என் மலர்
மதன் வலையில் வர்ஷா வீழ்ந்தது சுவாரஷ்யமானது. திருப்பூரில் நவநாகரீகத்தை விரும்பும் பெண்களுக்கு எஸ்.ஏ.பி. தியேட்டர் அருகே உள்ள ‘வீஸ்போட்டிக்’ என்ற நாகரீக ரெடிமேட் கடையை தெரியாமல் இருக்காது. அதுதான் வர்ஷா நடத்தி வரும் கடை. இந்த கடையில் நான்கைந்து பெண்கள் வேலை பார்க்கிறார்கள்.
வர்ஷாவுக்கு மிகவும் பிடித்தமானது ஆடை வடிவமைப்பு. செல்வ செழிப்பான தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்த வர்ஷா பள்ளிப் படிப்பை தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் முடித்தார். பின்னர் பேஷன் டிசைனிங் பட்டப்படிப்பை முடித்தார்.
35 வயதாகும் வர்ஷாவுக்கு திருமணமாகி விட்டது. ஸ்ரீராம் (16), தருண் (7) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.பேஷன் டிசைனிங் தொழிலில் இறங்கிய வர்ஷா நடிகைகளுக்கு ஆடை வடிவமைத்தும் கொடுத்தார். திரை உலக தொடர்பு ஏற்பட்டதும் வீட்டுக்குள் பிரச்சினை எழுந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நிரந்தர பிரிவுக்கு வழிவகுத்தது.
6 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த வர்ஷா தனது குழந்தைகளுடன் தனிக்குடித்தனத்தை தொடங்கினார். அவினாசியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்தபோது துணை நடிகைகள் போல் அழகிய பெண்கள் பலர் வந்து போனார்கள். இதனால் குடியிருப்பு வாசிகள் துரத்தினார்கள்.
அங்கிருந்து வெளியேறிய வர்ஷா தற்போது குடியிருக்கும் பூண்டி அருகில் உள்ள ஜி.வி.கார்டன் பங்களா வீட்டுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு குடிவந்தார்.
கீழ்தளத்தில் இரண்டு படுக்கையறை, மிகப்பெரிய ஹால், சாப்பாட்டு அறை, மேல்தளத்தில் இரண்டு அறை, சுற்றிலும் தோட்டத்துடன் பிரமாண்டமாக இருக்கும் இந்த வீட்டுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வாடகை கொடுத்து வருகிறார்.
சினிமா துறையினருடன் தொடர்பு ஏற்பட்ட போதுதான் வர்ஷாவுக்கும் மதனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வர்ஷாவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையும் இருந்துள்ளது. இதனால் பட தயாரிப்பாளரான மதனிடம் நெருங்கி பழகி வந்தார். மதனும் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களிடையே நெருக்கம் அதிகரித்தது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருந்தால்தான் பிரச்சினை வருகிறது என்பதால் இந்த தனிவீட்டை தேர்வு செய்துள்ளார். இந்த பகுதியில் சுமார் 15 பங்களா வீடுகள் உள்ளன. ஆள் அரவமற்ற இந்த பகுதி வர்ஷாவின் தனி வாழ்க்கைக்கு வசதியாக இருந்துள்ளது.
மதனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வர்ஷாவை சந்திக்க அடிக்கடி மதன் சென்றுள்ளார். தான் பிரச்சினையில் சிக்கி இருப்பதையும், போலீஸ் மோப்பம் பிடித்து வடமாநிலங்களிலும் தேடி வந்ததையும் தெரிவித்து வர்ஷா வீட்டில் தலைமறைவு வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.
பகல் நேரங்களில் மதன் வெளியே வருவதில்லை. அவர் வெளியே சுற்றுவதற்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளும் வாங்கி இருக்கிறார்கள். இரவு 7 மணிக்கு மேல் அந்த மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வெளியே செல்வாராம்.. மீண்டும் நள்ளிரவுதான் வீடு திரும்புவாராம்.
வர்ஷா வீட்டில் விலை உயர்ந்த 2 சொகுசு கார்கள் உள்ளன. மதன் அங்கு தலைமறைவாக இருந்தபோது அந்த காரில் அடிக்கடி கோவைக்கும் சென்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது காரை வர்ஷாதான் ஓட்டி செல்வாராம். கோவைக்கு எங்கு சென்றார்கள்? எதற்காக சென்றார்கள்? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
மதனை வீட்டுக்குள் மடக்கியதும் வர்ஷா நடுங்கி போனார். கடந்த 3 நாட்களாக கடையும் திறக்கவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார். இன்று பத்திரிகையாளர்கள் பலர் அந்த வீட்டின் முன்பு கூடியிருந்தார்கள். ஆனால் வர்ஷா வெளியே தலைகாட்டவில்லை.
அங்கு வந்த வர்ஷாவின் கார் டிரைவர் ‘அக்கா வீட்டில்தான் இருக்காங்க. என்ன விசயமா கூடி இருக்கீங்க?’ என்று அப்பாவித்தனமாக கேட்டு சென்றார்.
பால முரளியின் இயர் பெயர் முரளி கிருஷ்ணா. எட்டு வயதில் இவர் விஜயவாடாவில் நடந்த தியாகராஜ ஆராதனையில் பாடிய விதத்தை கண்டு ‘பால’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மங்களப்பள்ளி என்ற இடத்தில் 1930 ஆம் ஆண்டு பிறந்தவர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்தொண்டு புரிந்து வருகிறார். தாய் சூர்ய காந்தம்மாள், தந்தை பட்டாபி ராமய்யா. இருவருமே இசைக் கருவிகளை வாசிப்பதில் தேர்ந்தவர்கள். பாலமுரளி கிருஷ்ணா ஐந்து வயதிலேயே இசை ஆர்வம் காட்டினார்
ஐந்து வயதில் ராகத்தைக் கண்டுபிடிக்கும் ஞானமும், தாள லயமும், ஏழு வயதில் கச்சேரி செய்யும் அளவுக்கு வித்வமும் பாலமுரளிக்கு வாய்த்துவிட்டன. இவர் 15 வயதிற்குள் 72 மேள கர்த்தாக்களையும் ஆளும் திறமையும் அவற்றை பயன்படுத்தி கிருதிகளை உருவாக்கும் திறமையையும் பெற்றிருந்தார். இசை ஆர்வம் காரணமாகப் பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டார்.
இசை குறித்த இவரது ஆய்வுகள் வாழ்நாள் சாதனையாகும். இசை வைத்தியத்தில் நம்பிக்கைக் கொண்டவர். அது குறித்து பல ஆராய்ச்சிகள் செய்தவர். தெலுங்கு, கன்னட, சம்ஸ்கிருத, மலையாள, பெங்காலி, பஞ்சாபி, ஹிந்தி மொழிகளில் பெரும் புலமை உடையவர்.
400-க்கும் மேற்பட்ட இசைத்தொகுப்புக்களை 72 மேளகர்த்தாக்களை கொண்டு உருவாக்கிய பெருமை இவருக்கே உரியதாகும். பல புதிய ராகங்களைக் கண்டுபிடித்து சாதனை படைத்தவர். சந்த ஒலிகளைக் கோர்வையாக்கித் தாளச் சங்கிலியில் கதி பேதத்தைக் கொண்டு வந்து, புதிய தாள முறைகளை உருவாக்கிய பெருமை உடையவர்.
தில்லானாக்களில் சங்கதிகளைப் புகுத்தி புதுமை செய்தவர். இப்படிப் பல சாதனைகளை செய்திருந்தாலும் கூட இவரது புதிய முயற்சிகள் கடுமையாக விமர்சிக்கபட்டுள்ளன. முதன் முதலாக 72 மேளகர்த்தாக்களில் முதல் ராகமான கனகாங்கி ராகத்தில் கீர்த்தனையைத் தொடங்கி புதுப்புது கீர்த்தனைகளைப் பாடி, இசைக்கல்லூரியின் முதல்வராகி, சென்னைக்கு வந்து இசைமேதையாகி, சரஸ்வதி கடாட்சத்துடன் இசையுலகின் உயரிய விருதுகள் அனைத்தும் பெற்று சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர் பால முரளி கிருஷ்ணா.
இவர் வாங்கிய விருதுகள் கலை விலைக்குள் கட்டுப்படாதது. ஆனாலும் திமிர்ந்த ஞானம் என்பது அங்கீகாரங்களுக்குத் தலை வணங்குவதே பண்பாகும். டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் குரலும், ஞானமும், ஆய்வும், கண்டுபிடிப்புகளும் பல பட்டங்களைப் பெற்றுத் தந்தன. அவற்றில் சில பத்ம பூஷன், பத்ம விபூஷன், செவாலியே போன்றவையாகும். 2 முறை தேசிய விருதுகளும் வாங்கியுள்ளார்.
‘பக்த பிரகலாதன்’ படத்தில் நாரதராக நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையில் இவர் பாடிய ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்ற பாடல் அந்நாளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வகையில் ‘திருவிளையாடல்’ படத்தில் ‘ஒரு நாள் போதுமா?’, ‘நூல்வேலி’ படத்தில் ‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியும்’, ‘பசங்க’ படத்தில் ‘அன்பாலே அழகாகும் வீடு’ இன்னும் சில பாடல்கள் அடங்கும். சுமார் 400 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகளை நடத்தியுள்ளார்.
பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தென்இந்திய நடிகர் சங்க பொதுக்குழு வருகிற 27- ந் தேதி சென்னை லயோலா கல்லூரியில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பொதுக் குழுவுக்கு தடைவிதிக்க கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சங்க விதிகளுக்கு எதிராக இது நடத்தப்படுவதால் தடைவிதிக்க வேண்டும் என்று இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இதற்கு வருகிற 25-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தென் இந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷாலுக்கு கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தென் இந்திய நடிகர்சங்க பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒருமனு கொடுத்தனர்.
அதில், ‘27-ந் தேதி நடைபெற இருக்கும் தென் இந்திய நடிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர். மனு கொடுத்தபிறகு நிருபர்களிடம் கூறிய கார்த்தி, தகுந்த பாதுகாப்பு அளிப்பதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர் என்று தெரிவித்தார்..
மேலும், அப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஜி.வி.பிரகாஷுக்கு, தன்னுடைய அடுத்த படத்தில் நல்ல வாய்ப்பு தருவதாகவும், அந்த வாய்ப்பை அவர் ஏற்றுக்கொள்ள தயாரா? என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும்விதமாக ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்விக்கு ஜி.வி.பிரகாஷ் அளித்த பதிலில், உங்கள் கதை எனக்கேற்றவாறு நல்ல கதையாக இருந்தால் கண்டிப்பாக நடிக்கிறேன். நானும், ‘காக்கா முட்டை’, ‘பரதேசி’, ‘ஆடுகளம்’ போன்ற படங்களில் பணியாற்றியவன்தான். கூடிய விரைவில் நாம் கண்டிப்பாக சந்திப்போம் என்று கூறியுள்ளார்.
‘2.0’ படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டு விழா மும்பையில் நவீன தொழில்நுட்பத்துடன் கோலாகலமாக நடந்தது. தொகுப்பாளர் அழைப்பை ஏற்று மேடைக்கு ரஜினி வந்தார். சிறிது நேரத்தில் அரங்கின் நடுவில் ஒரு ஷோபாவில் எந்திரன் சிட்டி வேடத்தில் இன்னொரு ரஜினி கால்மேல் கால் போட்டபடி ஸ்டைலாக உட்கார்ந்து இருந்தார். இப்போது மேடையில் ரஜினி இல்லை.
இந்த காட்சியை இயக்குனர் ஷங்கர் ஏற்கனவே படமாக்கி, ‘ஹோலோகிராம்‘ செய்து நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கி இருந்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர் கரண் ஜோஹர் கேள்வி கேட்க அதற்கு ரோபோ சிட்டி ரஜினி பதில் அளித்தார்.
இவ்வளவு வேகமாக எப்படி அரங்கத்தின் நடுவில் வந்தீர்கள் என்று கரண் ஜோஹர் கேட்க, அதற்கு சிட்டி ரஜினி, ‘கண்ணா நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’ என்று சொல்ல. தமிழ் தெரியாத தொகுப்பாளர் விழிக்க, உடனே சிட்டி ரஜினி இந்தியில் அதை சொன்னதும், அரங்கமே கர ஒலியில் அதிர்ந்தது.
இது போல் தொடர்ந்து பதில் அளித்த அவரிடம் பாலிவுட்டின் ‘கிங்’ யார் என்று கேட்ட போது ‘மிஸ்டர் அமிதாபச்சன்’ என்று பதில் அளித்தார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு ரஜினியிடம் செய்தியாளர்கள், உங்கள் திரைப்படம் வெளியாகும் நாள் மட்டும் எப்படி தீபாவளி, புத்தாண்டு போல மாறி விடுகிறது? என்று கேட்க அதற்கு பதில் அளித்த ரஜினி, “ரசிகர்கள் தான் இதற்கு காரணம். அவர்கள்தான் எனது ஒவ்வொரு படவெளியீட்டையும் தீபாவளி போல மாற்றுகிறார்கள். அவர்கள் இல்லாமல் நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது” என்று கூறினார்.
வித்யாபாலன் சில வருடங்களுக்கு முன்பு தொழில் அதிபரும் சினிமா தயாரிப்பாளருமான சித்தார்த்ராய் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன்பிறகு கணவன்- மனைவி எங்கும் ஜோடியாக செல்வது இல்லை. இதனால் இருவரும் விவாகரத்து செய்யும் முடிவில் இருக்கிறார்கள் என்று செய்தி பரவியது.
இதற்கு பதில் அளித்துள்ள வித்யாபாலன், “எங்களுக்குள் இருக்கும் அன்பை நாங்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொண்டால் போதும். விழாக்களில் இடுப்பில் கையோட்டு ஜோடியாக நடந்து அதை செல்பி எடுத்து வெளி உலகுக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
நான் நடிகை. நடிப்பில் கவனம் செலுத்துகிறேன். அவர் தொழில் அதிபர். அதில் அக்கறை கட்டுகிறார். கணவன்-மனைவி என்பது எங்களுக்குள் இருக்கட்டும்” என்று கோபத்துடன் கூறி இருக்கிறார்.
இவர்களுடன் கட்டிட வேலைக்கு நாயகி உமாஸ்ரீ வருகிறாள். சித்தார்த்துக்கு அந்த பெண் மீது காதல் வருகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ள நினைக்கின்றனர். 5 நண்பர்களிடையே ஒரு பெண் குறுக்கிட்டதால், நட்பில் விரிசல் ஏற்படுகிறது. இவர்களை ஒன்றுசேர்க்கவும், அவர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வரவும் நாயகி முயற்சி செய்கிறாள்.
இந்த முயற்சியில் நாயகிக்கு வெற்றி கிடைத்ததா? நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.
சித்தார்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதலியின் அன்புக்கும், நண்பர்களின் நட்புக்கும் இடையே சிக்கித் தவிப்பதை பிரதிபலிக்கிறார். நாயகி உமாஸ்ரீயை சுற்றி கதை நகர்கிறது. அந்த பாத்திரமாகவே அவர் மாறி இருக்கிறார். அமரின் காதலியாகவும், முதலாளியின் மகளாகவும் வரும் மேக்னா கச்சிதம். கட்டிட மேஸ்திரி சிங்கம் புலி, ரசிக்க வைக்கிறார். முத்துக்காளை, உமா, கசாலி, ஷர்மிளா உள்ளிட்ட மற்றவர்களும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
ஐந்து நண்பர்கள் இடையில் ஒரு பெண் வந்தால் என்ன பிரச்சினைகள் வரும் என்பதை தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆர்வியார். அந்த பெண் நம்பிக்கை வைத்து, அவர்களின் வாழ்க்கையை மாற்றி அழகாக்குவது கதைக்கு பலம். மழைக்காலத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை அருமையாக காட்டியுள்ளார்.
காட்சிகள் திருப்பம் இல்லாமல் நகர்ந்தாலும், கிளைமாக்ஸ் எதிர்பாராதது. நண்பர்களின் கதையை இன்னும் ஆழமாக சொல்லி இருந்தால் படம் ஐந்தில் ஒன்றாக பேசப்பட்டிருக்கும். முதல்பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். என்றாலும், கட்டிட கூலி தொழிலாளர்கள் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்திருப்பது புதிய முயற்சி.
சாகித்யா இசையில் பாடல்களை ரசிக்கலாம். பின்னணியும் பரவாயில்லை. நந்து ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவு.
மொத்தத்தில் ‘அஞ்சுக்கு ஒண்ணு’ வித்தியாசமான சிந்தனை.
பலருடைய எதிர்ப்பையும் மீறி, "அன்னக்கிளி'' படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை இளையராஜாவுக்கு பட அதிபரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் வழங்கினார்.
படம் வெளிவரும் வரை இளையராஜாவுக்கு சோதனைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. படப்பிடிப்பு எல்லாம் முடிந்து, பின்னணி இசை சேர்ப்பு வேலை ("ரீரிக்கார்டிங்'') நடந்தபோதுகூட "இளையராஜாவுக்கு ரீரிகார்டிங் தெரியவில்லை. படத்தைக் கெடுக்கிறார்'' என்று சிலர் கூறினார்கள்.
பஞ்சு அருணாசலத்துக்கும், டைரக்டர் தேவராஜ×க்கும் இளையராஜாவின் ரீரிக்கார்டிங் பிடித்திருந்தது. எனவே, இளையராஜா பற்றி குறை சொன்னவர்களிடம் "உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள். இந்தப்பக்கம் வராதீர்கள்'' என்று கண்டிப்புடன் சொல்லி அவர்களை விரட்டி அடித்தார், பஞ்சு அருணாசலம்.
பஞ்சு அருணாசலத்தின் தம்பி லட்சுமணன், ஸ்டூடியோவுக்கு வந்த எம்.எஸ்.விஸ்வநாதனிடம், இளையராஜாவின் ரீரிக்கார்டிங் பற்றி குறை கூறியிருக்கிறார். அதற்கு எம்.எஸ்.வி, "அந்தப் பையனை எனக்குத் தெரியும். என் ரெக்கார்டிங்கில் வாசித்து இருக்கிறான். அவனுக்கு இசை பற்றி எல்லாம் தெரியும். தொந்தரவு செய்யாமல் அவனை விட்டு விடுங்கள். படத்துக்கு என்ன வேண்டுமோ அது வந்துவிடும்'' என்று சூடான பதில் கூறியிருக்கிறார்.
இளையராஜாவின் இயற்பெயர் ராஜையா. அதை "ராஜா'' என்று மாற்றியவர் தன்ராஜ் மாஸ்டர்.
இப்போது "அன்னக்கிளி'' டைட்டிலில் பெயரை எப்படிப் போடுவது என்று கேள்வி எழுந்தது. கச்சேரிகளில் பாவலர் பிரதர்ஸ் என்ற பெயர் பிரபலமாகியிருந்ததால், அந்தப் பெயரையே பயன்படுத்தலாம் என்று கூறினார் இளையராஜா.
"அது, ஆலத்தூர் பிரதர்ஸ், டி.கே.எஸ். பிரதர்ஸ் என்பது மாதிரி ரொம்பப் பழைய ஸ்டைல்!'' என்று பஞ்சு அருணாசலம் கூறினார். சற்று நேரம் யோசித்து விட்டு, "உன் பெயர் ராஜா. ஏற்கனவே, சினிமாவில் ஏ.எம்.ராஜா இருக்கிறார். பின்னணி பாடுவதுடன், சில படங்களுக்கு மிïசிக் டைரக்ஷனும் செய்திருக்கிறார். அவர் பெரிய ராஜா. நீ இளையராஜா! உன் பெயரை இளையராஜா என்று வைத்துவிடுவோம்''
என்றார்.அவர் சூட்டிய வேளை நல்ல நேரமாகவும், பெயர் ராசியான பெயராகவும் அமைந்தது. ஒருசில நாட்களிலேயே "இளையராஜா'' என்ற பெயர் தமிழக மக்களின் செல்லப் பெயராக அமைந்தது.
சிவகுமாரும், சுஜாதாவும் ஜோடியாக நடித்த "அன்னக்கிளி'' 14-5-1976ல் ரிலீஸ் ஆயிற்று.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கொடிகட்டிப் பறந்த காலக்கட்டம் அது. எனவே, "அன்னக்கிளி''க்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆரம்பத்தில் பெரிய கூட்டம் இல்லை. சில ஊர்களில் ஒரே வாரத்தில் படத்தை எடுத்து விட்டார்கள்.
படத்தைப் பார்த்தவர்கள் வெளியே வந்து, "படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, இளையராஜா என்ற புதிய இசை அமைப்பாளர் பாடல்களுக்கு போட்டுள்ள மெட்டுகள் அருமையாக உள்ளன'' என்று கூறியது, ரசிகர்களிடையே பரவியது. பத்திரிகைகளும் படத்தையும், இசையையும் பாராட்டி விமர்சனங்கள் எழுதின.
இதனால், தியேட்டர்களில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகியது. ஒரே வாரத்தில் படத்தை எடுத்த தியேட்டர்களில், மீண்டும் "அன்னக்கிளி'' திரையிடப்பட்டது.
15 நாட்களில் "அன்னக்கிளி'' திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு காட்சியும் "ஹவுஸ்புல்'' ஆனது.
"அன்னக்கிளி'' இசைத்தட்டு வெளிவந்து சக்கைபோடு போட்டது. "அன்னக்கிளி ஒன்னைத்தேடுது'', "மச்சானைப் பார்த்தீங்களா'', "நம்ம வீட்டுக் கல்யாணம்'' முதலான பாட்டுகள் ரேடியோவில் மாறி மாறி ஒலித்தன.
"அன்னக்கிளி'' 200 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது.
"இளையராஜா அனுபவம்
"அன்னக்கிளி'' வெளியானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, இளையராஜா கூறியதாவது:-
"அன்னக்கிளி இசைத்தட்டுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. கடைகளில் முன்பதிவு செய்து, இசைத்தட்டை வாங்கினார்கள்.
அப்போது டெலிவிஷன் கிடையாது. ரேடியோ தான். அந்த சமயம் அன்னக்கிளி பாடலை ரேடியோவில் ஒலிபரப்பினால் ஒரு வீட்டில் பாடலை வைப்பார்கள். அது அடுத்த வீடு, அடுத்த வீடு என்று தொடர்ந்து தெரு முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கும். இதை நான் மலயப்பநாயகன் தெருவில் வாக்கிங் செல்லும் போது பார்த்திருக்கிறேன். அதுவும் 6 மாதங்களுக்கு மேலாக நானே நேரடியாக கண்டு இருக்கிறேன்.
அன்னக்கிளிக்கு நான்தான் இசை அமைத்தேன் என்பது இரண்டு மூன்று வீடுகளைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது.
மக்கள் அந்த பாடல்களை கேட்க, கேட்க `எந்த பாடல் நன்றாக இருந்தாலும் அதை ரசிப்பார்கள்' என்று எண்ணினேனே தவிர, கர்வப்படவில்லை. சந்தோஷப்பட்டேன்.
என் பெயர் வெளியில் பெரியதாக பேசப்பட்டாலும், இன்று ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால், அவர்களையே சுற்றிவரும் கூட்டம்போல் அன்று
இல்லை.நானும் பெயர் வந்து விட்டது என்பதற்காக ஜி.கே.வி.யை விட்டு வெளியே வந்துவிட வேண்டும் என்று எண்ணவில்லை. கிட்டாரைத் தூக்கிக்கொண்டு, அவர் எங்கு போனாலும் பின்னால் போய்க்கொண்டிருந்தேன்.
போடிநாயக்கனூரில் ஒரு கச்சேரிக்கு சென்றிருந்தோம். அப்போது நாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன்பு என்னைப்பார்க்க அதிகமான கூட்டம். கூட்டம் கலைய வேண்டும் என்றால் நான் வந்து எனது முகத்தை காட்ட வேண்டும் என்று கூறினார்கள்.
நானும் கூட்டத்தினர் முன்பு வந்து நின்றேன். ஆனால் கூட்டத்தினரோ எனக்கு பின்னால் பார்த்துக்கொண்டு இருந்தனர். `என்னங்க! இன்னமும் இளையராஜாவை காணோம்' என்று ஒருவர் கேட்டார்.
என் அருகில் இருந்தவர், `இதோ இவர்தான்!' என்று என்னை சுட்டிக்காட்டினார்.
உடனே கூட்டத்தினர் கையை முகவாய்கட்டையில் வைத்து, "ஹூம்... இந்த பையன்தானா!'' என்று உற்சாகம் குறைந்தவர்களாக, காற்றுப்போன பலூன் மாதிரி ஆனார்கள்.
பெயருக்கு ஏற்றபடி ஒரு பெரிய அழகான வாலிபனாக எதிர்பார்த்தவர்களுக்கு, சின்னப்பையனாய்... பேண்டும், சட்டையும் கிராப்புமாய் இருந்தவனை `இளையராஜா' என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை! அதனால்தான் அவர்களுக்கு இவ்வளவு ஏமாற்றம்!''
இவ்வாறு இளையராஜா கூறினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது ஆண்டு பொதுக்குழு கூட்டமானது நவம்பர் 27-ம் தேதி லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முன்னணி திரை நட்சத்திரங்கள் மற்றும் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ் கொண்டுவரும் உறுப்பினர்கள் மட்டுமே இக்கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, லயோலா கல்லூரியில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னத்திரை நடிகர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சங்க பொதுக்குழுவிற்கு தடை கோரிய இந்த வழக்கில் பொதுச் செயலாளர் விஷாலுக்கு சென்னை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நவம்பர் 25-ம் தேதிக்குள் விஷால் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி, பீகார், மத்தியப் பிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முகாமிட்டு தொடர்ந்து தேடி வந்தனர். மதனின் நெருங்கிய தோழி கீதாஞ்சலி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தலைமறைவான பிறகு அவரிடம் மதன் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மதன் எங்கெல்லாம் சென்றிருந்தார்? என்பது தொடர்பாக அனைத்து விவரங்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றினர்.
எந்த பகுதிகளில் அவர் தங்கியிருந்தார்? என்பது தொடர்பான தகவல்களை சேகரித்துள்ள போலீசார் 4 மாநிலங்களிலும் முகாமிட்டு சாதாரண உடையில் அங்குள்ள தங்கும் விடுதிகளில் மதனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் இருந்து திருப்பூர் வந்த மதனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இத்தகவலை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார். திருப்பூரில் ஒரு பெண்ணை சந்திக்க வந்த இடத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இந்நிலையில், திருப்பூரில் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மதனிடம் குற்றப்பிரிவு போலீசார் இன்று தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. விசாரணை முடிந்ததும் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் நீதிமன்ற நேரம் முடிந்ததால், சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி பிரகாஷ் வீட்டில் மதன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரை 14 நாட்கள் அதாவது, டிசம்பர் 5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
டெல்லி, பீகார், மத்தியப் பிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முகாமிட்டு தொடர்ந்து தேடி வந்தனர். மதனின் நெருங்கிய தோழி கீதாஞ்சலி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தலைமறைவான பிறகு அவரிடம் மதன் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மதன் எங்கெல்லாம் சென்றிருந்தார்? என்பது தொடர்பாக அனைத்து விவரங்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றினர்.
எந்த பகுதிகளில் அவர் தங்கியிருந்தார்? என்பது தொடர்பான தகவல்களை சேகரித்துள்ள போலீசார் 4 மாநிலங்களிலும் முகாமிட்டு சாதாரண உடையில் அங்குள்ள தங்கும் விடுதிகளில் மதனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் இருந்து திருப்பூர் வந்த மதனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இத்தகவலை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சினிமா படங்களில் 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி சாதனை படைத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு ‘நூற்றாண்டின் சாதனையாளர்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு அவருக்கு வழங்கி கவுரவித்தார்.
அதையடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசும்போது கூறியதாவது:-
இந்த விருதை எனது தாயாருக்கும், நாம் எல்லோரும் இங்கே பாதுகாப்பாக இருப்பதற்காக தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். இந்த விருது எல்லையில் உள்ள அனைவருக்கும் சொந்தம். இதை உங்களுக்கு பெருமிதத்துடன் பணிவான முறையில் சமர்ப்பிக்கிறேன்.
இன்றும் திரைப்படத் துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக எனது பெற்றோர், என்னை அறிமுகம் செய்த குரு, பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோருக்கும் எனது பாடல்களை அன்று ரசித்தவர்கள் இன்றும் என்னை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதற்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.








