அப்பாவிடம், "கல்லூரியில் சேர்ந்து 3 வருஷம் படித்த பிறகும் சினிமாவுக்குத்தான் போகப்போகிறேன். இப்போதே முயற்சி செய்தால் இந்த மூன்று வருஷம் மிச்சமாகுமே'' என்றேன். அப்பா என்னையே கூர்ந்து பார்த்தார். முகத்தில் கோபம் இல்லை. "சினிமாவுக்குள் இத்தனை தீவிரமா?'' என்கிற மாதிரி பார்வை இருந்தது. "சரிப்பா! இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய்! முயற்சி செய்து பார்'' என்றார். இது போதாதா? அடுத்த வாரமே சென்னைக்கு புறப்பட்டேன்.
ஏற்கனவே சினிமா பத்திரிகையில் டைரக்டர்களின் முகவரியை பார்த்து குறித்து வைத்திருந்தேன். சென்னையில் நான் நடிக்க வாய்ப்பு கேட்க முடிவு செய்திருந்த முதல் இயக்குனர் கே.பாலசந்தர். சென்னை வாரன் ரோட்டில் இருந்த அலுவலகத்தில் கே.பாலசந்தர் சாரை போய் பார்த்தேன். அரை டிராயருடன் 11-வது வகுப்பு முடித்த பையனுக்கு எப்படி ஹீரோ வாய்ப்பு கொடுக்க மனம் வரும்? என் நடிப்பு ஆர்வத்தை தெரிந்து கொண்டவர், "படிச்சிட்டு தானே இருக்கே! முதல்ல நல்லா படி. படிப்பை முடிச்சிட்டு வந்து என்னைப்பார்'' என்றார்.
நான் சோர்ந்து போனேன். என்றாலும் அடுத்து டைரக்டர் பட்டு, கதாசிரியர் - வசனகர்த்தா பாலமுருகன் ஆகியோரை சந்தித்தேன். அவர்களும் அதே மாதிரி சொல்லிவிட்டார்கள்.
டைரக்டர்களை இனி பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அடுத்து என் மனக்கண் முன் தோன்றியவர் கலைஞர். பொதுக்கூட்டங்களில் அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். "பராசக்தி'' வசனம் எனக்கு தலைகீழ் பாடம். கலைஞரை சந்தித்து, வசனம் பேசிக் காட்டுவோம். அவர் சொன்னால் டைரக்டர்கள் கேட்கத்தானே செய்வார்கள்'' என்று என் மனசு கணக்குப்போட, கோபாலபுரம் போனேன்.
கலைஞர் வீட்டு முன் நான் அங்கும் இங்கும் நடைபோட்டுக் கொண்டிருப்பதை பார்த்த ஒருவர் என்னிடம் வந்தார். "யாருப்பா நீ?'' என்று கேட்டார். நான் விவரத்தை சொல்லி, "கலைஞர் மட்டும் நான் வசனம் பேசுவதை கேட்டால் நிச்சயம் என்னை நடிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்வார். அவரை பார்த்துப் போகவே வந்தேன்'' என்றேன்.
நான் சொன்னதை கேட்ட அந்த மனிதரோ, "நடிக்க வந்திருக்கிற ஆளைப் பாரேன்! படிக்கிற வயசில என்னடா இதெல்லாம்?'' என்று முதுகில் ஒரு போடு போட்டார் (செல்லமாகத்தான்). இப்போதும் கலைஞரிடம் உதவியாளராக இருக்கும் செயல்மணிதான் அன்று என்னை படிக்கச் சொல்லி துரத்தி விட்டவர்!
யார் யாரையோ பார்த்தும் எதுவும் நடக்காத நிலையில், சினிமா பத்திரிகையில் பணிபுரிய வாய்ப்பு வந்தது. அப்போது "திரைவானம்'' என்ற சினிமா பத்திரிகையை நரசிம்மன் என்பவர் நடத்தி வந்தார். அப்போது புகழேணியின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர் - சிவாஜி இருவர் பெயரிலும் தனித்தனி சினிமா பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. `திரைவானம்' பொதுவாக எல்லா சினிமா நடிகர்கள் பற்றிய செய்திகளையும் தருவதாக அமைந்திருந்தது.
சினிமா பத்திரிகை என்பதால் ஸ்டூடியோவுக்கு போய் நடிகர் - நடிகைகளை சந்தித்து பேட்டி எடுக்கும் வாய்ப்பு அமையும்; அதன் மூலம் நாமும் நடிகராகி விடலாம் என்று எண்ணினேன். சினிமா பத்திரிகை நிருபரை பத்திரிகையாளராக பார்த்தார்களே தவிர, `நாளைய நடிகர்' என்ற கண்ணோட்டத்தில் யாரும் பார்க்கவில்லை!
இதற்கிடையே சென்னை யானைக்கவுனியில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் மானேஜராக சேர்ந்தேன்.
வரும் லாரிகளுக்கு தேவையான சரக்கை ஏற்றி `டிரிப்ஷிட்' போட்டு அனுப்புவது என் வேலை. ஆனால் எப்போதும் சினிமா நினைவிலேயே இருந்ததால், வேலையில் கோட்டை விட்டேன்.
லாரி புக்கிங் கம்பெனி உரிமையாளருக்கு வியாபாரிகள் போன் செய்தார்கள். "என்ன அண்ணாச்சி! துவரம் பருப்பு லோடு கேட்டால் அரிசி மூட்டைகள் வந்திருக்கு!'' என்றும், "புளி, மிளகாய் லோடுதானே கேட்டேன். துவரம் பருப்பு, பனைவெல்லம் வந்திருக்கு'' என்று புகாருக்கு மேல் புகார்!
முதலாளி என்னை அழைத்தார். "முப்பது வருஷத்துக்கு மேல் பிசினசில் கொடிகட்டிப் பறந்த என் செல்வாக்கை ஒரே வாரத்தில் ஆட்டம் காண வைத்த புண்ணியவானே! போயிட்டு வா!'' என்று கூறி, என் சீட்டைக் கிழித்து அனுப்பி வைத்தார்.
அப்போது, என் உறவினர் பெரிய கருப்பத்தேவர் நாடக கம்பெனியில் நடிகராக இருந்தார். நாடகத்தில் இருந்துதான் எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், மனோரமா போன்றோர் சினிமாவுக்கு போனதாக சொன்னார். நாடகத்தில் நடித்தால், சினிமா வாய்ப்பு எளிதில் கிடைக்கும் என்றும் சொன்னார்.
இது போதாதா! அப்போது பிரபலமாக இருந்த தேவி நாடக சபாவிலும், பிறகு வைரம் நாடக சபாவிலும் சேர்ந்தேன்.
1974-ல் தொடங்கி 1976 வரை நான் நடிப்பில் பட்டை தீட்டப்பட்டது இந்த சபாக்களில்தான். ராஜாதேசிங்கு நாடகம் நடந்தபோது, அதில் ஒரு போர் வீரனாக வேடம் கிடைத்தது. நாடகத்தின் அத்தனை கேரக்டர்களின் வசனங்களையும் மனதில் பதித்துக் கொண்டேன். இரண்டே வருடத்தில் நானே ராஜாதேசிங்கு கேரக்டரில் நடிக்கும் அளவுக்கு நடிப்பில் வளர்ந்தேன்.

"வினியோகம் செய்த சில படங்கள் தோல்வி அடைந்ததால், 10 ஆண்டுகள் அத்துறையை விட்டு ஒதுங்கியிருந்தேன். மீண்டும் எனக்கு வெற்றி தேடித்தந்த படம், ரஜினி நடித்த "சிவாஜி'' என்று அபிராமி ராமநாதன் கூறினார்.

திரைப்படத்துறை அனுபவங்கள் குறித்து அவர் தொடர்ந்து கூறியதாவது:-
"தியேட்டர் நிர்வாகம்தான் எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பை நிலைப்படுத்தியது.
அப்போது மவுண்ட் ரோட்டில் இருந்த "சாந்தி'', "தேவி'', "சபையர்'', "ஆனந்த்'' தியேட்டர்களில் மட்டுமே ஏர்கண்டிஷன் வசதி இருந்தது. புரசைவாக்கத்தில் நாங்கள் கட்டிய அபிராமியும், பாலஅபிராமியும் ஏர்கண்டிஷன் தியேட்டர்கள். இதன் காரணமாக, தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
அபிராமி தியேட்டரைச் சுற்றி நிறைய இடம் இருந்தது. அங்கு அன்னை அபிராமி, சக்தி அபிராமி என்று 2 தியேட்டர்கள் உருவாக்கப்பட்டன.
"டிவி''யில் சினிமா படங்கள் ஒளிபரப்பத் தொடங்கிய காலகட்டத்தில் குடும்பத்துடன் படம் பார்க்க வருவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதனால், தியேட்டருக்கு ரசிகர்களை வரச்செய்ய ஒரு புது உத்தியைக் கையாண்டேன். "போன் செய்தால் போதும். டிக்கெட் உங்கள் வீடு தேடிவரும்'' என்று ஒரு திட்டம் தொடங்கினோம். அது பெரிய வெற்றி. புதிய படங்களை பார்க்க விரும்புகிறவர்கள், டிக்கெட் வீடு தேடி வந்ததால், தியேட்டர்களுக்கு குடும்பம் குடும்பமாக வரத்தொடங்கினார்கள்.
எனக்கு, புதிய தொழில் நுட்பம் மீது எப்போதுமே ஆர்வம் அதிகம். வெளிநாடுகளில் "டி.டி.எஸ்'' என்னும் சிறப்பு ஒலி, படம் பார்க்கும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தருவதாக அறிந்தேன். உடனே நானும் எங்கள் தியேட்டர்களுக்கு "டி.டி.எஸ்'' ஒலியைக் கொண்டு வந்தேன். இந்த வகையில் இந்தியாவில் முதல் "டி.டி.எஸ்'' தியேட்டர் எங்களுடையதுதான்.
டி.டி.எஸ். சிறப்பு ஒலியுடன் கூடிய படம் வந்தால்தானே இந்த புதிய அனுபவத்தை ரசிகர்கள் உணர முடியும்? அதுமாதிரியான படங்கள் அதிகம் வரவில்லை. இதுபற்றி ஒரு முறை கமலஹாசனிடம் என் மனக்குறையை வெளியிட்டேன். "தெரியாத்தனமாக 3 1/2 லட்சம் செலவில் டி.டி.எஸ். ஒலி வசதி பண்ணிவிட்டேன். ஆனால் படம்தான் கிடைக்கவில்லை'' என்றேன்.
கமல் அப்போது "குருதிப்புனல்'' படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். கமலுக்கும் எப்போதுமே புதிய தொழில் நுட்பத்தில் ஆர்வம் உண்டு. உடனே `குருதிப்புனல்' படத்தில் "டி.டி.எஸ்'' சிறப்பு ஒலி சேர்க்க முடிவு செய்தார். அதற்காக, படத்தை ரிலீஸ் செய்வதை 3 மாதம் தள்ளி வைத்தார். இப்படி எங்கள் தியேட்டரில் திரையிடப்பட்ட முதல் "டி.டி.எஸ்'' படம் `குருதிப்புனல்.'
இதுமாதிரி டிஜிட்டல் முறையில் படம் திரையிடும் வசதி வந்தபோது, ஏவி.எம். சரவணன் அப்போது அவர் தயாரித்த "பேரழகன்'' படத்தை எங்களுக்கு டிஜிட்டல் முறையில் தந்தார். அதுபோல டால்பி சவுண்ட் சிஸ்டத்தை திரையரங்கில் முதலில் புகுத்தியதும் நாங்கள்தான்.
1984-ல் மலேசியா போயிருந்தபோது அங்கிருந்த 4 தியேட்டர்களில் "ஷாப்பிங் மால்'' கொண்டு வந்திருந்ததை பார்த்தேன். படம் பார்க்க வருகிறவர்கள் பலவித பொழுது போக்குகளில் ஈடுபடவும், பலவித ரெஸ்டாரெண்டுகளில் உணவு அருந்தவும், விரும்பிய பொருட்களை வாங்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதனால் தியேட்டருக்கு வருகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அறிந்தேன்.
இதனால் "அபிராமி'' தியேட்டர்கள், அபிராமி மால் என்ற பெயருடன் 2003-ம் ஆண்டு நவீன வடிவமைப்புடன் மாற்றி அமைத்தேன். தென்னிந்தியாவில் அமைக்கப்பட்ட தியேட்டர்களுடன் கூடிய முதலாவது ஷாப்பிங் மால் அபிராமிதான்.
எங்கள் மாலில் உள்ள "சொர்ண சக்தி அபிராமி'' (பழைய சக்தி அபிராமி) இப்போது ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, படுத்துக்கொண்டே சினிமா பார்க்கலாம்! பாத்ரூம் கூட, ஏர்கண்டிஷன் செய்யப்பட்டுள்ளது.
புதிய படங்களை எங்கள் தியேட்டர்களில் திரையிடும் நோக்கில் அதை பார்ப்பதுண்டு. அப்படிப் பார்க்கும்போது அது சரியாக ஓடுமா என்பது தெரிந்து விடும். இப்படி படங்களை பார்த்துப் பார்த்து, `நாமும் ஒரு படத்தை தயாரிக்கலாமே' என்ற எண்ணம் ஏற்பட்டது. 1994-ல் இப்படி நான் தயாரித்த படம்தான் `அடிமைச்சங்கிலி.' அர்ஜூன், ரம்பா, ரோஜா நடித்த இந்தப் படத்தை டைரக்டர் ஆர்.கே.செல்வமணி இயக்கினார்.
அந்தக் காலக்கட்டத்திலேயே 3 1/2 கோடி ரூபாய் செலவாயிற்று. படத்தயாரிப்பு 10 மாதம் வரை நீடித்தது. படம் ரிலீசான போது நஷ்டம் ஏற்பட்டது. என்றாலும் என் படத்தை நம்பி வாங்கி நஷ்டப்பட்ட வினியோகஸ்தர்களின் நஷ்டத்தை நானே ஏற்றுக்கொண்டேன். இந்த வகையில் தியேட்டர் அதிபரான என் முதல் சினிமா தயாரிப்பு அனுபவம் "இக்கரைக்கு அக்கரைப் பச்சை'' கதைதான்.
ரஜினி நடித்த ஒரு ஆலிவுட் படம் "பிளட் ஸ்டோன்.'' மெட்ரோ பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்த இந்த படத்துக்கு நான்தான் "பைனான்ஸ்'' பண்ணினேன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் 25 நாள் நடந்தது. ரஜினியுடன் நானும் இருந்தேன்.
ரஜினி "சூப்பர் ஸ்டார்'' ஆக உயர்ந்ததற்கு காரணம், அவரது `நடிப்பு பாதி; குணம் பாதி' என்றுதான் சொல்ல வேண்டும். காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு சரியாக 8-40 மணிக்கு ரஜினியிடம் இருந்து போன் வரும். "நான் ரெடி. கார் ரெடியா?'' என்று கேட்பார். தொழில் மீது அதிக பக்தி.
சினிமாத்துறையோடு சம்பந்தப்பட்டிருந்ததால், நடிகர் திலகம் சிவாஜியின் அன்புக்கும் உரியவராக இருந்தேன். என் மகள் திருமணத்தின்போது முழு நாளும் கூடவே இருந்து எங்கள் குடும்பத்தை சந்தோஷப்படுத்தினார். அவரை பார்க்க வருவது தள்ளிப்போனால், உரிமையுடன் கோபித்துக் கொண்டு, "ஏண்டா! ஏதாவது விஷயம் இருந்தால்தான் வருவியா?'' என்று கேட்பார்.
பட உலகில் என்னை வியக்க வைத்த இன்னொருவர் சின்னப்ப தேவர். ஒரு சினிமா எப்படி இருந்தால் வெற்றி பெறும் என்ற `லாஜிக்' தெரிந்தவர். அவர் தயாரித்த "ஆட்டுக்கார அலமேலு'' படம், எங்கள் தியேட்டரில் ஓடியபோது படம் பார்க்க வந்திருக்கிறார். பால்கனியில் அவருடன் நானும் படம் பார்த்தேன்.
அப்போது அவரிடம் "படத்துக்கு கேமரா ஆங்கிள் இன்னும் கொஞ்சம் கவனமாக வைத்திருக்கலாம்'' என்றேன். அவரோ, "இந்தப் படத்தோட கதாநாயகன் ஆடுதான். ஆடு ஒழுங்காக நடிக்குதா என்று பாருங்க'' என்று சொல்லிவிட்டார்.
"படம் பார்க்கிறவர்களை ஒரு கதைக்குள் முழுமையாகக் கொண்டு வந்திட்டால், படம் நிச்சயமாக ஜெயிக்கும். சின்னச்சின்ன குறைகள் இருந்தால்கூட, ரசிகர்கள் அதை பெரிசா எடுத்துக்கொள்ளமாட்டார்கள்'' என்று அவர் சொன்னபோது, சினிமா பற்றிய அவரது ஞானம் வெளிப்படையாகத் தெரிந்தது.
படத்தின் தயாரிப்பாளர் என்ற நிலைக்கு வந்தபிறகு எனக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த கவுரவம் மறக்க முடியாதது. போலீஸ் கமிஷனராக இருந்த லத்திகா சரண் என்னிடம், "காவல்துறை பொதுமக்களின் நண்பன்'' என்கிற மாதிரியான கதைப் பின்னணியில் ஒரு குறும்படம் எடுத்துத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உடனே ஐந்தாறு குட்டிக் கதைகளுடன் அரை மணி நேரப்படமாக எடுத்துக் கொடுத்தேன். ஐந்து லட்சம் செலவாயிற்று. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நிஜ போலீஸ் அதிகாரிகளே நடித்தார்கள்.
சினிமாவில் அப்பா வினியோகத் துறையில் இருந்ததால், அப்பா வழியில் நாமும் முயன்று பார்க்கலாமே என்று தோன்றியது. அதற்காக 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்வது, லாபம் வந்தால் வினியோகத்தைத் தொடர்வது, நஷ்டம் வந்தால் அத்தோடு நிறுத்திக்கொள்வது என்று முடிவு செய்தேன்.
மொத்தம் 45 படங்கள் வரை வினியோகம் செய்தேன். அதில் 22 படங்கள் 100 நாள் ஓடின. 6 படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. என்றாலும் பின்னால் வினியோகம் செய்த படங்களில், போட்ட பணம் திரும்ப வராததால் முதல் குறையத் தொடங்கியது. அத்தோடு நிறுத்திக்கொண்டேன்.
பத்து வருடம் கழித்து, ரஜினி நடித்த "சிவாஜி'' படத்துக்கு சென்னை நகர வினியோக உரிமை பெற்றேன். அதில் நான் எதிர்பார்த்த லாபம் கிடைத்தது.
எதிர்பார்ப்புக்குரிய புதிய படங்கள் ரிலீசாகும்போது திருட்டு விசிடி எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள்தான் அதிக லாபம் பார்க்கும் நிலை சமீப காலங்களில் இருந்து வந்தது. மும்பையில் ஒரு இந்திப் படம் ரிலீசானால் உடனடி கலெக்ஷன் பார்ப்பதற்காக அதிக தியேட்டர்களில் திரையிடுவார்கள். பக்கத்து பக்கத்து தியேட்டர்களில் கூட திரையிடுவார்கள். இதனால் புதிய படம் பார்க்கும் ஆவல் கொண்ட ரசிகர்கள் இம்முறையில் தாமதமின்றி படம் பார்த்து விட முடிகிறது. இதனால் `திருட்டு விசிடி' பார்ப்பதற்கான வாய்ப்பு தவிர்க்கப்பட்டு விடுகிறது.
`சிவாஜி' படத்தின் சென்னை வினியோக உரிமையை ஏவி.எம்.சரவணனிடம் நான் கேட்டபோது, மும்பை நிலவரத்தை சொல்லி அதுபோல் சென்னையிலும் பல தியேட்டர்களில் திரையிட்டால் சரியாக இருக்கும் என்று கூறினேன். என் கருத்தை அவரும் ஏற்றுக்கொண்டார்.
சென்னையில் ஒரே நேரத்தில் 18 தியேட்டர்களில் `சிவாஜி' ரிலீசாகி வினியோகஸ்தர்களுக்கு முதலீடு செய்த தொகையையும் தாண்டி வசூலித்துக் கொடுத்தது.
இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.