என் மலர்
சினிமா

"நண்பா நண்பா'' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சந்திரசேகருக்கு தேசிய விருது
"நண்பா நண்பா'' படத்தில் குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்ததற்காக, அகில இந்திய ரீதியில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது, சந்திரசேகருக்கு கிடைத்தது.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சந்திரசேகர் கூறியதாவது:-
"நான் டிவியிலும் தொடர்ந்து சினிமாவிலும் கால்பதித்த நேரத்தில், டைரக்டர் ஜெயபாரதி இயக்கிய கலைப்படமான "குடிசை''யில் அரசியல் பிரமுகராக நடித்தவருக்கு `டப்பிங்' பேசினேன். இதைத்தொடர்ந்து டைரக்டர் ஜெயபாரதி என் நண்பரானார்.
நட்பு ரீதியாக ஒருநாள் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, "ஒரு கதை இருக்கிறது. இரு நண்பர்கள் பற்றிய கதை. படித்துப்பாரேன்'' என்று சொல்லி `ஸ்கிரிப்டை' கொடுத்தார். இடுப்புக்கு கீழே எந்த இயக்கமும் இல்லாத ஒருவனுக்கும், அவன் நண்பனுக்குமான பாசப்போராட்டமே கதை.
கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அதை படமாக்கும் வேலைகள் உடனே தொடங்கின. உடல் நிலை பாதிக்கப்பட்ட நண்பனாக நானும், என்னை பராமரிக்கும் நண்பனாக சார்லியும் நடித்தோம்.
எங்கள் வளசரவாக்கம் வீட்டிலேயே
20 நாள் படப்பிடிப்பு நடந்தது. படுக்கையில் இருந்தபடி நடித்தேன். இந்த 20 நாட்களும் வீட்டில் யாருடனும் பேசுவது கிடையாது. ஒரு கட்டத்துக்கு மேல் வீட்டில் பொறுக்க முடியாமல், "இது ரொம்ப ஓவரா இருக்கே'' என்று உரிமைக்குரல் எழுப்பி விட்டார்கள். "படம் முடிந்ததும் பாருங்கள். என் மவுனம் புரியும்'' என்றேன்.
படம் முடிந்தது. முதல் பிரதியை என் குடும்பத்தினரும் பார்த்தார்கள். படம் முடிந்ததும் என் மனைவி என்னிடம், "படத்தில் உங்கள் கேரக்டரை பேச வைக்கத்தான் எங்களிடம் கூட பேசாமல் இருந்தீர்களா?'' என்று சொல்லி கலங்கி விட்டார். "இதுவரை நாங்கள் பார்த்த நடிகர் சந்திரசேகர் வேறு; இந்தப் படத்தில் வருகிற சந்திரசேகர் வேறு'' என்றும் சொன்னார்கள்.
2003-ல் "நண்பா நண்பா'' ரிலீசானது. படத்தில் என் நடிப்புக்கு சிறந்த துணை நடிகருக்கான மத்திய அரசின் தேசிய விருது கிடைத்தது.
விருது கிடைத்த செய்தி உறுதியான அன்று, அதிகாலையில் முதல் போன் டாக்டர் கலைஞரிடம் இருந்து வந்தது. "செய்தியைப் பார்த்தேன். தேசிய விருது பெற்ற அன்புத் தம்பிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்'' என்று அவர் வாழ்த்தியபோது, பூரித்துப்போனேன்.
இந்த விருதை அன்றைய ஜனாதிபதி அப்துல்கலாம் கையால் பெற்றேன். அப்போது நான் அவரிடம், "உங்கள் ஊர் ராமேஸ்வரத்தில் நான் நாடகத்தில் நடித்திருக்கிறேன். சினிமாவில் என் நடிப்பிற்காக உங்கள் கையால் விருது வாங்கியதை பெருமையாகக் கருதுகிறேன்'' என்றேன்.
இந்த விருதை நான் பெற்றபோது சிறந்த கவிஞருக்கான விருதை பெற வந்த கவிஞர் வைரமுத்து என்னிடம், "பொதுவாக நம் பக்கத்து நடிகர்களுக்கு இம்மாதிரியான விருதுகள் கிடைப்பது என்பது அரிதாகவே இருந்து வருகிறது. ஆனால் கரிசல்காட்டு மண்ணில் இருந்து வந்த நீங்களும், நானும் இன்று நம் பிறந்த மண்ணுக்கு இந்த விருதுகள் மூலம் பெருமை சேர்த்து விட்டோம்'' என்று நெகிழ்ச்சியாக சொன்னார்.
இந்த நேரத்தில் சினிமாவில் என்னை நடிகனாக அறிமுகப்படுத்திய என் குருநாதர் பாரதிராஜாவை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.''
இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
சந்திரசேகர், தனது நடிப்பின் உச்சமாக "கலைஞர்'' ஆக நடித்ததை கருதுகிறார். கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை
21/2 மணி நேர நாடகமாக உருவாக்கி நடித்து கலைஞரின் பாராட்டை பெற்றார்.
இதுபற்றி சந்திரசேகர் கூறியதாவது:-
"நான் தலைவருடன் பேசும்போது அவரது அங்க அசைவுகளை உன்னிப்பாக கவனிப்பேன். ஒருநாள் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, "தலைவரே! வருகிற மாநாட்டில் உங்கள் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து ஒரு நாடகம் போட்டால் என்ன?'' என்று கேட்டேன். அப்படிக் கேட்டதற்கு காரணம், நான் அவர் எழுதிய "நெஞ்சுக்கு நீதி'' தொடரை பலமுறை படித்து ரசித்து வியந்திருக்கிறேன். என் கோரிக்கையை தலைவர் ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து கலைஞரின் 25 வயசு, 48 வயசு, 60 வயசு, 80 வயது காலகட்டங்களில் அவரது தோற்றத்தை நானே ஏற்று நடிப்பதற்கான வேலையில் இறங்கினேன்.
3 மாதம் இதற்கென ரிகர்சல் நடந்தது. நாடக வடிவாக்கத்துக்கு என் மனைவி முழு ஒத்துழைப்பு தந்தார்.
நாடகம் தயாரானபோது தலைவரிடம், "முதலில் நீங்கள் மட்டும் பாருங்கள். திருத்தம் இருந்தால் சரிசெய்து மேடையில் அரங்கேற்றுகிறேன்'' என்றேன்.
தலைவருடன் பேராசிரியர், ஆற்காடு வீராசாமி ஆகியோரும் பார்த்தார்கள். 21/2 மணி நேரம் நாடகம் நடந்தது. முதல் மனைவி பத்மாவதியின் மரணக் காட்சியின்போது, கலைஞர் கண்ணாடியைக் கழற்றி கண்ணீரைத் துடைத்துக் கொண்டதை பார்த்தேன்.
நாடகம் முடிந்ததும், "ஒரு குறையுமில்லை. சிறப்பாக இருக்கிறது'' என்றார். அப்போதே எனக்கு நடிப்பில் 3 தேசிய விருது வாங்கியது போலிருந்தது. இந்த நாடகம் திண்டுக்கல்லில் நடந்த தி.மு.க. மாநாட்டில் இடம் பெற்றது. லட்சக்கணக்கான பேர் பார்த்து ரசித்தார்கள்.''
இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
சந்திரசேகரின் கட்சி ஈடுபாடு, திண்டுக்கல் "எம்.பி'' தொகுதியில் கலைஞர் அவரை நிறுத்தும் அளவுக்கு ஆனது. இந்த தேர்தலில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு நழுவிப் போயிற்று.
என்றாலும், "தொகுதியில் பிரசாரத்தின்போது தலைவர் மீதான மக்களின் நம்பிக்கையை பார்க்க முடிந்தது. என்னை `எம்.பி'யாக்க விரும்பியது அவரின் அன்பு. அதற்கு ஒரு தொண்டனாக என்றும் தலைவணங்குவேன்'' என்கிறார், சந்திரசேகர்.
நடிகர் சந்திரசேகர் 2 வருடங்களுக்கு முன்பு தனது பெயரை `வாகை' சந்திரசேகர் என மாற்றிக்கொண்டார்.
இதுபற்றி அவர் கூறும்போது, "சொந்த ஊர் வாகைக்குளம் கிராமம் என்பதால், இதில் இருந்து `வாகை'யை எடுத்துக்கொண்டேன். ஊருக்கும் பெருமை சேர்த்த மாதிரி இருக்கட்டுமே என்ற எண்ணம்தான் இதற்கு காரணம். அதோடு `வாகை' என்ற சொல்லுக்கு `போரில் வென்ற வீரனுக்கு சூட்டப்படும் மாலை'யைக் குறிப்பதாகவும் ஒரு அர்த்தம் வருகிறது. தமிழக மக்களின் கலைப் பார்வையில் நடிகனாக என்னை ஏற்றுக்கொண்டு இன்றளவும் என்னை நேசித்தும் வருகிறார்கள். மக்கள் மனங்களில் நìன்றவன் என்ற முறையில் அதை `வெற்றியாக' உணர்த்தும் `வாகை'யை பெயருக்கு முன்னதாக சேர்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் வைத்துக் கொள்ளலாம்.''
இவ்வாறு `வாகை' சந்திரசேகர் கூறினார்.

Next Story