என் மலர்
சினி வரலாறு
டைரக்டர் பி.வாசுவின் "வால்டர் வெற்றிவேல்'' படம், 200 நாட்கள் ஓடி சத்யராஜுக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை தேடித்தந்தது. படம் நூறு நாள் ஓடிய 40 ஊர்களுக்கும் சென்று ரசிகர்களை நேரடியாக சந்தித்தார், சத்யராஜ்.

டைரக்டர் பி.வாசு தனது அடுத்தடுத்த வெற்றிகளால் முன்னணி இயக்குனர் வரிசைக்கு வந்துவிட்டார். ரஜினி நடிக்கும் "மன்னன்'' படத்தை இயக்கவும் வாய்ப்பு வந்தது. இந்தப் படத்தை இயக்கும்போதே சத்யராஜ் நடிக்கும் "ரிக்ஷா மாமா'' படத்தையும் இயக்கினார்.
பி.வாசுவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மீண்டும் அமைந்தது குறித்து சத்யராஜ் கூறியதாவது:-
"வேலை கிடைச்சிடுச்சு'', "நடிகன்'' என 2 படங்களில் என்னை இரண்டு வித கேரக்டர்களில் வெளிப்படுத்திய டைரக்டர் பி.வாசு, குழந்தை மீதான பாசத்தை வெளிப்படுத்தும் "ரிக்ஷா மாமா'' என்ற படத்திலும் என்னை இயக்கினார்.
படத்தில் நான் ரிக்ஷா ஓட்டும் இளைஞனாக வருவேன், ஒரு பாடல் காட்சியில் "இது யாரு தந்த வண்டி... எம்.ஜி.ஆரு தந்த வண்டி'' என்ற வரிகள் வரும்போது, `எம்.ஜி.ஆர்.' என்ற இடத்தில் என் கண்கள் கலங்குகிற மாதிரி இருக்க வேண்டும் என்றார், டைரக்டர். அதனால் அந்த வரிகளுக்கு நான் நடிக்கும்போது கண்களில் `கிளிசரின்' போட்டுக் கொள்ள சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன்.
"எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மையை நன்றியுடன் நினைக்கும்போதே யாருக்கும் கண் கலங்கி விடும். நானும் அவரது அன்புக்குரியவர்களில் ஒருவன்தானே'' என்று சொல்லி விட்டேன்.
அந்தக் காட்சி படமாகும்போது நிஜமாகவே என் கண்கள் கலங்கி விட்டன. டைரக்டர் உள்பட யூனிட்டில் உள்ளவர்கள் என்னை இதற்காக பாராட்டியபோது, `இது நடிப்பல்ல. நிஜமான உணர்வு' என்பதை அவர்களும் புரிந்து கொண்டிருந்தார்கள்.
டைரக்டர் பி.வாசு "சின்னத்தம்பி'' படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அவரது படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்ததால் எனக்கும் உள்ளூர ஒரு ஆசை இருந்து கொண்டிருந்தது. சின்னத்தம்பி படத்தின் வெற்றி விழாவுக்காக 50 ஊர்களில் விழா எடுத்தார்கள், டைரக்டர் பி.வாசு, பிரபு-குஷ்பு, டெக்னீஷியன்கள் என ஒரு பெரிய குழுவே இதற்காக ஊர் ஊராக பயணப்பட்டது.
பாண்டிச்சேரியில் நடந்த நூறாவது நாள் விழாவுக்கு நான்தான் தலைமை தாங்கினேன். தியேட்டர்களில் இடம் போதாது என்பதால் அரசியல் கூட்டங்கள் நடக்கிற கிரவுண்டில் விழா நடத்தினார்கள். அங்கும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அப்போதே என் மனதிலும் நம்ம படத்துக்கும் இப்படி ஊர் ஊராக விழா, திருவிழாக்கூட்டம் என்று சென்று வர வேண்டும் என்றொரு ஆசை துளிர்விட்டது. மனதின் ஆசைகளுக்குத்தான் எல்லையே இல்லையே!
"ரிக்ஷா மாமா'' படம் முடிந்து ரிலீசான அதே நாளில்தான் ரஜினி நடித்த "மன்னன்'' படமும் ரிலீசானது. இரண்டுமே பி.வாசுவின் டைரக்ஷனில் உருவான படங்கள். இரண்டுமே வெற்றிப் படங்கள்.
பி.வாசு தனது "என் தங்கச்சி படிச்சவ'' படத்தின் வெற்றி விழாவுக்கு என்னையும் விஜயகாந்தையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார். "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தின் வெற்றி விழாவுக்கு ரஜினியை அழைத்திருந்தார். "நடிகன்'' வெற்றி விழாவுக்கு கமல் வந்திருந்தார்.
"ரிக்ஷா மாமா'' வெற்றி விழாவின்போது பல ஜாம்பவான்களை அழைக்க இயக்குனர் விரும்பினார், டைரக்டர்கள் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா மூவரையும் அழைத்து `விழா'வுக்கு தனி சிறப்பு சேர்த்தார்.
"ரிக்ஷா மாமா'' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது தாயார் பெயரில் `கமலம் மூவிஸ்'என்ற பட நிறுவனத்தை பி.வாசு தொடங்கினார். எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தவர்களிடம் அவர் மாதிரியே தாய்ப்பாசமும் அதிகமாக இருக்கும். வாசுவின் அப்பா எம்.ஜி.ஆரின் மேக்கப் மேனாக இருந்தவர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். குடும்பத்தோடு அவர்களுக்கு நல்ல ஐக்கியம் இருந்தது. எம்.ஜி.ஆர். தனது தாயாரை எந்த அளவுக்கு போற்றி மகிழ்ந்தார் என்பது தெரிந்ததால், வாசு தனது பட நிறுவனத்துக்கு தாயார் பெயரை வைத்திருக்கலாம் என்பது எனது எண்ணம்.
பி.வாசு இப்படி சொந்த கம்பெனி தொடங்கி தயாரிக்கும் முதல் படத்திலேயே என்னை ஹீரோவாக போட விரும்பியது எனக்கு மகிழ்ச்சி தந்தது. என்னிடம் 3 கதைகளின் `அவுட்லைன்' சொன்னார். "இதில் எந்தக் கதை பிடிக்கிறதோ அதை பண்ணுவோம்'' என்றார். மூன்றுமே பிடித்திருந்தாலும், போலீஸ் அதிகாரி பின்னணியில் அமைந்த கதை அதிகம் ஈர்க்க, அதை என் விருப்பமாக சொன்னேன். அதுதான் "வால்டர் வெற்றிவேல்''.
படத்தின் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்தினார் வாசு. ரஜினி கிளாப் அடிக்க, விஜயகாந்த் முதல் காட்சியை இயக்கினார், பிரபு கேமராவை `ஆன்' பண்ணினார்.
முதல் நாள் படப்பிடிப்பில் பி.வாசுவின் அப்பாவும் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான மேக்கப்மேனாக இருந்தவருமான பீதாம்பரம் தான் எனக்கு `பொட்டு' வைத்தார். மேக்கப் போடும் முன்னாக இப்படி பொட்டு வைப்பது வழக்கம். பொட்டு வைக்க அவர் விரல் என் நெற்றியைத் தொட்டபோது எனக்குள் ஒரு சிலிர்ப்பு. எத்தனை தடவை மேக்கப் போடுவதற்காக எம்.ஜி.ஆரை தொட்ட கை!
இந்த காலகட்டத்தில், படித்த பெண்கள் சினிமாவுக்கு வர ஆரம்பித்திருந்தார்கள். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக அமைந்த சுகன்யாவும் படித்தவர். வெளிநாடுகளிலும் பரத நாட்டியத்தின் சிறப்பை வெளிப்படுத்தியவர். அதோடு எனக்கு கிடைத்த இன்னொரு உயரமான நாயகி.
இந்தப் படத்தின் ஒரு காட்சி ரொம்பவே உருக்கமானது. பார்வையற்ற என் மனைவி, எதிரிகள் சதியால் குழந்தைக்கு விஷம் கலந்த புட்டிப்பாலை கொடுத்து விடுவார். இதனால் குழந்தை இறந்து போகும்.
இந்தக் காட்சியில் நான் மனம் உடைந்து கதறி அழ வேண்டும். டைரக்டர் `ஸ்டார்ட்' சொன்னதும், கேமரா ஓடத் தொடங்கியது. குழந்தை இறந்தது தெரிந்ததும் சுகன்யா கதற, நான் அழ, கேமரா ஓடிக் கொண்டிருந்தது.
காட்சி முடிந்தும் டைரக்டர் பி.வாசு `கட்' சொல்லவில்லை. அந்தக் கேரக்டருக்குள் கரைந்து போயிருந்ததால், எனக்கும் தொடர்ந்து கேமரா ஓடிக் கொண்டிருப்பது தெரியவில்லை. திடீரென பி.வாசு என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டபோதுதான், காட்சி படமாகி முடிந்து விட்டதை தெரிந்து கொண்டேன். வாசு கண்களிலும் கண்ணீர். இதன் பிறகே அவர் `கட்' சொல்ல, கேமராமேன் கேமராவின் இயக்கத்தை நிறுத்தினார். கேமராமேன் முகத்தைப் பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
சிவாஜி நடிப்பில் இன்றைக்கும் மறக்க முடியாத படம் "பாசமலர்''. அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தங்கை சாவித்திரியை தனது பார்வையற்ற நிலையில் சந்திப்பார். அப்போது சிறுவயதில் தங்கையின் பாசத்துக்குரிய அண்ணனாக பல விஷயங்களை நினைவுபடுத்துபவர், கடைசியில் உள்ளம் உடைந்து "கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு'' என்று பாடும்போது டைரக்டர் பீம்சிங் `கட்' சொல்லவும் மறந்து, அவரும் பிழியப் பிழிய அழுதிருக்கிறார்.
நடிகர் திலகம், நடிகையர் திலகம் இருவரின் ஒப்பற்ற நடிப்புக்கு சான்றான இந்த சம்பவம் பற்றி நானும் கேள்விப்பட்டிருந்தேன். இப்போது இந்த மாதிரி ஒரு சம்பவம், நான் நடித்த படத்திலும் நேர்ந்தபோது, எனக்கு `பாசமலர்' சம்பவம் தான் நினைவுக்கு வந்தது.
`வால்டர் வெற்றிவேல்'' படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பினேன் என்றாலும், எங்கள் கணிப்பையும் தாண்டி 200 நாட்கள் ஓடியது. சின்னத்தம்பி படத்தின் வெற்றி யூனிட் ஊர் ஊராகப் போய் விழா நடத்தியது போல, எனது படத்துக்கு எப்போது `அப்படியான விழா' அமையும் என்று எண்ணிக் கொண்டிருந்தேனே, அந்த ஆசையை வாசுவின் இந்தப் படமே நிறைவேற்றி வைத்தது.
40 ஊர்களில் நூறு நாள் தாண்டி ஓடியிருந்ததால், சின்னத்தம்பி யூனிட் மாதிரியே எங்கள் குழுவும் ஊர் ஊராக ஏ.சி. கோச்சில் பயணப்பட்டது. எல்லா ஊர்களிலுமே திருவிழாக் கூட்டம் போல கூடிய ரசிகர்களை சந்தித்தபோது எனக்குள்ளும் அப்படியொரு மகிழ்ச்சி... நெகிழ்ச்சி''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த "காக்கிச் சட்டை'' படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்தார். அவருக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ.15 ஆயிரம். ஆனால் சத்யராஜ் நடிப்பைப் பாராட்டி ரூ.40 ஆயிரம் கொடுத்தார், ஆர்.எம்.வீ.

டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் "வேலை கிடைச்சிடுச்சு'', "நடிகன்'' என்று 2 படங்களில் சத்யராஜ் நடித்து இரண்டுமே வெற்றி. இதைத் தொடர்ந்து மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த "புதுமனிதன், தெற்குத் தெரு மச்சான்'' படங்களும் வெற்றி பெற்றன.
சினிமாவில் தனது வெற்றிப் பயணம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-
டைரக்டர் பி.வாசுவின் 2 படங்களில் அடுத்தடுத்து நடித்து இரண்டுமே வெற்றி பெற்றத்தில் பி.வாசுவுக்கும் ஒரு உயர்வான இடம் கிடைத்தது. பிரபு நடித்த "சின்னத்தம்பி'' படத்தையும் அவர்தானே இயக்கினார். அந்தப்படத்தின் இமாலய வெற்றி சாதாரணமாய் வந்ததல்ல என்பதை நிரூபிக்கிற மாதிரி, அடுத்து இயக்கிய படங்களிலும் வெற்றியை தக்க வைத்துக் கொண்டார்.
இதற்கிடையே டைரக்டர் மணிவண்ணனும் "தெற்குத்தெரு மச்சான்'', "புது மனிதன்'' என 2 படங்களில் என்னை இயக்கினார். அதுவும் நூறு நாள் படங்களாயின.
இதில் "புது மனிதன்'' சத்யா மூவிசின் படமாகும். ஏற்கனவே சத்யா மூவிசில் நான் ரஜினி நடித்த "மூன்று முகம்'', கமல் நடித்த "காக்கி சட்டை'' படங்களில் நடித்திருக்கிறேன். இரண்டிலுமே வில்லன் வேடங்கள்தான்''.
"மூன்று முகம்'' படத்தில் சின்னதாய் ஒரு வில்லன் வேடம். இந்தப் படத்தில் நடிக்க எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 1500 ரூபாய். நான் கொஞ்சம் வளர்ந்து "காக்கி சட்டை'' படத்தில் வில்லனாக நடித்தபோது சத்யா மூவிஸ் நிர்வாகி ஆர்.எம்.வீரப்பன் எனக்கு 15 ஆயிரம் சம்பளம் பேசினார். ஒப்புக் கொண்டு நடித்தேன். இந்தப் படத்தில் நான் பேசிய `தகடு தகடு' வசனம் எனக்கு பேரும் புகழும் கிடைத்தது.
இந்தப் படத்துக்காக எனக்கு சம்பளம் கொடுக்கப்பட்டபோது அதிர்ந்து போனேன். 15 ஆயிரம் ரூபாய்க்கு பதில் 40 ஆயிரம் ரூபாய் இருந்தால் அதிர்ச்சி ஏற்படத்தானே செய்யும். அப்போதெல்லாம் சத்யா மூவிஸ் ஆபீசை போய் பார்க்கிறதுக்கு மிரட்சியாக இருக்கும். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். கூடுதலாக கொடுக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபாயை கொடுப்பதற்காக நானும் மானேஜர் ராமநாதனும் சத்யா மூவிஸ் ஆபீசுக்குப் போனோம்.
நாங்கள் வந்திருக்கும் தகவல் ஆர்.எம்.வீரப்பன் சாருக்கு சொல்லப்பட்டதும் அழைத்தார். நாங்கள் போனதும் எதற்காக வந்திருக்கிறோம் என்பது அவருக்கும் புரிந்து போயிற்று. "இதோ பாருங்க! காக்கி சட்டை படத்தில் உங்கள் நடிப்பு நன்றாக இருந்தது. அதனால் தெரிந்தேதான் 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கொடுத்தேன்'' என்றார். ஒரு தயாரிப்பாளராக, ஒரு கலை ரசிகராக அந்த நேரத்தில் அவரை ஆச்சரியமாய் பார்த்தேன்.
இதே சத்யா மூவிஸ் தயாரிப்பில் உருவான மந்திரப் புன்னகை, புது மனிதன் படங்களில் இப்போது நான் ஹீரோ. தெற்குத்தெரு மச்சான் படத்தில் நடிப்பதற்காக சேலத்துக்கு போயிருந்தபோது, சத்யா மூவிசில் இருந்து போனில் தொடர்பு கொண்டு கேட்டார்கள். என்னை நடிப்பில் வளர்த்த நிறுவனத்தின் படத்தில் ஹீரோ வாய்ப்பு என்றபோது சந்தோஷமாய் சம்மதித்தேன்.
சத்யா மூவிசில் முதன் முதலாக "மூன்று முகம்'' படத்தில் நடிக்கப் போனபோது படத்தின் டைரக்டர் ஏ.ஜெகநாதன் என்னை அழைத்து பேசினார். அப்போது அவர் முன்பு பேசவே கூச்சப் பட்டு நின்றேன். எந்தக் கேள்வி கேட்டாலும் நான் பதில் பேச எடுத்துக் கொண்ட நிதானம் பார்த்த டைரக்டர், "பேசவே கூச்சப்படுகிற இவர் எப்படி நடிக்கப் போகிறார்?'' என்று நினைத்திருக்கிறார். பின்னாளில் அவரே என்னிடம் ஒரு முறை இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
"புது மனிதன்'' படப்பிடிப்பில்தான் ஆர்.எம்.வீ. என்னுடன் நெருங்கிப் பழகினார். நானும் எம்.ஜி.ஆர். ரசிகன். அவரும் எம்.ஜி.ஆருக்குப் பிரியமானவர். எம்.ஜி.ஆரை கதாநாயகனாக போட்டு படம் எடுத்தவர். படப்பிடிப்பு இடைவேளைகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு, தொழில் ஆர்வம், பாடல் காட்சிகளில் எம்.ஜி.ஆர். விரும்பும் காஸ்ட்யூம்கள், சண்டைக் காட்சிகளில் அவர் காட்டும் அக்கறை பற்றியெல்லாம் விளக்கமாக பேசுவார். கேட்கவே பிரமிப்பாக இருக்கும்.
இந்தப் படம் தயாரான நேரத்தில் புதிய இசையமைப்பாளராக தேவா வந்தார். நானும் டைரக்டர் மணிவண்ணனும் `தேவா என்றொரு புதிய இசையமைப்பாளர் வந்திருக்கிறார். பாடல்களும் நன்றாக இருக்கின்றன. நமது படத்திலும் இசைக்கு அவரை பயன்படுத்திக் கொள்ளலாமே'' என்றோம்.
ஆர்.எம்.வீ. கொஞ்சம் தயங்கினார். என்றாலும் நாங்கள் சொன்னதற்காக தேவாவை இசையமைப்பாளராக போட ஒப்புக் கொண்டார். தேவாவும் எங்கள் எதிர்பார்ப்பை நூறு சதவீதம் நிறைவு செய்கிற மாதிரி `சூப்பர் ஹிட்' பாடல்களை தந்தார்.
நான் பார்த்த சினிமாக் கலைஞர்களில் தேவா ரொம்பவே வித்தியாசமானவர். பொறுமை; நிதானம், பக்குவம் என்ற கலவை அவர். தனது இசைக்குள் நமது விருப்பமும் கலந்து விடுகிற நேர்த்தி அவருக்கே உரியது. அதுமாதிரி பொறுமையிலும் அவருக்கு நிகர் அவர்தான். நான்கூட ஒரு முறை ஒரு மேடையில் தேவா பற்றி சொல்லியிருக்கிறேன். அவர் ஒரு பாட்டுக்கு ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருக்கும்போது நாம் போய் அதில் ஒரு கட்டையை உருவி விட்டாலும், அவர் முகத்தில் கோபத்தைப் பார்க்க முடியாது. அப்படியொரு சாந்தம் அவருக்கு. படத்தை இயக்கும் டைரக்டரின் எதிர்பார்ப்பு எந்த மாதிரியானது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப மெட்டுப் போட்டுக் கொடுத்து விடுவார்.
"புது மனிதன்'' படம் வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்கு தேவாவின் பாடல்களும் ஒரு காரணம்.
"புது மனிதன்'' படத்தில் கவுண்டமணி அண்ணனின் காமெடி உச்ச கட்டமாக அமைந்திருந்தது. சரத்குமார் வில்லனாக நடித்த கடைசிப் படமும் இதுதான்.
புது மனிதன் மாதிரியே "தெற்குத்தெரு மச்சான்'' படமும் வெற்றிகரமாக அமைந்தது. இந்த இரண்டு படங்களிலுமே பானுபிரியா என் ஜோடியாக நடித்தார். பின்னாளில் "பங்காளி'' என்ற படத்திலும் ஜோடியானார். பங்காளி படத்தில் `சைதை தமிழரசி' என்ற அரசியல்வாதி கேரக்டரில் அவர் நடித்தபோது எங்களுக்கெல்லாம் செட்டிலேயே அடக்க முடியாத சிரிப்பு.
சினிமாவில் நான் பார்த்து வியந்த இன்னொரு ஹீரோ, மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். "நாளை உனது நாள்'' என்ற படத்தில் அவருடன் முதன் முதலாக நடிக்கத் நேர்ந்தபோது அவரது பெருந்தன்மை அவர் மீதான என் மரியாதையை அதிகப்படுத்தியது.
படத்தில் ஜெய் சார்தான் ஹீரோ, அவர் தவிர விஜயகாந்தும் நானும் அந்தப் படத்தில் இருந்தோம். படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தபோது அங்கு வந்திருந்த நிருபர்கள் ஜெய்சாரிடமும் விஜயகாந்திடமும் பேட்டி எடுத்தார்கள். நான் கொஞ்சம் தள்ளி தனியாக நின்று கொண்டிருந்தேன்.
அத்தனை பிஸியிலும் ஜெய் சார் என்னை கவனித்து விட்டார். என்னை அருகில் அழைத்தவர் நிருபர்களிடம், "இவர் சத்யராஜ் இப்பவே இவரை பேட்டி எடுத்துக்குங்க. பின்னாளில் பேட்டி கொடுக்க முடியாத அளவுக்கு பிசியாகி விடுவார்'' என்றார்.
உண்மையில் என்னை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அப்படிச் சொன்னாரோ என்னவோ, அவர் சொன்னபடி நானும் சினிமாவில் வளர்ந்தேன். நல்லவர்கள் சொல்வது நடந்து விடத்தானே செய்யும்.
நான் படிக்கிற நாட்களிலேயே என்னை நடிப்பு பக்கமாக ஈர்த்தவர் ஜெய் சார்தான். நான் கோவை சபர்பன் ஹைஸ்கூலில் பத்தாவது படித்த நேரத்தில் ஜெய் சாரை பார்ப்பேன். உங்கள் பள்ளிக்கு நேர் எதிரில் இருக்கும் டாக்டர் நாராயணன் அவரது குடும்ப நண்பர். இதனால் 3 மாதத்துக்கு ஒரு முறையாவது காரில் டாக்டர் வீட்டுக்கு வந்து விடுவார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரில் வருவார். ஒரு தடவை பியட் கார் என்றார் அடுத்த தடவை அம்பாசிடர். அதற்கும் அடுத்த தடவை பிளை மஷத் இப்படி புதுப்புது கார்களில் அவர் வந்து போவதைப் பார்த்தபோது, "சினிமாவில் நடித்தால் இப்படி விதவிதமான கார்கள் வாங்கலாம். அதற்காகவாவது சினிமாவில் நடிக்க வேண்டும்'' என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.
"நாளை உனது நாள்'' படப்பிடிப்பில் ஜெய்சாரிடம், "சிறு வயதில் எனக்கு நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் நீங்கள்தான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரில் வந்து என் சினிமா ஆசையை அதிகப்படுத்தினீர்கள்'' என்றேன்.
அதற்கு அவர், "கவுண்டரே! அந்த கார்கள், என் நண்பர்களுக்கு சொந்தம். அதெல்லாம் என் கார்ன்னு நினைச்சு நடிக்க வந்தீராக்கும்?'' என்று கிண்டல் செய்தார். சினிமாவில் பழக எளிமை, `ஹாய்' என்ற வார்த்தை மூலம் சக கலைஞர்களிடம் மட்டுமின்றி டெக்னீஷியன்கள் வரை நெருக்கமானவர்.
இவர் மாதிரி எந்தவொரு சீரியஸ் விஷயத்தைக் கூட சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் இன்னொரு ஹிரோ., சிவகுமார் அண்ணன். ஒரு முறை படப்பிடிப்புக்கு இவரை காலை 10 மணிக்கு வரச் சொன்ன இயக்குனர், அவரை நடிக்க அழைத்தபோது மாலை மணி ஐந்தரை. இது எனக்கே கோபம் ஏற்படுத்தி விட்டது. ஆனால் அவரோ சாந்த சொரூபியாய் கேமரா முன்பு நடித்த விட்டு வந்தார். நான் அவரிடம், "என்னண்ணே! இது நியாயமா?'' என்று கேட்டேன்.
அதற்கு அவர் "சினிமாவில் இந்த மாதிரி "வெயிட்டிங்'' நேரத்துக்கும் சேர்த்துத்தான் நமக்கு சம்பளம் தராங்க'' என்றார், எதுவுமே நடவாதவர் போல. சினிமாவில் நான் இவர்களிடமும் கற்றுக் கொண்ட விஷயங்கள் என் உயர்வுக்கு காரணமாக அமைந்தன.

"நடிகன்'' படத்தில் வயோதிகர், இளைஞன் என 2 வேடங்களிலும் மாறி மாறி வரும் சத்யராஜ், வயோதிக தோற்றத்தில் நடிகை மனோரமாவின் ஜோடியாக நடித்தார்.

"நடிகன்'' படத்தில் கிடைத்த அனுபவங்கள் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-
"நடிகன் படத்தில் இளைஞனான நான் வயோதிக தோற்றத்துக்கும் மாறி, காமெடி பண்ணுவேன்.
இளைஞன் வேடத்தில் எனக்கு ஜோடியாக குஷ்பு நடிக்க முடிவாயிற்று. "சின்னத்தம்பி'' படத்துக்குப் பிறகு குஷ்பு ரொம்பவும் புகழ் பெற்று விளங்கினார். இந்த வகையில், குஷ்பு என்னுடன் ஜோடி சேர்ந்த முதல் படமும் இதுதான்.
ஆனால் வயதான கெட்டப்புக்குத்தான் யாரை ஜோடியாகப் போடுவது என்று தீவிரமாக பரிசீலனை நடந்தது. சீனியர் நடிகைகளில் ரசிகர்களிடம் பிரபலமாக பேசப்பட்ட வைஜயந்திமாலா, பத்மினி, சரோஜாதேவி, ஷீலா ஆகியோரில் யார் என்னுடன் முதிய கேரக்டருக்கு சரியாக இருப்பார்கள் என்று பரிசீலனை தொடர்ந்தது.
ஆனால், இவர்களெல்லாம் தங்கள் தனித்துவ நடிப்பால் சாதித்தவர்கள். காமெடிப் படத்தில் எனது ஜோடியாக இவர்களில் யாரைப் போட்டாலும் கதையின் காமெடித்தன்மை விலகிப் போக வாய்ப்பு உண்டு என்பது பலருடைய கருத்தாக இருந்தது.
முடிவில் நடிப்பில் காமெடி சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்கும் மனோரமா ஆச்சியை போடலாம் என்று முடிவு செய்தார்கள். எனக்கும் இந்த யோசனை சரியாகப்பட்டது.
மனோரமா ஆச்சி காமெடியில் கரை கண்டவர். அவர் நடிகர் திலகம் சிவாஜியுடன் ஜோடி சேர்ந்த ஒரே படமான "ஞானப் பறவை''யில் கூட காமெடி செய்யவில்லை. குணசித்ரமாகவே மின்னினார். அதற்குப் பிறகு ஆச்சியுடன் ஜோடி சேர வாய்ப்புக் கிடைத்த ஒரே ஹீரோ நான்தான்.
கவுண்டணி காட்சியை டைரக்டர் பி.வாசு விளக்கிக் சொல்லும்போதே எங்களுக்கு சிரிப்பு பிய்த்துக் கொள்ளும். அதிலும் கவுண்டமணி அண்ணன் காமெடியில் ரகளையே பண்ணினார். நான் குஷ்புவை கதைப்படி ஏற்கனவே பார்த்திருந்தாலும், அப்போதுதான் பார்ப்பது போல காதல் பார்வை பார்ப்பேன். இந்தக் காட்சியில் கவுண்டமணி அண்ணன் நடிக்கும்போது, "அடேய்! அடேய்! அது எப்படிடா உன் முகத்தை இப்படி குழந்தையாட்டம் மாத்திக்கிடறே? இந்த மூஞ்சை இப்பத்தான் பார்க்கிறேன்னு சொல்றியே, அது எப்படிடா? நான் இதுக்கு முன்னாடி கேப்மாரி, மொள்ளமாரி, முடிச்சவிக்கி அப்படீன்னு பல பேரை பார்த்திருக்கிறேன். ஆனா இவனுங்க அத்தனை பேரையும் மொத்தமா உன் முகத்துல தாண்டா பார்க்கிறேன்'' என்று சொல்லும்போது டைரக்டர் உட்பட அத்தனை பேருமே சிரித்து விட்டோம்.
முதலில், இந்த `கேப்மாரி' வசனத்தைப் பேச கவுண்டமணி அண்ணன் மறுத்து விட்டார். நான் அவரிடம், "அண்ணே! இது நீங்கள் என்னைப் பார்த்தா பேசுகிறீர்கள்? நான் நடிக்கிற கேரக்டரை பார்த்து பேசுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்படியே நீங்கள் திட்டுவதாக வருகிற அந்த பாராட்டு முழுக்க என் நடிப்புக்கு கொடுக்கிற கிரடிட் மாதிரி தானே'' என்றேன். அதன்பிறகே அந்த வசனத்தை பேசி நடித்தார்.
ஒரு முறை `நடிகன்' படத்தின் படப்பிடிப்பை பார்க்க நடிகை சாரதா வந்திருந்தார். நாங்கள் நடித்த பல காட்சிகளை பார்த்து விட்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தார். நடிப்புக்காக 3 முறை தேசிய விருது பெற்ற நடிகை, அவரே சிரிக்கும்போது, எங்களால் மட்டும் எப்படி சிரிப்பை அடக்க முடியும்! பல காட்சிகளில் வசனம் பேசும் போதே சிரித்து விடுவோம்.
மூன்று பேர் நடிக்கிற ஒரு காட்சியில் இப்படி மாற்றி மாற்றி மூன்று பேருமே சிரித்து வைத்தால் என்னாகும்? இப்படி ஒரு காட்சிக்கு 10 டேக் வரை எடுத்தார், டைரக்டர் பி.வாசு. அவரும் சிரித்துக் கொண்டேதான் காட்சிகளை இயக்கினார் என்பது இதில் கூடுதலான தகவல்.
படத்தின் பெரும்பகுதிக் காட்சிகளின் படப்பிடிப்பு ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்தான் நடந்தது. அங்கே படப்பிடிப்பு நடத்த நாள் வாடகையெல்லாம் கிடையாது. மணி வாடகை. அதாவது ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு வாடகை என்று ஒரு பெரிய தொகையை நிர்ணயித்து இருந்தார்கள். ஆனாலும் தயாரிப்பாளர் ராமநாதன் செலவை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.
இந்தியில் நடிகர் ஷம்மி கபூர் நடித்த `புரொபசர்' என்ற படத்தை தழுவிதான் இந்தப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. என்றாலும் இந்தியை விட தமிழ்ப்படம் நன்றாக ஓடியது. காமெடிக் காட்சிகளுடன், இளையராஜாவின் பாடல்களும் "நடிகன்'' வெற்றிக்கு காரணமாய்அமைந்தன.
படத்தின் வெற்றி விழாவில் கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "படத்தில் இரண்டு குளுமையான விஷயங்கள், ஒன்று: கொடைக்கானல். அடுத்தது: குஷ்பு'' என்று சொல்லி கைதட்டல் வாங்கினார்.
`நடிகன்' படத்தின் வெற்றிச் சூட்டோடு எனக்கு அமைந்த படம் `மல்லுவேட்டி மைனர்', முதல் வசந்தம் படத்தில் கதை எழுதி என்னை அந்தப்படத்தின் மூலம் `குங்குமப் பொட்டு கவுண்டராக' திரை அறியச் செய்த கலைமணி, இந்தப்படத்தின் கதை வசனத்துடன் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றிருந்தார். மனோபாலா டைரக்டு செய்தார். மைனர், குடும்பத் தலைவன் என இரண்டு மாறுபட்ட கேரக்டர்களில் நான் நடித்தேன். நடிகை ஷோபனாவும், சீதாவும் என் ஜோடியாக நடித்தார்கள். பி.ஆர்.விஜயலட்சுமி கேமராவை வித்தியாசமான கோணங்களில் கையாண்டர்.
முழுப்படத்தையும் 35 நாட்களில் எடுத்து முடித்து விட்டார், மனோபாலா. இதுவும் வெற்றிப்படமானது. மனோபாலா பற்றி சொல்லும்போது, "ஆலிவுட்டில் புகழ் பெற்ற `பென்ஹர்' படத்தைக் கூட 40 நாளில் எடுத்து முடித்து விடுவார்'' என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு டைரக்ஷனில் வேகமானவர் மனோபாலா.
இந்தப்படத்தில் எனக்கும் ஷோபனாவுக்கும் ஒரு போட்டி நடனம் வருகிற மாதிரி காட்சி இருந்தது. கதை சொல்லும்போதே அதைச் சொல்லி விட்டார்கள் என்றாலும், நடனத்துக்கென்றே பிறந்த ஷோபனா எங்கே... நடனமே தெரியாமல் நடிக்க வந்த நானெங்கே?
போகப்போக சினிமாவுக்கேற்ற நடனங்களை, மாஸ்டர்கள் கற்றுத் தருவதை வைத்து ஆடிக் கொண்டிருந்தேன். அதாவது ஓரளவுக்கு நடனத்தில் தேர்ந்திருந்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதில் பெரிய கூத்து, இந்த நடனப் போட்டியில் நான்தான் ஷோபனாவை ஜெயிக்கிறேன்! மல்லு வேட்டியை மடித்துக் கட்டியபடி `அடிவாடி' என்று நான் பாடுகிற பாடல் கூட இளையராஜா இசையில் தயாராகி விட்டது.
படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது. ஷோபனாவுக்கும் எனக்குமான நடன போட்டியை படமாக்கும் நாள் நெருங்க நெருங்க, என் மனம் `திக்..திக்..' என்று அடித்துக் கொண்டது.
கோபியில் உள்ள எமரால்டு ஓட்டலில் தான் படப்பிடிப்பு குழுவினர் தங்கியிருந்தோம். நான் டான்ஸ் மாஸ்டர் புலிïர் சரோஜாவிடம், "என்ன மாஸ்டர்! நான் ஷோபனாவை நடனப் போட்டியில் ஜெயிக்க வேண்டும்! இது எப்படி முடியும்?'' என்றேன்.
அவரோ, "கவலைப்படாதீங்க. டான்ஸ் எடுக்கிறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடியே உங்களுக்கு ஸ்பெஷல் டிரெயினிங் கொடுத்து விடுகிறேன்'' என்றார்.
சொன்னது போலவே ஓட்டலின் மொட்டை மாடியில் பயிற்சி கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்தபின், இரவு வேளையில் முட்டி பெயர்ந்து போகும் அளவுக்கு நடனப் பயிற்சி கொடுத்தார்!
நடனப் போட்டி படமாக்கப்படும் நாளும் வந்தது. கோபியில் உள்ள பாரியூர் கோவில் முன்பாக பக்தர்கள் நடுவில் இந்த நடனக் காட்சியை எடுத்தார்கள். படப்பிடிப்புக்கு வந்ததும் என்னைப் பார்த்து சிரித்தபடியே தலையில் அடித்துக் கொண்ட ஷோபனா, "பாருங்க சார்! உங்ககிட்ட நடனமாடி நான் தோற்கிற மாதிரி ஆகப் போகுதே!'' என்றார்.
நான் அவரிடம், "உங்க அத்தை பத்மினி நாட்டியப் பேரொளின்னு பட்டம் வாங்கினவங்க. அவங்க புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருடன் நடித்த `மன்னாதி மன்னன்' படத்தில் நடனப் போட்டியில் தோற்கிற மாதிரி தானே நடித்தார்கள்'' என்றேன். பதிலுக்கு அவர், "எம்.ஜி.ஆரும் நீங்களும் ஒன்றா?'' என்று கிண்டலை தொடர்ந்தார்.
இதெல்லாம் காமிரா முன் நிற்கிற வரைதான். நடனப் போட்டி ஆரம்பமானபோது, ஏற்கனவே நடனத்தில் மிகத் திறமைசாலியான ஷோபனா அற்புதமாக ஆட, நான் புலியூர் சரோஜா மாஸ்டரின் கடினப் பயிற்சியில் பெற்ற அனுபவத்தில் ஆடினேன்.
இந்த போட்டி நடனக் காட்சியை கொளுத்தும் வெயிலில் எடுத்தார்கள். வெறும்காலில்தான் ஆட வேண்டும். அப்படி ஆடினால் பாதம் வெந்து போகும். அதனால் பிளாஸ்டரை கட் பண்ணி, காலில் கட்டிக் கொண்டு ஆடினேன். இப்படி ஆடும்போது இரண்டு வசதி. ஒன்று: காலில் வெயில் சூடு ஏறாது. அடுத்தது: வெறும் காலுடன் ஆடியது போலவே தெரியும்.
நடனக் காட்சி சிறப்பாக அமைந்தது! அதைவிடச் சிறப்பு, காட்சி படமாக்கி முடிந்ததும் நடனத்தில் மேதையான ஷோபனா என்னை என் `ஆட்டத்துக்காக' பாராட்டியது தான்!''

பி.வாசு டைரக்ட் செய்த "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தில் சத்யராஜ் கதாநாயகனாகவும், சரத்குமார் வில்லனாகவும் நடித்தனர்.

பி.வாசு டைரக்ட் செய்த பல வெற்றிப் படங்களில் சத்யராஜ் நடித்தார். அந்த அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-
"என் தங்கச்சி படிச்சவ படத்தின் மூலம் பி.வாசு மிகச் சிறந்த டைரக்டராக அடையாளம் காட்டப்பட்டார். இந்த வெற்றி மூலம் ரஜினி, விஜயகாந்த் படங்களையும் இயக்கினார். "பொன்மனச் செம்மல்'' படத்தில் விஜயகாந்தையும், பணக்காரன் படத்தில் ரஜினியையும் இயக்கினார்.
டைரக்டர் பி.வாசுவைப் பொறுத்தவரையில் வேலையில் வேகம் இருக்கும். அதே அளவுக்கு தரமும் இருக்கும்.
பிரபுவை வைத்து "சின்னத்தம்பி'' படத்தை இயக்கிய அதே நேரத்தில்தான், என்னை வைத்து "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தையும் இயக்கினார். ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்குவது எவ்வளவு சிரமமானது என்பது, இயக்குனர்களுக்குத்தான் தெரியும்.
"வேலை கிடைச்சிடுச்சு'' படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது. கவுதமி முதன் முதலாக எனக்கு ஜோடியாக நடித்தார்.
இந்தப் படத்தில் சரத்குமார் எனக்கு வில்லனாக நடித்தார். ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் அவரிடம், "சரத்! உங்களால் ரொம்ப நாள் வில்லனாக நீடிக்க முடியாது'' என்று சொன்னேன்.
நான் இப்படிச் சொன்னதும் சரத் திடுக்கிட்டார். "ஏன் சார் அப்படிச் சொல்றீங்க?'' என்று கேட்டார்.
நான் அவரிடம், "உங்க பர்சனாலிடி, நடிப்புத் திறமை இரண்டுமே சீக்கிரமே நீங்க ஹீரோ ஆயிடுவீங்கன்னு சொல்லுது. அதைத்தான் அப்படிச் சொன்னேன்'' என்றதும் சரத் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.
நான் சொன்னது போலவே அடுத்த ஒன்றிரெண்டு படங்களைத் தொடர்ந்து, சரத் ஹீரோவாகி விட்டார்.
சரத்தின் வளர்ச்சிக்கு தொழிலில் அவர் காட்டிய அதீத அக்கறை முக்கிய காரணம்.
"வேலை கிடைச்சிடுச்சு'' படத்துக்காக நானும் சரத்தும் ஒரு சண்டைக் காட்சியில் நடித்தபோது, ஒரு தகரம் அவரது காலை குத்திக் கிழித்து ரத்தம் கொட்டியது. நானும் டைரக்டர் பி.வாசுவும் உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு சரத்தை அழைத்துப் போனோம்.
தகரம் ஆழமாகப் பதிந்து சதையை கிழித்திருந்ததால், டாக்டர் தையல் போட வேண்டும் என்றார். பொதுவாக கொஞ்சம் பெரிய அளவில் காயம் என்றால் மயக்க மருந்து கொடுத்தே தையல் போடுவார்கள். அந்த ஆஸ்பத்திரியில் அந்த அளவுக்கு வசதி இல்லாததால், வலி மரத்துப்போகிற ஊசி போட்டு, பிறகு தையல் போட்டார் டாக்டர். கண்டிப்பாக ஒரு மூன்று நாளாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்றும்
சொல்லியனுப்பினார். ஆனால், சரத்தோ மறுநாளே சண்டைக் காட்சியில் நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்து விட்டார்! டைரக்டரும் நானும் சொல்லிப் பார்த்தும் அவர் கேட்கவில்லை. "எனக்காக படப்பிடிப்பு தள்ளிப் போகக்கூடாது'' என்று சொன்னவர், தையல் போட்ட காலுடன் சண்டைக் காட்சியில் நடித்தார். காயம்பட்ட காலுடன் நடிப்பது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்கனவே நடித்தபோது காட்டிய வேகத்தை விட, இம்முறை அதிக வேகத்துடன் சண்டை போட்டார்.
வலிகளையும், வேதனைகளையும் தாண்டித்தான் வெற்றி பெற முடியும் என்பதை சரத் விஷயத்திலும் உணர்ந்தேன்.
படத்தை 40 நாளில் எடுத்து முடித்தார், பி.வாசு. இந்தப் படத்துக்கு முன், என் நடிப்பு வாழ்க்கையில் ஏற்பட்ட சின்ன இடைவெளியை இந்தப்படம் சரி செய்தது. படத்தின் விளம்பரத்தில் கூட இதை உறுதிப்படுத்தும் விதத்தில் டைரக்டர் பி.வாசு, "மீண்டும் உங்கள் சத்யராஜுக்கு வேலை கிடைச்சிடுச்சு'' என்று குறிப்பிட்டார்!
இந்திப் பட உலகின் பெரிய ஹீரோக்களில் ஒருவர் அணில் கபூர். அவர் இந்தப் படத்தின் கதை பற்றி தெரிந்து வைத்திருந்ததால் இந்திப் பதிப்பில் நடிக்க விரும்பினார். அவருக்கு தமிழ் தெரியாது. என்றாலும் ரசிகர்களுடன் படம் பார்க்க விரும்பினார்.
சென்னை ஆல்பட் தியேட்டரில் படம் ரீலிசான போது, அணில் கபூரும் எங்களுடன் படத்தைப் பார்க்க வந்தார். படத்தின் தயாரிப்பாளர்கள் மோகன் நடராஜன், தரங்கை சண்முகம், எனது மானேஜர் ராமநாதன் ஆகியோரும் எங்களுடன் சேர்ந்து படம் பார்த்தார்கள்.
தியேட்டர் ஹவுஸ்புல்லாகி இருந்தது. காட்சிக்கு காட்சி ரசிகர்களின் கரகோஷத்தை ரொம்பவே ரசித்தார் அணில்கபூர். சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அணில் கபூர், என் கைகளைப் பிடித்துக் கொண்டு, "பிறந்தால் தமிழ்நாட்டில் நடிகனாக பிறக்க வேண்டும். இப்படி உணர்ச்சிபூர்வமாய் ரசிக்கும் ரசிகர்களை வேறு எங்குமே பார்த்ததில்லை'' என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.
படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் நான் எம்.ஜி.ஆர். போஸ்டருக்கு முத்தம் கொடுப்பேன். அந்தக் காட்சிக்கும் விசில்கள் பறந்தன.
அதுபற்றி என்னிடம் குறிப்பிட்ட அணில் கபூர், "உங்கள் தமிழ்நாட்டில் இப்படி ஒரு நடிகர் எல்லா ரசிகர்களையும் உற்சாகப்படுத்துகிறவராக கிடைத்திருக்கிறார். இந்தப் படத்தை இந்தியில் எடுக்கும்போது நாங்கள் யாரை இப்படி போஸ்டரில் போட முடியும்?'' என்று கேட்டார். எம்.ஜி.ஆர். என்ற மக்கள் சக்தியின் மகத்துவம் பற்றி அவருக்கு விளக்கி சொன்னபோது, எனக்குள்ளும் ஒரு பெருமிதம்.
படம் இந்தியில் மட்டுமின்றி, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு இரண்டிலுமே வெற்றி. இதைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் தயாரிப்பதற்கு பட அதிபர்கள் முன் வந்தார்கள். எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்ற பெருமை இந்தப் படத்துக்கு உண்டு.
படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு ரஜினியை அழைத்திருந்தார், பி.வாசு. அவரும் விழாவுக்கு தலைமை தாங்கி படத்தையும், டைரக்டரையும் மனம் விட்டுப் பாராட்டினார்.
டைரக்டர் மணிவண்ணனுக்குப் பிறகு என் நடிப்பில் பல வெரைட்டியான விஷயங்களை கொண்டு வந்தவர் பி.வாசு. சீரியஸ் படமான "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தில் என்னை நடிக்க வைத்தவர், அடுத்து என்னை நடிக்க வைத்த "நடிகன்'' படத்திலோ ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கும்
மாதிரியான காட்சிகள் வைத்தார். `ஒரு காமெடி படத்துக்கு இவ்வளவு செலவா?' என்று தயாரிப்பு வட்டாரத்தை ஆச்சரியப்படுத்திய படமும் இதுதான். படத்தை தயாரித்த என் மானேஜர் ராமநாதனுக்கு, "நடிகன்'' படத்தின் மீது அத்தனை நம்பிக்கை.
எப்போது பார்த்தாலும் ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்த படங்கள், எனக்குத் தெரிந்து தமிழில் 3 படங்கள். முதல் படம் டைரக்டர் ஸ்ரீதரின் "காதலிக்க நேரமில்லை'' இப்போது பார்த்தாலும் ஆச்சரியப்படுத்தும் காட்சியமைப்புகள், அதில் சிரிப்பதற்கான இயல்பான இடங்கள் என்று ஸ்ரீதர் பிரமாதப்படுத்தியிருந்தார். அப்பா டி.எஸ்.பாலையாவுக்கு மகன் நாகேஷ் கதை சொல்கிற காட்சியை இப்போது பார்த்தாலும் சிரிக்காமல் இருக்க முடியுமா? இந்தப் படத்துக்குப் பிறகு அப்படியான பெருமை பி.வாசு இயக்கத்தில் நான் நடித்த "நடிகன்'' படத்துக்கும், கார்த்திக் நடித்த "உள்ளத்தை அள்ளித்தா'' படத்துக்கும் இருக்கிறது என்பேன்.

டைரக்டர் மணிவண்ணன் தயாரித்து இயக்கிய "கனம் கோர்ட்டார் அவர்களே'' படத்தில், சத்யராஜ் 13 விதமான தோற்றங்களில் நடித்தார்.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-
"நானும், மணிவண்ணனும் நண்பர்கள். எங்கள் வெற்றி தொடர்ந்த நேரத்தில், மணிவண்ணனுக்கு தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. மணிவண்ணன் டைரக்ஷனில் நான் நடித்த படங்கள் அத்தனையும் வெற்றி என்பதால், தான் தயாரிப்பாளராக மாறி அந்தப் படத்திலும் என்னையே கதாநாயகனாக நடிக்க வைக்க விரும்பினார்.
முதன் முதலாக தயாரிப்பாளர் ஆவதால், ஒரு அலுவலக கட்டிடத்தை விலைக்கு வாங்கி, அதை கலைஞர் கையால் திறக்க வைத்தார். இப்படி படக் கம்பெனி அலுவலகத்தை விலைக்கு வாங்கி படமெடுத்தவர் என்ற முறையில், அப்போதே மணிவண்ணன் பரபரப்பாக பேசப்பட்டார்.
சினிமாவில் என்னை வைத்து "முதல் வசந்தம்'', "பாலைவன ரோஜாக்கள்'', "விடிஞ்சா கல்யாணம்'', "ஜல்லிக்கட்டு'', "சின்னத்தம்பி பெரியதம்பி'' உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். எல்லாமே நன்றாக ஓடிய படங்கள். இத்தனை `ஹிட்'டுக்குப் பிறகு, சொந்தப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்புதானே.
படத்துக்கு அவர் வைத்த "கனம் கோர்ட்டார் அவர்களே'' தலைப்பும் வித்தியாசமாகவே இருந்தது. வேலை வெட்டி இல்லாமல் "கேசுக்கு'' திண்டாடும் ஒரு வக்கீலின் வாழ்க்கைப் பின்னணி தான் கதை.
இதில் கோர்ட்டில் ஜட்ஜ் தொடங்கி, டவாலி வரை நான்தான் நடித்தேன். அதாவது ஜட்ஜ், எதிர்க்கட்சி வக்கீல், அரசு வக்கீல், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர், கொலையை பார்த்த சாட்சிகள் பால்காரர், ஈட்டிக்காரர், அய்யர், கேசை நடத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர், கோர்ட் டவாலி, முப்படைத் தளபதி உள்பட மொத்தம் 13 வேடம் எனக்கு. இந்தப்படம் வளரும்போதே, என்னுடைய விதவிதமான தோற்றங்கள் பத்திரிகைகளில் வெளியாகி, பரபரப்பு ஏற்படுத்தியது.
நான் நடிக்க வரும் முன், என்னை முதன் முதலாக படமெடுத்த `ஸ்டில்ஸ்' ரவிதான் இந்தப் படத்துக்கான பல்வேறு தோற்றங்களில் என்னை படமெடுத்தார். இந்த ஸ்டில்களை மற்ற படக் கம்பெனியிலும் கேட்டு வாங்கி பார்த்து ரசித்தார்கள்.
இப்படி வித்தியாசமான கேரக்டர்கள் என்றில்லை! படத்தின் செலவு விஷயத்திலும் மணிவண்ணன் குறை வைக்கவில்லை. படத்தில் `ஹெலிகாப்டர்', `கிளைடர்' விமானம் முதலியவை இடம் பெறுகிற மாதிரியும் காட்சிகள் அமைத்திருந்தார்.
இத்தனை இருந்தும் படம் எதிர்பார்த்த மாதிரி ஓடவில்லை. படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கிற மாதிரி, தோல்விக்கு சில காரணங்களாவது இருக்கும். அப்படி தோல்விக்கு ஒரு காரணமாக நான் நினைப்பது, படத்தில் நான் சோடாபுட்டி கண்ணாடி அணிந்து, தலை வழித்து சீவிய தோற்றத்தில் நடித்ததை ரசிகர்கள் அவ்வளவாக விரும்பவில்லை என்பதே.
என் கதாநாயகிகள் பற்றி சொல்ல வேண்டும். நான் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியபோது என் ஜோடியாக நடிக்க உயரமான நடிகைகள் தேவைப்பட்டார்கள். அப்போது அம்பிகா - ராதா சகோதரிகள் கதாநாயகிகளாக நடித்து கொண்டிருந்தார்கள். இருவருமே நல்ல உயரம் என்பதால் எனக்கு கதாநாயகிகள் பிரச்சினை இல்லாமல் இருந்தது. பிறகு, உயரமான அமலா வந்தார். பிறகு பானுப்பிரியா. அவரும் நல்ல உயரம். அதன் பின்னர் சுகன்யா, கவுதமி, ஷோபனா இப்படி உயரமான கதாநாயகிகள் தொடர்ந்து எனக்கு கிடைத்துக் கொண்டே இருந்தார்கள். இப்போதும் நமீதா மாதிரி உயரமான நடிகைகள் எனக்கு ஜோடியாக கிடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆபாவாணனின் "தாய் நாடு'' படத்தில்தான் ராதிகா எனக்கு ஜோடியானார். அதற்கு முன் பல படங்களில் ராதிகா கதாநாயகியாக நடித்திருக்க, அதில் நான் வில்லனாக இருந்திருப்பேன். ரஜினியுடன் ராதிகா ஜோடி சேர்ந்த "மூன்று முகம்'', எம்.பாஸ்கரின் "உறங்காத நினைவுகள்'' மணிரத்னத்தின் "பகல் நிலவு'' என ராதிகா கதாநாயகியாக தொடர, நான் வில்லனாக நீடித்துக் கொண்டிருந்தேன்.
வில்லனாக நடித்தபோதே ராதிகா எனக்கு நல்ல சிநேகிதி. கதாநாயகன் ஆன பிறகோ நட்பில் இன்னும் இறுக்கம். ராதிகா, ஸ்ரீபிரியா இருக்கிற இடத்தில் நானும் இருந்தால் அந்த இடத்தின் கலகலப்பே தனிதான். காமெடிக் கலாட்டா கச்சேரியே நடக்கும்.
"தாய் நாடு'' படத்தில் தாடி கெட்டப்பில் என் நடை, உடை, பாவனை எல்லாமே எம்.ஜி.ஆர். ஸ்டைலில் இருந்தது. எம்.ஜி.ஆர். மாதிரி நான் வேக வேகமாக மாடிப்படியில் இருந்து இறங்கி வந்ததை ரசிகர்கள் ரசித்தார்கள். எம்.ஜி.ஆர். ஸ்டைலில் இந்தப் படத்துக்காக நான் ஆடிப்பாடிய ஒரு பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இப்படி படங்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு சின்ன தொய்வு ஏற்பட்டது. அப்போது பட உலகில் ஒரு புயல் மாதிரி என்ட்ரி ஆனார், டைரக்டர் பி.வாசு. அவர் டைரக்டர் சந்தான பாரதியுடன் சேர்ந்து "பன்னீர் புஷ்பங்கள்'' என்ற படத்தை இயக்கி அதன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதே கூட்டணி "மெல்லப் பேசுங்கள்'' என்ற படத்தையும் இயக்கியது.
இந்த இரட்டையர்களில் சந்தான பாரதி, பாரதியாக பெயரை சுருக்கிக் கொள்ள, `பாரதி - வாசு' என்ற பெயரில் 2 படங்களை இயக்கினார்கள். அதன் பிறகு இவர்கள் தனித்து வெளிப்பட விரும்பி, வாசு தனியாக `பி.வாசு' என்ற பெயரில் பிரபு - ரூபினி நடித்த `என் தங்கச்சி படிச்சவ' படத்தை இயக்கினார். படம் பெரிய வெற்றி.
நடிகர் சத்யராஜின் 2 தங்கைகள் திருமணம் கோவையில் நடந்த போது,முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சத்யராஜ் சந்தித்த பிறகு, அவர் எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராகி விட்டார். இந்த சமயத்தில் சத்யராஜின் இரண்டு தங்கைகளுக்கு நடந்த திருமணத்திலும் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதுகுறித்து சத்யராஜ் கூறியதாவது:-
"எனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நிச்சயமானது. "மலைக் கள்ளன்'' "சிவகவி'' போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த பட்சிராஜா ஸ்டூடியோ கோவையில் இருந்தது. பின்னாளில் இந்த ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது.
இந்த திருமண மண்டபத்தில்தான் தங்கைகள் திருமணம் நடந்தது. தங்கைகளின் திருமண பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க நான் ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தபோது அவர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார். நான் ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து, "அம்மா! இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடக்கிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும்தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும், நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன்'' என்றேன்.
இதற்குப் பிறகு நான் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டேன். சித்தப்பா வகையில் சிவாஜி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நிச்சயம் வந்து விடுவார். நாமே வர வேண்டாம் என்று சொன்னதால், எம்.ஜி.ஆர். வரமாட்டார் என்றே எண்ணினேன். திருமணத்திற்கு முந்தின நாள், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். எனது தங்கைகள் திருமணத்துக்காக கோவை வருகிறார் என்ற தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கோவை மாவட்ட கலெக்டர் எனக்கு போன் செய்தார். "ஏன் சார்! சி.எம். வரப்போறார் என்பதை முதலிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாமே'' என்றார்.
நாம் வரவேண்டாம் என்று சொல்லியும் முதல்வர் வருகிறாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை அன்பு இருந்தால் அவராகவே வர முடிவு செய்வார்!
மறுநாள் மதியம் கோவை விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானத்தில் இருந்து முதல்வரும் ஜானகி அம்மாளும் இறங்கி வந்தார்கள். நான் பரவசமாய் வணங்கி நின்றபோது, என்னிடம் "எப்படி?'' என்று குதூகலமாகக் கேட்டார், முதல்வர். அவர் "எப்படி?'' என்று கேட்பதே தனி அழகு. அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அந்த "எப்படி'' வார்த்தையின் வல்லமை தெரியும். என்னிடம் சொன்ன "எப்படி''க்கு அர்த்தம், "நீ வரவேண்டாம் என்று சொல்லியும் வந்துவிட்டேன் பார்த்தாயா!'' என்கிற அர்த்தம். நேராக சர்க்யூட் அவுசில் தங்கியவர், மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் என்பதால் ஜானகி அம்மாளுடன் 4.45 மணிக்கே வந்து விட்டார்.
எம்.ஜி.ஆர். வரும் அதே நேரத்தில் சிவாஜியும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார்! இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை `சட்'டென்று புரிந்து கொண்ட சிவாஜி, என்னிடம், "டேய்! இது என் வீட்டுக் கல்யாணம். நீ அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கூடப் போ'' என்றார். இந்த ஒரு வார்த்தையில் நான் ரிலாக்ஸ் ஆனேன்.
திருமண மேடையை நெருங்கிய எம்.ஜி.ஆர். என்னிடம், "உங்கம்மா எங்கே?'' என்று கேட்டார். நான் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் இருந்த அம்மாவிடம் அழைத்துப்போனேன். அம்மாவை பார்த்து "வணக்கம்மா'' என்று கைகூப்பினார். அம்மா எழுந்து பதிலுக்கு கைகூப்ப, ஒட்டுமொத்த கூட்டமும் அம்மாவுடன் சேர்ந்து எழுந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் செய்தார்கள். இந்த வகையில் எம்.ஜி.ஆர். சாரால் என் தாய்க்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது.
திருமணம் நல்லபடியாக முடிந்து முதல்வர் சென்னை புறப்பட இருந்தார். விமான நிலையத்துக்கு சென்று அவரை வழியனுப்பினேன். சிவாஜி சாருடன் நான் நடித்த "ஜல்லிக்கட்டு'' பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், "உனக்கு ஏதாவது வேண்டுமா?'' என்று கேட்டார்.
நான், "வேணாங்க! எந்தவித அப்பாயின்மெண்ட்டும் இல்லாம உங்களை வந்து பார்த்துப் போக முடியுதே! இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?'' என்றேன். "நான் உனக்கு ஏதாவது பண்ணணுமா?'' என்று மறுபடியும் கேட்டார். இதற்கும் "வேண்டாம்'' என்றேன்.
"எதையாவது இப்ப நீ என்கிட்ட கேளு'' என்றார், உறுதியான குரலில். அவர் கொடுக்க நினைப்பதும் நான் தவிர்ப்பதுமாய் ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டு விட்டார். எனவே, "நீங்க உடற்பயிற்சி பண்ணுகிற கர்லாக்கட்டை வேண்டும்'' என்றேன். நான் இப்படிக் கேட்டதும் தலையில் அடித்து சிரித்தார். உடற்பயிற்சியின் போது அவர் பயன்படுத்தி வந்த கர்லாக் கட்டையை எனக்கு வழங்கினார். இப்போதும் அவர் தந்த கர்லாக் கட்டையைக் கொண்டுதான் பயிற்சி செய்து வருகிறேன்.
1987 டிசம்பர் 5-ந் தேதி "ஜல்லிக்கட்டு'' படத்தின் நூறாவது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. படத்தின் விழாவுக்கு முதலில் வருவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று `வரவில்லை' என்பதாக தகவல் அனுப்பி விட்டார். தோட்டத்தில் இருந்து வந்த போன் இந்த தகவலை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய் விட்டேன். இப்போது போல் அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவரை போய் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.
ஆனால் அவர் எப்படிப்பட்டவர்? எங்கே நான் போய் அவரை சந்தித்து மனதை மாற்றி விடுவேனோ என்று யோசித்தவர், மறுபடியும் வீட்டுக்கு போனில் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறார். "முதல்வர் வரவில்லை என்பதற்காக, அவரை பார்க்க சத்யராஜ் வரவேண்டாம்'' என்பதுதான் அந்த தகவல். ஆனால் வீட்டில் நான் ஏற்கனவே சொல்லி வைத்தபடி, "அவர் அப்பவே உங்களை பார்க்க வர்றதா சொல்லிட்டுப் போயிட்டாரே'' என்று சொல்லி விட்டார்கள்.
நான் தோட்டம் போயிருந்தபோது என் வருகை தெரிவிக்கப்பட்டதும், மாடியில் இருந்த அவரது தனியறைக்கு அழைத்துப் போனார்கள். எம்.ஜி.ஆர். சட்டை, லுங்கியில் 10 நாள் ஷேவ் பண்ணாத முகமாய் தெரிந்தார். அவருடன் 5 அதிகாரிகள் இருந்தார்கள். பக்கத்தில் பைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் அவருக்கிருந்த வேலைப்பளுவும் தெரிந்தது; அவரது உடல் சோர்வும் புரிந்தது. என்னைப் பார்த்ததும், "இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்குல்ல!'' என்றார்.
நான் என்ன பதில் சொல்வது? விழாவை தவிர்க்கப் பார்க்கிறார் என்பது புரிந்தது. "ஆமாண்ணே'' என்றேன். இதற்குள் அவருக்கு பால் வருகிறது. எனக்கும் வருகிறது. சாப்பிடும்போது, "நான் வரலைன்னா வருத்தப்படுவியா?'' என்று கேட்டார். "வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் நாங்களே நடத்திக்கிறோம் அண்ணே!'' என்றேன்.
ஒரு கணம் என்னையே கூர்மையாகப் பார்த்தார். என் ஏமாற்றத்தை முகத்தில் கண்டவர், "உனக்காக வர்றேன்'' என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார். சொன்னது போலவே மிகச் சரியாக விழா தொடங்கும் மாலை 6 மணிக்கு காரில் வள்ளுவர் கோட்டத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்றபோது, என்னை அருகில் அழைத்தவர் "எப்படி?'' என்றார், உற்சாகமாக அதாவது சொன்னபடி வந்ததற்காக இந்த `எப்படி' என்பது புரிந்து எனக்கும் மகிழ்ச்சி.
இந்த விழாவில் அவருக்கு உற்சாகம் என்றால் அப்படி ஒரு உற்சாகம். சிவாஜியை கட்டிப் பிடித்து முத்தமிட்டார். விருது வாங்க வந்த எம்.என்.நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்றார். "முத்தமா? தர முடியாது. குத்துவேன்'' என்றார், ஜாலியாக. நம்பியாரோ, "அப்படியென்றால் எனக்கு ஷீல்டு வேண்டாம்'' என்றார். இதனால் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவரை அழைத்து, ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஷீல்டை கொடுத்தார். நடிகர் திலகம் சிவாஜி பட வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்றார்கள். அதுவே முதலும் கடைசியுமாகி விட்டது. அவர் கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான்.
டிசம்பர் 5-ந் தேதி இந்த விழா நடந்தது. அதற்கு 19 நாள் கழித்து, அதாவது டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு `உப்பு' போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த `உப்பு' வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான். ஒரு ரசிகனாக அவரை வியந்தவன், நடிகனான போது அவரது நேசத்துக்குரியவனானேன். இப்போதும் என்னுடைய உணர்வுகளில் கலந்து போயிருப்பவர் அவர்''.
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
"வேதம் புதிது'' படத்தில் பாலுத்தேவராக வாழ்ந்து காட்டினார், சத்யராஜ். பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான "வேதம் புதிது'' படம் சத்யராஜை மிகச்சிறந்த குணசித்ர நடிகராகவும் வெளிப்படுத்தியது. அவருக்கு 6 விருதுகள் கிடைத்தன.

"முதல் மரியாதை'' படத்தில் சிறு வேடத்தில் மட்டும் நடித்த சத்யராஜை, தனது கிராமத்துக் காதல் கதையான "கடலோரக் கவிதைகள்'' படத்தில் கதாநாயகன் ஆக்கினார், பாரதிராஜா. "கடலோரக் கவிதைகள்'' படத்தின் வெற்றிக்குப் பிறகு, "மதங்களை கடந்தது மனிதநேயம்'' என்ற கருத்தை வெளிப்படுத்தும் "வேதம் புதிது'' படத்திலும் சத்யராஜையே நடிக்க வைத்தார். பாலுத்தேவர் என்ற கம்பீரமான குணச்சித்திர வேடத்தில் சத்யராஜ் வாழ்ந்து, ரசிகர்களை பிரமிக்க வைத்தார். படமும் வெற்றி பெற்றது.
இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-
"என் நடிப்பு வரலாற்றில் நிச்சயம் ஒரு மைல்கல் `பாலுத்தேவர்' கேரக்டர். பாரதிராஜாவின் "வேதம் புதிது'' கதையை என்னிடம் சொல்லும்படி சித்ரா லட்சுமணனிடம் பாரதிராஜா கூறியிருக்கிறார். அவர் என்னிடம், "கதையின் அவுட்லைனை கேட்டுக் கொள்ளுங்கள்'' என்றார்.
"நான் டைரக்டர் பாரதிராஜா சாரிடம் முதல் மரியாதை படத்தில் என் கேரக்டர் என்ன என்பது பற்றி கேட்கவில்லை. கடலோரக் கவிதைகள் படத்திலும் கதை கேட்கவில்லை. இந்தப் படத்திலும் கதை கேட்கப்போவதில்லை. நான் கதை கேட்டு முடிவு செய்கிற நிலையை கடந்தவர் அவர்'' என்று சித்ரா லட்சுமணனிடம் கூறி, கதை கேட்க மறுத்துவிட்டேன்.
இந்தப் படத்தில் நடித்த பிறகு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியிலும், எனக்கு பெரிய அளவில் மரியாதை கிடைத்தது. நான் அப்போது பெரியார் கொள்கைகளுக்குள் வந்திருந்த நேரம். படத்தில் வரும் பாலுத்தேவர் கேரக்டர் `நாத்திகர்' என்பது எனக்கு மிகவும் வசதியாகி விட்டது.
படத்துக்கு கண்ணன் என்பவர் வசனம் எழுதியிருந்தார். இந்தப்படத்துக்கு அவர் வசனம் எழுதிய பிறகு, `வேதம் புதிது கண்ணன்' என்று அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு படத்துக்கு வசனங்களும் உயிர் நாடியாக அமைந்தன. "பராசக்தி'', "வீரபாண்டிய கட்டபொம்மன்'', "மனோகரா'' போன்ற படங்கள் வசனங்களுக்காகவும் பேசப்பட்டவை. "காக்கி சட்டை'' படத்தில் நான் இரண்டு தடவை சொன்ன `தகடு தகடு' வசனம் சினிமாவில் என் நடிப்புக்கு புதிய பாதையை உருவாக்கித் தந்தது.
இப்படி வசனங்கள் மூலம் கிடைக்கும் பெருமை, இந்தப் படத்தில் கண்ணன் வசனத்துக்கும் கிடைத்தது. கதைப்படி, என் மகன் தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்திருப்பான். அது தெரியாத உறவினர்கள், அவனைக் காணோம் என்று தேடிப்போயிருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்ததும் நான் பதட்டத்திலும் பரபரப்பிலும் "கிடைச்சிட்டானா?'' என்று கேட்பேன். அவர்கள் பதிலோ, "கிடைச்சிட்டுது'' என்பதாக இருக்கும். மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த வசனம் நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி உணர்த்தி விட்டது.
மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த ஒரு வரி வசனத்தில் சொல்லி, கதைக்கே ஒரு ஜீவன் கொடுத்திருந்தார், கண்ணன். படத்தில் இந்தக் காட்சிக்கு, காட்சியின் சோகம் தாண்டியும் கைதட்டிய ரசிகர்கள் அதிகம். என் படங்களில் நான் பேசிய வசனங்களிலேயே சிறந்த வசனமாக இதைக் கருதுகிறேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது, ஊர்க்காவலன் படப்பிடிப்புக்காக ரஜினி சாரும் அங்கே வந்திருந்தார். அவர் நடித்த படப்பிடிப்பு முடிந்ததும் எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். 2 மணி நேரம் எங்களுடன் இருந்தார். என் `பாலுத்தேவர்' கெட்டப் அவரை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. அதுபற்றிப் பேசி பாராட்டினார்.
படத்தில் நடிகை அமலா என் மருமகளாக நடித்திருந்தார். இதே அமலா என் அடுத்த படமான "ஜீவா''வில் என் ஜோடியாக நடித்தார்! அதுமாதிரி, `மிஸ்டர் பாரத்' படத்தில் அம்பிகா எனக்கு மருமகள். அடுத்து வந்த "மக்கள் என் பக்கம்'' படத்தில் என் ஜோடி! இரண்டு விதமான வேறுபாட்டையும், ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
"வேதம் புதிது'' படத்தில் பாலுத்தேவராக நடித்த என் நடிப்புக்கு `பிலிம்பேர்' பத்திரிகை உள்பட 6 பத்திரிகைகள் விருது கொடுத்து சிறப்பித்தன.
மத்திய அரசின் விருது கமிட்டியில் அப்போது ஜுரியாக இருந்தவர்களில் நடிகை லட்சுமியும் ஒருவர். இந்தப்படத்தில் என் நடிப்புக்கு விருது கொடுப்பதற்கான பரிசீலனையில், சின்ன விஷயத்துக்காக `விருது' வாய்ப்பு தவறி விட்டதாக லட்சுமி என்னிடம் சொன்னார். அதாவது என் கேரக்டருக்கு `விக்' பயன்படுத்தியிருந்தது விருதுக்கு தடையாக அமைந்திருந்ததை தெரிந்து கொண்டேன். ஆனாலும் ரசிகர்களின் பாராட்டை எனக்கு கிடைத்த பெரிய விருதாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தேன்.
ஜெயலலிதா மேடம் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு தடவை அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது நான் பல படங்களில் நடித்திருந்தாலும் `பாலுத்தேவர்' கேரக்டர் பற்றியே அதிகம் பாராட்டிப் பேசினார்கள்.
படத்தில் ஒரு காட்சியில் நானே ஆடிப்போய்விட்டேன். என் வளர்ப்பு மகனாக வரும் சிறுவனை நான் தோளில் தூக்கி வைத்தபடி கதை சொல்லிக்கொண்டே வருவேன். ஆற்றைக்கடக்கும்போது அந்த சிறுவன் என்னிடம், "உங்க பெயர் என்ன?'' என்று கேட்க, "நான் பாலுத்தேவர்'' என்பேன். "பாலு உங்கள் பெயர். தேவர் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா?'' என்று அந்த சிறுவன் கேட்பான். இந்தக் காட்சியை, தனக்கே உரிய ஆற்றலில் மிகத் திறமையாக இயக்கினார், பாரதிராஜா. இந்தக் கேள்வியால் அந்தச் சிறுவன் என்னை கன்னத்தில் அறைவதாக உணர்வேன். `ஜாதிய சமூகத்தை தாண்டியது மனித நேயம்' என்பதை சொல்லாமல் சொல்கிற அந்தக் காட்சி, என் நடிப்பிலும் மறக்க முடியாத காட்சியாகி விட்டது.
படம் தயாரான பிறகு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துவதாக ஒரு தகவல் உலாவந்து படத்துக்கு பிரச்சினையாக அமைந்தது.
இதுபற்றி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டபோது அவர் படத்தை பார்க்க விரும்பினார். ஏவி.எம். தியேட்டரில் படம் பார்த்தபோது என்னையும் அவர் அருகே அமர வைத்துக்கொண்டார். முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்தவர், "இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் இல்லையே!'' என்றார். என் நடிப்பையும் பாராட்டினார்.
முதல்-அமைச்சர் பாராட்டிய பிறகு, படத்தின் வெளியீட்டுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ரசிகர்கள் உணர்ச்சி மயமாய் ரசித்ததோடு, படத்தையும் வெற்றி பெறச்செய்தார்கள். "வேதம் புதிது'' பாலுத்தேவர் கேரக்டர் என்னை ரசிகர்களிடம் பெரிய அளவில் வெளிப்படுத்தியதால்தான் இன்றைக்கு "பெரியார்'', "ஒன்பது ரூபாய் நோட்டு'' போன்ற படங்களிலும் நடிப்பில் என்னை நிலைநிறுத்த முடிந்தது.''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
சிவாஜிகணேசன் நடித்த "ஜல்லிக்கட்டு'' படத்தில் இன்னொரு ஹீரோவாக சத்யராஜ் நடித்தார். இந்தப்படமும் வெற்றி பெற்றது.

சிவாஜியுடன் "ஜல்லிக்கட்டு'' படத்தில் நடித்த சத்யராஜூக்கு, படத்தில் முக்கியமான கேரக்டர். நீதிபதி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை ஒரு அதிரடி இளைஞன் மூலம் சரி செய்து கொள்ளும் கதை. இதில் பாதிக்கப்பட்ட நீதிபதியாக சிவாஜியும், அவருக்கு உதவும் இளைஞராக சத்யராஜூம் நடித்தார்கள். வித்தியாசமான கதைக்கருவைக் கொண்ட இந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார். எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.
சிவாஜியுடன் நடித்த "ஜல்லிக்கட்டு'' அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-
"ஜல்லிக்கட்டு படத்தை நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். சித்ரா லட்சுமணன் தயாரித்தார். கதையைக் கேட்கும்போதே இது நன்றாக ஓடும் என்று தோன்றியது. சில கதைகளை கேட்டதுமே, அது வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியும். ஜல்லிக்கட்டு அப்படியொரு கதை.
அப்போதெல்லாம் நானும் மணிவண்ணனும் செட்டிலே ஒருவரை ஒருவர் `தலைவா!' என்று கூப்பிட்டுக் கொள்வோம். இந்த `தலைவா' பழக்கம் செட்டில் இருந்த மற்ற டெக்னீஷியன்களையும் தொற்றிக் கொண்டது.
இது எதில் போய் முடிந்தது தெரியுமா? செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், "தலைவா! ஷாட் ரெடி'' என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது. "ஏண்டா! உங்க `தலைவா' என் வரைக்கும் வந்தாச்சா?'' என்று கேட்க, மாஸ்டர் அவசரமாய் `எஸ்கேப்' ஆகியிருக்கிறார்.
நானும் பிரபுவும் `தலைவரே' என்று அழைத்துக் கொள்வதும் சிவாஜிசாருக்கு தெரிந்திருக்கிறது. இப்போது அவரே செட்டில் "தலைவா'' என்று அழைக்கப்பட்டு விட்டதால், அன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனவர், பிரபு வரும் வரை காத்திருந்திருக்கிறார். பிரபு வீட்டுக்குப் போனதும் "வாங்க தலைவரே!'' என்று அழைத்து அவரை வெலவெலக்க வைத்திருக்கிறார். மறுநாள் இதுபற்றி பிரபு என்னிடம் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு.
நேரத்துக்கு மதிப்பு கொடுப்பதில் சிவாஜி சாருக்கு நிகர் அவரேதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 7 மணிக்கு செட்டில் இருப்பேன். ஆனால் அதற்கு முன்பே சிவாஜி சார் செட்டில் இருப்பார்.
ஒருநாளாவது அவரை முந்திவிடவேண்டும் என்று இன்னும் சீக்கிரம் வரத்தொடங்கினேன். அப்போதும் சிவாஜி சார் எனக்கு முந்தி வந்திருந்தார். நடிப்பில் மட்டுமின்றி, `பங்ச்சுவாலிட்டி'யிலும் சிவாஜி சாருக்கு இணையாக யாருமில்லை என்பதை நானும் இந்த நாட்களில் கண்கூடாக உணர்ந்தேன்.
"ஜல்லிக்கட்டு'' படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் போனோம். நான், மணிவண்ணன், கேமராமேன் சபாபதி, சித்ரா லட்சுமணன் எல்லோரும் ஒரே ரூமில் தங்கினோம். சிவாஜி சார் பக்கத்து ரூமில் தங்கினார்.
படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். காலை 6 மணிக்கு விமானம் ஏறவேண்டும். சிவாஜி சார் அதிகாலை 4 மணிக்கு விழித்தவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார். நாங்கள் முந்தின நாள் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கியிருக்கிறோம். அதிகாலையில் எங்களை வந்து பார்த்தவர், நாங்கள் படுத்திருந்த இடத்துக்கு அருகில் சிக்கன் எலும்புகள் கிடந்ததை பார்த்திருக்கிறார். அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் போனவர், நாங்கள் புறப்பட்டு தயாராகி வந்தபோது பிடித்துக்கொண்டார். "ஏண்டா! காலையிலேயே எழுப்பலாம்னு வந்தால் செத்துப்போன கோழியோட ஒண்ணா படுத்திருக்கீங்களே'' என்று கிண்டல் செய்தார். அந்த கிண்டலில் ஒரு தந்தைக்கே உரிய அக்கறை இருந்தது.
விமான நிலையத்துக்கு புறப்பட சிவாஜி சார் அவசரப்படுத்தின தால், ஆளாளுக்கு சீக்கிரமே கிளம்பி விட்டோம். கமலா அம்மாளும் சிவாஜி சாருடன் வந்திருந்தார்கள். "மாமா இப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. நாமபோறப்போ விமான நிலைய கேட்டை திறந்திருக்க மாட்டாங்க'' என்றார்.
கமலா அம்மாள் சொன்னதுபோலவே ஆயிற்று. நாங்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் விமான நிலைய பயணிகள் கேட்டையே திறந்தார்கள்! அப்போது மங்களூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஒரு விமானம்தான். எனவே விமானத்தை தவறவிட்டால் தேவையில்லாமல் ஒருநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் சிவாஜி சாரின் `அவசரம்' நியாயமானதுதான்.
பார்த்ததுமே "வாங்க கவுண்டரே!'' என்பார். படப்பிடிப்பின்போது கிடைக்கிற இடைவெளி நேரத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவார். எங்கள் சித்தப்பா அவரது நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பம் பற்றி ஆர்வமாய் விசாரிப்பார். என் சிறுவயதிலேயே விவசாய நிலங்கள் விற்கப்பட்டதை தெரிந்து கொண்டவர், "நீ சம்பாதிச்சு சொந்த ஊர்லயே நிறைய தென்னந்தோப்பு வாங்கணும்'' என்று சொன்னார். அவர் சொன்னதுபோலவே பொள்ளாச்சி பகுதியில் வாழவாடி ஊரில் 95 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறேன்.
"ஜல்லிக்கட்டு'' படம் எதிர்பார்த்த மாதிரியே நன்றாக ஓடி, வெற்றி பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகே பாரதிராஜாவுடன் "வேதம் புதிது'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
சத்யராஜ் கதாநாயகனாக உயர்ந்த நேரத்தில், நடிகர் கமலஹாசன் தனது சொந்தப் படத்தில் அவரை கதாநாயகனாக நடிக்க வைத்தார். அந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது.

கமலஹாசன் கதாநாயகனாக நடித்த "சட்டம் என் கையில்'' படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமான சத்யராஜ், கமலஹாசன் நடித்த "காக்கிச்சட்டை'' படத்தில் வில்லனாக புகழ் பெற்று ஹீரோவாகவும் ஆனார். அவர் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நேரத்தில், நடிகர் கமலஹாசன் தனது தயாரிப்பில் "கடமை கண்ணியம் கட்டுப்பாடு'' என்ற படத்தில் சத்யராஜை ஹீரோவாக்கினார்.
கமலஹாசன் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்க நேர்ந்த அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-
"கமல் சார் நடிப்போடு சொந்தப் படங்களும் எடுத்துக் கொண்டிருந்தார். அவரது நிறுவனம் தயாரிக்கும் படத்தில் என்னை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி அவர் தனது விருப்பத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டபோது என் மீதான கமல் சாரின் நம்பிக்கையையே அது வெளிப்படுத்துவதாக அமைந்தது.
மலையாளத்தில் அப்போது மோகன்லால் நடித்த `போயிங் கோயிங்' படத்தை தமிழில் ரீமேக் செய்யும் நோக்கத்துடன் கமல் சார் பார்த்தார். என்னையும் படம் பார்க்க அழைத்துச் சென்றார். அந்தப்படம் முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் அமைந்தது. படத்தை பார்த்தவர் என்னிடம், "இந்தப்படம் வேணாங்க'' என்று சொல்லிவிட்டார்.
அடுத்து நாங்கள் பார்த்த படம் மம்முட்டி நடித்த "ஆவநாழி'' படம். இது கேரளாவில் அதிகபட்ச வசூல் செய்த படம். கேரளாவில் அதற்கு முன்பிருந்த அத்தனை வசூல் ரெக்கார்டுகளையும் உடைத்த படம். சுப்ரகீத் தியேட்டரில் படம் பார்க்க கமல் சார் ஏற்பாடு செய்திருந்தார். டைரக்டர் சந்தானபாரதியும் படம் பார்க்க வந்திருந்தார். குணசித்ரம், ஆவேசம், ஆக்ரோஷம் என்று அனைத்தையும் கலந்து, மம்முட்டி அருமையாக நடித்திருந்தார். படம் பார்க்கும்போதே எனக்குள், "இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்காது. இதுமாதிரி கேரக்டரில் கமல் சாரே நடிக்க விரும்புவார். நடிப்புக்கு சவாலான அத்தனை விஷயங்கள் படத்தில் இருக்கின்றன. எனவே இதில் நமக்கு `நோ சான்ஸ்' என்ற நினைப்பு ஓடியது.
படம் முடிந்ததும் கமல் சார் என்னிடம், "எப்படி இருக்கிறது?'' என்று கேட்டார். "சூப்பர் சார்!'' என்றேன். எப்படியும் கமல் சார்தான் நடிக்கப்போகிறார்! ஆரம்பத்திலேயே வாழ்த்தி விடுவோம் என்று எண்ணினேன். ஆனால் நடந்தது வேறு. "இந்த கேரக்டரில்தான் நீங்கள் நடிக்கிறீர்கள். சம்பளம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டார். "சார்! உங்க கிட்ட போய் சம்பளம் பேசிக்கிட்டு...'' என்று நான் தயங்கினேன். "சரி, சரி. நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றார், கமல்.
இந்தப்படம்தான் "கடமை கண்ணியம் கட்டுப்பாடு.'' சந்தானபாரதி டைரக்ட் செய்தார். முதல் நாள் படப்பிடிப்புக்கு கமல் சார் வந்தார். பிறகு, படம் முடிந்த பிறகுதான் வந்தார். "உங்கள் படம், ஒவ்வொரு ஏரியாவிலும் என்ன விலைக்கு விற்கிறது தெரியுமா?'' என்று என்னிடம் கேட்டார். நான் விழித்தேன். உண்மையில் எனக்கு அது தெரியாது.
கமல் அப்படிக் கேட்டதன் அர்த்தம் பிறகு எனக்குத் தெரிந்தது. கதாநாயகனாக நடித்த படங்களுக்கு நான் அதுவரை வாங்கிய தொகையை விட, அதிக தொகையை எனக்குக் கொடுத்தார்! இந்தப்படத்தின் வெற்றி விழாவுக்கு யார் யாரை அழைக்கலாம் என்பதை கமல் சார் என்னிடம் கலந்து பேசினார். அப்போது அவர், "தமிழ்த்திரையுலகின் பிதாமகராக இருக்கும் சிவாஜி சாரை தலைமை தாங்க அழைப்போம். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் `உணர்ச்சிகள்' என்ற படத்தில் என்னை நடிக்க வைத்து ரசிகர்கள் மத்தியில் என்னை எதிர்பார்ப்புக்குரியவராக்கிய டைரக்டர் ஆர்.சி.சக்தியை அழைப்போம். அதுமாதிரி சினிமாவில் நீங்கள் உயரம் காண காரணமாக இருந்த டைரக்டர் மணிவண்ணனையும் அழைப்போம்'' என்றார். அப்படியே மூவரையும் அழைத்து விழா எடுக்கவும் செய்தார்.
கமல் சாரின் சொந்தப் படத்திலேயே ஹீரோவாக நடித்த பிறகு சினிமா வட்டாரத்தில் எனக்கான மரியாதையும் கூடுதல் ஆனது. நான் சினிமாவில் வளர்ந்த நேரத்திலும் கேரக்டர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தேனே தவிர, இளம் வயது நாயகனாகவே படங்களை தொடரவேண்டும் என்று எண்ணியதில்லை. டைரக்டர் பாரதிராஜாவின் "வேதம் புதிது'' படத்தில் பாலுத்தேவர் என்ற கேரக்டரில் நடித்தபோது எனக்கு 32 வயதுதான். 31 வயதில், "மிஸ்டர் பாரத்'' படத்தில் ரஜினி சாருக்கு அப்பாவாக நடித்தேன். நடிப்பில் `இமேஜ்' பார்க்காமல், அந்த கேரக்டரில் என்ன செய்தால் ரசிகர்கள் ஈர்ப்புக்குள்ளாவார்கள் என்பதை மட்டும் கவனித்தேன்.
ரஜினி சாருடன் நடித்த "மிஸ்டர் பாரத்'' படத்தில்கூட மிகச்சிறந்த அனுபவம் கிடைத்தது. `திரிசூல்' என்ற இந்திப்படத்தின் ரீமேக்தான் இந்தப்படம். இந்தியில் சஞ்சீவ்குமார், அமிதாப்பச்சன், சசிகபூர் ஆகியோர் நடித்திருந்தார்கள். தமிழில் சஞ்சீவ்குமார் கேரக்டரில் நானும், அமிதாப் கேரக்டரில் ரஜினி சாரும், சசிகபூர் கேரக்டரில் எஸ்.வி.சேகரும் நடித்தோம். இந்தப்படத்தில் நானும், ரஜினி சாரும் பாடி நடித்த "என்னம்மா கண்ணு'' பாட்டு, இப்பவும் ரசிகர்கள் விரும்புகிற பாட்டாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு படத்தில்கூட இந்தப் பாடலை `ரீமிக்ஸ்' செய்து சேர்த்திருந்தார்கள். ரஜினி சார் "16 வயதினிலே'' படத்தில் பேசிய `இது எப்படி இருக்கு?' வசனம் ரசிகர்களிடையே ரொம்பவும் பிரபலம். அது மாதிரி "24 மணி நேரம்'' படத்தில் நான் பேசிய "என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே'' வசனமும் ரசிகர்களைக் கவர்ந்தது. "மிஸ்டர் பாரத்'' படத்தில் நானும், ரஜினி சாரும் எங்கள் புகழ் பெற்ற வசனங்களை மாற்றிக் கொண்டோம்! வில்லன் ரகுவரனை புரட்டியெடுத்துவிட்டு "இது எப்படி இருக்கு?'' என்று ரஜினி சார் ஸ்டைலில் நான் சொல்ல, ரஜினி சாரோ, என் ஸ்டைலில் "என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே'' என்று பேசினார். இந்த வசன மாற்றத்துக்கு தியேட்டர்களில் ரசிகர்களின் பலத்த கரகோஷம். படமும் பிரமாண்ட வெற்றி பெற்றது.
படம் முழுக்க, இந்த காட்சியில் இந்த மாதிரி செய்தால் நன்றாக இருக்கும் என்று பேசி வைத்துக்கொண்டு நடித்ததையும் மறக்க முடியாது.''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
சத்யராஜ் பிசியாக இருந்த நேரத்திலும், பாலாஜி தயாரித்த ஒரு படத்தில், சிறிய வேடத்தை கேட்டு வாங்கி நடித்தார். படத்தில் ஐந்து நிமிடமே வந்து போகிற வேடம் அது.

வெற்றிகரமான ஹீரோ என்ற நிலைக்கு வந்து விட்ட சத்யராஜ், நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜியின் படங்களிலும் நடித்தார். பாலாஜி தயாரித்த "மங்கம்மா சபதம்'', "அண்ணி'' ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர், "விடுதலை'' படத்தில் மட்டும் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டார்.
அதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-
"ஹீரோவாக வளர்ந்து விட்டேன். என்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள் வந்துவிட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் இனி `வில்லன்' வேடத்தையும் செய்தால், என்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் வியாபார ரீதியாக பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்தேன். அதனால்தான் பாலாஜி சாரின் மங்கம்மா சபதம், அண்ணி படங்களில் வில்லனாக நடித்த நான், அடுத்து அவர் தயாரித்த `விடுதலை' படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தபோது, அந்த வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.
இத்தனைக்கும் அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை லண்டனில்தான் எடுத்தார்கள். நான் அதுவரை லண்டனை பார்த்ததில்லை. "எந்த வேடமாக இருந்தால் என்ன! லண்டன் பயணத்தை அனுபவித்து விடுவோம்'' என்று எண்ணியிருந்தால் ஒருவேளை அந்த வில்லன் வேடத்தை ஒப்புக் கொண்டிருந்திருப்பேன். ஆனால் நான் பாலாஜி சாரிடம், "நான் ஹீரோவாக நடித்த படங்கள் வரத் தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் வில்லனாக நடித்தால் சரியாக இருக்காது'' என்று சொன்னேன்.
பாலாஜி சார் என்னை கூர்மையாகப் பார்த்தார். "இனி வில்லனாக நடிப்பதில்லை என்பதில் அவ்வளவு நம்பிக்கை வந்துவிட்டதா?'' என்று கேட்டார். "ஆமாம் சார்! அதில் நான் தெளிவாக இருக்கிறேன்'' என்றேன்.
"உங்கள் தன்னம்பிக்கை வெற்றி பெறட்டும்'' என்று வாழ்த்தியவர், என் தன்னம்பிக்கைக்கு அவரும் கைகொடுக்கும் விதமாய் எனக்குத் தந்த படம்தான் "மக்கள் என் பக்கம்.'' மலையாளத்தில் பாலாஜி சாரின் மருமகன் மோகன்லால் நடித்த "ராஜா வின்டெ மகன்'' படத்தைத்தான் இந்தப் பெயரில் தமிழில் `ரீமேக்' செய்தார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அந்தப்படம், தமிழிலும் பெரிய வெற்றி பெற்றது.
பாலாஜி சார், மற்ற எந்த நிறுவனத்திலும் செய்திராத ஒரு ஏற்பாட்டை தனது நிறுவனத்தில் கலைஞர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் செய்தார். நடிகர் - நடிகைகள், டைரக்டர் ஆகியோர், படப்பிடிப்பின்போது உட்காரும் நாற்காலியில், அவர்களின் பெயரை குறிப்பிட ஏற்பாடுசெய்தார். இதனால், ஒருவர் நாற்காலியில் பிறர் உட்கார்ந்து கொள்ள முடியாது.
"மங்கம்மா சபதம்'' படத்தில் நடித்தபோது என் வில்லன் நடிப்புக்கு பேசிய சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். ஆனால் எனக்கு வந்து சேர்ந்ததோ 40 ஆயிரம் ரூபாய்! கணக்கில் ஏதோ தவறு நடந்து விட்டது என்று நினைத்த நான், பாலாஜி சாரை பார்த்து மீதி 15 ஆயிரத்தை கொடுக்கப்போனேன். அவரோ, "நன்றாக நடித்திருந்தீர்கள். அதனால், பேசினதைவிட அதிகமாகக் கொடுக்கத் தோன்றியது. கொடுத்தேன்'' என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டார்.
படத்தின் தரத்துக்காக செலவை பொருட்படுத்தாதவர் இவர். "மக்கள் என்பக்கம்'' படத்தின் ஒரு காட்சியில் ஆட்டோக்கள் தேவை என்று டைரக்டர் கேட்டபோது, 100 ஆட்டோக்களை உடனடியாக ஏற்பாடு செய்து விட்டார். நான்கூட அவரிடம், "சார்! 20 ஆட்டோ போதுமே'' என்றேன். "கதைக்கு தேவையான பிரமாண்டத்துக்கு 100 ஆட்டோக்கள் இருக்கட்டுமே'' என்று சொல்லிவிட்டார். 28 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிந்து இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
பாலாஜி சாரின் "திராவிடன்'' படத்திலும் ஹீரோவாக நடித்தேன். நடிக்க வந்த பிறகு, இந்தக் கேரக்டரில் நடிக்கிறேன் என்று நானாக கேட்டு வாங்கி நடித்தது "காவல்'' படம் மட்டும்தான். பாலாஜி சாரின் தயாரிப்பான இந்தப்படம், ஒரு இந்திப்படத்தின் ரீமேக். அந்த இந்திப்படத்தில் ஹீரோவாக ஓம்புரியும், ஐந்து நிமிடமே வந்து போகிற போலீஸ்காரர் கேரக்டரில் நசுருதீன்ஷாவும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை நான் பார்த்தபோது, நசுருதீன்ஷா நடித்த அந்த கேரக்டர் என்னை மிகவும் கவர்ந்தது. அதே படம் தமிழில் ரீமேக் ஆகிறது என்று தெரிந்ததும், பாலாஜி சாரை நானே போய் சந்தித்தேன். "சார்! எனக்கு சம்பளம் வேண்டாம். இந்தியில் நசுருதீன் ஷா நடித்த அந்த கவுரவ கேரக்டரை தமிழில் எனக்கு கொடுத்து விடுங்கள்'' என்றேன். அவரும், "தாராளமாய் நடியுங்கள்'' என்றார்.
படத்தில் என் போர்ஷனை இரண்டே நாளில் எடுத்து முடித்தார்கள். நான் பாலாஜி சாரை சந்தித்து, என் `நடிப்பு விருப்பம்' நிறைவேற்றியதற்காக நன்றி சொல்லி புறப்பட்டபோது, தடுத்து நிறுத்தி, என் கையில் 3 பவுன்களைத் திணித்தார். நான், "சார்! எனக்கு சம்பளமே வேண்டாம்'' என்று கூற, அவரோ, "இது என் அன்பளிப்பு. சம்பளம் அல்ல. நீங்கள் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்'' என்று கூறிவிட்டார். எனது 2 நாள் நடிப்புக்கு கிடைத்த 3 பவுனை கணக்கில் கொண்டால் அப்போது நான் படங்களுக்கு வாங்கிய சம்பள அடிப்படையில் அதிக சம்பளம் வாங்கியது இந்த படத்துக்குத்தான்!
தமிழ் சினிமாவில் அப்போது மலையாளத் திரையுலகில் இருந்து வந்து புரட்சி ஏற்படுத்தியவர் டைரக்டர் பாசில். தமிழில், ஜெய்சங்கர், பத்மினி, நதியா, எஸ்.வி.சேகர் நடித்த "பூவே பூச்சூடவா'' படம் மூலம் ரொம்பவே பாப்புலராகி விட்டார். வித்தியாசமான கதைப் பின்னணிக்காக அந்தப்படம் பேசப்பட்டதோடு வெற்றியும் பெற்றது.
நான் அப்போது படங்களில் இரவு, பகலாக ஓய்வின்றி நடித்த நேரம். தனது அடுத்த படத்தில் நடிக்கும்படி பாசில் என்னிடம் கேட்டுக்கொண்டார். பாம்குரோவ் ஓட்டலில், ஒரு இரவில் கதையைச் சொன்னார். ஓய்வே இல்லாததால், களைப்பு அடைந்திருந்த நான், கதையுடன் ஒன்ற முடியவில்லை. கதை சொல்லி முடித்த பாசில், "கதை எப்படி இருக்கிறது'' என்று கேட்டபோது கூட, உடனே நான் பதில் சொல்லவில்லை. பாசில் புறப்பட்டுப்போனதும் எனது மானேஜர் ராமநாதனிடம் "அவர் கதை சொன்னார். நான் களைப்பாக இருந்ததால், கதையுடன் என்னால் ஒன்ற முடியவில்லை. இந்தக் கதையில் நடிக்கவில்லை என்று கூறிவிடலாமா?'' என்று கேட்டேன்.
அவரோ, "சார்! பாசில் மலையாளத்தில் பெரிய டைரக்டர். தமிழிலும் அவர் பெரிய அளவில் வருவார். நிச்சயம் அவர் வித்தியாசமான கதைக்குத்தான் உங்களைத் தேடி வந்திருக்கிறார். பேசாமல் `சரி' என்று சொல்லிவிடுங்கள்'' என்றார். அப்படி நான் ஒப்புக்கொண்ட படம்தான் "பூவிழி வாசலிலே.''
இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழையில் நடந்தது. எந்த மாநிலத்தில் படப்பிடிப்பு நடந்தாலும் எனக்கு சாப்பாட்டுப் பிரச்சினை கிடையாது. அந்தந்த ஊரில் உள்ள உணவுக்கு என்னை பழக்கப்படுத்திக் கொள்வேன். ஆனால் ஆலப்புழையில் மட்டும் எனக்கு கேரள உணவுக்குப் பதிலாக தமிழ்நாட்டு உணவு வகைகளையே தந்தார்கள். இரண்டொரு நாள் பொறுத்துப் பார்த்த பிறகு நானே தயாரிப்பாளரிடம் "உங்க ஊர் உணவையே எனக்கு கொடுங்கள்'' என்று கேட்டு வாங்கி சாப்பிட்டேன். பிரவுன் கலர் அரிசி சாப்பாடு, புட்டு, மீன் குழம்பு, நேந்திரம் பழம் என்று படப்பிடிப்பு நடந்த நாட்களில் கேரள ஸ்பெஷல் உணவுகளுடனேயே ஐக்கியமாகிவிட்டேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை பார்க்க மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் வருவார்கள். செட்டே கலகலப்பாக இருக்கும். இந்தப் படத்தில் சிறுவனாக முக்கிய கேரக்டரில் நடித்த சுஜிதா, பெண் குழந்தை என்று முதலில் எனக்குத் தெரியாது. படப்பிடிப்பு தொடங்கி 10 நாட்களுக்குப் பிறகே தெரியும். குழந்தை என்றாலும் சுஜிதா நடிப்பில் மிரட்டியிருந்தாள். படம் "சூப்பர்ஹிட்'' ஆனது.
சமீபத்தில் ஒரு டப்பிங் தியேட்டரில் டப்பிங் பேசப்போனபோது ஒரு அம்மா என்னிடம் ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தினார். "சார்! இது என் பெண் சுஜிதா. நீங்கள் நடித்த "பூவிழி வாசலிலே'' படத்தில் சிறுவனாக நடித்தது இவள்தான்'' என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. குட்டிப்பெண் வளர்ந்து பெரியவளாக நிற்கும்போதுதான், நமக்கும் வயதாகியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது!
"பூவிழி வாசலிலே'' படத்தில் நடித்த பிறகு, மறுபடியும் பாசில் டைரக்ஷனில் "பொம்முகுட்டி அம்மாவுக்கு'' படத்திலும் நடித்தேன். இந்தப் படத்தில்தான் சுஹாசினி எனக்கு முதன் முதலாக ஜோடியானார். ஒரு சாதாரண குடும்பத் தலைவனாக என்னை நடிக்க வைத்து இந்தப் படத்தையும் வெற்றி பெறச்செய்தார், பாசில்.''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
சத்யராஜ் கதாநாயகனாக நடித்த பாரதிராஜாவின் "கடலோரக் கவிதைகள்'' மகத்தான வெற்றி பெற்றது. அதன் மூலம், கதாநாயகனாகத் தொடர்ந்து நடிக்கலாம் என்ற அங்கீகாரத்தை ரசிகர்கள் அளித்தனர்.

"கடலோரக் கவிதைகள்'' படத்தில் நடித்த அனுபவம் குறித்து, நடிகர் சத்யராஜ் கூறியதாவது:-
"சினிமாவில் எத்தனை வருடங்கள் ஆனாலும் சில கேரக்டர்களின் பெயர்கள் நமக்கு மறக்காது. சப்பாணி, பரட்டை, வேலு நாயக்கர், அலெக்ஸ் பாண்டியன் என கேரக்டர்கள் பெயரைச் சொன்னதுமே அந்தப்படமும், நடித்தவர்களும் நம் நினைவுக்குள் வந்து விடுவார்கள்.
டைரக்டர் பாரதிராஜா டைரக்ஷனில் `கடலோரக் கவிதைகள்' படத்தில் நான் நடித்த `முட்டம் சின்னப்பதாஸ்' கேரக்டரும், இந்த `மறக்க முடியாத' பட்டியலுக்குள் வந்து விடும் என்று நம்புகிறேன்.
டைரக்டர் பாரதிராஜா இந்த கேரக்டரை ரசித்து, என்னிடம் வேலை வாங்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் கடல் கிராமத்தில் நடந்தது. படப்பிடிப்பை பார்க்க வந்த ரசிகர்கள், நான் ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பது தெரியாமல், "இந்தப் படத்தில் நீங்கள்தான் வில்லனா சார்?'' என்று கேட்டபோது, அவர்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் தவித்துப்போனேன்.
அது அவர்களுடைய தப்பில்லை. என்னை அதுவரை வில்லனாக ரசித்தவர்கள், அந்தப் படத்திலும் நான் ஏதோ வில்லன் வேஷத்தில் நடிப்பதாகவே நினைத்திருக்கிறார்கள். அதனால் அப்படிக் கேட்டிருக்கிறார்கள். படத்தில் நான் ஏற்றிருந்த சின்னப்பதாஸ் கேரக்டரும் படத்தின் பாதிவரை அடாவடி கேரக்டர்தானே! அதனால் `சின்னப்பதாஸ்' கெட்டப்பில் என்னைப் பார்த்ததாலும் ரசிகர்களுக்கு அப்படி தோன்றியிருக்கலாம்.
அதுவரை வில்லன், அடிதடி என்று பயணம் செய்து கொண்டிருந்த என் நடிப்பு வாழ்க்கையில், கையில் ஒரு ஆட்டுக்குட்டியுடன் ஒரு காதல் கதை தந்து, என் நடிப்பை இன்னொரு பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றார், பாரதிராஜா.
இந்தப் படத்தில் இளையராஜா இசையமைப்பில் எல்லாப் பாடல்களுமே அற்புதம். படத்தில் நான் `அடி ஆத்தாடி' பாடலுக்கு நடிக்க வேண்டிய நாளில், நான் அந்தப் பாடல் வரிகளை மனப்பாடம் செய்து கொண்டிருந்தேன். டைரக்டர் என்னைப் பார்த்து "என்ன பண்றீங்க?'' என்று கேட்டார்.
"இது டூயட் பாடல் மாதிரி தெரியுதே சார்! பாடல் காட்சியில் பாடலுக்கேற்றபடி பொருத்தமாக நான் வாயசைக்க வேண்டுமே. அதற்காகத்தான் பாட்டு வரிகளை மனசுக்குள் பாடம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்'' என்றேன்.
நான் இப்படிச் சொன்னதும் டைரக்டர் சிரித்து விட்டார். "அதெல்லாம் ஒண்ணும் வேணாம். மற்ற வேலையைப் பாருங்க'' என்று கூறிவிட்டார்.
அவர் அப்படி சொன்னதற்கான அர்த்தம், பாடல் காட்சி படமாகும்போதுதான் தெரிந்தது. நானோ, ரேகாவோ வாயசைக்காமல் காட்சி பின்னணியில் எங்களை நடமாட விட்டு `கவிதை' மாதிரி படம் பிடித்து விட்டார், பாரதிராஜா.
இந்தப் படத்தில் வலம்புரிச் சங்குக்கு ஒரு முக்கியமான இடம் இருந்தது. வலம்புரிச் சங்கை நம் காதுக்குள் வைக்கும்போது அது ஓசையெழுப்பும். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் உயிருக்குப் போராடியபடி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பேன். பட்டணத்தில் இருந்து என்னைப் பார்க்க வரும் காதலி (ரேகா) நான் `கோமா' நிலையில் இருந்து விடுபடவில்லை என்பது தெரிந்ததும், என் காதருகே அந்த வலம்புரிச் சங்கை வைத்துவிட்டு ரெயில் ஏறப் போய்விடுவார்.
வலம்புரிச்சங்கு என் காதுக்குள் ஒலிக்க, அந்த சத்தத்தில் நான் `கோமா' நிலையில் இருந்து விடுபட்டு, காதலியை பார்க்க ஓடுகிற மாதிரி காட்சி.
இந்தக் காட்சியில் வலம்புரிச்சங்கு என் காதுக்குள் ஒலிக்கும் காட்சியில் ரசிகர்கள் கரகோஷம் செய்தால் கதாநாயகனாக நான் ஜெயித்து விட்டேன் என்று அர்த்தம். `ஓ' என்று கத்தினால் படமும், என் கதாநாயகன் முயற்சியும் அவுட்.
படம் ரிலீசாகியது. சின்னப்பதாசை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப் பார்க்க தியேட்டருக்கு போயிருந்தேன். வலம்புரிச்சங்கு என் காதில் ஒலித்ததும் என் உடம்பில் ஏற்படுகிற மாற்றங்களை பார்த்து ரசிகர்கள் உணர்ச்சி மிகுதியில் கரகோஷம் செய்தார்கள். ரசிகர்கள் என்னை கதாநாயகனாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதையே இந்த காட்சி எனக்கு உணர்த்தியது. படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
ஒரு பாரதிராஜா கிடைத்து, அவர் மூலம் ஒரு நல்ல கதை கிடைத்து, நான் ஹீரோ ஆனேன் என்றாலும், நான் ஹீரோவாக நடிக்கலாம் என்று முதலில் பச்சைக்கொடி காட்டியவர், ரஜினி சார்தான்! `பாயும் புலி' படத்தில் அவருடன் எனக்கு சண்டைக்காட்சி இருந்தது. ஒரு காட்சியில் நானே தொப்பென்று விழுந்து ஒரு டேபிளை உடைத்திருக்கிறேன். அப்போது, "ஏன் இப்படி சண்டைக் காட்சியில் `ரிஸ்க்' எடுக்கிறீர்கள்?'' என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டார், ரஜினி. அடுத்து அவருடன் நடித்த "தம்பிக்கு எந்தஊரு'' படத்தில் எனக்கும் கொஞ்சம் பேர் சொல்கிற மாதிரி வேடம். இந்தப் படத்தில் நடித்தபோது ரஜினி சார் என்னிடம் நெருக்கமாக பழகினார். ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது திடீரென என்னை உற்று நோக்கியவர், "சத்யராஜ்! நீங்க ஏன் ஹீரோவாக நடிக்கக் கூடாது?'' என்று கேட்டார்.
நான் பதில் சொல்லாமல் சிரித்தேன். அவரோ விடவில்லை. "நான் விளையாட்டுக்கு சொல்லவில்லை. நிச்சயம் நீங்கள் ஹீரோவாக நடிக்கலாம். உங்க பர்சனாலிடி பற்றி உங்களுக்குத் தெரியாது'' என்றார்.
"போதும் சார்! விட்ருங்க'' என்றேன், அவரது நம்பிக்கையை அங்கீகரிக்காமல்.
ரஜினி சாரோ விடவில்லை, "இல்லை. சத்யராஜ்! ஹீரோவா வர்றதுக்கான தகுதி உங்ககிட்டே இருக்கு. அதுக்கு ஒரு டெஸ்ட். நாளைக்கு நம்ம படத்தோட ஹீரோயின் மாதவி படப்பிடிப்புக்கு வராங்க. அவங்களும் நான் சொன்னதையே உறுதிப்படுத்துவாங்க பாருங்க'' என்றார்.
மறுநாள் மாதவி வந்ததும் என்னை அவரிடம் ரஜினி சார் அறிமுகப்படுத்தினார். எப்படித் தெரியுமா? நான் அமெரிக்காவில் உள்ள நடிப்புக் கல்லூரியில் இருந்து வந்திருக்கிற விசிட்டிங் புரொபசர் என்று!
ரஜினி சார் சொன்னதை மாதவி அப்படியே நம்பிவிட்டார். என் தோற்றமும், நிறமும் ரஜினி சார் சொன்னதுபோல மாதவியை நம்ப வைத்துவிட்டன! இதன் பிறகு என்னைப் பார்க்கும் போதெல்லாம் மாதவி என்னிடம், அமெரிக்க நடிப்புப் பயிற்சி பற்றி ஆங்கிலத்தில் கேட்க ஆரம்பித்துவிட்டார். கேட்கும்போதுகூட அப்படியொரு மரியாதை.
நமக்குத்தான் `இங்கிலீஷ்' தகராறு ஆச்சே! ஏதோ வாய்க்குள் முனகிக் கொள்வது போல ஆங்கிலத்தில் பேசிவிட்டு `எஸ்கேப்' ஆகிவிடுவதுண்டு. நான் மாதவியிடம் இப்படி படாதபாடுபடுவதைப் பார்த்து இரண்டு நாட்களாக ரஜினி சாரும் ரசித்து சிரித்து வந்தார்!
இரண்டு நாள் கழித்து, சுலக்ஷனா நடிக்க வந்தார். அவர் மாதவியிடம், `அமெரிக்க புரபசராக' நான் நடித்தது தெரியாமல் என்னைப் பற்றிய உண்மையைச் சொல்லி விட்டார். `சினிமாவில் படிப்படியாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார்' என்று அவர் என் நடிப்பு வரலாற்றை சொல்லிக்கொண்டே போக, மாதவி முகத்தில் நானும் ரஜினி சாரும் அவரை ஏமாற்றிய கோபம் தெரிந்தது!
இந்த களேபரம் நடந்து முடிந்த அன்று ரஜினி சார் என்னிடம் "சத்யராஜ்! இப்போதாவது நான் சொல்றதை நம்பறீங்க அல்லவா? உங்கள் பெர்சனாலிடி, பிரபல ஹீரோயினையே நம்ப வைத்தது என்றால், இந்த பர்சனாலிடிக்கு நீங்கள் நிச்சயம் ஹீரோ ஆகமுடியும் தானே!'' என்றார். அவர் சொன்னது போலவே, "கடலோரக் கவிதைகள்'' படம் எனக்கு அப்படியொரு ஹீரோ அந்தஸ்தை கொடுத்து விட்டது.
இது `ரீமேக்' காலம். பழைய படங்களை மறுபடியும் வேறு வேறு நடிகர்களை போட்டு எடுக்கிறார்கள். சமீபத்தில் `பருத்தி வீரன்' கார்த்தியை பார்த்தபோது, "நான் நடித்த "கடலோரக் கவிதைகள்'' படத்தை ரீமேக் பண்ணி அதில் நீ நடிச்சா சரியா இருக்கும்'' என்று சொன்னேன். 'பருத்தி வீரன்' முதல் படத்திலேயே முரட்டு கிராமத்து இளைஞனாக நடிப்பில் அசத்திய கார்த்தி, "கடலோரக் கவிதைகள்'' சின்னப்பதாஸ் வேடத்திற்கும் பொருத்தமாக இருப்பார்.
சின்னப்பதாசாக என்னை உருவாக்கிய டைரக்டர் பாரதிராஜாவே, "வேதம் புதிது'' படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் என்னை நடிக்க வைத்தார்.''
இவ்வாறு கூறினார், சத்யராஜ்.

வில்லன் வேடங்களில் நடித்து புகழ் பெற்று விட்ட சத்யராஜுக்கு பாரதிராஜாவின் "முதல் மரியாதை'' படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அந்தப் படத்தில் சிறுவேடத்தில் சத்யராஜின் நடிப்பை பார்த்த பாரதிராஜா, அடுத்து தான் இயக்கிய "கடலோரக் கவிதைகள்'' படத்தில், அவரை கதாநாயகன் ஆக்கினார்.

பாரதிராஜா படங்களில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் சத்யராஜ் கூறியதாவது:-
"நான் வில்லன் நடிப்பில் வளர்ந்த நேரத்திலும், டைரக்டர் பாரதிராஜாவின் படத்தில் நடித்துவிட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவரை போய்ப் பார்த்து சான்ஸ் கேட்டு வருவேன்.
அவரது முதல் படம் "16 வயதினிலே'' பிரமாண்டமான வெற்றி பெற்றது. இரண்டாவது படமாக "கிழக்கே போகும் ரெயில்'' படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் புதுமுகங்களுக்கு அவர் வாய்ப்பு கொடுக்கிறார் என்று தெரிந்ததும் நானும் நண்பர் ராஜ்மதனும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு ஆபீசுக்கு ஓடினோம்.
அங்கே போனால், திருவிழா கூட்டம் போல புதுமுகங்கள் கூட்டம்! அந்தக் கூட்டத்தில் நாங்களும் கலந்தபோது முதல் ரவுண்டிலேயே எங்களை துரத்தி விட்டார்கள்.
அதன் பிறகு நானும் பட வாய்ப்பு கிடைத்து நடிக்கத் தொடங்கினேன். "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' படத்துக்கு அலுவலக நிர்வாக பொறுப்பிலும் இருந்தேன் அல்லவா? அப்போதெல்லாம் செட்டில் என் பார்வையில் டைரக்டர் பாரதிராஜா படுவார். இவர் படத்தில் நமக்கு எங்கே சான்ஸ் தரப்போகிறார் என்று எனக்குள் ஒரு எண்ணம் வந்து விட்டதால், கிடைக்கிற படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.
இந்த சமயத்தில்தான் நடிகர் திலகம் சிவாஜி சாரை முதன் முதலாக பாரதிராஜா "முதல் மரியாதை'' என்ற படத்தில் இயக்கினார். படம் பற்றி திரையுலகமே பேசிக்கொண்டிருந்தது. திடீரென்று படத்தின் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்னை அழைத்து, "படத்தில் ஒரு வில்லன் வேடம் இருக்கிறது. செய்ய முடியுமா?'' என்று கேட்டார்.
படத்தின் திருப்புமுனைக்கு காரணமான காட்சியில் நான் நடித்தேன். ஊர்ப் பெரியவரை உளமாற நேசிக்கும் குயிலு (நடிகை ராதா) நான் அந்த ஊர்ப் பெரியவரின் மனைவியின் முன்னாள் காதலன் என்பதை தெரிந்து கொள்கிறார். அதனால் ஒரு கொலை வழக்கில் ஜெயில் தண்டனை அனுபவித்து விட்டு தனது பழைய காதலியை பார்க்க அந்த கிராமத்துக்கு வரும் என்னை அவர் கொன்று விடுவார்.
படத்தில் ராதா, பரிசல் ஓட்டும் பெண். நான் அந்த பரிசலில் ஊருக்கு வரும்போது இந்த சம்பவம் நடக்க வேண்டும்.
காட்சியை என்னிடம் விவரித்த டைரக்டர் பாரதிராஜா, தனது உதவியாளரிடம் எனக்கான வசனங்களை ஒரு முறை படித்துக் காட்டச் சொன்னார். வசனத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நேராக பரிசலில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். காட்சி தொடங்குவதற்கு முன்பு பாரதிராஜா தனது உதவியாளர்களிடம், "என்னய்யா இது! வசனத்தை படிச்சுக் காட்டினதுமே நடிக்கப் போயிட்டான்!'' என்று கூறியிருக்கிறார்.
எவ்வளவு நீள வசனமானாலும் அதை ஒரு தடவை கேட்டு விட்டால் எனக்கு மறக்காது. அப்போதே அந்த காட்சிக்குத் தேவையான ஏற்ற இறக்கங்களுடன் பேசி நடித்து விடுவேன்.
இந்தப் படத்திலும் அதுதான் நடந்தது. என் கேரக்டரின் அடாவடித் தன்மைக்கேற்ப, சொந்தமாய் கொஞ்சம் வசனங்களையும் சேர்த்துக்கொண்டு பேசினேன்.
முதல் `ஷாட்'டிலேயே காட்சி ஓ.கே. ஆயிற்று. டைரக்டர் பாரதிராஜாவுக்கு அப்படியொரு சந்தோஷம்! `என் மனசில் இருந்த அந்த வில்லனை அப்படியே பிலிமுக்குள் கொண்டு வந்துட்டீங்க' என்று பாராட்டினார். அதோடு 5 ஆயிரம் ரூபாய் சம்பளமும் கொடுத்தார்.
இத்தனைக்கும், அந்தப்படத்தில் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூன்றே மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டன! என்னைப் பாராட்டியவரிடம், அவரது படத்தில் நடிக்க எடுத்த முந்தைய முயற்சிகள் பற்றி சொன்னேன். ஆச்சரியப்பட்டவர், "நான்கூட உங்களை செட்டில் பார்த்திருக்கிறேன். வாட்டசாட்டமா, உயரமா இருந்ததால், ஸ்டண்ட் ஆளுன்னு நினைத்துக் கொள்வேன். அப்புறமாய் கையில் ஒரு பெட்டியோடு அடிக்கடி பார்த்திருக்கிறேன். படக்கம்பெனியில் வேலை பார்க்கிறவர் போலிருக்குது'' என்று நினைத்து விட்டேன்'' என்றார்.
நான் படக்கம்பெனியில் அலுவலக நிர்வாக பொறுப்பை கவனித்து வந்தபோது, என் கையிலிருந்த பெட்டி, என்னை அவருக்கு ஒரு `நடிகனாக' காட்ட தடையாக இருந்திருக்கிறது! இதை அவரிடம் சொன்னபோது மனம்விட்டுச் சிரித்தார்.
அப்போது நான் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஒருநாளைக்கு 3 படத்துக்கு கால்ஷீட் கொடுத்தேன். படங்களில் கதாநாயகியை நான் `ரேப்' பண்ணுகிற மாதிரி காட்சிகளில் நடித்தால்கூட அதில் என் நடிப்புக்கு ரசிகர்கள் கைதட்டினார்கள்.
இப்படித்தான் ஒரு படத்தில், கதாநாயகியை `எசகுபிசகாக' மடக்கும் காட்சியில் நடித்ததற்கு ரசிகர்களிடம் வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. ஒருநாள், என் நண்பர் `நிழல்கள்' ரவி எனக்கு போன் பண்ணி, நான் வில்லனாக நடித்த படம் நடக்கும் குறிப்பிட்ட தியேட்டருக்கு வரச்சொன்னார். அப்போது, படம் ஓடிக்கொண்டிருந்தது. படத்தில் கதாநாயகியை நான் `ரேப்' செய்ய முயற்சிக்கிற காட்சி! கதாநாயகிக்கு ஆபத்து என்றால் கதாநாயகன் வந்து காப்பாற்றுவார் அல்லவா! அதன்படி படத்தின் ஹீரோ கண்ணாடி ஜன்னலை உடைத்தபடி அறைக்குள் பாய்கிறார். கீழே விழுந்து எழுந்த அதே வேகத்தில் ஹீரோ என் தோள் மீது கை வைக்கிறார்.
இந்த நேரத்தில் ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்? ஹீரோ வந்து விட்டதால் இனி ஹீரோயினுக்கு ஆபத்து இல்லை என்பதாக ரசிகர்கள் கரகோஷம் செய்வார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. என் தோளில் கைவைத்த ஹீரோவை "எடுடா கையை'' என்று கத்தினார்கள். நான் வெலவெலத்துப் போய்விட்டேன். வில்லனின் மேனரிசங்களை ரசிக்கிற அளவுக்கு ரசிகர்கள் பக்குவப்பட்டு விட்டார்கள், அல்லது மாறிப்போய்இருக்கிறார்கள் என்பது எனக்கே அந்த நேரத்தில் அதிசயமாகத் தெரிந்தது!
என்னை தியேட்டருக்கு வெளியில் அழைத்துச்சென்ற நிழல்கள்ரவி, "ரசிகர்களோட இந்த வித்தியாசமான `டேஸ்ட்' பற்றி எனக்கு முந்தின `ஷோ'விலேயே `ரிசல்ட்' கிடைச்சுது. அதை நீயும் தெரிந்து கொள்ளணும் என்றுதான் உன்னை அழைத்தேன்'' என்றார்.
"முதல் மரியாதை'' படத்தில் நடித்த பிறகு, தனது அடுத்த படமான "கடலோரக் கவிதைகள்'' படத்தில் என்னை கதாநாயகனாக்கி விட்டார் பாரதிராஜா.
ஆனால் அதற்கும் இடைப்பட்ட நேரத்தில் "சாவி'' என்ற படம் மூலம் நான் ஹீரோவாகி விட்டேன். இது `ஆன்டிஹீரோ' கதை. அதாவது, கதாநாயகனே வில்லத்தனம் செய்வான்!
பிரபல டைரக்டர் டி.ஆர்.ரகுநாத்தின் மகன் கார்த்திக் ரகுநாத் இந்தப் படத்தை இயக்கினார். இது லண்டனில் வருஷக் கணக்கில் மேடை நாடகமாக நடந்த "டயல் `எம்' பார் மர்டர்'' என்ற கதை. ஆனால் இதை முதலில் இந்தியில்தான் எடுத்தார்கள். ராஜ்கபூர் - டிம்பிள் கபாடியா நடித்திருந்தார்கள்.
இதுகூட முதலில் எனக்குத் தெரியாது. கமல் சாரின் சொந்தப்படமான `விக்ரம்' படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தபோது, கடைசி ஷெட்ïலில் படத்தில் நடித்த டிம்பிள் கபாடியாவிடம் "வில்லனாக நடிக்கும் கடைசி படம் இது. இனி ஹீரோவாக நடிக்கிறேன்'' என்று "சாவி'' படம் பற்றி கூறினேன். உடனே அவர் என்னை வாழ்த்துவதற்குப்பதில், "அய்யய்யோ! அது நான் இந்தியில் நடிச்சு சரியா ஓடாத படமாச்சே'' என்றார். எனக்கு அப்போதே `திக்' என்றாகிவிட்டது. அவர் சொன்ன ரிசல்ட்தான் `சாவி' படத்துக்கு கிடைத்தது. படம் சரியாகப் போகவில்லை.
இதையடுத்து நான் ஹீரோவாக நடித்து வந்த "ரசிகன் ஒரு ரசிகை'', "தர்மம்'' ஆகிய படங்களும் ஓடவில்லை.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நான் ஹீரோவாக நடித்த படம் சரியாகப் போகவில்லையே தவிர, வில்லனாக நடித்த படங்கள் நன்றாக ஓடின. குங்குமப்பொட்டு கவுண்டராக நடித்த "முதல் வசந்தம்'' படம் 25 வாரம் ஓடியது.
இந்த நேரத்தில், "முதல் மரியாதை'' படம் பெற்ற பெரிய வெற்றியினால், பாரதிராஜா என்னை ஹீரோவாக போட்டு "கடலோரக் கவிதைகள்'' என்ற படத்தை எடுக்க இருந்தார்.
இந்தப் படத்துக்கு ஒப்பந்தமான நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர்ராஜன், "இரவுப்பூக்கள்'' என்ற படத்தில் என்னை ஹீரோவாக்கினார். இந்தப்படம்தான், நான் ஹீரோ ஆகியபின் "டூயட்'' பாடிய முதல் படம். அதுவரை 3 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அந்தப் படங்களில் எனக்கு "டூயட்'' கிடையாது. அதனால் ஒருபக்கம் உற்சாகம் என்றாலும், மறுபக்கம் எனக்கு `டான்ஸ் தெரியாதே' என்று கவலை வந்து ஒட்டிக்கொண்டது.
படத்துக்கு ரகுராம்தான் டான்ஸ் மாஸ்டர். படத்தில் என் ஜோடியாக நடித்த நளினியும், நானும் டூயட் பாடலுக்கு நடனம்ஆடியாக வேண்டும். நான் டான்ஸ் மாஸ்டரிடம், "பாட்டு சீனை மைசூரில் எடுத்து விடலாமா?'' என்று கேட்டேன். அவர் `நடனம்' தெரியாத என் நிலையை புரிந்துகொண்டு, "மைசூர் போனால் `டான்ஸ் காட்சி' எடுக்காமல் விட்டு விடலாமா?'' என்று சிரித்தபடி கேட்டார்.
இந்தப்படத்தில் நண்பர் `நிழல்கள்' ரவியும் நடித்தார். மைசூரில் படப்பிடிப்பு இடைவேளையில் நான் எம்.ஜி.ஆர். மாதிரியும், ரவி நம்பியார் மாதிரியும் பேசி நடித்துக் காட்டுவோம். இதைப் பார்த்த டைரக்டரும், டான்ஸ் மாஸ்டரும், "எம்.ஜி.ஆரோட மேனரிசம் அப்படியே உங்களுக்கு வருது. இந்த பாடல் காட்சியை நீங்கள் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடனமாடி நடித்தால் என்ன?'' என்று கேட்டார்கள்.
அப்போது எம்.ஜி.ஆர். சார் முதல்வராக இருந்தார். அதனால் தைரியமாக அந்த பாடல் காட்சியில் `எம்.ஜி.ஆர். ஸ்டைலில்' நடித்து முடித்தேன். படம் வெளியானபோது இந்தப் பாடல்காட்சிக்கு ரசிகர்கள் `ஒன்ஸ்மோர்' கேட்டார்கள். படமும் வெற்றி பெற்றது. இந்த வகையில் நான் ஹீரோவாக ஜெயித்த முதல் படமும் இதுதான்.''