என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பிரமாண்ட மான ஆங்கிலப்படம் ``கிளியோ பாட்ரா''. அதைப் பார்க்க பாரதிராஜவுடனë இளையராஜா சென்றார். அப்போது எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொண் டார்கள்.
    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பிரமாண்ட மான ஆங்கிலப்படம் ``கிளியோ பாட்ரா''. அதைப் பார்க்க பாரதிராஜவுடனë இளையராஜா சென்றார். அப்போது எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொண் டார்கள்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    ``சென்னையில் சபையர் தியேட்டரில் ``கிளியோ பாட்ரா'' ரிலீஸ் ஆகியிருந்தது. எப்படியாவது அந்தப் படத்தைப் பார்த்து விட வேண்டும் என்று 2 முறை முயற்சி செய்தும், டிக்கெட் கிடைக்காமல் திரும்பி விட் டோம்.

    அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமை, முன்னதாகவே சென்று `கிï'வில் நின்று, டிக்கெட் வாங்கி படத்தைப் பார்த்து விடுவது என்று முடிவு

    செய்தோம்.காலை எட்டு மணிக்கே கிளம்பி விட்டோம். பஸ் பிடித்து சபையர் ஸ்டாப்பில் இறங்கினோம். இன்னும் `கேட்' திறக்கவில்லை.

    `சரி, டிபன் சாப்பிட்டு விட்டு வருவோம். நேரம் சரியாக இருக்கும்' என்று தீர்மானித்து, அருகில் உள்ள ஓட்டலுக்கு நடந்து சென்றோம்.

    கிளியோ பாட்ரா பார்க்கப் போகிறோம் என்பதால், எல்லோரும் நல்ல மூடில் இருந்தோம். ஜோக் அடித்துக் கொண்டே `ஆர்டர்' கொடுத்தோம்.

    `சரி, சரி! இவ்வளவு ஆர்டர் கொடுத்து விட்டோமே. பணம் குறைந்தால், யாரய்யா மாவாட்டுவது!' என்று கிண்டல் செய்து

    கொண்டிருந்தோம்.டிபன் வந்தது. நன்றாகச் சாப்பிட்டோம்.

    பில்லை வாங்கிக் கொண்டு, எங்கள் `நிதி மந்திரி' பாஸ்கர், பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டார். அவர் முகம் மாறியது.

    அதை கவனித்த பாரதி ராஜா, சிரித்துக் கொண்டே, `டேய்! காசு இல்லேண்ணு நடிக்காதே! போய் பணத் தைக் கொடு!''

    என்றார்.பாஸ்கரின் முகம் மாறவில்லை. இறுக்கமாகவே இருந்தது. ``யோவ்! காசு இருந்த பேண்ட்டுக்கு பதிலா, வேறு பேண்ட்டை போட்டுக் கொண்டு வந்து விட்டேன்யா!'' என்றார்.

    இப்போது பாரதியின் முகம் சீரியசாக மாறியது. சுற்றும் முற்றும் பார்த்தார். நிறைய கூட்டம். நேராக கேஷியர் உட்கார்ந்திருந்த கல்லாவுக்கு போனார். பாஸ்கரிடம் இருந்த பில்லைப் பிடுங்கி, தான் போட்டிருந்த கைக்கெடிகாரத்தைக் கழற்றி இரண்டையும் கேஷியரிடம்

    கொடுத்தார்.``பணத்தை மறந்து வைத்து விட்டு வந்து விட்டோம். இந்த வாட்சை வைத்துக் கொள்ளுங்கள். பணத்தைக் கொடுத்து விட்டு வாங்கிக் கொள்கிறோம்'' என்றார்.

    கேஷியர் நல்லவர். சரி என்று தலையை ஆட்டினார். வெளியே வந்ததும், பாஸ்கரைத் திட்டிய பாரதி, பணத்தைக் கொண்டு வருமாறு விரட்டினார். அங்கேயே காத்திருந்தோம். சிறிது நேரத்தில் பணம் வந்து சேர்ந்தது.

    பணத்தை கேஷி யரிடம் கொடுத்து, கெடிகாரத்தை மீட்டோம். இதற்குள் நேரம் ஆகி விட்டதால் அன்றைக்கும் கிளியோ பாட்ரா படத்தைப் பார்க்க முடியவில்லை.

    பின்னர், ஒரு தடவைக்கு மூன்று தடவை கிளியோ பாட்ராவைப் பார்த்தோம்''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    மெட்டுகளை மனதிலேயே பதிவு செய்து கொண்டு, பின்னர் அதை அப்படியே பாடக்கூடிய அபூர்வ ஆற்றலை சின்ன வயதிலேயே பெற்றிருந்தார், இளையராஜா. இந்த ஆற்றலைக்கண்டு வியந்து போற்றிய ஜி.கே.வெங்கடேஷ், பின்னொரு சமயம் இளையராஜா வாசித்த இசையை ஏற்காமல் கேலி செய்தார்.

    இந்த சம்பவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    ``ஒருநாள் ஜி.கே.வி. இசை அமைப்பில் ஒரு கன்னடப்படத்தின் பாடல் பதிவாக இருந்தது.

    காலை 7 மணிக்கு, விஜயாவாகினி கார்டனில் ஜி.கே.வி. யுடன் கம்போசிங் குழுவினர் உட்கார்ந் திருந்தோம். பாடலுக்கு முன் தொடங்கும் இசையை கம்போஸ் செய்ய வேண்டும்.

    இசைக்குழுவில் இருந்த வைத்தி, முயற்சி செய்து ஒரு இசையைப் போட்டார். அது நன்றாக இல்லை என்று ஜி.கே.வி. சொன்னார்.

    பிறகு ஜி.கே.வி. ஏதோ, சொல்ல வாத்தியக் காரர்கள் நோட்ஸ் எடுத்துக் கொண்டு, வாசித்தார்கள். அதுவும் நன்றாக இல்லை என்று கூறி விட்டார்.

    இப்படி நேரம் போய்க் கொண்டு இருந்தது. நான், `அண்ணா! எனக்கொரு ஐடியா! மிïசிக் கொடுக்கவா?'' என்றேன்.

    வைத்தியை  ஜி.கே.வி. அழைத்தார். ``டேய்,  வைத்தி! நம்ம ராஜா ஏதோ மிïசிக் கொடுக்கிறானாம், போய் கொடுத்து வாசிக்கச் சொல்லு'' என்றார்.

    நானும் இசைக் குழுவினருக்கு நோட்ஸ் கொடுத்து, வாசிக்கச் செய்து காட்டினேன்.

    அதுவும் ஜி.கே.வி.க்கு பிடிக்கவில்லை.

    அத்துடன் நிறுத்தியிருக்கலாம். வைத்தியை அழைத்து, ``டேய், பாருடா இவனை!'' என்று என்னை சுட்டிக் காட்டி சிரித்தார்.

    பிறகு, 555 சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து புகைத்தபடியே, ``டேய்! இதெல்லாம் பெரிய விஷயம். அவ்வளவு ஈசியா வந்திடுமா? அந்த இடத்துக்கெல்லாம் நீ இன்னும் வரலை!'' என்று என்னைப் பார்த்து உரத்தக்குரலில் சொல்லி, சிகரெட் பாக்கெட்டை ஆர்மோனியத்தின் மீது `டக்' கென்று போட்டார்.

    இசைக்குழுவினர் எல்லோரும் சிரித்தார்கள். எனக்கு உடம்பே கூனிக் குறுகி கூசியது.

    அப்போதே நான் ஓர் முடிவுக்கு வந்தேன். எந்த ஐடியா எனக்குத் தோன்றினாலும், அதை ஜி.கே.வியிடம் சொல்லக்கூடாது; உதவவும் கூடாது. எனக்கு இசை அமைக்க சந்தர்ப்பம் வந்தாலும், உதவிக்காக யாரையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் தீர்மானித்தேன்.
    பாரதிராஜா இயக்கத்தில் கே. பாக்யராஜ் -ரதி நடித்த "புதிய வார்ப்புகள்'' படத்துக்கு, புதுப்புது உத்திகளில் இளையராஜா இசை அமைத்தார்.
    தனது இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தேவராஜ் -மோகன் இயக்கிய "பூந்தளிர்'' படத்தில் ஒரு மலையாளப்பாடல் இடம் பெற்றது.

    "ஞான் ஞான் பாடணும் ஊஞ்ஞால் ஆடணும்''- என்ற இந்தப்பாடலை எம்.ஜி.வல்லபன் எழுதியிருந்தார். இந்த பாடலில், ஒரு புதிய பாடகி பாடியிருப்பதும் எதிர்பாராமல் நடந்த விஷயம்.

    முந்தின நாள் எனது இசையில் ஒரு பாட்டுக்கு பாட வந்த ஜேசுதாஸ், அவருடன் ஒரு பெண்ணையும் அழைத்து வந்திருந்தார். `இந்தப் பெண்ணை பாட வைத்து கேட்டுப்பாருங்கள்' என்று கேட்டுக்கொண்டார். கேட்டேன். குரல் பிடித்துப் போயிற்று. அடுத்த நாளே ரெக்கார்டிங்கில், அந்தப் பெண்ணை இந்த மலையாளப்பாடலை பாட வைத்தேன். அந்தப் பாடகிதான் ஜென்சி.

    தேவராஜ் - மோகனின் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'' நல்ல கதையம்சம், பாடல்களுடன்அமைந்த படம். கவிஞர் புலமைப்பித்தனின் அருமையான தமிழும் அழகும் கிராமியப் பாடலிலும் கொஞ்சி வந்து மெட்டுக்களில் விளையாடிய படம்.

    "உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி'', "என்ன பாட்டுப்பாட'', "வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலயோ'', "என்னுள்ளில் எங்கோ'' முதலான பாடல்கள் ரசிகர்களின் விருப்பப்பாடல்களாக அமைந்தன.

    பாரதிராஜா "புதிய வார்ப்புகள்'' என்று ஒரு படத்துக்கு பெயர் சூட்டினார். நான், பாரதி எல்லாம் ஜெயகாந்தனின் ரசிகர்கள் என்பதால் அவரது ஒரு கதைத் தலைப்பை இந்த படத்துக்கு வைத்து, படத்தின் கடைசி பிரேமில் தலைப்பிற்கு ஒரு அழுத்தம் கொடுக்கும் வகையில் கதையை உருவாக்கிருந்தார்.

    இந்தப் படத்தின் கம்போசிங் பிரசிடெண்ட் ஓட்டலில் நடந்தது. ஒரே மூச்சில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், பாடல்கள் எல்லாவற்றையும் முதலிலேயே பதிவு செய்து எடுத்துப்போனால்தான் அது சாத்தியம் என்றும் பாரதி சொன்னார்.

    முதலில் பூஜைக்கு ஒரு பாடலை மட்டும் ரெக்கார்டு செய்வதற்காக இரவு பின்னணி இசை வேலை முடிந்து 9 மணிக்கு "ட்ïன்'' கம்போஸ் செய்தேன். கவியரசர் வந்து பாடலை எழுதிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார். 10 1/2 மணிக்கு வீட்டுக்குப் போய்விட்டேன்.

    அப்போது பாரதியிடம் இருந்து போன் வந்தது. "இந்தப் பாட்டை நாளைக்கு பதிவு செய்யவேண்டாம். ஒரு நல்ல டூயட் பாட்டுக்கு டிïன் போட்டு, அதை பதிவு செய்தால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்'' என்றார்.

    நான் பாரதியிடம், "யோவ்! என்ன விளையாடறியா? கவிஞர் வந்து பாட்டெல்லாம் எழுதிட்டுப் போயிட்டார். அவருகிட்ட புதுசா பாட்டு வேணாம்னு எப்படிய்யா கேட்கமுடியும்?'' என்றேன்.

    பாரதியும் விடவில்லை. "அதெல்லாம் நான் சொல்லிக்கிறேன். வேறு பாட்டை நாளைக்கு காலையில் பூஜை ரெக்கார்டிங்கில் எடுக்கிறோம். சரியா?'' என்று கேட்டார்.

    "சரி காலையில் பார்க்கலாம்'' என்று சொல்லி போனை வைத்தேன்.

    மறுநாள் காலையில் ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவில் காலை 7 மணிக்கு ஒரு டிïனை பாடினேன். அது நன்றாக இருக்கிறது என்று பாரதி `ஓ.கே' சொல்ல, அப்படியே இசைக்குழுவுக்கு அதற்கான இசையை கம்போஸ்செய்து எழுதிக்கொடுத்து விட்டேன்.

    டிபன் முடித்துவிட்டு 9 மணிக்கு இசைக்குழுவுடன் பாடலுக்கான ஒத்திகையும் முடித்தேன்.

    கவியரசர் கண்ணதாசன் சரியாக 10 மணிக்கு வந்தார். ஒரு ஹாலில் அமர்ந்தோம். சுற்றிலும் இசைக்குழுவினர் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கண்ணதாசன் பாடல் எழுதுவதை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை அல்லவா? அதனால்தான் அத்தனை ஆர்வம்.

    கவியரசர் முதல் நாளே கதையை கேட்டுவிட்டதால் "டூயட்தானே?'' என்று மட்டும் என்னிடம் கேட்டார்.

    "ஆமாண்ணே'' என்றேன்.

    "டிïனை பாடு'' என்றார்.

    பாடினேன்.

    "இன்னொரு முறை பாடு'' என்றார்.

    மீண்டும் பாடினேன்.

    உடனே கவியரசரிடம் இருந்து டிïனுக்கேற்ற வார்த்தைகள் வந்து விழுந்தன.

    "வான் மேகங்களே! வாழ்த்துங்கள்! பாடுங்கள்! நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை'' என்று அவர் உடனே சொல்ல சுற்றி நின்ற இசைக்குழுவினர் ஆச்சரியத்தில் திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.

    அவர் சொன்னதை நான் டியுனோடு பாடிக்காட்டினேன். "கண்டுகொண்டேன் ராமனை'' என்று நான் பாடி முடித்தவுடன், இசையில் இருந்து இம்மியும் பிசகாது வார்த்தைகள் கவியரசரிடம் இருந்து விழுவதைக் கண்டு கைதட்டினார்கள்.

    கவிஞருக்கோ ரசிகர்களை மொத்தமாக கூட்டி வைத்து அவர்கள் முன் பாடல் எழுதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது போலும். உற்சாகமாக அடுத்தடுத்த வார்த்தைகள் வெளிவந்தன.

    மொத்தப்பாடலும் 20 நிமிடத்தில் முடிய அதை ஒரு 10 நிமிடத்தில் நகல் எடுத்துக்காட்ட, கவியரசர் சரி பார்த்தார். பாரதி "ஓ.கே'' சொன்னார்.

    ஜானகியும், மலேசியா வாசுதேவனும் வந்தார்கள். பாடலை எழுதி, டிïனை கற்றுக்கொண்டு ஒத்திகை முடிந்து பாடல் பதிவானது.

    அங்கேயே அப்போதே சுடச்சுட எடுத்த பாடல்தான். ஆனால் `பாஸ்ட் புட்' ரகம் அல்ல.

    மற்ற பாடல்களை கம்போஸ் செய்ய ஓட்டலில் உட்கார்ந்தோம்.

    ஊருக்குப் புதிதாய் வந்த ஆசிரியருக்கும், நாயகிக்கும் காதல் அரும்புகிறது. இப்போது பாடல் காட்சி. இந்தப்பாடல் எனக்கு வித்தியாசமாக வேண்டும் என பாரதி கேட்டார்.

    பல மெட்டுக்கள் போட்டேன். ஒன்றும் பிடிக்கவில்லை. எனக்கே புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வந்த மெட்டுக்களை எல்லாம் வாசித்தபடி பாடிக்கொண்டிருந்தேன். எனக்கும் எதுவும் புதிதாகத் தெரியவில்லை.

    ஆர்மோனியத்தை மூடிவிட்டு "சரி வாய்யா! அப்படி பீச் பக்கம் போய் வரலாம்'' என்றார் பாரதி. பிரசிடென்ட் ஓட்டலில் இருந்து கொஞ்ச தூர நடையில் கடற்கரையை அடைந்தோம்.

    கூட்டம் அவ்வளவாக இல்லை. வழக்கமாக நாங்கள் மாலை நேரங்களில் பொழுது போக்கிய அதே கடற்கரை.

    சுண்டல் வாங்கி கொறித்தபடி கடற்கரையில் நடந்தோம். கடல் அலைகளில் கால்கள் நனைய நனைய நின்றோம். இப்படியே சிறிது நேரம் பீச்சில் பொழுது போக்கிவிட்டு திரும்பவும் ரூமுக்கு வந்தோம். அதுவரை பாடலைப் பற்றி பேசவும் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை.

    இந்த இடைவெளியில் என்ன நடந்ததோ தெரியவில்லை. வந்து ஆர்மோனியத்தை தொட்டேன். அவ்வளவுதான். ஆரம்பம் முதல் கடைசி வரை `தம் தனனம்' என்று தொடங்கி முடியும் வரை அதே `தம்தனன'வில் பாடலின் முழு டிïனும் வந்துவிட்டது.

    பாரதியைப் பார்க்கணுமே "சூப்பர்! பிரமாதம்'' என்றவர், ஆடாத குறைதான். அத்தனை உற்சாகம் அவருக்கு!

    பாக்யராஜ் ஹீரோ ஆனது எப்படி?

    "புதிய வார்ப்புகள்'' படத்திற்கு சரியான ஹீரோ கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பாடல்கள் முடிந்ததும் ஷூட்டிங் போக ஏற்பாடாகி இருந்தது.

    "ஹீரோ கிடைக்காவிட்டால் ஷூட்டிங் கிடையாதா?'' கேட்டேன், பாரதியிடம்.

    "நாளை ஒருநாள் கடைசி. எப்படியாவது யாரையாவது நடிக்க வைப்பேன். படப்பிடிப்பு ஏற்கனவே முடிவு செய்த தேதியில் தொடங்கும்'' உறுதியாகவே சொன்னார், பாரதி.

    மறுநாள் என்னைப் பார்த்தவர், "என் உதவி டைரக்டர் பாக்யராஜ்தான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார்'' என்றார்.

    கொஞ்ச நேரத்தில் பாக்யராஜ் வந்தார். நான் அவரிடம், "என்ன பாக்யராஜ்! நீங்கள் நடித்தால் நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா?'' என்று கிண்டல் செய்தேன்.

    அவரோ, "இல்லே சார்! டைரக்டர் சொல்லிவிட்டார். அதுக்கு மேல பேச முடியாது சார்'' என்று யதார்த்தமாக சொன்னார்.

    அந்தப்படம் வெற்றி பெற்று பாக்யராஜூம் ஹீரோ - இயக்குனர் என்று வளர்ந்து விட்டார். பிற்காலத்தில் பாக்யராஜின் திறமை கண்டு, அன்றைக்கு நான் சொன்ன முட்டாள்தனமான கிண்டல் பேச்சை எண்ணி பலமுறை வருந்தியிருக்கிறேன். "ஒருவரின் தகுதியை எடைபோட நீ யார்? உனக்கென்ன தகுதி இருக்கிறது?'' என்று பலமுறை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.
    "கவரிமான்'' படத்தில், கீர்த்தனை ஒன்றுக்கு புதிய முறையில் இசை அமைத்தார், இளையராஜா. பாடுவதற்கு கடினமான அந்தப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக வாயசைத்தார், சிவாஜிகணேசன். அதைக்கண்டு இளையராஜா வியந்து போனார்.
    இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்தைத் தொடர்ந்து மீண்டும் டைரக்டர் ஸ்ரீதரின் "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்துக்கும் இசை வாய்ப்பு வந்தது. இந்தப் படமும் ஹிட்டாகி பாடல்களும் ஹிட்டானதில் மகிழ்ச்சி.

    எஸ்.பி.முத்துராமன் இயக்கிய "கடவுள் அமைத்த மேடை''படத்தில்தான், ஒரு பரிசோதனை முயற்சி செய்யவேண்டும் என்று தோன்றியது.

    அதாவது கர்நாடக சங்கீத ராகங்களை எடுத்துக்கொண்டு, அதன் ஆழம் குறையாமல் கிராமியப் பாணியின் சந்தங்களை மெட் டாக அமைத்து, பாடும்போது அதன் இரண்டு வேறுபட்ட தனிப்பட்ட தன்மைகளை இணைத்துப் பாடவைக்கலாமே என்று தோன்றியது.

    அதை உடனே செய்யலாம் என்ற எண்ணத்தில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சொன்ன ஒரு டூயட்டிற்கு ஹம்சத்வனி ராகத்தில் கிராமியத்தனமான மெட்டமைத்தேன். பாடலை வாலி எழுதினார். "மயிலே மயிலே உன் தோகை எங்கே?'' என்ற அந்தப் பாடல்தான் இந்தப் பரிசோதனை முயற்சியில் உருவான பாடல்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், ஜென்சியும் இந்தப் பாடலை பாடியிருந்தார்கள்.

    இதே படத்தில்தான், பி.பி.சீனிவாசும் முதன் முதலாக என் இசைக்கு பாடினார். அதுவும் ஒரு சிறிய கஜல் போன்ற பாடல். "தென்றலே நீ பேசு'' என்பது அதன் பல்லவி.

    பஞ்சு சார் கமல், ரஜினி இரண்டு பேரையும் தனித்தனியாக போட்டு படம் எடுக்க முடிவு செய்தார். அப்போது கமல் - ரஜினி இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்த நேரம்.

    கமலை வைத்து "கல்யாணராமன்'', ரஜினியை வைத்து "ஆறில் இருந்து அறுபதுவரை'' ஆகிய படங்களை எடுத்தார்.

    இரண்டுமே வெற்றி பெற்றன.

    கல்யாணராமன் படத்தில் `ஆஹா வந்துருச்சு' பாடலும், அதற்கு கமல் ஆடிய வித்தியாசமான நடனமும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தன.

    பஞ்சு சார் அடுத்து "கவரிமான்'' என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)

    என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். "ப்ரோவ பாரமா?'' என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.

    சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.

    ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா' என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.

    ராகம்பாடி, `ப்ரோவ பாரமா' தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.

    ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.

    இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், "எப்படிச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

    "என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?'' என்று கேட்டார் சிவாஜி.

    "நடிகர் திலகம்'' என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?

    "லட்சுமி'' படத்தில் கிராமிய சந்தத்தை வேகமாக அமைத்துப் பாடிய பாடல் "தென்ன மரத்துல தென்றலடிக்குது நந்தவனக் கிளியே.''

    நானும் பி.சுசீலாவும் பாடினோம். இந்த வகையில் இது சுசீலா அவர்களுடன் நான் சேர்ந்து பாடிய முதல் பாடல்.

    பண்ணைபுரத்தில் உள்ள எங்கள் வீட்டில், தம்புராவுடன் சுசீலா இருக்கும் படத்தை பிரேம் போட்டு நான் மாட்டி வைத்திருந்தது, இந்தப் பாடலை அவருடன் பாடும்போது நினைவுக்கு வந்தது.

    கோவை செழியன் தயாரிப்பில் வந்த "முதல் இரவு'' படத்தில், "மஞ்சள் நிலாவுக்கு இன்று முதல் இரவு'' என்ற பாடல் பிரபலமானது. டைரக்டர் ஸ்ரீதர் இந்தப் பாடலை கேட்டு என்னை மிகவும் பாராட்டினார்.

    பாரதிராஜா டைரக்ஷனில் "நிறம் மாறாத பூக்கள்'' படத்துக்கு பாடல் பதிவுடன் பூஜை.

    ஒரு ஓட்டலில் கதையை பாக்யராஜை சொல்லச் சொன்னார், பாரதி. கோர்வையாக,அதே நேரம் நகைச்சுவை கலந்து நன்றா கவே கதை சொன்ன பாக்யராஜை பாராட்டினேன். பாரதியும், "அதனால்தான் அவனையே சொல்லச்சொன் னேன். நல்ல திறமைசாலி'' என்று பாராட்டினார்.

    இடைவேளைக்குப்பிறகு சில மாற்றங்கள் இருக்கலாம்.

    பூஜைக்கு இரு நாயகியரும் கதாநாயகனும் பாடுகிற மாதிரி ஒரு பாடலை எடுத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லிவிட்டார்கள்.

    தயாரிப்பாளர் வீட்டிலேயே கம்போசிங் நடந்தது. அப்போது அவர் தயாரிப்பில் வெளிவந்த "வருவான் வடிவேலன்'' படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது.

    கவியரசர் கண்ணதாசன் அதுவரை காலை 10 மணிக்கு முன்னதாக பாட்டெழுத வந்தது கிடையாது. எனக்கு 9 மணிக்கு பின்னணி இசை வேலை இருந்ததால் கவியரசர் முதன் முதலாக எனக்காக காலை 71/2 மணிக்கு பாட்டெழுத வந்துவிட்டார்.

    கதையைச் சொல்லி டிïனை வாசித்த உடனே,

    "ஆயிரம் மலர்களே மலருங்கள்!

    அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள்''

    என்று எழுதினார். பாரதி உள்பட அனைவருக்கும் பிடித்திருந்தது. பாரதிராஜா இயக்கிய இந்த நான்காவது படமும் நன்றாக ஓடியது.

    "ஊர்வசி நீனே நன்ன ப்ரேயசி'' என்ற கன்னடப்படம் தெலுங்கிலுமாக இரு மொழிப்படமாக வந்தது. இதன் மலையாளம் டைரக்டர் ஐ.வி.சசி இயக்கிய "பகலில் ஓர் இரவு'' படம். ஸ்ரீதேவி நடித்திருந்தார்.

    பாம்குரோவ் ஓட்டலில் கம்போசிங் நடந்தது கவியரசர் "இளமையெனும் பூங்காற்று'' என்று எழுதினார்.

    இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். கவியரசர் - எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்து செய்த பாடல்கள் எல்லாம் மிகவும் நல்ல லட்சண அமைப்புடன் இருக்கும்.

    முதல் வரி தொடங்க, அதே சந்தத்தில் குறைந்தது நான்கு அடிகளாவது வரும்.

    உதாரணமாக,

    "எட்டடுக்கு மாளிகையில்

    ஏற்றி வைத்த என் தலைவன்

    விட்டு விட்டுச் சென்றானடி

    வேறு பட்டு நின்றானடி''

    "கண்ணன் என்னும் மன்னன்

    பேரைச் சொல்லச் சொல்ல

    கல்லும் முள்ளும் பூவாய்

    மாறும் மெல்ல மெல்ல''

    - இப்படி எந்தப் பாடலை எடுத்தாலும் ஒரு ஒத்த அழகுடன் இருக்கும்.

    இதை நான் மாற்ற எண்ணினேன்

    ஒரு அடிபோல் இன்னொரு அடி வராமல் போனாலும், அழகு கெடாமல் இருக்க வேண்டும் என்றும், `இங்கே நான் நிறுத்த வேண்டும் - இங்கே நீட்ட வேண்டும்' என்ற வரைமுறைகளைத் தாண்ட வேண்டுமென்றும் என்னுடைய மெட்டுக்களை அமைத்தேன். அதிலும் ஒரு அழகு இழையோடும் விதமாக கவியரசர் எழுதிவிட்டார்.

    "இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு

    ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

    ஒரே வீணை ஒரே நாதம்''

    இசையோடு இந்த வரிகள் கொஞ்சிக் குழையும் என்பது அவருக்கும் தெரிந்தே இருந்தது.

    இதில் இன்னும் ஒரு பாடல் பரிசோதனை முயற்சியாக, "தாம்த தீம்த'' என்று தொடங்கும் பாடலில், ஆண் - பெண் கோரசை வைத்தே, இசைக்குழு இல்லாமல், பாடலுக்கு இடையில் வரும் இசையை கோரசே இசைப்பது போல அமைத்திருந்தேன்.

    நன்றாக இருந்தாலும் வெளியே தெரியாமல் போன காரணம் தெரியவில்லை.

    `பஞ்ச பூதாலு' என்ற தெலுங்குப்படம் தமிழில் சிவாஜி நடிக்க "பட்டாக்கத்தி பைரவன்' ஆனது. இந்தப் படத்தை நினைத்தாலே "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் பாடல்தான் மனதில் ஓடிவரும்.

    என் முதல் படமான "அன்னக்கிளி''யின் கதையை எழுதிய செல்வராஜ், முதன் முதலில் "பொண்ணு ஊருக்குப் புதுசு'' என்ற படத்தை டைரக்ட் செய்தார். இதில் எல்லாப் பாடல்களுமே என்றைக்கும் கேட்க சுகமானவை.

    "ஓரம்போ''

    "சாமக்கோழி கூவுதம்மா''

    "ஒனக்கெனத்தானே இந்நேரமா''

    - போன்ற படத்தின் எல்லாப் பாடல்களையும் அமர்தான் எழுதினான்.
    தமிழ்ப் படங்களுக்கு இசை அமைப்பதில் `பிசி'யாக இருந்த இளையராஜா, தெலுங்கு, மலையாளப் படங்களுக்கும் இசை அமைத்தார்.
    தமிழ்ப் படங்களுக்கு இசை அமைப்பதில் `பிசி'யாக இருந்த இளையராஜா, தெலுங்கு, மலையாளப் படங்களுக்கும் இசை அமைத்தார்.

    இசை அனுபவங்கள் குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "பழசை நினைத்துப் பார்ப்பது என்பது எனக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று. இன்றைக்கு, ஒரு இசையமைப்பாளராக என்னை ரசிகர்கள் அங்கீகரித்துக் கொண்டால் கூட, ஊரில் இருந்து நான் வரும்போது இந்த நம்பிக்கை இருந்ததா என்றால், "இல்லை'' என்பதுதான் என் பதிலாக இருக்கும்.

    "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தின் பாடல்கள் பதிவான நிலையில் ஒரு நாள் அண்ணன் பாஸ்கரிடம் மனம் விட்டுப் பேசினேன். "அண்ணா! நாம் கிராமத்தை விட்டு வரும்போது அம்மா நம்மிடம் `பட்டணத்தில் வேலை கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். பதிலுக்கு நாம், "அப்படி ஒருவேளை எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை என்றால், பிளாட்பாரத்தில் - தெருவில் உட்கார்ந்து ஜனங்கள் முன்பு வாசிப்போம். எங்களுக்கென்ன கவலை!'' என்று சொன்னோமல்லவா! அப்படி வாசிக்கும் நிலைமை ஏற்படவில்லையென்றாலும், கடற்கரையில் உட்கார்ந்து வாசிப்பது போல ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்வோமா?'' என்று கேட்டேன்.

    பாஸ்கருக்கு என் யோசனை பிடித்தது. "போகலாமே'' என்றார்.

    பீச்சுக்குப்போனால் அங்கே படப்பிடிப்பு நடக்கிறது. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்காக கமல் நடிக்க பாரதிராஜா டைரக்ட் செய்து கொண்டிருந்தார்.

    நாங்கள் பிளாட்பாரத்தில் வாசிப்பது போலவும், கமலும் பாரதியும் எங்கள் பாட்டை கேட்டுக்கொண்டே தரையில் விரித்திருந்த துண்டில் காசு போடுவது போலும் படங்கள் எடுத்துக்கொண்டோம்!

    "சிகப்பு ரோஜாக்கள்'' படம் பின்னணி இசைக்காக என்னிடம் வந்தது.

    பாரதிராஜா தனது தாயாருடன் தேனாம்பேட்டை காமராஜர் சாலையில் இருந்தபோது நானும் பாரதியும் அண்ணா சாலையில் எஸ்.ஐ.இ.டி. காலேஜ் வரை நடந்து போய் வருவோம். சில சமயம் இரவு 9 மணியைக் கடந்து வீட்டுக்குத் திரும்புவோம்.

    இப்படி ஒரு நாள் `வாக்கிங்' போன நேரத்தில், பாரதி ஒரு கதை சொன்னார். அது புகழ் பெற்ற ஆலிவுட் டைரக்டர் ஆல்பிரட் ஹிட்ச்சாக்கின் படம் போல இருந்தது.

    நாங்கள் பிளாட்பாரத்தில் நடந்து கொண்டிருந்தபோது, எதிரே பாழடைந்த பங்களா ஒன்று எங்கள் கண்ணில்படும். அதை பார்த்துத்தான் அந்தக் கதை தன் மனதில் உருவானதாக பாரதி சொன்னார். அந்தக் கதைதான், அவரது டைரக்ஷனில் `சிகப்பு ரோஜாக்கள்' ஆகியிருந்தது. பாரதிராஜா என்றால் கிராமத்துக் கதைகளை மட்டுமே டைரக்ட் செய்வார் என்று அப்போது ஒரு பேச்சு இருந்தது. அதற்குப் பதிலடி தருகிற விதத்தில் இந்தப் படம் வந்திருப்பதை ரெக்கார்டிங்கின் போதே தெரிந்து கொண்டேன்.

    பின்னணி இசைக்கு பொதுவாக எல்லாப் படத்துக்கும் 6 கால்ஷீட்டுகள் தேவைப்படும். ஆனால் இந்தப் படத்துக்கோ 4 கால்ஷீட்டுகளே தேவைப்பட்டது. அதாவது மூன்று நாளில் ஐந்தே பேர்தான் இசைக்குழு. நான்காவது கால்ஷீட்டில் 12 வயலின், 2 செல்லோ அவ்வளவுதான்.

    சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தின் பின்னணி இசைக்கு மொத்தப் பில்லும் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான்.

    இந்தப் படத்தின் வெற்றி, இதை இந்திக்கும் கொண்டு போனது. இந்தி `ரீமேக்'கில் ஆர்.டி.பர்மன் இசையமைத்தார்.

    எப்படி இந்த பின்னணி இசையை கிரியேட் செய்தேன் என்று என்னிடம் அவரே கேட்டு வியந்தார்.

    இந்தப் படத்துக்கு அவர் அமைத்த இசையில் சரியான `எபெக்ட்' வராமல் இருந்திருக்கிறது. இதனால் தமிழில் நான் இசையமைத்த "மியுசிக்'' டிராக்குகளை தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யிடம் கேட்டிருக்கிறார், பாரதி.

    கே.ஆர்.ஜி. என்னிடம் வந்து "கொடுக்கலாமா?'' என்று கேட்டார். நான் கே.ஆர்.ஜி.யிடம், "என்னைவிட நன்றாக இசையமைப்பார் என்றுதானே ஆர்.டி.பர்மனிடம் பாரதி போனார்! அவரே போடட்டும். டிராக்குகளை கொடுக்கவேண்டாம்'' என்று கூறிவிட்டேன். டிராக்குகளை கொடுத்திருந்தாலும் டைட்டிலில் என் பெயர் வராதல்லவா!''

    நடிகர் பாலாஜி தயாரிப்பாளராகவும் மாறி, படங்கள் தயாரித்துக் கொண்டிருந்தார். "தியாகம்'' என்ற படத்தை அப்போது தயாரித்தார். சிவாஜி நடித்த இந்தப் படத்தில், "வசந்த காலக் கோலங்கள், வானில் விழுந்த கோடுகள், கலைந்திடும் கனவுகள்' கண்ணீர் சிந்தும் உறவுகள்'' என்ற கவியரசு கண்ணதாசனின் அற்புதமான சிந்தனையுடன் கூடிய பாடல் இடம் பெற்றது.

    இதே படத்தில் சிவாஜி பாடுவதாக வரும் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு'' என்ற பாடலும் காலத்தில் அழியாதது.

    "நதி வெள்ளம் காய்ந்து விட்டால்

    நதி செய்த குற்றம் இல்லை!

    விதி செய்த குற்றம் அன்றி வேறே யாரம்மா!

    மனிதனம்மா மயங்குகிறேன்''

    - இப்படி போகும் பாடலில் வாழ்க்கைத் தத்துவத்தை இயல்பாக சொல்லியிருந்தார் கவியரசர்.

    தமிழில் சிவாஜி நடித்த "வாழ நினைத்தால் வாழலாம்'', "வட்டத்துக்குள் சதுரம்'' என்று போய்க்கொண்டிருந்த நேரத்தில், `வயசு பிடிசிந்தி' என்ற தெலுங்குப் பட வாய்ப்பும் வந்தது. இந்த வகையில் என் முதல் தெலுங்குப்படம் இது.

    இதே சமயத்தில் `வ்யா மோஹம்' என்ற மலையாள படத்துக்கும் இசை அமைக்கும் வாய்ப்பு வந்தது. எனது இசையில் வந்த இந்த முதல் மலையாளப்படம் தமிழில் ஸ்ரீதர் டைரக்ட் செய்த "போலீஸ்காரன் மகள்'' என்ற படத்தின் ரீமேக்.

    தேவர் பிலிம்ஸ் "அன்னை ஓர் ஆலயம்'' என்றொரு படம் எடுத்தார்கள். ரஜினி முதன் முதலாக தேவர் பிலிம்சில் நடித்த படம்.

    இந்தப் படத்துக்கு முன்னால் ஒரு முறை திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம் என்று போயிருந்தேன். பெயர், புகழ் என்று எந்த செல்வாக்கையும் உபயோகிக்காமல் சாதாரண பக்தனாக போய் வந்தேன். என்னுடன் மனைவி, குழந்தைகளும் வந்திருந்தார்கள்.

    அப்படிப் போனபோது தரிசனம் செய்யக்கூட விடாமல், பிடித்துத் தள்ளுவதும், ஆட்கள் நெருக்குவதுமாக மிகவும் வருந்தும்படியான தரிசனமாகியது. அப்போது நான் பெருமாளிடம், "சந்நிதியில் சாதாரணமாக வந்தேன். உன்னை தரிசிக்க இயலவில்லை. இனிமேல் உன்னைப் பார்க்க வரமாட்டேன்'' என்று சபதம் செய்து விட்டு வந்துவிட்டேன்.

    "அன்னை ஓர் ஆலயம்'' படத்தின் இசை அமைப்பாளர் என்ற முறையில் என்னை படத்தின் டைரக்டர் தியாகராஜன் சந்தித்தார். "ராஜா சார்! அன்னை ஓர் ஆலயம்'' கம்போசிங்கிற்கு திருப்பதி போகலாமா?'' என்று கேட்டார்.

    மூகாம்பிகை போய் என் வாழ்க்கை முறை முற்றிலுமாய் மாறியிருந்த நேரம் அது. எனவே வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ எதுவும் சொல்லாமல் வெறுமனே தலையை மட்டும் அசைத்தேன்.

    "அப்படியென்றால் ஞாயிற்றுக்கிழமை போகலாமா?'' என்று கேட்டார்.

    அதற்கும் தலையசைப்பில் சரி சொன்னேன்.

    அப்போது திருப்பதியில் ஒரு பத்து காட்டேஜ்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன.

    ஐந்து காட்டேஜ்களில் ஒன்றில் நானும், இன்னொன்றில் கவிஞர் வாலியும், என் உதவியாளர்கள் இன்னொன்றிலுமாக இருந்தோம். டைரக்டர் தியாகராஜன், அவரது யுனிட் ஆட்கள் அடுத்த 2 காட்டேஜ்களில் தங்கினார்கள்.

    முதல் நாள் அதிகாலை 4 மணிக்கு ராஜதரிசனம் என்று சொல்லி தேவஸ்தானத்தில் இருந்து அழைத்துப் போனார்கள்.

    நானும் போனேன். தரிசனம் நன்றாக நடந்தது. என்னிடம் மட்டும் "என்ன! வரமாட்டேன் என்றாயே... வரவைத்துவிட்டேன் பார்த்தாயா?'' என்று சுவாமி கேட்பது போலிருந்தது.

    நானும் மானசீகமாய்ப் பேசினேன். "நீ தரிசனம் கொடுத்தாலும் நீதான் பெரும் ஆள்! தரிசனம் கொடுக்காவிட்டாலும் நீதானே பெரும் ஆள்! இதில் என் மனம் போல் தரிசனம் கிடைத்தால் என்னைப்பற்றி நான் பெருமைப்பட என்ன இருக்கிறது? நீ கொடுத்தால்தானே கிடைக்கும். கொடுத்தாலும் நீயே. கொடுக்காவிட்டாலும் நீயே!'' என்று மனதுக்குள் கூறிக்கொண்டேன்.

    அங்கிருந்த ஒரு வாரமும் விதவிதமான அலங்காரத்தில் சுவாமி இருப்பார். தினசரி காலை 4 மணிக்கு எங்களை அழைப்பார். தரிசனம் கொடுப்பார். எங்களை பெருமைப்பட வைப்பார். அதைப் பார்த்து ரசிப்பார்.

    ரெக்கார்டிங் சமயத்தில்தான் இதை வாலியிடம் சொன்னேன். அதிசயப்பட்டார். "யோவ் நீ பெருமாளுக்கு அடியார்யா! அதனால்தான் உன்னை அழைத்து வந்து தரிசனம் கொடுத்திருக்கிறார்'' என்றார்.
    ``இளம் வயதி லேயே என் மான சீக குருவாகத் திகழ்ந்தவர் சி.ஆர்.சுப்பராமன்'' என்று இளையராஜா கூறினார்.
    ``இளம் வயதி லேயே என் மான சீக குருவாகத் திகழ்ந்தவர் சி.ஆர்.சுப்பராமன்'' என்று இளையராஜா கூறினார்.

    நாகேஸ்வரராவ்- சாவித்திரி நடித்த ``தேவதாஸ்'' படத்துக்கு இசை அமைத்தவர், சி.ஆர்.சுப்பராமன்.

    எம்.கே.தியாகராஜ பாகவதர்- பானுமதி நடித்த ``ராஜமுக்தி'', என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்னில் உருவான லலிதா, பத்மினி, பாலையா நடித்த ``மணமகள்'', பானுமதி -நாகேஸ்வரராவ் நடித்த ``லைலா மஜ்னு'' உள்பட ஏராளமான படங்களுக்கு இசை அமைத்தவர் சி.ஆர்.சுப்பராமன்.

    அவர் பற்றி இளைய ராஜா கூறியதாவது:-

    ``ஏவி.எம். ஸ்டூடி யோவிலும், ஜுபிடர் ஸ்டூடியோவிலும் அவர்களுக்கு என்று இசைக் குழுக்கள் இருந்தன. மற்ற ஸ்டூடியோக்களில் இசைக் கலைஞர்களைத் தனியாக அழைத்துதான் வாசிக்கச் செய்து, பதிவு செய்ய வேண்டும்.

    அதெல்லாம் போய் விட்ட காலத்தில் அல்லவா நான் திரை உலகுக்கு வந்தேன்! அந்தக் காலப் பெருமைகளை, அனுபவம் மிக்க பெரியவர்கள் சொல்வது ஒரு பாடமாகவே இருக்கும்.

    குறிப்பாக, என் முதல் `மானசீக குருநாதர்' சி.ஆர்.சுப்பராமன் பின்னணி இசை கம்போஸ் செய்வது அற்புதமான காட்சியாக இருக்குமë என்று அறிந்திருக்கிறேன்.

    பின்னணி இசை (ரீரிகார்டிங்) அமைப்பதற்கான காட்சியை சுப்பராமனுக்கு திரையிட்டுக் காட்டுவார்கள். 10 நிமிடம் திரையில் ஓடும் படத்தைப் பார்த்து விட்டால், பியானோ முன் வந்து உட்கார்ந்து விடுவாராம். இரண்டு கைகளாலும் அவர் வாசிக்க, அதை `நோட்ஸ்' எடுக்க வலது புறம்  விசுவநாதனும் ராமமூர்த்தியும் இடது புறம் கோவர்த்தனும், ஸ்ரீராமுலுவும் அமர்ந்து கொண்டு, சுப்பராமன் வாசிக்க வாசிக்க எழுதிக் கொள்வார்களாம்.

    எதை எந்த வாத்தியத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டு, பிரித்துக் கொடுத்து ரிகர்சல் பார்க்கும்போது, `ஏய்! இந்த நோட்சை தப்பா கொடுத்தது யாரு? இங்கே வா!' என்று அழைத்து அதை மீண்டும் பியானோவில் வாசித்துக் காட்டி சரி செய்வாரம்.

    வாசிப்பதை நோட்ஸ் எழுதுபவர்கள் எல்லோரும் திறமைசாலிகள். அவர்கள் எழுதுவதிலும் தவறு வர, அதை ஞாபகமாய்ச் சரி செய்தார் என்றால், அவருடைய ஞானத்தை என்ன சொல்வது?

    முப்பத்தி இரண்டு வயதே வாழ்ந்த அவர், எவருக்கும் இணை இல்லாத மேதை.

    ஆனால் ஆர்மோனிய பெட்டி மீது `விஸ்கி' பாட்டிலும், சிகரெட் பாக்கெட்டும் இருக்குமாம்!

    அன்றைய காலக்கட்டத்தில் மட்டும் அல்ல, சினிமா கலைஞர்களுக்குப் புகழ் வரவர, குடியும், காமவெறியும்தான் உயர்ந்த சுகபோக நிலையாகவும், அதிலேயே சுகித்திருப்பதே நல் வாழ்க்கையாகவும் இருக்கிறது.

    சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்த பாடல்கள் மிகவும் `பாப்புலர்' ஆனதால், பொறாமை கொண்டவர்கள் அவரை `டப்பா மிïசிக் டைரக்டர்' என்று கூறி வந்தார்கள். சினிமா இசையை டப்பா இசை என்று சங்கீத வித்வான்கள் கேலியாகக் கூறுவது அக்கால வழக்கம்.

    கலைவாணர் என்.எஸ். கே.யும், சி.ஆர்.சுப்பராமனும் நல்ல நண்பர்கள். என்.எஸ்.கே.யிடம் சுப்பராமன் இதுபற்றி கூறி வருத்தப்பட, `கவலைப்படாதே, சுப்பராமா! உன்னுடைய சங்கீத ஞானத்தைக் காட்டுவதற்காகவே ஒரு படம் எடுக்கிறேன்' என்று கூறி, `மணமகள்' என்ற படத்தைத் தயாரித்தார்.

    அதில் அத்தனையும் கர்நாடக சங்கீதப் பாடல்கள். அத்தனை பாடல்களையும் வைரமணிகள் போல் ஒளி வீசும் வண்ணம் இசை

    அமைத்திருந்தார்.உடுமலை நாராயண கவி எழுதியிருந்த பாடல்கள் மறக்க முடியாதவை. ``எல்லாம் இன்பமயம்'' என்ற பாடலில்,

    மலையின் அருவியிலே - வளர்

    மழலை மொழிதனிலே

    நிலவின் ஒளியாலும்

    குழலின் இசையாலும்

    நீலக்கடல் வீசும் அலையாலுமே!

    கலைஞன் சிலையிலும் கவிதைப் பொருளிலும்

    கானமா மயிலின் ஆடல் அறுசுவையில்

    காதலோடு மனிதனின் புலன் காண்பதெல்லாம் இன்பமயம்!

    - சிம்மேந்திர மத்திம ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை யாரால் மறக்க இயலும்!

    மகாகவி பாரதியாரின் ``சின்னஞ்சிறு கிளியே'' பாடலுக்கு அவர் ராகமாலிகையில் இசை அமைத்தார். உயிரையே கொள்ளைகொள்ளும் உன்னதமான பாடல். இத்தனை காலம் கடந்தும், அதற்கு மேல் இதோ ஒரு ராகமாலிகை என்று யாராலும் சுட்டிக் காட்ட முடியாத அளவுக்கு இசையை அறிந்தவர், சுப்பராமன்.

    `டப்பா சங்கீதம்' என்று சங்கீத வித்வான்கள் கூறி வந்த சினிமா சங்கீதத்தை உயர்த்தி, அதை அப்படியே திருப்பிப் போட வைத்தது சி.ஆர்.சுப்பராமனின்  இசை. சினிமா பாடலை சங்கீத மேடைக்கு கொண்டு போக வைத்த நிலைமை, சி.ஆர்.சுப்பராமன் காலத்தில்தான் ஏற்பட்டது. இன்றைய இளம் வித்வான்களில் யார் ``சின்னஞ்சிறு கிளியே'' பாடவில்லை?

    சரளமான நடைபோல வந்த பாட்டுக்கு, இத் தனை மகத்துவம்.சி.ஆர்.சுப்பராமனின் ``வர்ணமெட்டால்'' வந்தது. அதை யாரும் மறுக்க முடியாது; மறக்கவும் முடியாது.

    என் மானசீக குருவே- உம்மை என்றும் வணங்குகி  றேன்''

    இவ்வாறு இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

    சில மலையாளப் படங்களில் பணியாற்ற இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுபற்றி அவர் கூறியதாவது:-

    ``சில மலையாளப் படங்களுக்கு கிட்டார் வாசிக்க சான்ஸ் வந்தது. ``12 பி'' பஸ்சில் வடபழனிக்குச் சென்று, ஏவி.எம்.மிலோ, பரணியிலோ, ரேவதியிலோ நடக்கும் ரெக்கார்டிங்குக்கு நடந்து போவேன். முடிந்ததும் கடைசி ``12 பி'' பஸ்சில் திரும்பி வந்து

    சேருவேன்.மலையாள இசை அமைப் பாளர் யாராக இருந்தாலும், பாடல் பதிவின் போது ``கண்டக்ட்'' செய்பவர் சேகர் அவர்கள்தான். அவர் தன்ராஜ் மாஸ்டரின் மாணவர். அதை விட ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை என்று கூறினால் நன் றாகத் தெரியும்.

    எல்லா இசை அமைப்பாளர்களுக்கும் ``பிஜிஎம்'' (பேக்ரவுண்ட் மிïசிக்) சேகர் தான் செய்து கொடுப்பார். மாஸ்டர் தேவ ராஜனிடம் மட்டும் அவர் ``கண்டக்ட்'' மட்டும் செய்வார்.

    அவர் ``பிஜிஎம்'' மட்டும் செய்யும் படங்களில் சில இடங்களை  குறிப்பிட்டு, ``நீ இந்த இடத்தில் வாசித்து விடு'' என்பார். எனக்காக கம்போஸ் செய்ய மாட்டார்.

    மற்ற அனைவருக்கும் நோட்ஸ் கொடுத்து விட்டு, எனக்கு மட்டும் ஒன்றும் சொல்லாமல், ``வாசித்து விடு'' என்று சுதந்திரமாக விட்டு விடுகிறாரே, ஏன் என்று யோசிப்பேன். நான் தன்ராஜ் மாஸ்டரின் மாணவன் என்பதால்தான் என்னிடம் இவ்வளவு நம்பிக்கை என்று

    தெரிந்தது.ஒத்திகையைப் பார்க்கும் யாராவது இசை அமைப்பாளர்கள், கிட்டாரில் ஏதாவது மாற்ற வேண்டும் என்று என்னிடம் வந்தால், அவரை சேகர் கூப்பிட்டு, ``அதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. `டேக்'கின் போது சரியாக -நன்றாகவே வரும்' என்று சொல்லி, என் அருகே யாரையும் நெருங்க விடமாட்டார். அவ்வளவு நம்பிக்கை.

    அவர் தனியாக இசை அமைத்த எந்த ஒரு படமும் சரியாக அமையவில்லை. அதுபற்றி அவர் வருந்தியும் நான் பார்த்தது இல்லை. தன் தந்தையின் ஆசியால் ரஹ்மான் பெரும் அளவில் பேரும், புகழும் பெற்றார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை.''

    இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.


    ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலக் கட்டத்தில், இசை அமைப்பாளர் ஆவதற்கான வாய்ப்புகள், இளையராஜாவை தேடி வந்தன. கடைசி நேரத்தில் அவை கை நழுவிப்போயின.
    ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலக் கட்டத்தில், இசை அமைப்பாளர் ஆவதற்கான வாய்ப்புகள், இளையராஜாவை  தேடி வந்தன. கடைசி நேரத்தில் அவை கை நழுவிப்போயின.

    இதன் காரணமாக "அன்லக்கி'' (ராசி இல்லாதவர்) என்று பெயர் பெற்றார்!

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஜி.கே.வி.க்கு நிறைய படங்கள் வந்தன. இரவு இரண்டு மணி வரை கம்போசிங் நடக்கும். காலை 7 மணிக்கு பாடல் பதிவு! இப்படி எத்தனையோ மாதங்கள் நடந்துள்ளன.

    சென்னையில், இசைக் கருவிகள் விற்பனை செய்யும் கடைக்கு, வெளிநாட்டுக் கிட்டார் வந்திருந்தது. விலை 150 ரூபாய். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அதை வாங்கி விட்டேன்.

    பாடல்களுக்கு நானும், பிலிப்சும் கிட்டார் வாசிப்போம். பாட்டின் இடையே சில சமயம் பிலிப்ஸ் வாசிப்பார்.

    அவர் கைக்கு நல்ல நாதம் அமைந்திருந்தது. அதே கிட்டாரை வேறு யாராவது வாசித்தால் அந்த நாதம் வராது. சில பேருடைய கைவாகு அப்படி. அதேபோல் வாத்தியமும் அவர்களுக்கு படிய வேண்டும். குதிரைகளில் எல்லோரும் சவாரி செய்து விட முடியாது. அது சிலருக்குத்தான் கட்டுப்படும்.

    அதே போலத்தான் வாத்தியங்களும், இசையும், பாட்டும், கலைகளும், பண்பும், ஒழுக்கமும், தவமும்!

    நாம் தவமிருப்பதல்ல; தவம் நமக்கு அமைய வேண்டும்.

    ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைக்கும் படங்களின் டைரக்டர்கள் வந்து, கதையைச் சொல்லி, பாடல்கள் இடம் பெற வேண்டிய இடங்களையும் சொல்லி விட்டுச் செல்வார்கள். அந்த வேலை முடியும் வரை என் பணியைச் செய்து விட்டு, வீட்டுக்கு வருவேன். பாடலின் அந்த கட்டத்திற்கு நான் இசை அமைக்க வேண்டியிருந்தால் என்ன செய்வேன் என்று யோசிப்பேன். இசை அமைத்துப் பார்ப்பேன். பாடலை கம்போஸ் செய்து பார்ப்பேன். இப்படியே, நிறைய டிïன்கள் சேர்ந்து விட்டன!

    பாஸ்கர், பகல் நேரத்தில் சும்மா இருக்க முடியாது. வழக்கமாக சினிமா கம்பெனிகளுக்குப் போய் வருவார். அதில், டைரக்டர் டி.என்.பாலுவுக்கு உதவியாளராக இருந்த முருகானந்தம், பாஸ்கருக்கு பழக்கமாகி நண்பர் ஆனார். அவர் சொந்தமாகப் படம் தயாரிக்க போவதாகவும், அதற்கு நாம்தான் இசை அமைக்க வேண்டும் என்றும் பாஸ்கர் சொன்னார்.

    படக்கம்பெனிக்கு "வலம்புரி மூவீஸ்'' என்று பெயர் சூட்டப்பட்டது. ராயப்பேட்டையில் ஆபீசும் திறக்கப்பட்டது.

    இசை அமைப்புக்கு அட்வான்சாக ஐந்தாயிரம் ரூபாய் செக்கை, முருகானந்தம் கொடுத்தார். என்னால் நம்பவே முடியவில்லை. அந்தக் காலத்தில் பெரிய இசை அமைப்பாளர்களுக்கு முழு இசை அமைப்புக்கும் ஐந்தாயிரம் ரூபாய்தான் சம்பளம் கொடுத்தார்கள். இவர், அட்வான்சாகவே ஐந்தாயிரம் கொடுக்கிறாரே, பெரிய புரொடிïசர்தான் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

    இந்த செக்கை பாங்கியில் போடாமல் நானே வைத்திருந்தேன். ரெக்கார்டிங்கில் வாசிக்கும்போது, வலம்புரி மூவிஸ் கொடுத்த செக்கை நண்பர்களிடம் அவ்வப்போது பெருமையுடன் காட்டுவேன். அவர்களும் ஆச்சரியப்படுவார்கள்.

    ஆனால், வலம்புரி மூவிஸ் படம் எடுக்கவில்லை; எடுக்கவும் முடியவில்லை.

    இதன் பிறகு, இன்னொரு பட அதிபரிடம் பழகி விட்டு பாஸ்கர் வந்தார். அந்தப் படத்திற்கு அடுத்த நாள் ஆழ்வார்பேட்டை ஆனந்த் ஓட்டலில் கம்போசிங் என்று சொன்னார்.

    எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அடுத்த நாள் ஆனந்த் ஓட்டலுக்குப் போனோம். தயாரிப்பாளர், டைரக்டர், பாடலாசிரியர் சேதுராமன் ஆகியோர் ஓர் அறையில் இருந்தார்கள். டைரக்டர் படத்தின் கதையைச் சொல்லி, "பூஜைக்கு ஒரு காதல் பாட்டை பதிவு செய்யலாம்'' என்றார்.

    டிïன் கம்போஸ் செய்தேன். டைரக்டருக்கும் பிடித்திருந்தது.

    பூஜைக்கு நாள் குறிப்பிடப்பட்டது. பி.சுசீலாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடுவதாக முடிவு செய்யப்பட்டது. "பாடல் பதிவுக்கு ஸ்டூடியோ வாடகை, பாடகர்கள் இசைக் குழுவினர் சம்பளம் ஆகியவற்றுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?'' என்று பட அதிபர் கேட்க, அவருக்கு பட்ஜெட் கொடுக்கப்பட்டது.

    பாடல் பதிவு நாள். இசைக் குழுவினருடன் ஒத்திகை பார்த்தோம்.

    இடையிடையே இசைக் குழுவினர், "பணம் வந்து விட்டதா?'' என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், காலையில் இருந்தே புரொடக்ஷன் மானேஜர், புரொடிïசர் எவரையுமே காணோம்!

    நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பணம் வந்த பாடில்லை. பட அதிபர் எங்கே போனார் என்று தெரியவில்லை. ஆனந்த் ஓட்டலில் அவர் தங்கியிருந்த ரூம் காலி செய்யப்பட்டிருந்தது!

    இதற்கிடையே பாடுவதற்கு பி.சுசீலாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் வந்து விட்டார்கள். அவர் களுக்கு பாடல் சொல்லிக் கொடுக்கப்பட்டு ஒத்திகை நடந்தது.

    பணம் வந்து சேர வில்லை. என்ன செய்வ தென்று ஆலோசித்தோம்.

    "இவ்வளவு நேரம் சிரமப்பட்டு, பாடலை உருவாக்கியிருக்கிறோம். பாடலை பதிவு செய்வோம். பணம் கொடுத்த பிறகு அவரிடம் பாடலை கொடுப்போம்'' என்று முடிவு செய்து, அதை ஸ்டூடியோவுக்கு தெரிவித்தோம். ஒலிப்பதிவு என்ஜீனியரும் ஒப்புக் கொள்ளவே, பாடல்

    பதிவாகியது.ஆனால் இன்று வரை பணமும் வரவில்லை; பட அதிபரும் வரவில்லை.

    அதிலிருந்து, இசைக் கலைஞர்கள் மத்தியில் என்னை "அன்லக்கி மிïசிக் டைரக்டர்'' (ராசியில்லாத இசை அமைப்பாளர்) என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள்!''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    இசை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு காரில் திரும்பும்போது, இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் சிக்கி, அதிசய மாக உயிர் தப்பினார்கள்.
    இசை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு காரில் திரும்பும்போது, இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் சிக்கி, அதிசய மாக உயிர் தப்பினார்கள்.

    இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் இசைக் குழுவில் இளையராஜா பணியாற்றிய அதே கால கட்டத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பின்னணி பாடகராக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.

    இளையராஜாவும், பாலசுப்பிரமணியமும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

    அந்த "மலரும் நினைவுகள்'' பற்றி இளையராஜா

    கூறியதாவது:-

    நாராயணன் என்னும் டைரக்டர் இயக்கிய "ஸ்ரீதேவி'' என்ற படத்துக்கு ஜி.கே.வி. இசை அமைத்தார்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எனக்கு நல்ல நண்பன் ஆகியிருந்த நேரம் அது. அவனுக்கு எப்படியாவது ஒரு பாடல் வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இது, எஸ்.பி.பி.க்குத் தெரியாது.

    ஸ்ரீதேவி படத்தில் ஒரு "டூயட்'' பாடல் வந்தது. பழைய கதாநாயகர்களுக்கு என்று இல்லாமல், ஒரு இளம் ஜோடி பாடுவது போல்

    அமைந்தது.நாராயண் ரெட்டி இதை எழுதினார். "ராசானு ப்ரேம லேக்க லென்னு'' (எத்தனை எத்தனை காதல் கடிதம் எழுதினேன்) என்று தொடங்கியது அந்தப்பாடல்.

    ட்ïன் கம்போசிங் முடிந்தது. யாரைப் பாட வைக்கலாம் என்று டைரக்டருடன் பேசிக் கொண்டிருந்தபோது, நான் ஜி.கே.வி.யிடம், "அண்ணே! இந்த பாட்டை நம்ம பாலுவுக்கு கொடுக்கலாம்ண்ணே!'' என்றேன்.

    "ஏன்டா! அவன் நன்றாகப் பாடுவானா? இந்த பாட்டுக்கு சரியாக இருக்குமா!'' என்று கேட்டார், ஜி.கே.வி.

    "அண்ணே! இது இளம் ஜோடி பாடும் பாட்டு! இதற்கு ஏன் பழைய பாடகர்? பாலு, தெலுங்கில் கோதண்டபாணியிடம் பாடியிருக்கிறான். தமிழில் எம்.ஜி.ஆருக்குப் பாடிய `ஆயிரம் நிலவே வா' பாடல் பெரிய ஹிட்!''

    "எம்.ஜி.ஆருக்கு யார் பாடினாலும் ஹிட்டாகும்!''

    "அப்போ சீர்காழி போன்றவர்களுக்கு ஏன் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை? பாலு புதுசு. இந்த பாடலுக்கு ரொம்பப் பொருத்தமாக இருப்பான். `எத்தனை காதல் கடிதம் எழுதினேன்' என்று, வயதாகி விட்ட கண்டசாலவோ, பி.பி.சீனிவாசோ பாடினால் பொருத்தமாக இருக்குமா?'' என்றேன்.

    "சரி. அவனை ரிகர்சலுக்கு வரச் சொல்!'' என்றார், ஜி.கே.வி.

    பாலு ரிகர்சலுக்கு வந்து, சொல்லிக் கொடுத்ததை உடனே நன்றாகப் பாடி விட்டான். அவனுக்கு இருந்த திறமையைக் கண்டு கொண்டார், ஜி.கே.வி.

    "ஓ.கே.! பாலுவே பாடட்டும்'' என்று அவர் சொல்ல, பாடல் பதிவாகி, படம் வெற்றி பெற்று பாடலும் ஹிட் ஆனது.

    சினிமாவில் பாட எஸ்.பி.பி.க்கு நிறைய வாய்ப்புகள் வந்ததுடன், கச்சேரிகளும் நிறைய வந்தன. ஆந்திராவில் நிறைய கச்சேரிகளுக்கு போக வேண்டியிருக்கும். அப்போது எனக்கு ஜி.கே.வி.யின் இசை அமைப்பில் பின்னணி இசை சேர்ப்பு வேலை இருக்கும்.

    எஸ்.பி.பி.யுடன் ஒரு கச்சேரிக்கு போனால் எனக்கு சம்பளமாக 75 ரூபாய் கிடைக்கும். ஜி.கே.வி.யின் இசை அமைப்புக்கு போனால், ஒரு நாளைக்கு 150 ரூபாய் வீதம் நான்கு நாளைக்கு 600 ரூபாய் கிடைக்கும்.

    இதை மனதில் வைத்து, "நான் வர முடியாது'' என்று பாலுவிடம் சொன்னால், "நீ இல்லாமல் நான் எப்படி கச்சேரி செய்வேன்? யாரை வைத்து என்ன செய்ய முடியும்?'' என்றெல்லாம் பேசி, எப்படியாவது என்னை அழைத்துச் சென்று விடுவான்.

    எழுபத்தைந்து ரூபாய்க்காக, அறுநூறு ரூபாய்களை இழந்தது எத்தனை முறை என்று கணக்கு இல்லை. இது பாலுவுக்கு இப்போது ஞாபகம் இருக்குமோ என்னமோ! பாலுவை எந்த அளவுக்கு நேசித்தேன் என்பதற்காக இதைச் சொல்ல வந்தேனே தவிர, வேறொன்றும் இல்லை.

    ஒரு முறை எஸ்.பி.பி.க்கு பொள்ளாச்சியில் கச்சேரி. அடுத்த நாள் எனக்கு இசைக் கல்லூரியின் தேர்வு இருந்தது. அதனால் நான் வரவில்லை என்று கூறிவிட்டேன்.

    ஆனால், நான் கட்டாயம் வரவேண்டும் என்று எஸ்.பி.பி. வற்புறுத்தினான். `கச்சேரி முடிந்ததும், நான் காரில் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன்' என்றான்.

    `சரி' என்று கச்சேரிக்குப் புறப்பட்டேன்.

    இரவு கச்சேரி முடிந்ததும், பாலுவின் காரில், ஏறிக் கொண்டேன். `கிளாரினட்' பல்லாராவ், `தபேலா' மது ஆகியோரும் எங்களுடன் புறப்பட்டார்கள். பாலுவே காரை ஓட்டினான். சேலம், உளுந்தூர்பேட்டை வழியாக வருவதற்கு பதிலாக, சேலம், அரூர், தர்மபுரி என்று தவறான பாதையில் காரை ஓட்டியதால், வேலூர் வந்து சேருவதற்கே காலை ஐந்து மணி ஆகி விட்டது. விடியப் போகும் நேரம்.

    `அப்பாடா! வேலூர் வந்து விட்டோம். ஏழு மணிக்குள் சென்னையை அடைந்து விடலாம்' எண்ணினேன்.

    காரை ஓட்டி வந்த பாலு, டிரைவரை ஓட்டச் சொல்லி விட்டு பின் சீட்டுக்கு வந்து, என் மடியில் தலை வைத்துத் தூங்க ஆரம்பித்தான்.

    டிரைவர் சீட்டுக்குப் பின்புறம் நான் இருந்தேன். வேலூர் அவுட்டருக்கு கார் வந்தபோது, ஒரு குழந்தை திடீரென்று காரின் குறுக்கே ஓடிவந்தது. டிரைவர் காரை ஒடிக்க, கார் மணலில் சறுக்கி, 40 அடி பள்ளத்தில் உருண்டது.

    தூங்கிக் கொண்டு வந்த நான் விழித்துப் பார்த்தால், கார் உருண்டு கொண்டிருக்கிறது!

    நான் தயாராகி விட்டேன். `இதோ இப்போது அடி விடும்', `இதோ இப்போது!' என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், முன்னால் `ஐயோ, அம்மா!' என்று இருவர் கூச்சலிடும் சப்தம் கேட்டது. `சரி; முன்னால் இரண்டு பேர் காலி' என்று நினைத்தேன்.

    கார், தலை கீழாக பள்ளத்தில் போய் விழுந்தது. சக்கரங்கள் நாலும் மேலே பார்த்தபடி நின்றன! சீட் மட்டும் மாறாமல், நாங்கள் உட்கார்ந்த நிலையில், அப்படியே இருந்தது! முன்புறக் கண்ணாடி வழியாக ரத்தம் வழிவது தெரிந்தது.

    டிரைவர் பக்கத்து கண்ணாடி கதவு திறந்திருந்தது. அதன் வழியாக ஒவ்வொருவராக வெளியே வந்தோம். பார்த்தால், ஒரு பாலத்துக்குக் கீழே இருக்கிறோம் என்பது தெரிந்தது. மேலே, பாலத்தில் பெரிய கூட்டம்! அவர்கள், "என்ன ஆச்சு, என்ன ஆச்சு?'' என்று கத்தினார்கள். என்ன ஆச்சு என்று எங்களுக்கே தெரியவில்லை!

    கார் கண்ணாடியில் வழிந்தது ரத்தம் அல்ல, என்ஜின் ஆயில். ரோடு புழுதி காரணமாக, ரத்தக் கலரில் வழிந்திருக்கிறது.

    "செத்துப் பிழைத்தவன்டா!''

    எப்படியோ தப்பிப் பிழைத்தோம். மேலே வந்ததும், "நான் செத்துப் பிழைச்சவன்டா!'' என்று சத்தம் போட்டுப் பாடினேன்!

    உண்மையில், நானும், மற்றவர்களும் அந்த விபத்தில் உயிர் தப்பியது ஆச்சரியம்தான். நான், கார் கண்ணாடியில் தலையை சாய்த்து வைத்து தூங்கிக் கொண்டுதான் பயணம் செய்தேன். அந்தக் கண்ணாடி முழுவதும் நொறுங்கிப் போயிருந்தது. எனக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை.

    பின்னர், வேலூர் பஸ் அதிபர் ஒருவர் எங்களை தனது வண்டியில் சென்னையில் கொண்டு வந்து விட்டார்.

    இந்த விபத்து காரணமாக, அப்போது இசை தேர்வு எழுத முடியாமல் போயிற்று. பிறகுதான் எழுதினேன்''

    இவ்வாறு இளையராஜா குறிப்பிட்டார்.

    லண்டன் இசைக் கல்லூரி நடத்திய இசை பற்றிய தேர்வில் இளையராஜா வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
    லண்டன் இசைக் கல்லூரி நடத்திய இசை பற்றிய தேர்வில் இளையராஜா வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாள ராக இளையராஜா பணியாற்றிக் கொண்டிருந்த போது, இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். நாடகங்களுக்கும் இசை அமைத்தார்.

    இப்படி, இரவு - பகலாக வேலை பார்த்து வந்ததால், தன்ராஜ் மாஸ்டரை பார்க்க முடியாமல் போய் விட்டது.

    ஏற்கனவே அவர் கூறிய படி, இசையில் பட்டம் பெற லண்டன் `டிரினிட்டி காலேஜ் ஆப் மிïசிக்'' நடத்தும்  பரீட்சையில் பங்கு கொள்ள இளையராஜா பணம் கட்டியிருந்தார்.

    ஒருநாள் சற்று ஓய்வு கிடைத்த போது, தன்ராஜ் மாஸ்டரை பார்க்கச் சென்றார். தன்னை விட்டு விட்டு கோடம்பாக்கத்துக்குச் சென்றதாலும், இடையில் தன்னைப் பார்க்க வராததாலும் இளையராஜா மீது மாஸ்டர் கோபம் கொண்டிருந்தார்.

    இளையராஜாவை பார்த்ததுமே, அவர் கண்களில் அனல் வீசியது. ``நான் அப்போதே சொன்னேன், கோடம்பாக்கம் போனால் உருப்பட மாட்டாய் என்று! அப்படியே ஆயிடுச்சு பார்!'' என்றார்.

    ``இல்லை சார். கொஞ்சம் ரெக்கார்டிங் வேலை இருந்தது. இனிமேல் கரெக்டா வந்துடறேன், சார்'' என்று இளையராஜா கூறினார்.

    ``இனிமே என்ன வர்றது? உனக்கு இனிமேல் நான் பாடம் எடுக்கப் போறதில்லே. நீ போ! ரெக்கார்ட்டிங்குக்கே போ!'' என்று கோபத்துடன் கூறினார், மாஸ்டர்.

    இளையராஜா எவ்வளவோ சமாதானப் படுத்திப் பார்த்தார், ஆனால் மாஸ்டரின் கோபம் தணியவில்லை. ``நான் சொன்னா சொன்னதுதான்'' என்றார், கண்டிப்புடன்.

    ``சார்! நீங்க சொல்லித்தான் லண்டன் டிரினிட்டி காலேஜ் பரீட்சைக்கு பணம் கட்டினேன், எட்டாவது கிரேட் பிராக்டிக்கல், நான்காவது கிரேட் தியரி இரண்டுக்கும் நான் தயாராக வேண்டும்...''

    ``ஆமாம்...பணம் கட்டச் சொன்னேன். இனிமேல் என்னால் முடியாது. இனி நீ இங்கு வரவும் வேண்டாம்''

    - கண்டிப்புடன் கூறினார், மாஸ்டர்.

    இளையராஜா ஓர் முடிவுக்கு வந்தார்.

    ``சார்! நான் இங்கே மீண்டும் ஒருநாள் வருவேன். பரீட்சைகளில் நல்ல முறையில் தேறி, ஹானர்ஸ் சர்டிபிகேட்டுடன் வந்து உங்களைப் பார்ப்பேன்'' என்று சபதம் செய்வது போல் கூறி விட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

    நன்றாக உழைப்பவர்கள் சபதம் செய்தால் என்ன நடக்குமோ அதுதான் இளையராஜாவுக்கும் நடந்தது. சதாசர்வ காலமும் இசை பற்றிய படிப்பு... பயிற்சி!

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    ``பாரதிராஜாவிடம் ஒரு சபதம், மாஸ்டரிடம் ஒரு சபதம்.

    திரையில் என் பெயரை பாரதிக்கு முன்னால் கொண்டு வந்து விட வேண்டும் என்று நான் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் இசை தேர்வுக்கு பணம் கட்டியதற்காகவாவது எப்படியும் தேறி விட வேண்டும் என்று வைராக்கியம் கொண்டேன்.

    பிராக்டிக்கல் பரீட்சை பற்றி நான் கவலைப்படவில்லை. கிட்டாருக்கு என்னென்ன பாடங்கள் உண்டோ அதையெல்லாம் பிராக்டிஸ் செய்து

    விடலாம்.ஆனால் இந்த `தியரி'க்கு (எழுத்துப் பரீட்சை) என்ன செய்வது முக்கியப் பிரச்சினை- ஆங்கிலம்!

    தேர்வு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கி, நானாகப் படிக்க ஆரம்பித்தேன்.

    புத்தகத்தை திறப்பேன். முதல் வாக்கியத்தை வாசிப்பேன். புரியாது. மீண்டும் வாசிப்பேன். ஓரிரு வார்த்தைகள் - ஏற்கனவே தெரிந்த வார்த்தைகள் மட்டும் புரியும். அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை மட்டும் மனதில் கொண்டு, `இந்த வாக்கியம் எதைச் சொல்ல எழுதப்பட்டிருக்கிறது' என்று யோசிப்பேன்.

    மூன்றாவது முறை வாசிப்பேன். யாரும் விளக்காமலேயே, நன்றாக அர்த்தம் மனதில் வந்து விடும்.

    `சரியாக இருக்கிறதா?' என்று அடுத்தவரிடம் கேட்டு சரிபார்த்தால், 100க்கு 100 சரியாக இருக்கும்!

    தெரியாத புது வார்த்தைகளுக்கு அர்த்தத்தை யாரிடமா வது கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

    ரெக்கார்டிங் இல்லாத நேரங்களில், பரீட்சைக்கு உரிய இசையை, மனப்பாடமாக பிராக்டிஸ் செய்வேன். எப்போதும் பேப்பரும் கையுமாக இருக்கும் நான், ஓய்வு நேரத்தில் எழுதிக் கொண்டே இருப்பேன். இசைக் குழுவினர் எல்லோரும் என்னை வியப்புடன் வேடிக்கை

    பார்ப்பார்கள்.பரீட்சை வந்தது. பிராக்டிக்கல் 8வது கிரேடு, தியரி 4வது கிரேடு ஆகிய இரண்டிலும் 85 மார்க் எடுத்து ``ஹானர்ஸ்'' தகுதியுடன் தேறினேன்.

    இந்த சான்றிதழுடன் தன்ராஜ் மாஸ்டரை போய்ப் பார்த்தேன். சான்றிதழைக் காட்டினேன்.

    அதைப் பார்த்த மாஸ்டர், வியப்புடன் என்னை நோக்கினார். ``ராஜா! ரியலி ï ஆர் கிரேட்!'' என்றார்.

    அதுமட்டுமல்ல ``இசையில் இன்னும் எவ்வளவோ இருக்கு. நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம்'' என்று திறந்த மனதோடு அழைப்பு

    விடுத்தார்.ஆயினும் மறுபடியும் மாஸ்டரிடம் போக எனக்கு மனம் வரவில்லை.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    ``வெள்ளித்திரையில் யாருடைய பெயர் முதலில் வருகிறது, பார்ப்போமா?'' என்று இளையராஜாவிடம் பாரதிராஜா பந்தயம் போட்டார். பந்தயத்தில் அவர் ஜெயித்தார்.
    ``வெள்ளித்திரையில் யாருடைய பெயர் முதலில் வருகிறது, பார்ப்போமா?'' என்று இளையராஜாவிடம் பாரதிராஜா பந்தயம் போட்டார். பந்தயத்தில் அவர் ஜெயித்தார்.

    இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் இளையராஜா அசிஸ்டென்டாக இருந்தபோது, புட்டண்ணாவிடம் பாரதிராஜா உதவி இயக்குனராகச் சேர்ந்தார்.

    ஒருநாள் இளையராஜா வும், பாரதிராஜாவும் பேசிக் கொண்டிருந்த போது, ``சினிமாவில் டைட்டில் கார்டில் யார் பெயர் முதலில் வருகிறது என்று பார்ப் போமா?'' என்று பாரதிராஜா சிரித்துக் கொண்டே கேட்டார். இளையராஜாவும் சிரித்தபடி, ``பார்த்து விடுவோம்'' என்றார்.

    புட்டண்ணா இயக்கிய `இருளும் ஒளியும்'' படத்தில், உதவி டைரக்டராக பாரதிராஜா பணியாற்றினார். வாணிஸ்ரீ கதாநாயகியாக இரட்டை வேடத்தில் நடித்த படம் இது.

    இந்தப் படத்தில்தான் ``உதவி டைரக்டர்- பாரதிராஜா' என்று டைட்டில் கார்டு போடப்பட்டது.

    படம் வெளிவந்ததும், ``பார்த்தியா! பந்தயத்தில் நான்தான் ஜெயித்து விட்டேன்'' என்று இளையராஜாவிடம் கூறினார், பாரதிராஜா.

    ``ஓகே பாரதி'' என்றார், இளையராஜா.

    காரணம், அவர் கவனம் எல்லாம் இசையை முழுவதுமாக கற்றறிய வேண்டும் என்?தில் இருந்ததே தவிர,தன் Ù?யர் திரையில் வரவேண்டும் என்?தில் இல்லை!

    ``இருளும் ஒளியும்'' ஒரு சிறந்த படமாக இருந்தும், புட்டண்ணா தமிழ்நாட்டில் புகழ் பெறவில்லை. ஆனால், கன்னடப் படஉலகில் ஈடு இணையற்ற டைரக்டராக விளங்கினார். எனவே அவர் கவனம் கன்னடப்பட உலகத்தை நோக்கித் திரும்பியது.

    தமிழ்ப்பட உலகில் புகழ் பெற விரும்பிய பாரதிராஜா, டைரக்டர் கிருஷ்ணன் நாயரிடம் சிலகாலம் உதவி டைரக்டராக பணியாற்றினார். ஏ.ஜெகநாதன் டைரக்ட் செய்த ``அதிர்ஷ்டம் அழைக்கிறது'' படத்துக்கும் அவர்தான் துணை டைரக்டர். தேங்காய் சீனிவாசனும், சவுகார் ஜானகியும் நடித்த படம் இது.

    இந்த சமயத்தில், கே.ஆர்.ஜி. ``சொந்த வீடு'' என்ற படத்தை தயாரிக்க தீர்மானித்தார். டைரக்ஷன் பொறுப்பை பாரதிராஜாவுக்கு வழங்கினார்.

    கதை ஆர்.செல்வராஜ்; இசை: வி.குமார் என்று முடிவாயிற்று.

    ஜி.கே.வெங்கடேசிடம் `பிசி'யாக இருந்தாலும், இசையை கற்றுக் கொள்வதை லட்சியமாகக் கொண்டிருந்தாலும், இளையராஜா இதுபற்றி கவலைப்படவில்லை.

    ``பாரதியைப் பார்த்தாயா! படம் கிடைத்ததும், உன்னை மறந்திட்டான்'' என்று இளையராஜாவிடம் செல்வராஜ் சொன்னார். அதை இளையராஜா காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

    என்ன காரணத்தினாலோ, ``சொந்த வீடு'' படம் நின்று விட்டது.

    ``16 வயதினிலே'' என்ற திரைக் காவியம் பாரதிராஜாவின் முதல் படமாக அமைய வேண்டும் என்றும், அதன் இசை அமைப்பாளராக இளையராஜா பணியாற்ற வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயம் என்பது, அன்று யாருக்கும் தெரியாது!

    இந்த சமயத்தில், ஊரில் இருந்த இளையராஜாவின் அம்மா, பிள்ளைகளைப் பார்க்க வேண்டும், அவர்களுக்கு தன் கையால் சமைத்துப்போட வேண்டும் என்று விரும்பி சென்னைக்கு வந்து விட்டார்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    ``எங்களைப் பிரிந்திருப்பது பொறுக்க மாட்டாமல், அம்மா சென்னைக்குக் கிளம்பி வந்து விட்டார்கள். ``எம் புள்ளைங்க இங்கே கஷ்டப்படும்போது, நான் எதுக்கு அங்கே இருக்கணும்? உங்களுக்கு சமைத்தாவது போட வேண்டும் என்றுதான் வந்து விட்டேன்''

    என்றார்கள்.``இந்த வயதில் நீங்க ஏன் கஷ்டப்படணும்?'' என்று கேட்டால், ``அடப் போங்கப்பா! சமைக்கிறது ஒரு கஷ்டமா?'' என்று அடித்துப் பேசி விடுவார்கள்.

    1969-ல் இருந்து நான்கு வருடம் அம்மா சமையல்தான்.

    பாரதியின் தாய் எனக்கும் அம்மா போல. என் அம்மாவும் பாரதிக்குத் தாய்தான். கிடைக்கிற காசை அவர்களிடம் கொடுத்து விடுவோம். எல்லாவற்றையும் அம்மாதான் பார்த்துக் கொள்வார்கள்.

    ஒருமுறை அம்மாவிடம் 200 ரூபாய் கொடுத்தோம். அவர்கள் சென்னை வந்த பிறகு நாங்கள் கொடுத்த பெரிய தொகை. அம்மா மிகவும் மகிழ்ந்து, வெற்றிலைப் பையில் அந்தப் பணத்தை வைத்து, இடுப்பில் செருகிக் கொண்டார்கள். எல்டாம்ஸ் ரோடு மார்க்கெட்டிங் காய்கறி வாங்கப் புறப்பட்டார்கள்.

    ஒரு கடையில் ஏதோ காய்கறி வாங்கியிருக்கிறார்கள். அதை கவனித்த எவனோ பணப்பையை திருடி விட்டான்.

    பை களவு போனது தெரியாமல், அம்மா அடுத்த கடையில் சாமான்களை வாங்கி விட்டு இடுப்பைத் தொட்டுப் பார்த்தால், பையை காணவில்லை. சாமான்களை அங்கேயே வைத்து விட்டு, வந்த வழியில் பை எங்காவது கிடக்கிறதா என்று நடந்தபடி தேடிப் பார்த்திருக்கிறார்கள். அது கிடைக்காமல், வாங்கிய சாமான்களைத் திருப்பிக் கொடுத்து விட்டு, வெறும் கையுடன் வீட்டுக்கு திரும்பி னார்கள்.

    ``எம் புள்ளைங்க பாடுபட்டு சேர்த்த பணத்தை, இந்த படுபாவி தொலைச்சுட்டேனே!'' என்று வாய் விட்டு புலம்பினார்கள்.

    ``சரிம்மா... போகட்டும், விடுங்க! இதுக்கு ஏன் வருத்தப்படறீங்க?'' என்று தேற்றினோம்.

    வருத்தத்தை மாற்றிக் கொள்ளவோ, குறைத்துக் கொள்ளவோ அவர்களால் முடியவில்லை. வெந்து போன மனதுடன், வீட்டிலிருந்த அரிசி, வெங்காயம், புளி, மிளகாயை வைத்து, சாதம் வடித்தார்கள்.

    வெங்காயத்தை தண்ணீரில் நறுக்கி, பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு போட்டு, சாதத்தில் ஊற்றிச் சாப்பிடக்

    கொடுத்தார்கள்.உண்மையில் சொல்கிறேன், இன்று வரை அது போன்ற ருசியான சாப்பாட்டை நாங்கள் சாப்பிட்டதில்லை.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருந்த எஸ்.ஜானகி திடீரென பாட முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். இசைக்குழுவினர் திகைத்துப் போனார்கள்.
    இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருந்த எஸ்.ஜானகி திடீரென பாட முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். இசைக்குழுவினர் திகைத்துப் போனார்கள்.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    காரைக்குடி நாராயணன் கதை வசனம் எழுதிய படங்கள் அப்போது நன்றாக ஓடிக்கொண்டிருந்தன. இதனால் அவரே ஒரு படம் தயாரிக்க முன்வந்தார். படத்துக்கு "அச்சாணி'' என்று பெயர் வைத்தார். படத்துக்கு இசையமைக்க என்னைக் கேட்டுக்கொண்டார்.

    கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது.

    பூஜையன்றே பாடல் பதிவு.

    பாடல்களை கவிஞர் வாலி எழுதினார். கம்போசிங்கும் நடந்து முடிந்தது.

    இதில் "மாதா உன் கோவிலில் மணித்தீபம் ஏற்றினேன்'' என்ற பாடல், படத்தின் அச்சாணி போல.

    ஆனால் பூஜைக்கு முதல் பாடலாக வேறு பாடலை தேர்வு செய்திருந்தேன். பிரசாத் ஸ்டூடியோவில் பூஜை என்று முடிவானது.

    பூஜை தினத்தில் சவுண்டு என்ஜினீயர் எஸ்.பி.ராமநாதன் ஒரு சிறிய தவறு செய்ய, அது குழப்பமாகி பூஜையன்று எல்லாருக்குமே டென்ஷன்.

    எங்களுக்கு கொடுத்த பூஜை தினத்திலேயே உபேந்திரகுமார் என்ற கன்னட இசையமைப்பாளருக்கும் பூஜை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.

    அதாவது இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில்.

    பூஜைக்காக காலை 7 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோ போனால் அங்கே வேறு ஆர்க்கெஸ்ட்ரா (இசைக்குழு) இருந்தது.

    "இதென்ன! இவர்கள் எங்கள் ரெக்கார்டிங்கில் வாசிப்பவர்கள் இல்லையே?'' என்று கேட்டால், அப்புறம்தான் உண்மை தெரிந்தது. எஸ்.பி.ராமநாதன் இரண்டு பூஜைகளுக்கும் ஸ்டூடியோவை கொடுத்து இருப்பது!

    ஞாபக மறதியாலோ அல்லது காலை 10 மணிக்குள் ஒரு பாடலை யாராவது முடித்து விட்டால், அடுத்த பாடலை மதியம் ஒரு மணிக்குள் எடுத்து விடலாமே என்று அவரே ஒரு தப்புக்கணக்குப் போட்டிருந்தாரோ என்னவோ தெரியவில்லை.

    இப்போது யார் ரெக்கார்டிங் வைத்துக் கொள்வது என்று நான் எஸ்.பி.ராமநாதனைக் கேட்க, அவர் சமாளித்துப் பார்த்தார். பதில் சொல்ல முடியவில்லை.

    உபேந்திரகுமாரோ எதுபற்றியும் சட்டை செய்யாமல் அவரது பாடலை ரிகர்சல் செய்யத் தொடங்கி விட்டார்.

    இனி இங்கே வேலைக்காகாது என்று தெரிந்து போக, ரெக்கார்டிங் நடத்த ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவை கேட்கச் சொன்னேன். அங்கே நடத்தலாம் என்பது தெரியவந்ததும் ஆர்க்கெஸ்ட்ராவுடன் அங்கே போனேன். அங்கே பூஜையெல்லாம் தொடங்கி முடிந்து, ரெக்கார்டிங் ஆரம்பிக்கும் சமயத்தில் மிஷின் ரிப்பேர் ஆகிவிட்டது.

    இதற்குள் நேரம் மதியம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

    இதே நேரம் பிரசாத் ஸ்டூடியோவில் நடந்த `ரெக்கார்டிங்' முடிந்து எல்லாரும் போய்விட்டார்கள். அங்கே மாலையில் வேறு ரெக்கார்டிங் இல்லாததால் 2 மணிக்கு மறுபடியுமாக அங்கேயே போனோம்.

    ஆர்க்கெஸ்ட்ரா தயாரானது. ஜானகி வந்தார். `மாதா உன் கோவிலில்' பாடலையே எடுத்துவிட, ஒத்திகை பார்த்து `டேக்' போகலாம் என்று தொடங்கினோம்.

    இரண்டு மூன்று டேக் சரியாக வரவில்லை. நானோ இந்தப்பாடல் முடிந்து இன்னும் ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்ற டென்ஷனில்

    இருந்தேன்.இந்தப் பாடலை எடுத்துக் கொண்டிருக்கும்போதே நிறைய சங்கதிகள் கற்பனையில் வர, ஜானகியிடம் அவ்வப்போது சென்று மாற்றிக்கொண்டே இருந்தேன்.

    ஒரு டேக் நன்றாக வந்து கொண்டிருந்தது.

    அடுத்து மூன்றாவது பின்னணி இசை சேர்ப்பு தொடங்கவேண்டும். ஆனால் யாரும் வாசிக்கவில்லை. காரணம், `கண்டக்ட்' செய்த கோவர்த்தன் சார் கைகாட்ட மறந்துவிட்டார்.

    எனக்கு கோபம். "என்னண்ணே! டேக் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. பேக்ரவுண்டு மிïசிக்கிற்கு ஏன் கை காட்டவில்லை?'' என்று

    கேட்டேன்.அவரோ, "பாட்டில் மெய் மறந்துட்டேன்யா'' என்றார், கூலாக.

    எனக்கோ, அடடா! இவ்வளவு ஒன்றிய நிலையில் கண்டக்ட் செய்பவரை திட்டிவிட்டோமே என்று வருத்தம் ஆனது.

    மூன்றாவது சரணத்தில் ஜானகி பாடும்போது,

    "பிள்ளை பெறாத பெண்மை தாயானது

    அன்னை இல்லாத மகனை தாலாட்டுது''

    - என்ற வார்த்தைகளை அழகாகப் பாடியவர் அதற்கப்புறம் தொடர்ந்து பாடாமல் விட்டு விட்டார்.

    "ஐயோ நன்றாக இருந்ததே! ஏன் அடுத்த அடியை விட்டு விட்டீர்கள்?'' என்று ஜானகியை கேட்டேன்.

    ஆர்க்கெஸ்ட்ராவிலோ யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

    பொதுவாக `டேக்' கட் ஆனாலே "பேன் போடு'' என்று சத்தம் போடுபவர்கள், சத்தமே இல்லாமல் இருக்கிறார்களே என்று பார்த்தால், கோவர்த்தன் சார் `வாய்ஸ் ரூமை' கைகாட்டி ஏதோ சொன்னார்.

    என்னவென்று புரியாமல் `வாய்ஸ் ரூமை' பார்த்தால், கண்ணாடி வழியே ஜானகி கர்ச்சிப்பால் கண்களை துடைத்துக் கொண்டிருப்பது

    தெரிந்தது.விஷயம் என்னவென்று பார்த்தால், ஜானகி இப்படிச் சொன்னார்: "டிïனும் வார்த்தையும் கலந்து `பாவத்தில்' ஏதோ ஒன்றை உணர்த்திவிட, அழுகை வந்துவிட்டது. அழுகையோடு பாடவும் முடியாமல், அழுகையை நிறுத்தவும் முடியாமல் விட்டுவிட்டேன்.''

    ஜானகி இப்படிச் சொல்லி முடித்ததும் எல்லாரும் உருகி விட்டார்கள்.

    ருத்ரையா இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் `அவள் அப்படித்தான்.' இதில் என் இசையில் கமல் ஒரு பாட்டு பாடியிருப்பார். கமல் அப்போது மலையாளப்படம் ஒன்றில் நடித்து வந்தார்.

    ரெக்கார்டிங்கின்போது ஸ்டூடியோவுக்கு வந்தார். பாடலை பாடிக்காட்டினேன். கேட்டு அவரும் பாடிப்பார்த்தார். நன்றாக வந்தது. அப்படியே பாடவைத்து ரெக்கார்டு செய்து விட்டோம். அது `பன்னீர் புஷ்பங்களே' என்ற பாடல். அமர் (கங்கை அமரன்) எழுதியது.

    கோவையில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் பாடலுக்கான மெட்டு உதயமானது.

    அந்த விழா மேடையில் பஞ்சு சாரும், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சாரும் மேடையிலேயே வந்து பாடலுக்கான `சிச்சுவேஷன்' சொல்ல, மேடையிலேயே கம்போஸ் செய்து ஆர்க்கெஸ்ட்ராவோடு பாடியது.

    அந்தப் பாடலுக்கு வேறு வார்த்தைகளை போட்டு அமர் எழுதியதுதான் `பன்னீர் புஷ்பங்களே' பாட்டு.

    இந்தப் பாடலை கமல் பாடி முடித்து ரொம்ப நாள் கழித்துத்தான் அதில் இருந்த தவறு ஒன்று எனக்குத் தெரிந்தது.

    கமல் `பன்னீர் புஷ்பங்களே' என்ற வார்த்தையை `பன்னீர் புஷ்பங்ஙளே' என்று பாடிவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, "அப்போது மலையாளப் படத்தில் நடித்து வந்ததால் தமிழை மலையாளம் போல பாடிவிட்டேன்'' என்றார்.

    ஒருநாள் டைரக்டர் ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்தார்.

    யார் மேல் எங்களுக்கு பிரியம் அதிகமோ, யாரை நாங்கள் ஹீரோவாக நினைத்தோமோ, யாரை `தென்னாட்டு சாந்தாராம்' என்று மக்கள் அழைத்தார்களோ, அந்த ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு.

    ஸ்ரீதர் சார் இயக்கிய 48 படங்களுக்கு மேல் அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கிறார். ஒரு படத்தில் கூட அவர் இசையமைத்த பாடல் சோடை என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட அவரையே விட்டு விட்டு, ஸ்ரீதர் சார் நம்மிடம் வருகிறாரே, இதுதான் சினிமா உலகமா? இவரும் சாதாரண சினிமாக்காரர்தானா? இந்த சினிமா உலகம் நாளைக்கு இதுபோல் தான் நம்மையும் விட்டு விடுமோ என்ற எண்ணமும் ஒரு கணம் மனதில் ஓடியது.

    ஸ்ரீதர் தனது படத்துக்கு "இளமை ஊஞ்சலாடுகிறது'' என்று பெயர் வைத்திருந்தார்.

    அப்போது காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரு படத்தின் பின்னணி இசை வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால் கம்போசிங் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரைக்கும், இரவு 10 மணியில் இருந்து விடியும் வரைக்கும் நடந்தது.

    "ஒரே நாள் உனை நான்நிலாவில் பார்த்தது''

    - என்ற பாடல் படத்தின் "தீம் ஸாங்.''

    "நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா?'' என்ற இரண்டு பாடல்களையும் முதலில் பதிவு செய்தோம்.

    மூன்றாவதாக "தண்ணி கருத்திருச்சு'' என்ற கிராமியப்பாடல் வார்த்தையை வைத்து இசையமைத்தேன். தொடக்கம் மட்டும் அதை வைத்துக்கொண்டு மற்ற வரிகளை கவிஞர் வாலி மாற்றிவிட்டார்.

    இந்தப் பாடலை யாரைப் பாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, சட்டென ஜி.கே.வெங்கடேஷ் நினைவுக்கு வந்தார். அவரையே பாட வைக்கலாம் என முடிவு செய்தோம்.

    அடுத்த நாள் ஏவி.எம்.மில் ரெக்கார்டிங்.

    ஜி.கே.வி. பாடலை கற்றுக்கொண்டார். டைரக்டர் ஸ்ரீதர், உதவி டைரக்டர்கள் கோபு, வாசு, சந்தானபாரதி என எல்லோரும் இருந்தார்கள். பல ஒத்திகைகள் நடந்தது. பாடுவதற்கு மைக் முன்னால் போனால், ஒரு அடி பாட, அடுத்த அடியின் டிïன் மறந்து போகும். மறுபடி நினைவுபடுத்திப்பாட, இரண்டாவது ரிகர்சலில் வேறு ஒரு இடத்தில் மறந்து போகும்.

    இப்படியே பஸ் ஒவ்வொரு அடி நகரும்போதும் பிரேக் போட்டு பிரேக் போட்டு போவது போல ஆயிற்று. அங்கேயே நின்று கொண்டிருந்தது பாட்டு.

    "சரி டேக்கில் வந்து விடும். டேக்கில் `ட்ரை' பண்ணலாம்யா'' என்று கோவர்த்தன் சார் சொல்ல, டேக் தொடங்கினோம். அது பல்லவியோடு கட் ஆகிவிட்டது!

    இப்படியே ஒரு லைன் - பாதி வரி - அடுத்த லைன் - இன் னொரு பாதி வரி என்று 62 டேக்குகளுக்கும் மேலாகிவிட்டது. மணியோ மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது.

    மதியம் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் ரெக்கார்டிங். அவர் வேறு வந்துவிட்டார். வந்தவர் ஜி.கே.வி. பாடுவதைக் கேட்டு, "டேய் வெங்கடேசா! நல்லாப் பாடுடா!'' என்று தான் வந்திருக்கிறதையும் அறிவித்து உற்சாகப்படுத்தவும் செய்தார்.

    ஜி.கே.வி. இன்னும் டென்ஷனாகி விட்டார். `டேக்' தொடக்கத்தில் ஏற்கனவே அவருக்கு டென்ஷன்.

    அப்போது டைரக்டர் ஸ்ரீதர், "இவ்வளவு கஷ்டமாக இருந் தால் இந்தப் பாடல் எதற்கு? வேண்டாம், ராஜா! கேன்சல் செய்து விடுவோம். வேறு டிïன் போட்டுக் கொள்ளலாம்'' என்றார்.
    தனது ஆர்மோனியத்தை உயிருக்கும் மேலாக நேசிப்பவர் இளையராஜா. அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டிருந்த தனது நண்பரிடம் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்.
    தனது ஆர்மோனியத்தை உயிருக்கும் மேலாக நேசிப்பவர் இளையராஜா. அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டிருந்த தனது நண்பரிடம் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்.

    தனது இசைப்பயண அனுபவம் குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "பைரவி படத்தை தயாரித்த கலைஞானம், "மூன்று நாளைக்குள் ரீரிக்கார்டிங்கை (பின்னணி இசை சேர்ப்பு) முடிக்க வேண்டும். அந்த அளவுக்குத்தான் என்னிடம் பணம் இருக்கிறது. எனவே மூன்று நாளைக்குள் ரீரிக்கார்டிங்கை முடித்துவிடுங்கள்'' என்று என்னிடம்

    சொல்லிவிட்டார்.இதுமாதிரியானதொரு நெருக்கடியை இதுவரை சந்தித்திராதவன் என்ற முறையில், அவர் இப்படிச் சொன்னதும் எனக்கு கோபம் வந்துவிட்டது.

    நான் அவரிடம், "படம் மிகவும் சீரியசாக மனதைத் தொடும் விதத்தில் அமைந்திருக்கிறது. எனவே, மூன்று நாளைக்குள் முடியுமா என்பது சந்தேகம். அதோடு மூன்று நாளைத் தாண்டிவிட்டால் யார் பணம் கொடுப்பது?'' என்று கேட்டேன்.

    அவரோ, "எப்படியும் மூன்று நாளைக்குள் முடித்தாகணும்'' என்றார்.

    அவர் இப்படிச் சொன்னதும் நான் இன்னும் கோபமாகி, "மூன்று நாட்களுக்கும் மேலாக ரீரிக்கார்டிங் போனால் என் சம்பளப்பணத்தை நீங்கள் தரவேண்டாம். அதை ஆர்க்கெஸ்ட்ராவுக்கு கொடுத்து விடுங்கள்'' என்றேன்.

    கலைஞானம் பதில் எதுவும் சொல்லாமல் போய்விட்டார்.

    ரீரெக்கார்டிங் தொடங்கியாயிற்று. படத்தின் ஆரம்பத்திலேயே கிளைமாக்ஸ் காட்சிகள் போல, ஹீரோவின் தங்கையை கெடுப்பது, அவளின் மரணம், அதன் இறுதிக்காட்சிகள், ஹீரோவின் சபதம், வில்லனின் ஆட்களோடு சண்டை என்று போய்க்கொண்டிருந்தது.

    எல்லா ரீல்களிலும் மிïசிக். மூன்று நாட்களுக்குள் முடியவில்லை. "சரி; அப்படியே இரவும் தொடர்ந்து வேலை செய்து முடித்து விடுங்கள்'' என்றார், கலைஞானம்.

    இதனால் இரவு 9 மணிக்கு முடிக்க வேண்டிய கால்ஷீட்டை முடிக்காது, இரவும் தொடர்ந்து வேலை செய்து அதிகாலை 4-30 மணிக்கு

    முடித்தோம்.கலைஞானத்திடம் `வருகிறேன்' என்றுகூட சொல்லாமல் கிளம்பினேன்.

    அப்போது அவர் நான் எதிர்பாராத ஒரு காரியம் செய்தார். என்னுடைய பாக்கி சம்பளத்தை கையில் வைத்தார்.

    "நீங்கள்தான் பணம் இல்லை என்றீர்களே?'' என்று கேட்டேன்.

    "பரவாயில்லை. கலைஞர்கள் வயிறெரியக்கூடாது'' என்றார், கலைஞானம்.

    நான் அவரிடம், "வேண்டாம். எனக்கு வருத்தமில்லை'' என்றேன்.

    அவரோ, "இல்லையில்லை, கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு பேசிய தொகை கொடுத்தால்தான் மரியாதை'' என்று சொன்னவர், மேற்கொண்டு என்னை எதுவும் பேசவிடாமல் கையில் பணத்தை வைத்தார்.

    ஜெய்சங்கர், ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம் காயத்ரி. இதில் "வாழ்வே மாயமா?'' என்ற பாடல், நல்ல பாடலுக்கு இசையமைத்தோம் என்ற திருப்தியை தந்தது.

    இந்தப் படத்தில்தான் இந்தியத் திரை இசையில் முதன் முதலாக `எலெக்ட்ரிக் பியானோ' உபயோகிக்கப்பட்டது.

    தொடர்ந்து டி.என்.பாலு இயக்கிய "ஓடி விளையாடு தாத்தா'' என்ற காமெடிப் படத்துக்கு இசையமைத்தேன். இது சோபியா லாரன்ஸ் நடித்த "ரோமன் ஹாலிடே'' என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல்.

    பத்ரகாளியை அடுத்து ஏ.சி.திருலோகசந்தரின் "பெண் ஜென்மம்'' படத்திற்கும் என்னையே இசையமைக்க அழைத்தார். இந்தப் படத்தில் `செல்லப்பிள்ளை சரவணன்' என்ற பாடல் எனக்கு பிடிக்கும். இப்போது கேட்டாலும், அதில் மூன்றாவது சரணத்திற்கு முன்வரும் இசையை கேட்கும்போது மெய்சிலிர்க்க வைக்கும்.

    ஸ்ரீதேவி நடித்த `சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' என்ற படம் வித்தியாசமான கதைக் கருவைக் கொண்டது. ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் தாய்மார்கள், இருட்டும்வரை தங்களிடம் வேலை வாங்கும் முதலாளிகளைப் பார்த்து கெஞ்சுகிற முறையில் பாடும் பாடலான

    "தண்ணி கறுத்திருச்சு - மணித்தங்கமே

    தவளை சத்தம் கேட்டுருச்சு - ஒயில் அன்னமே

    புள்ளையுமே அழுதிருச்சு - மணித்தங்கமே

    புண்ணியரே வேலை விடு''

    - என்று ஒரு பாட்டு இருக்கிறது.

    சூரியன் மறைந்ததால், தண்ணீரில் இருட்டுப்பட்டு கறுப்பாகிவிட்டது. தவளைகள் கூட கத்துகின்றன. தொட்டிலில் தூங்க வைத்த பிள்ளையும் பசியால் அழுகிறது. புண்ணியவானே காலையில் இருந்து இருட்டும் வரை வேலை செய்து விட்டோம். இப்போது அந்தக் குழந்தைக்கு பாலூட்டுவதற்காகவாவது செய்த வேலை போதும் என்று சொல்லி, எங்களை விட்டுவிடு'' என்று கெஞ்சும் பாடல் இது.

    இந்த மெட்டை இந்தப் படத்தில் அதன் வார்த்தைகளை விட்டு விட்டு, வேறு வார்த்தைகளை வைத்து கவிஞர் வாலி பாட்டு எழுதினார். இது ஒரு தாலாட்டுப்பாடல் போல் படத்தில் உபயோகப்படுத்தப்பட்டது.

    "துணையிருப்பாள் மீனாட்சி'' என்ற படத்தில் `சுகமோ ஆயிரம்' என்று ஒரு பாடல் பிரபலம். இந்தப்படம் தொடர்பான ஒரு விஷயம் சொல்லவேண்டும்.

    "சரசா பி.ஏ'' என்ற படத்தை எடுத்த தயாரிப்பாளர் நடராஜன், திருச்சி ரங்கராஜன் என்பவருடன் சேர்ந்து பி.ஆர்.சோமு டைரக்ஷனில் "உயிர்'' என்ற படத்தை ஜெமினி ஸ்டூடியோ உதவியோடு தயாரிக்க இருந்தார்.

    ஏற்கனவே திருவையாறு ரமணஸ்ரீதர் - சரளா கச்சேரிகளுக்கு நான் வாசித்திருக்கிறேன்.

    ரமணி (ரமணிஸ்ரீதர்) இன்றைய நடிகர் ராகவேந்தர். இவர் தயாரிப்பாளர்களுக்கு நண்பர்.

    என்னைப்பற்றிசொல்லி இந்தப் படத்துக்கு இசையமைக்க வைக்கலாம் என்று சிபாரிசு செய்திருந்தார்.

    அதற்கு அவர்களோ, "முதன் முதலில் அவருக்கு படம் கொடுத்ததே நாம்தானே. அதற்கும் நீதானே சிபாரிசு செய்தாய். ஜெமினிகணேசன் - பத்மினி நடிக்க தாதாமிராசி டைரக்ஷனில், வாசு ஸ்டூடியோவில் டி.எம்.சவுந்தர்ராஜன் பாட, `சித்தங்கள் தெளிவடைய சிவனருளை நாடு' என்று அமரன் பாட்டெழுதி ரெக்கார்டு செய்து படம் நின்று போயிற்றே! அந்த ராஜாவைத்தானே சொல்கிறாய்?'' என்று ரமணியை கேட்டிருக்கிறார்கள்.

    "இல்லையில்லை. அது ஏதோ அசந்தர்ப்பம். அதற்காக திறமை உள்ளவர்களை தள்ளி வைத்தால் எப்படி?'' என்று பதிலுக்கு இவர் கேட்டிருக்கிறார்.

    இப்படிச் சொன்னதும் அவர்கள், "சரி சரி! ஒரு 5 பாடல்கள் ரெக்கார்டு செய்து கொடுக்கட்டும். ஏனென்றால் ஜெமினி ஸ்டூடியோவின் ஆதரவில் இந்தப்படம் வரவேண்டியிருக்கிறது. அதற்கு அவர்களிடமும் ஒப்புதல் வாங்க இந்தப் பாடல்கள் உதவியாக இருக்கும்'' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    ரமணி எங்களிடம் வந்து இதைச் சொல்ல, ஸ்டூடியோவுக்கும் ஆர்க்கெஸ்ட்ராவுக்கும் என் கையில் இருந்த பணத்தைப்போட்டு ரெக்கார்டிங்குக்கு ஏற்பாடு செய்தேன்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வசந்தா, சரளா, ரமணி பாடினார்கள். ஒரே நாளில் 5 பாடல்கள் பதிவாயின. ஜெமினி ஸ்டூடியோவில் கோடீஸ்வரராவ் என்ற என்ஜினீயர் பாடல்களை பதிவு செய்தார்.

    பாடல்கள் "ஓ.கே'' ஆயின. பூஜைக்கு நாள் குறிக்கப்பட்டது.

    இப்போது போல, அப்போதெல்லாம் பூஜைக்கு அழைப்பிதழோ, போஸ்டர்களோ அடிக்கும் பழக்கம் இல்லை.

    பூஜை, பாடல் பதிவு அவ்வளவுதான். எல்லாரையும் நேரிலோ, போனிலோ அழைத்து விடுவார்கள்.

    பூஜைக்கு முதல் நாள். ரமணி காமராஜர் சாலையில் நாங்கள் இருந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்.

    அப்போது நான் வீட்டில் இல்லை. இந்த ரமணி எப்போதுமே துறுதுறுவென்றிருப்பார். டிபன் சாப்பிட்டு விட்டு ஓட்டலில் இருந்து வெளியே பீடா ஸ்டாலில் பீடா போட்டால், கடைக்காரரை குஷிப்படுத்த சத்தம் போட்டு ஏதாவது ஒரு பாடலைப் பாடுவார். இப்படிப்பாடும்போது ரோட்டில் டிராபிக்கோ, மாணவ, மாணவியரோ, ஜனங்களோ யார் வேடிக்கை பார்த்தாலும் கவலையே படமாட்டார். பாடி முடித்ததும் காசு கொடுத்துவிட்டு `கண்ணா நான் வரட்டுமா?' என்று கிளம்பிவிடுவார்.

    நாங்களெல்லாம் அவர் பாடுவதையும், சிவாஜி போல் நடித்துக் காட்டுவதையும் சிரித்த முகமாய் ரசிப்போம்.

    வீட்டுக்கு என்னைப் பார்க்க வந்தவர், காத்துக்கொண்டிருக்க முடியாமல் ஒருவித தவிப்பு நிலையில் இருந்திருக்கிறார். அம்மா அவரை "உட்காரு தம்பி'' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    உட்கார்ந்தவர் என் ஆர்மோனியப் பெட்டியை எடுத்து ஏதோ வாசிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

    எனக்கோ என் ஆர்மோனியம் உயிருக்கு மேல். அதை யாரையும் தொடவிடமாட்டேன்.

    என் ஆர்மோனியத்தை இவர் வாசிப்பதை பார்த்ததும் எனக்கு கோபம் வந்துவிட்டது.

    "ஏய்! யாரைக் கேட்டு இதைத் தொட்டாய்?'' எப்படி நீ இதைத் தொடலாம்?'' என்று கன்னாபின்னா என்று சத்தம் போட்டேன்.

    அவர் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. நான் கத்தியதில் ஏற்பட்ட அதிர்ச்சியையும், அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். என்றாலும் அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்டு, "ஏய் ராஜா! என்னய்யா இது? இந்த சின்ன விஷயத்துக்கு ஏன் இவ்வளவு கோபம்?'' என்று என்னை சமாதானப்படுத்த முனைந்தார்.

    ஆனால் நான் சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு அப்போது இருந்தேன். இதனால் மேலும் கத்திவிட்டேன்.

    ஒரு கட்டத்தில் ரமணியால் தாங்கமுடியவில்லை. உடனே அவருக்கும் கோபம் வந்து, "ஏய்! என்னை இந்த (ஆர்மோனியம்) பெட்டியைத் தொடக்கூடாதுன்னு சொல்லி திட்டிட்டே இல்லே? உன் முன்னால் நான் மிïசிக் டைரக்டரா ஆகிக்காட்டலைன்னா நான் ரமணி இல்லை'' என்று சபதம் செய்தார்.

    நானும் விட்டேனில்லை. "நீ மிïசிக் டைரக்டராகு. பேர் எடு. அதனால எனக்கொண்ணும் இல்லை. என் இடம் எனக்குத்தான். உன் இடம்  உனக்குத்தான். ஆனால் நீ ஒரு பாடகனா இந்த சினிமாவில் பேர் எடுக்கவே முடியாது'' என்று கண்மூடித்தனமாக வார்த்தைகளை

    விட்டுவிட்டேன்.அடுத்த நாள் பூஜையில் "உயிர்'' படத்துக்கு ரமணி இசையமைப்பாளர். அவரது இசையில் பாடல் பதிவானது. ரமணி, ரமணஸ்ரீதர் ஆகிவிட்டார்.

    இந்தப் படத்துக்கு நான் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த பாடல்களில் ஒன்றான `புது நாள் இன்று தான்' என்று அமரன் எழுதி வசந்தா பாடிய பாடல், இப்போது "சுகமோ ஆயிரம்'' என்று எஸ்.பி.பி.யும், பி.சுசீலாவும் பாட, `துணையிருப்பாள் மீனாட்சி' படத்தில் இடம் பெற்றது.
    "பைரவி'' படத்தை பட அதிபர் கலைஞானம் தயாரித்தபோது, மெட்டமைத்த பாடலை விநியோகஸ்தர்களுக்காக பாடிக்காட்டும்படி இளையராஜாவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
    "பைரவி'' படத்தை பட அதிபர் கலைஞானம் தயாரித்தபோது, மெட்டமைத்த பாடலை விநியோகஸ்தர்களுக்காக பாடிக்காட்டும்படி இளையராஜாவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.

    கலையுலக அனுபவங்கள் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "பாடல்களில் புதுமை என்பது எனக்குப் பிடித்த விஷயம். கிடைக்கிற வாய்ப்புக்களில், அதற்காக முயற்சிக்கவும் செய்வேன். ஆனால் அம்மாதிரி முயற்சிகளுக்கு வார்த்தைகள் மூலம் முதலிலேயே முட்டுக்கட்டை போடுவதும் தொடர்ந்தே நடந்தது.

    ஆரம்பத்தில் ஜி.கே.வி.யிடம் கன்னடப்படங்களுக்கு பணியாற்றியபோதும், இம்மாதிரி நிறைய அனுபவங்கள் உண்டு. அழகான இலக்கியத் தரம் வாய்ந்த பாடல் அமையும்போது, வினியோகஸ்தர்கள் யாராவது தற்செயலாக வந்து கேட்க நேர்ந்தால், அப்போது அவர்கள் அடிக்கும் கமெண்ட் மிகவும் மட்டமாக இருக்கும்.

    கன்னடத்தில், "உச்சா ஹாடு நமகு யாத்தக்கே?'' (இது மூத்திரப்பாட்டு - நமக்கெதற்கு) என்பார்கள்.

    அதாவது, தியேட்டரில் படம் பார்ப்பவர்களை, பாத்ரூமுக்குப் போகவைக்கும் பாட்டாம்.

    ஒரு சமயம் பஞ்சு சாரையும், என்னையும் பார்த்த ஒருவர், "இந்த `மச்சானைப் பார்த்தீங்களா?' மாதிரி ஒரு டாப் கிளாஸ் பாடல் ஒண்ணு போடலாமே'' என்றார்.

    "அந்தப் பாடலை யாரும் கேட்காமல் நாமே தானே போட்டோம்'' என்று நானும் பஞ்சு சாரும் பேசிக்கொண்டோம். அதை இவர் போன்றோருக்கு எப்படிப் புரியவைப்பது?

    அதுமாதிரி "கவிக்குயில்'' படம் ரிலீசானபோது இந்த கசப்பை நான் அனுபவிக்க நேர்ந்தது. படத்தில் `காதல் ஓவியம் கண்டேன்' என்ற அந்தப் பாடலை தியேட்டர் ஆபரேட்டரிடம் சொல்லி வெட்டி வைத்து விட்டுத்தான் ஓட்டினார்கள்.

    `இவர்கள் இப்படித்தான் மட்டம் தட்டுவார்கள்' என தெரிந்து வைத்திருந்ததால் பொருட்படுத்தாமல் இருப்போம். அதோடு நிறைய வேலை இருந்ததால், இதையெல்லாம் கேட்டு வருத்தப்படவும் நேரமில்லை. நாங்கள் பாட்டுக்கு காட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகு போல, சினிமா வெள்ளத்தில் விழுந்து வெற்றி அலைகளுக்கு எழும்புவதும், தோல்விப் பள்ளங்களில் வீழ்வதும் இல்லாது, மணற்பாங்கான பகுதியில் அமைதியாக ஓடும் ஆறு போல ஒரே சீராக போய்க்கொண்டிருந்தோம்.

    ஆரம்ப காலங்களில் என் நண்பன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்தால், மைக் முன்னால் ரிகர்சலின் போது ஒரு காரியம் செய்வான். அன்று அவன் பாட வேண்டிய பாட்டு எந்த ஸ்ருதியில் என்ன ராகத்தில் இருக்கிறதோ, அதே ராகத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் கம்போஸ் செய்த பாடலை பாடிக்காட்டுவான்.

    எனக்கோ, இதை நான் எம்.எஸ்.வி.யிடம் இருந்து காப்பியடித்து விட்டேன் என்று சொல்வது போல குத்தும்.

    இப்படி நான் நினைக்க காரணமிருக்கிறது. சிறு வயதில் பாவலர் அண்ணன் கச்சேரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்த பாடலை வாசிக்க, ஜனங்கள் கை தட்டினால், இந்த கைதட்டல்கள், பாராட்டுகள் எல்லாம் இதை இசை அமைத்தவர்களுக்குத்தான் போய்ச் சேரவேண்டும், ஜனங்கள் எனக்காக கைதட்டவில்லை என்பதில் தெளிவாக இருந்தவன் நான்.

    இன்னொருவரின் டிïனை நான் காப்பியடித்தால் அதனால் எனக்கு எப்படி பெயர் வரும்? கம்போஸ் பண்ணியவருக்கல்லவா அது போய்ச்சேரும். அந்த ஸ்ருதியில் இருக்கும் பாடல் என்ற ஒரே காரணத்துக்காக, அதன் காப்பி என்று எஸ்.பி.பி. சொல்கிறானோ என்று மனம் துக்கப்படும்.

    பாடல் வெளிவந்து ஜனங்கள் பாராட்டியவுடன் அவனே வந்து, "டேய்! அந்தப் பாடல் ரொம்பப் பிரமாதம், அதைப் பாடும்போது இப்படி வரும் என்று தெரியாது'' என்று நல்லபடியாகப் பேசிவிடுவான்.

    இசையில் புதுப்புது முயற்சிகளுக்கு நான் தயாராக இருந்ததால், நாளடைவில் எஸ்.பி.பி.யும், எஸ்.ஜானகியும் கூட, `ராஜா! உங்க ரெக்கார்டிங்கிற்கு வருவதாக இருந்தால் பரீட்சைக்கு போகும் மாணவன் மாதிரி பயந்து கொண்டே வரவேண்டியிருக்கிறது' என்று சொல்லியிருக்கிறார்கள்.  எல்லாம் ஜாலியாகத்தான். புதுமை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்போது அவர்களுக்கும்தானே பெயர்!

    ஆனால் இன்று வரை நான் யாருக்கும் பரீட்சை வைக்கவில்லை. எனக்கு நானே ஒவ்வொரு படத்திலும் பரீட்சை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு படத்திலும் கற்றது எவ்வளவு என்று கணக்குப் பார்த்துக் கொள்கிறேன்.''

    அண்ணன் பாஸ்கர் அடிக்கடி போய் சந்திக்கும் நண்பர்களில் ஒருவர் கலைஞானம். அவர் அப்போது தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் இருந்தார். அங்கே அவருடன் தூயவன், மகேந்திரன் ஆகியோரும் இருந்தார்கள்.

    கலைஞானம் நல்ல கதை ஞானம் உள்ளவர். அவர் ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும், டைரக்டர் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்த பாஸ்கர் டைரக்ட் செய்யப் போவதாகவும், படத்தில் ரஜினி - ஸ்ரீபிரியா ஜோடியாக நடிப்பதாகவும் கூறினார். இந்தப் படத்துக்கு இசையமைத்துத்தர என்னைக் கேட்டார். ஒப்புக்கொண்டேன்.

    படப்பிடிப்பு தொடங்கியது. முதல் நாள் செட்டில் ரஜினியை பார்த்துப் பேசினேன். அன்றைய தினம், கால் நொண்டியானதும் எடுக்க வேண்டிய பகுதிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

    டைரக்டர் கே.பாலசந்தர் சாரிடம் இரண்டு ஹீரோக்களாக கமலும், ரஜினியும் நடித்துக் கொண்டிருந்தவர்கள், தனித்தனியாக நடிக்க முடிவெடுத்த நேரத்தில் ரஜினிக்கு இந்தப் படம் வந்திருந்தது.

    இது தனி ஹீரோ படம். அடுத்து "புவனா ஒரு கேள்விக்குறி'' என்ற படத்தில் சிவகுமாருடன் சேர்ந்து நடிக்கப் போகிறார் என்றும் ஒரு செய்தி வந்தது.

    ரஜினியை ஷூட்டிங்கில் பார்த்தபோது, ஒரு நெருப்பு கனன்று கொண்டிருப்பது போல் தெரிந்தது. எனக்குள்ளும் தான் அப்படியொரு `நெருப்பு' ஓடிக்கொண்டிருந்தது. எங்கள் இருவருடைய பேச்சும், சாதிக்க வேண்டிய இலக்கு பற்றியே வெறியோடு இருந்தது.

    "பைரவி'' பட செட்டில் கலைஞானமும் பாஸ்கரும் என்னிடம், "தேவையான பாடலை உடனடியாக ரெக்கார்டு செய்ய வேண்டும்'' எனச்சொன்னார்கள்.

    கவிதா ஓட்டலில் கவியரசர் கண்ணதாசனுடன் கம்போசிங்கிற்கு போனோம்.

    டைரக்டர் பாடலுக்கான `சிச்சுவேஷன்' சொல்ல, "நண்டூருது நரிïருது'' என்று கிராமப்புறத்தில் பாடப்படும் குழந்தைகளின் விளையாட்டுப் பாடலை பல்லவியாக வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எனவே டிïனை `நண்டூருது நரிïருது' என்ற சந்தத்தை வைத்தே தொடங்கியிருந்தேன்.

    கண்ணதாசனும் `நண்டூருது' என்றே தொடங்கி, தங்கையை இழந்து நிற்கும் அண்ணன், தங்கையை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் சரணத்தில், உச்சஸ்தாயியில் "ஏழைக்கு வாழ்வு என்று எழுதியவன் எங்கே?'' என்று எழுதியவுடன், பாடலின் வல்லமை எங்கேயோ உயரத்துக்குப்

    போய்விட்டது.இந்தப் பாடலுக்கான காட்சி படமாக்கப்படும்போது, நான் இருந்தேன். டி.எம்.சவுந்தர்ராஜன் பாடிய அந்த அருமையான ஆண்மைக் குரலின் வார்த்தைகளுக்கு, ரஜினி காலிழந்து கட்டைகளோடு நிற்க, ஒரு டிராலி ஷாட் போட்டு ரஜினியிடம் காமிரா போய் நிற்பதாக எடுத்தார், டைரக்டர் பாஸ்கர்.

    எடுக்கும்போதே அந்த `ஸ்பிரிட்' தெரிந்தது. அது படத்தின் வெற்றிக்கு முக்கியமாக அமைந்தது.

    இந்தப் படத்திலேயே `கட்டப்புள்ள குட்டப்புள்ள' என்ற கிராமியப் பாடலையும் டைரக்டரும், கலைஞானமும் போடச் சொன்னார்கள். கவிதா ஓட்டலில் கம்போஸ் நடந்தபோது, கலைஞானம் என்னைக் கேட்காமல் வினியோகஸ்தர்கள் சிலரை வரவழைத்து விட்டார். அதில் குடந்தையைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார்.

    அவர்களைப் பார்த்ததும் ஏற்கனவே கவிக்குயில் பாடல் பதிவின்போது ஏற்பட்ட சம்பவம் நினைவுக்கு வர, இவர்கள் நம் பாடல் இப்படித்தான் வரவேண்டும் என்று தீர்மானம் செய்தால், நாம் புதிதாய் எதுவும் செய்ய முடியாது என்பது புரிந்து போயிற்று. எனவே யாராவது "பாடலை பாடிக்காட்டுங்கள்'' என்று கேட்டால், பாடக்கூடாது என்று முடிவு செய்தேன்.

    பாடல்களை கவியரசரும் எழுதிவிட்டார். எல்லாவற்றையும் முழுமையாக பாடிவிட்டேன்.

    இந்த நேரத்தில் கலைஞானம், வினியோகஸ்தர்களை அழைத்து வந்தார். கவியரசருக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு என்னைப் பார்த்து "பாடலைக் கொஞ்சம் வாசித்துக் காட்டுங்கள்'' என்றார்.

    ஆனால், நானோ எல்லாரும் ஆவலுடன் பாட்டை எதிர்பார்த்தும் ஆர்மோனியத்தை மூடிவிட்டு எழுந்து விட்டேன்.

    எழுந்தவன் கலைஞானம் அவர்களிடம் கூலாக, "இங்கே பாடினா ஒன்றும் புரியாது. டி.எம்.எஸ் - சுசிலாவை பாட வைத்து மிïசிக்கோடு ரெக்கார்டு செய்து போட்டுக் காட்டிவிடுவோம். அப்போது நன்றாக இருக்கும்'' என்றேன்.

    நான் இப்படிச் சொன்னதும் அங்கிருந்த யாருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை.

    கண்ணதாசன் இதுபோன்றதொரு நிகழ்ச்சியை பார்த்ததில்லை என்பது அவர் எங்களைப் பார்த்த பார்வையில் இருந்தே புரிந்து போயிற்று.

    ரிக்கார்டிங் சமயத்தில் எனக்கும் கலைஞானத்துக்கும் ஒரு தகராறு.

    "மூன்று நாளைக்குள் ரிக்கார்டிங்கை முடிக்கத்தான் பணம் இருக்கிறது. அதனால் எப்படியாவது மூன்று நாளைக்குள் முடித்து விடுங்கள்'' என்றார், கலைஞானம்.

    இதுவரை இதுபோன்றதொரு பிரச்சினையை சந்தித்து இராததால், கலைஞானம் இப்படிச் சொன்னதும் எனக்கு கோபம் வந்துவிட்டது.
    ×