என் மலர்
கோவாவில் தொடங்கிய சர்வதேச திரைப்பட விழாவில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு உயரிய விருது வழங்கப்பட்டது.
கோவா மாநிலம் பனாஜி நகரில் 47-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. விழாவை மத்திய மந்திரி ஸ்ரீபாத நாயக், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சினிமா படங்களில் 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி சாதனை படைத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு ‘நூற்றாண்டின் சாதனையாளர்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு அவருக்கு வழங்கி கவுரவித்தார்.
அதையடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசும்போது கூறியதாவது:-
இந்த விருதை எனது தாயாருக்கும், நாம் எல்லோரும் இங்கே பாதுகாப்பாக இருப்பதற்காக தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். இந்த விருது எல்லையில் உள்ள அனைவருக்கும் சொந்தம். இதை உங்களுக்கு பெருமிதத்துடன் பணிவான முறையில் சமர்ப்பிக்கிறேன்.
இன்றும் திரைப்படத் துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக எனது பெற்றோர், என்னை அறிமுகம் செய்த குரு, பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோருக்கும் எனது பாடல்களை அன்று ரசித்தவர்கள் இன்றும் என்னை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதற்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாமல் போனதால் எனக்கு பாதிப்பு இல்லை என்று அமீர்கான் தெரிவித்துள்ளார்.
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட இந்தி திரையுலக பிரமுகர்கள் பலர் வரவேற்று உள்ளனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அரியானா மாநிலம் பலாலி என்ற கிராமத்துக்கு நேற்று சென்றிருந்த இந்தி நடிகர் அமீர்கானிடம், ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், “என்னைப் போன்ற பிரபலங்கள் ஏதாவது பேசுவதற்கே பயமாக இருக்கிறது. நாங்கள் ஏதாவது சொன்னால் வேறொரு அர்த்தத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்” என்றார்.
என்றாலும், தனது பணம் முழுவதும் வங்கியில் இருப்பதாலும், பணப்பரிவர்த்தனைகளை காசோலைகள் மூலமே செய்து கொள்வதாலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

இளையராஜா இசை அமைத்த முதல் படம் "அன்னக்கிளி'' மகத்தான வெற்றி! எல்லாப் பாடல்களும் `ஹிட்'இளையராஜா இசை அமைத்த "அன்னக்கிளி'' மாபெரும் வெற்றி பெற்று 200 நாட்கள் ஓடியது. ஒரே படத்தின் மூலம் புகழின் சிகரத்தை அடைந்தார் இளையராஜா.

பலருடைய எதிர்ப்பையும் மீறி, "அன்னக்கிளி'' படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை இளையராஜாவுக்கு பட அதிபரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் வழங்கினார்.
படம் வெளிவரும் வரை இளையராஜாவுக்கு சோதனைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. படப்பிடிப்பு எல்லாம் முடிந்து, பின்னணி இசை சேர்ப்பு வேலை ("ரீரிக்கார்டிங்'') நடந்தபோதுகூட "இளையராஜாவுக்கு ரீரிகார்டிங் தெரியவில்லை. படத்தைக் கெடுக்கிறார்'' என்று சிலர் கூறினார்கள்.
பஞ்சு அருணாசலத்துக்கும், டைரக்டர் தேவராஜிக்கும் இளையராஜாவின் ரீரிக்கார்டிங் பிடித்திருந்தது. எனவே, இளையராஜா பற்றி குறை சொன்னவர்களிடம் "உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள். இந்தப்பக்கம் வராதீர்கள்'' என்று கண்டிப்புடன் சொல்லி அவர்களை விரட்டி அடித்தார், பஞ்சு அருணாசலம்.
பஞ்சு அருணாசலத்தின் தம்பி லட்சுமணன், ஸ்டூடியோவுக்கு வந்த எம்.எஸ்.விஸ்வநாதனிடம், இளையராஜாவின் ரீரிக்கார்டிங் பற்றி குறை கூறியிருக்கிறார். அதற்கு எம்.எஸ்.வி, "அந்தப் பையனை எனக்குத் தெரியும். என் ரெக்கார்டிங்கில் வாசித்து இருக்கிறான். அவனுக்கு இசை பற்றி எல்லாம் தெரியும். தொந்தரவு செய்யாமல் அவனை விட்டு விடுங்கள். படத்துக்கு என்ன வேண்டுமோ அது வந்துவிடும்'' என்று சூடான பதில் கூறியிருக்கிறார்.
இளையராஜாவின் இயற்பெயர் ராஜையா. அதை "ராஜா'' என்று மாற்றியவர் தன்ராஜ் மாஸ்டர்.
இப்போது "அன்னக்கிளி'' டைட்டிலில் பெயரை எப்படிப் போடுவது என்று கேள்வி எழுந்தது. கச்சேரிகளில் பாவலர் பிரதர்ஸ் என்ற பெயர் பிரபலமாகியிருந்ததால், அந்தப் பெயரையே பயன்படுத்தலாம் என்று கூறினார் இளையராஜா.
"அது, ஆலத்தூர் பிரதர்ஸ், டி.கே.எஸ். பிரதர்ஸ் என்பது மாதிரி ரொம்பப் பழைய ஸ்டைல்!'' என்று பஞ்சு அருணாசலம் கூறினார். சற்று நேரம் யோசித்து விட்டு, "உன் பெயர் ராஜா. ஏற்கனவே, சினிமாவில் ஏ.எம்.ராஜா இருக்கிறார். பின்னணி பாடுவதுடன், சில படங்களுக்கு மியுசிக் டைரக்ஷனும் செய்திருக்கிறார். அவர் பெரிய ராஜா. நீ இளையராஜா! உன் பெயரை இளையராஜா என்று வைத்துவிடுவோம்''
என்றார்.அவர் சூட்டிய வேளை நல்ல நேரமாகவும், பெயர் ராசியான பெயராகவும் அமைந்தது. ஒருசில நாட்களிலேயே "இளையராஜா'' என்ற பெயர் தமிழக மக்களின் செல்லப் பெயராக அமைந்தது.
சிவகுமாரும், சுஜாதாவும் ஜோடியாக நடித்த "அன்னக்கிளி'' 14-5-1976ல் ரிலீஸ் ஆயிற்று.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கொடிகட்டிப் பறந்த காலக்கட்டம் அது. எனவே, "அன்னக்கிளி''க்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆரம்பத்தில் பெரிய கூட்டம் இல்லை. சில ஊர்களில் ஒரே வாரத்தில் படத்தை எடுத்து விட்டார்கள்.
படத்தைப் பார்த்தவர்கள் வெளியே வந்து, "படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, இளையராஜா என்ற புதிய இசை அமைப்பாளர் பாடல்களுக்கு போட்டுள்ள மெட்டுகள் அருமையாக உள்ளன'' என்று கூறியது, ரசிகர்களிடையே பரவியது. பத்திரிகைகளும் படத்தையும், இசையையும் பாராட்டி விமர்சனங்கள் எழுதின.
இதனால், தியேட்டர்களில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகியது. ஒரே வாரத்தில் படத்தை எடுத்த தியேட்டர்களில், மீண்டும் "அன்னக்கிளி'' திரையிடப்பட்டது.
15 நாட்களில் "அன்னக்கிளி'' திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு காட்சியும் "ஹவுஸ்புல்'' ஆனது.
"அன்னக்கிளி'' இசைத்தட்டு வெளிவந்து சக்கைபோடு போட்டது. "அன்னக்கிளி ஒன்னைத்தேடுது'', "மச்சானைப் பார்த்தீங்களா'', "நம்ம வீட்டுக் கல்யாணம்'' முதலான பாட்டுகள் ரேடியோவில் மாறி மாறி ஒலித்தன.
"அன்னக்கிளி'' 200 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது.
"அன்னக்கிளி'' வெளியானபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி, இளையராஜா கூறியதாவது:-
"அன்னக்கிளி இசைத்தட்டுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. கடைகளில் முன்பதிவு செய்து, இசைத்தட்டை வாங்கினார்கள்.
அப்போது டெலிவிஷன் கிடையாது. ரேடியோ தான். அந்த சமயம் அன்னக்கிளி பாடலை ரேடியோவில் ஒலிபரப்பினால் ஒரு வீட்டில் பாடலை வைப்பார்கள். அது அடுத்த வீடு, அடுத்த வீடு என்று தொடர்ந்து தெரு முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கும். இதை நான் மலயப்பநாயகன் தெருவில் வாக்கிங் செல்லும் போது பார்த்திருக்கிறேன். அதுவும் 6 மாதங்களுக்கு மேலாக நானே நேரடியாக கண்டு இருக்கிறேன்.
அன்னக்கிளிக்கு நான்தான் இசை அமைத்தேன் என்பது இரண்டு மூன்று வீடுகளைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது.
மக்கள் அந்த பாடல்களை கேட்க, கேட்க `எந்த பாடல் நன்றாக இருந்தாலும் அதை ரசிப்பார்கள்' என்று எண்ணினேனே தவிர, கர்வப்படவில்லை. சந்தோஷப்பட்டேன்.
என் பெயர் வெளியில் பெரியதாக பேசப்பட்டாலும், இன்று ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால், அவர்களையே சுற்றிவரும் கூட்டம்போல் அன்று இல்லை.நானும் பெயர் வந்து விட்டது என்பதற்காக ஜி.கே.வி.யை விட்டு வெளியே வந்துவிட வேண்டும் என்று எண்ணவில்லை. கிட்டாரைத் தூக்கிக்கொண்டு, அவர் எங்கு போனாலும் பின்னால் போய்க்கொண்டிருந்தேன்.
போடிநாயக்கனூரில் ஒரு கச்சேரிக்கு சென்றிருந்தோம். அப்போது நாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன்பு என்னைப்பார்க்க அதிகமான கூட்டம். கூட்டம் கலைய வேண்டும் என்றால் நான் வந்து எனது முகத்தை காட்ட வேண்டும் என்று கூறினார்கள்.
நானும் கூட்டத்தினர் முன்பு வந்து நின்றேன். ஆனால் கூட்டத்தினரோ எனக்கு பின்னால் பார்த்துக்கொண்டு இருந்தனர். `என்னங்க! இன்னமும் இளையராஜாவை காணோம்' என்று ஒருவர் கேட்டார்.
என் அருகில் இருந்தவர், `இதோ இவர்தான்!' என்று என்னை சுட்டிக்காட்டினார்.
உடனே கூட்டத்தினர் கையை முகவாய்கட்டையில் வைத்து, "ஹூம்... இந்த பையன்தானா!'' என்று உற்சாகம் குறைந்தவர்களாக, காற்றுப்போன பலூன் மாதிரி ஆனார்கள்.
பெயருக்கு ஏற்றபடி ஒரு பெரிய அழகான வாலிபனாக எதிர்பார்த்தவர்களுக்கு, சின்னப்பையனாய்... பேண்டும், சட்டையும் கிராப்புமாய் இருந்தவனை `இளையராஜா' என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை! அதனால்தான் அவர்களுக்கு இவ்வளவு ஏமாற்றம்!''
இவ்வாறு இளையராஜா கூறினார்.
2.0 திரைப்படத்தின் உண்மையான ஹீரோ அக்ஷய் குமார் தான் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மும்பை:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘2.ஓ’. சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சி மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில், ரஜினி, சங்கர், ஏ.ஆர்.ரகுமான், அக்ஷய் குமார், ரசூல் பூக்குட்டி, உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் ஆர்யா, விஜய் ஆண்டனி, எடிட்டர் ஆண்டனி, எழுத்தாளர் ஜெயமோகன், ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது:-
சங்கருடன் பணியாற்றுவது வித்தியாசமானது. அவர் மிகவும் கச்சிதமானவர். அதனால் தான் அவர் மிகப்பெரிய இயக்குநராக உள்ளார். 3-டி இல் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

முதல் முறையாக ஹாலிவுட் தரத்தில் 2.0 படம் உருவாகியுள்ளது. 2.0 திரைப்படத்தின் உண்மையான ஹீரோ அக்ஷய் குமார் தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘2.ஓ’. சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சி மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தின் உள்ளே சுற்றிலும் எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு, அதில் ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் திரையிடப்பட்டன.
இவ்விழாவில், ரஜினி, சங்கர், ஏ.ஆர்.ரகுமான், அக்ஷய் குமார், ரசூல் பூக்குட்டி, உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் ஆர்யா, விஜய் ஆண்டனி, எடிட்டர் ஆண்டனி, எழுத்தாளர் ஜெயமோகன், ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

மேலும், பாலிவுட் பிரபலங்கள் பலரும் வருகை தந்தனர். முதலில் அக்ஷய்குமார் கெட்டப்புக்குண்டான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரே மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இப்படம் 3டியில் உருவாகியிருப்பதையும், அடுத்த வருடம் தீபாவளிக்கு படம் வெளிவரும் என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தனர். மேலும், தெலுங்கு பதிப்புக்குண்டான பர்ஸ்ட் லுக் டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

படத்தை பற்றிய மேலும் ஒரு முக்கியமான குறிப்பு : 'பியர்ல் ஹார்பர்', 'டை ஹார்டு', 'ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்' போன்ற படங்களின் சண்டைப் பயிற்சியாளர் கென்னி பேட்ஸ் ‘2.ஓ’ படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து இருக்கிறார்.
இந்த விழாவை லைக்கா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் வலைத்தளத்தில் 5 மணியில் இருந்து நேரடியாக ஒளிப்பரப்புவதாக அறிவித்திருந்தது. ஆனால், அவர்கள் சொன்ன நேரத்திற்கு அரை மணி நேரம் தாண்டியும் இதுவரை நேரலை ஒளிப்பரப்பவே இல்லை. இதனால் ரசிகர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மும்பையில் இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி தொடங்குவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டிருக்கலாமோ என்ற எண்ணமும் எழுந்துள்ளது. எனினும், விரைவில் இதுகுறித்து படக்குழு தரப்பிலிருந்து அறிவிப்பார்கள் என காத்திருக்கலாம்.

தல 57 படத்தில் ஹாலிவுட் சண்டை கலைஞர்கள் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ‘தல 57’ படம் தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 50 நாட்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்போடு 90 சதவீதம் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிடுமாம். அதன்பிறகு, சென்னையில் சில காட்சிகளை படமாக்கிவிட்டு படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறார்கள்.
இப்படம் ஐரோப்பாவில் தொடங்கும்போது, அங்கு நடக்கும் சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கவனித்து வந்தார். அதன்பிறகு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற சண்டைக் காட்சிகளை வீரம் கணேஷ் கவனித்தார். தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வரும் சண்டைக் காட்சிகளை ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்கவிருக்கிறார்களாம்.
இதனால் பல ஹாலிவுட் படங்களில் புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்களை பயன்படுத்தவிருக்கிறார்களாம். பாலிவுட்டில் மிகப்பெரிய பட்ஜெட்டில் சமீபத்தில் வெளிவந்த ஷிவாய் படத்திற்கு சண்டைக் காட்சிகளை அமைத்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் தல 57 படத்திற்கு சண்டை காட்சிகளை அமைத்து வருகிறார்களாம். இந்த சண்டைக் காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கும் வகையில் இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

திரிஷா தனது வெளிப்படையான ஆசையை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டி குறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘நாயகி’ படம் அவரை கவிழ்த்துவிட்டாலும், ‘கொடி’ படம் அவரை தாங்கி பிடித்துக் கொண்டது. கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிற திரிஷாவுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டு பின்பு பாதியிலேயே நின்றுபோனது.
இந்நிலையில், தற்போது படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் திரிஷாவுக்கு சினிமாதான் உயிர் மூச்சாம். இதுகுறித்து அவர் கூறும்போது, சினிமா தான் என்னுடைய உயிர் மூச்சு. நான் நடித்துக் கொண்டிருக்கும்போதே என்னுடைய உயிர் பிரிய வேண்டும் என்பதே எனது ஆசை.
சினிமாதான் என்னுடைய பலம். அதனால்தானோ என்னவோ, என்னுடைய திருமணம்கூட நின்று போய்விட்டது. என்னுடைய கர்ப்ப காலத்தில் மட்டும்தான் நடிப்புக்கு சற்று இடைவெளி விடுவேன். மற்றபடி, தொடர்ந்து நடிக்கத்தான் செய்வேன் என்று கூறியுள்ளார்.
திரிஷா நடிப்பில் தற்போது ‘மோகினி’, ‘சதுரங்கவேட்டை -2’, ‘கர்ஜனை’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை கிண்டல் செய்த ஆர்.ஜே.பாலாஜியை லட்சுமி ராமகிருஷ்ணன் திட்டி தீர்த்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
இயக்குனரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியை கிண்டல் செய்து ஏற்கெனவே நிறைய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. அதேபோல், இந்நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும் ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா’ என்ற வசனம் பாடலாகவே வெளிவந்துள்ளது.
தன்னையும், தன்னுடைய நிகழ்ச்சியும் கிண்டல் செய்பவர்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அவ்வப்போது கண்டனங்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ், ஆர்.ஜே.பாலாஜி, நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திலும் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை ‘பேசுவதெல்லாம் உண்மை’ என்ற பெயரில் கலாய்த்துள்ளார்கள்.
இதைப் பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் மிகவும் கோபமடைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாலாஜியை கடுமையாக வசை பாடியுள்ளார். அவர் கூறும்போது, என்னுடைய நிகழ்ச்சியை நீங்கள் கிண்டல் செய்வதற்கு முன்னால் உங்களுடைய படங்களை நீங்கள் விமர்சனம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அம்மணி படம் பெரிய அளவுக்கு வெற்றிபெறாவிட்டாலும், எனக்கென்று ஒரு தனி மரியாதையை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
சினிமாவில் பவர் இருக்கிறவங்க இந்த மாதிரி கீழ்த்தரமாகவும், கிண்டல் செய்வதையும் பார்க்கும்போது மிகுந்த வருத்தமளிக்கிறது பாலாஜி. சென்னை வெள்ளத்தின்போது விளம்பரத்துக்காகத்தான் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக காட்டிக் கொண்டார் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா? இல்லையா? ஆனால் நான் அப்படி சொல்லும் ஆள் கிடையாது.
நான் மற்றவர்களை மதிக்கக்கூடியவள். உன்னைப்போன்ற ரியல் ஹீரோவை முன்னுதாரணமாக வைத்துதான் என்னுடைய அடுத்த படத்தில் ஒரு ஹீரோவாக காட்டப் போகிறேன்.
என்று அவர் கூறியுள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் தற்போது தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. அவருக்கு ஆதரவாக நிறைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சினிமா தயாரிப்பாளர் தனஞ்செயனும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சைத்தான்’ படம் டிசம்பர் முதல் தேதியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘சைத்தான்’. இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்ற புதுமுகம் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் டீசர், டிரைலர்கள் ஆகியவை வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் 10 நிமிட காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது.
10 நிமிட காட்சியில் ஜெயலட்சுமி டீச்சர் என்ற கதாபாத்திரம் சொல்லப்படுகிறது. அந்த ஜெயலட்சுமி டீச்சர் யார் என்பதை காட்டவே இல்லை. முன் ஜென்மத்தில் ஜெயலட்சுமி டீச்சர் துரோகம் செய்து கொலை செய்ததாகவும், இந்த ஜென்மத்தில் அவளை கொலை செய்யப்போவதாகவும் காட்டப்படுகிறது.
அப்படியென்றால், இந்த படம் பூர்வஜென்ம கதையாக இருக்குமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 10 நிமிட காட்சிகளும் மிகவும் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. டைட்டில் கார்டு போடும் சமயத்தில் வரும் பின்னணி இசையும், அதைத் தொடர்ந்து வரும் பாடலும் படத்திற்கு கண்டிப்பாக பலம் கூட்டும் என்பது மட்டும் உண்மை.
உண்மையிலேயே இந்த படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பது மட்டும் உண்மை. இவ்வளவு எதிர்பார்ப்பு கூடியிருக்கும் நிலையில், ‘சைத்தான்’ படத்தை கடந்த 18-ந் தேதியே படக்குழுவினர் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது ஏற்பட்டு இருக்கும் பணப்பிரச்சினையால் படத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், வருகிற டிசம்பர் 1-ந் தேதி இப்படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை விஜய் ஆண்டனி தனது சொந்த பேனரில் தயாரித்துள்ளார். விஜய் ஆண்டனியே இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

கவுதமி தனது மகளை பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்....
90-களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த கவுதமி, கடந்த பல வருடங்களாக கணவரை பிரிந்து கமலுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் கமலை விட்டு பிரிந்து தற்போது தனது மகளுடன் தனிமையில் வசித்து வருகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகுத தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் கவுதமி தனது மகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
அதன்படி, கவுதமியின் மகளான சுப்புலட்சுமி, தனுஷ் நடிக்கவிருக்கும் வேலையில்லா பட்டதாரி 2-ம் பாகத்தில் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி காட்டுத் தீ போல பரவியது.
இதுகுறித்து விளக்கம் அறித்த கவுதமி, என்னுடைய மகள் குறித்து வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்திதான். என்னுடைய மகள் தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். நடிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பர்ஸ்ட லுக் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அது எந்த தேதி? என்பதை கீழே பார்ப்போம்.
தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் புதிய படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, மும்பை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.
இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமும், ஒன்ட்ராக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, வருகிற நவம்பர் 27-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படம் பெரிய வெற்றியை அடைந்துள்ளதையடுத்து, கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எதிர்பார்ப்புகளை பர்ஸ்ட் லுக் போஸ்டர் நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"அன்னக்கிளி''யின் இசை அமைப்பாளராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டபின், அவரை படத்தில் இருந்து நீக்க பல முயற்சிகள் நடந்தன. எதிர்பாராத சோதனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் முறியடித்தார், இளையராஜா.

இதுபற்றி இளைய ராஜா கூறியதாவது:-
"பஞ்சு சாரின் கதை - வசனத்தில் ஹிட் ஆகியிருந்த "உறவு சொல்ல ஒருவன்'', "மயங்குகிறாள் ஒரு மாது'' என்ற 2 படங்களுக்கும் விஜயபாஸ்கர் இசையமைத்திருந்தார்.
அவரிடம் வேலை செய்த குருபாதம் என்ற இன்சார்ஜ், அவருக்கு வரவேண்டிய படத்தை நான் தட்டிப்பறித்து விட்டேன் என்ற தவறான எண்ணத்தோடு தயாரிப்பாளர் சுப்புவிடம் போனார்.
"பஞ்சுசார், விஜயபாஸ்கர் கூட்டணி ஹிட் ஆகும் கூட்டணி சார். அவர் ஸ்டாரும், இவர் ஸ்டாரும் நன்றாக ஒத்துப்போயிருக்கு. அதை ஏன் மாத்துறீங்க'' என்றார்.
இதில் சுப்பு குழம்பிவிட்டார். கூடவே பஞ்சுசாரின் இன்னொரு தம்பி லட்சுமணன் வேறு. அவருக்கும் கேள்விக்குறிகள்.
"சார்! இந்த ராஜா ஜி.கே.வி.கிட்டே கிட்டார் வாசிக்கிறவர் சார். ஏற்கனவே அன்லக்கி மிïசிக் டைரக்டர் என்று பெயர் எடுத்திருக்கார். அவர் மிïசிக் பண்ணி பூஜை போட்ட படம் எல்லாம் நின்று போயிடும்'' என்று பலவிதமாக சொல்லி, பயத்தை ஏற்படுத்திவிட்டார். சுப்புவும் பயந்து விட்டார்.
பஞ்சுசாரிடம் நேராக சென்ற சுப்புவும், லட்சுமணனும், "எதுக்கு நமக்கு ரிஸ்க்? விஸ்வநாதன் சார் பிரமாதமாக மிïசிக் போடுகிறார். நம்ம படத்திற்கு ஒரு மெரிட் இருக்கும். டிஸ்டிரிபிïட்டரும் படத்தை வாங்குறதுக்கு ஒரு பேரும் இருக்க வேண்டாமா?'' என்று சொன்னார்கள்.
"அதைப்பற்றி ஒன்றும் பேசவேண்டாம், முடிந்து போன விஷயம். ராஜாதான் மிïசிக்!'' என்று பஞ்சு சார் ஒரேயடியாக அடித்து சொல்லிவிட்டார்.
இதைக்கேட்டு அவர்களது தம்பிகளும் பேசாமல் இருந்தார்கள்.
பூஜைதேதியும் குறிக்கப்பட்டது. கவிஞர் கண்ணதாசனிடம் பாட்டெழுத கேட்ட நேரத்தில் அவர் சிங்கப்பூர் போவதாக சொல்லிவிட்டார்.
"எப்போது திரும்பி வருவார்?'' என்று கேட்டதற்கு, "படத்தின் பூஜை முடிந்த பிறகு தான் திரும்பிவருவார்'' என்று பதில்வந்தது.
எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
அதேநேரம் "பூஜையை நிறுத்தவேண்டாம். நானே பாட்டு எழுதிவிடுகிறேன்'' என்று பஞ்சு சார் கூறிவிட்டார்.
அதன்படி பாடலை எழுதித்தந்தார்.
ரிகர்சல் நாள்வந்தது. கவிஞர் வீட்டின் அருகில் இருக்கும் பாலாஜி கல்யாண மண்டபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை எல்லா ஆர்க்கெஸ்ட்ராவும்
வந்தது.காலையில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'' பாடலுக்கு ரிகர்சல் செய்தோம்.
அவர்களுக்கெல்லாம் புதிய அனுபவமாக இருந்தது. எனக்கும் உற்சாகமாக இருந்தது. இரண்டாவதாக, "மச்சானை பார்த்தீங்களா'' பாடலை ரிகர்சல் செய்தோம். மதிய உணவுக்குப்பின் மாலை 4 மணிக்கு பாடகி எஸ்.ஜானகி வந்தார்.
பெரும்பாலும் பாடகர்கள் பெரிய இசையமைப்பாளருக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஆனால் ஜானகி ஜி.கே.வி. ரெக்கார்டிங்கில் என்னிடம் பழகி இருக்கிறார்.
தவறாக பாடினால் ஜீ.கே.வி. என்னை விட்டு சரியாக சொல்லிக்கொடுக்கச்சொல்லும்போது, நான் பாடி சரிசெய்வதை தெரிந்தவர்.
ரிசர்சலுக்கு வந்து ஒத்துழைத்தார். பாடல் சொல்லிக்கொடுக்கும் போதே, அதனுடைய ஜீவனைப் புரிந்து கொண்டார். இது மிகவும் புதிது என்று தெரிந்து மிகவும் கவனத்தோடு கற்றுக்கொண்டார்.
சுப்புவுக்கும், லட்சுமணனுக்கும் என் மீது இருந்த சந்தேகம் தீர்ந்து போனது.
"நீ நன்றாகப்பாடுவாய் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் அது இவ்வளவு புதுசாக இருக்கும் என்று எதிர்பார்க்க வில்லை'' என்று இரட்டிப்பு சந்தோஷத்தோடு பஞ்சுசார் சொன்னார்.
அடுத்த நாள் பூஜை. நானும், பாஸ்கர், அமர் ஆகியோரும் 6 மணிக்கு திருவேற்காடு போய்விட்டு, ஸ்டுடியோவுக்கு 7 மணிக்கு முன் வந்து விட்டோம்.
பூஜை முடிந்து, ரிகர்சல் தொடங்கியது.
ஆர்க்கெஸ்ட்ராவெல்லாம் அமர்ந்து, "ரெடி, ஒன், டூ, த்ரி'' என்று நான் சொன்ன அந்த நொடியில் "மின்சாரம் கட்'' ஆகி விளக்குகள் அணைந்து விட்டன. எனக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது.
டோலக் வாசிக்கும் பாபுராஜ் `எம்... நல்ல சகுனம்' என்றார், கேலியாக.
மனம் உடைந்த நான், ஸ்டுடியோவில் பாடுபவர்களுக்கு இருக்கும் ரூமின் பின் கதவைத் திறந்து தனியாக உட்கார்ந்திருந்தேன். சிறிதுநேரம் அப்படியே கழிந்தது.
தம்பி அமரும், பாஸ்கரும் என்னைத் தேடிவந்து, "டைரக்டர் மாதவன் சார் வந்திருக்கார். உன்னைப் பார்க்கவேண்டுமாம்'' என்றனர்.
நான் உடனே எழுந்து போனேன், அவர் "கருமாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன், இந்தா பிரசாதம்'' என்று என் கையில் கொடுத்தார்.
பின்னர், "நான்தான் உனக்கு சான்ஸ் கொடுக்கணும்ணு நினைத்தேன். ஆனா பஞ்சு முந்திவிட்டார்'' என்றார்.
அது உடைந்த மனதுக்கு ஆறுதலாக இருந்தது. போன மின்சாரமும் வந்தது.
தேங்காயில் கற்பூரம் ஏற்றி சாமிக்கு காட்டிவிட்டு வெளியே சிதறுகாய் எறிந்து உடைக்கப்பட்டது.
"சைலன்ஸ்! டேக்..ரன்னிங்'' என்ற குரல் ஒலிக்க, கோவர்தன் மாஸ்டர், "ஒன் டூ கொடுக்க, ஜானகி ஆ...ஆ... என்று ஹம்மிங் தொடங்க, பாடல் நன்றாக வந்தது.
என்ஜினீயர் சம்பத், ஒன்ஸ்மோர் என்று கேட்கப்போனார்.
"முதல் டேக் டேப்பை போட்டுக்காட்டினால், ஆர்க்கெஸ்ட்ராவின் தவறுகளை அவர்களே கேட்டுத் திருத்திக் கொள்வார்களே'' என்று நான் கூறினேன்.
எல்லோரையும் உள்ளே அழைத்தேன். சம்பத்தோ, "என்ன இது? இந்தபையன் இப்படிச் செய்கிறானே?'' என்று நினைத்தார். "ராஜா! இன்னும் ஒரு டேக் எடுத்திடலாமே'' என்றார்.
"எடுக்கலாம் சார்! ஆனா இதப்போட்டுக்கேட்டா, அவங்க தவறி வாசிச்சதை அவங்களே திருத்தி வாசிப்பாங்க'' என்றேன்.
`சரி' என்று டேப்பை ரிவைண்ட் செய்தார். அதன் பின்னர் டேப்பை ஆன் செய்தார். டேப் ஓடியது. இப்போது வரும், இப்போது வரப்போகிறது என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்க, எதிர்பார்க்க டேப் ஓடியதே தவிர, அதிலிருந்து ஒரு சப்தமும் வரவில்லை.
காரணம் பாடல் பதிவாகவில்லை! ரெக்கார்ட் மூடில் மெஷினே ஓட்டவில்லை என்பது சம்பத்துக்கு தெரிந்து போய்விட்டது. உடனே, "சார், சார்! பாட்டு பதிவாகலை சார்,
ஒன் மோர் டேக் சார்!'' என்றார்.
சுப்புசாரின் முகம் மாறியது. ஒரு மாதிரியாகி வெளியே எழுந்து போய்விட்டார்.
மீண்டும் பாடல் பதிவு தொடங்கியது.
"டேக் நம்பர் ஒன்று இரண்டு'' என்று நம்பர்களை ஏற்றிக்கொண்டே போனார்கள். 12 டேக் ஆனது.
பஞ்சு சார் மட்டும் இத்தனை கலாட்டாக்களுக்கு நடுவிலும் அமைதியாக இருந்தார்.
பாரதிராஜா மட்டும் பூஜைக்கு வரவில்லை. அது எங்களுக்குள் இருந்த அந்த போட்டியை எனக்கு நினைவு படுத்தியது.
2-வது பாடல், "மச்சானைப்பார்த்தீங்களா'' பதிவாகியது. "சொந்தமில்லை பந்தமில்லை'' பாடலை சுசீலா பாட ரெக்கார்டு செய்தோம்.
`அன்னக்கிளி உன்னைத்தேடுதே' பாடல், சோகப்பாடலாக மறுபடியும் ஒருமுறை வந்தால் நன்றாக இருக்கும் என்று பஞ்சுசாரும், டைரக்டர் தேவராஜ் மோகனும் விரும்பினார்கள். அந்த பாடலை டி.எம்.சவுந்திரராஜன் நன்றாக பாடிக்கொடுத்தார்.
பாடல்கள் எல்லாம் பதிவாகி முடிந்தன. அதன்பின் படத்தின் சூட்டிங் நடந்தது.''