என் மலர்
முன்னணி நடிகை ஒருவர் அழுது நடிப்பதை தவிர்த்து வருகிறாராம். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
இரண்டு நடிகர்களுடனான காதல் முறிவுக்கு பின்னரும் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன நடிகை, தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். தனக்கு அழுத்தமான கதாபாத்திரம் இல்லையென்றால், அது எந்த பெரிய இயக்குனராக இருந்தாலும் அவரை உடனடியாக ஒதுக்கி விடுகிறாராம்.
அதேபோல், ஒரே மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் நோ சொல்கிறாராம். இப்படியாக நிறைய கண்டிஷன்களுடன் நடித்து வரும் நயன நடிகை தற்போது கூடுதலாக ஒரு கண்டிஷனையும் தன்னுடைய கதை தேர்வில் வைத்திருக்கிறாராம். அதன்படி, அழுது நடிக்கும்படியான காட்சிகளை தன்னுடைய படங்களில் வைக்க வேண்டாம் என்று வற்புறுத்துகிறாராம்.
அப்படியிருக்கும் காட்சிகளில் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று சொன்னால், இவர் அந்த காட்சியில் ரொம்பவும் குலுங்கி குலுங்கி எல்லாம் அழமுடியாது என்று சொல்கிறாராம். இயக்குனர்களும் வேறு வழியில்லாமல் நடிகையின் வேண்டுகோளுக்கேற்ப காட்சிகளை மாற்றியமைத்து படமாக்குவது என்று முடிவு செய்கிறார்களாம்.

அம்மாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதே என்னுடைய வாழ்நாள் கனவு என்று ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
கடந்த வருடம் பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்த ‘பாகுபலி’ படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை நாம் யாராலும் மறக்க முடியாது. தமிழ் சினிமாவின் பெருமையை வெளிமாநிலத்திலும் நிலைநாட்டிய பெருமை ரம்யா கிருஷ்ணனையே சாரும். அந்தளவுக்கு ‘பாகுபலி’ படத்தில் அவருடைய நடிப்பு அனைவரையும் ஈர்த்தது.
இந்நிலையில், தற்போது ரம்யா கிருஷ்ணனின் முகத்தை மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலோடு பொருத்தி, போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமானால் எப்படியிருக்கும் என்ற யூகத்தோடு அந்த போஸ்டர் வெளிவந்தது. இவரை மட்டுமில்லாது, அஜித், விஜய், சிம்பு, மாதவன் உள்ளிட்டவர்களின் முகத்தையும் பிரபலங்களின் உடலோடு பொருத்தி போஸ்டர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆனால், இவற்றில் ரம்யா கிருஷ்ணன் அப்படியே அச்சு அசலாக ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருந்தார். எனவே, அவரிடம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமானால் அதில் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு அவர் கூறும்போது, நிறைய பேர் என்னிடம் பலமுறை உங்களுடைய கனவு கதாபாத்திரம் எது? என்று கேட்டுள்ளார்கள். அப்போதெல்லாம் நான் எந்த பதிலும் கூறவில்லை.
இப்பொழுது நான் கூறுகிறேன், என்னுடைய வாழ்நாள் கனவு கதாபாத்திரம் ஜெயலலிதா அம்மாதான். அவர்களுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது ரொம்பவும் சிரமமான ஒன்றுதான். நல்ல தயாரிப்பாளர்கள், நல்ல திரைக்கதையோடு இயக்குனர்கள் என்னை அணுகினால், அம்மாவின் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

தனுஷ் மீண்டும் தான் நடித்த படம் ஒன்றின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
தனுஷ் தற்போது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘விஐபி 2’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்திற்கான பூஜையும் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை இப்படத்தின் இயக்குனரான சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கிவிட்டார்.
இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து மேலும் தனுஷ் தன்னுடைய நடிப்பில் உருவாகி வெளிவந்த மற்றொரு படமான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே, ‘மாரி’ 2-ம் பாகம் உருவாகப்போவதாக செய்திகள் வெளிவந்தாலும், அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று ‘மாரி’ இரண்டாம் பாகத்தில் முழுக்கதையையும் இயக்குனர் பாலாஜி மோகன் தன்னிடம் ஒப்படைத்துவிட்டதாக தனுஷ் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் கதை முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், இப்படத்தின் வேலைகள் கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லிங்கா படத்திலிருந்து தான் ஏன் விலகினேன் என்பதற்கு வடிவேலு விளக்கம் அளித்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
ரஜினி நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வெளிவந்த ‘லிங்கா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவை அணுகியதாக கூறப்பட்டது. பின், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. வடிவேலு அப்போதைக்கு நடிப்பில் இருந்து விலகி இருந்ததாலும், ஹீரோவாக மட்டுமே நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும், அதனால்தான் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது காமெடியனாக விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கத்தி சண்டை’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகியுள்ள வடிவேலு, தான் ஏன் லிங்கா படத்தில் நடிக்கவில்லை என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘லிங்கா’ படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும். அதனால்தான் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும், நான் நடித்துள்ள ‘கத்தி சண்டை’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ரொம்பவும் அழகாக வந்துள்ளது. அதனால்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
‘கத்தி சண்டை’ படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படத்தை குளோபர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை உலகமெங்கும் வருகிற டிசம்பர் 23-ந் தேதி வெளியிடுகிறது.

சந்தானம் படத்தின் மூலம் சிம்பு புது அவதாரம் எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்ன அவதாரம் என்பதை கீழே பார்ப்போம்.
ந்தானத்தை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியதே சிம்பு தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். சிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தில்தான் சந்தானத்தை காமெடியனாக கொண்டு வந்தார் சிம்பு. அதன்பிறகு, சந்தானம் காமெடியில் உச்சத்தில் வந்தார் என்பது மறுவிஷயம்.
இந்நிலையில், ஹீரோவாக புது அவதாரம் எடுத்திருக்கும் சந்தானம், தற்போது நெருங்கிய நண்பர்களின் படங்களில் மட்டுமே காமெடியனாக நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில், தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய சிம்புவை தன்னுடைய படத்தில் புது அவதாரம் எடுக்க வைத்துள்ளார் சந்தானம்.
சந்தானம் தற்போது ‘சக்கைபோடு போடு ராஜா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சிம்பு, இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிம்பு ஏற்கெனவே, நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார். தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுப்பது இதுவே முதல் முறை.
‘சக்கை போடு போடு ராஜா’ படத்தை அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்குகிறார். இப்படத்தில் சந்தானத்துடன் விவேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ள வைபவி சாந்தலியா நடிக்கிறார். விடிவி கணேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அஜித் நடித்து வரும் தல 57 படத்துக்காக பைக் வீலிங் செய்து அசத்தியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தல-57 படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது பல்கேரியாவில் முக்கியமான சண்டைக் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த படத்திற்காக அஜித் பைக் வீலிங் செய்வதுபோன்ற ஒரு காட்சி தற்பாது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதற்காக பிரத்யேகமான பைக்கில் அஜித் அந்த சாகத்தை செய்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அஜித் பைக் ரேஸ் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கெனவே, ‘ஆரம்பம்’, ‘மங்காத்தா’ ஆகிய படங்களில் இவரே பைக் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அக்ஷரா ஹாசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
அஜித் பைக் வீலிங் செய்தபோது எடுத்த வீடியோ...

பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளராக உருவாகியிருக்கிறார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
தனது தனித்துவமான குரல் வளத்தை கொண்டு இசை பிரியர்களின் உள்ளங்களை தன் பாடல்களால் வென்று இருப்பவர் அனுராதா ஸ்ரீராம். ‘இனி அச்சம் அச்சம் இல்லை’... ‘அன்பென்ற மழையிலே’... ‘கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ என பல பாடல்களுக்கு அனுராதா ஸ்ரீராமின் குரல் உயிர் மூச்சாக இருந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
இவர் தற்போது இசையமைப்பாளராக மாறியிருக்கிறார். ‘மனசு’, ‘விருப்பம்’ என இரண்டு பாடல்களையும் எழுதி, அவரே இசையமைத்து, அதை மதன் கார்க்கியின் ‘டூப்பாடூ’ இசைத் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த பாடல்கள் குறித்து அனுராதா ஸ்ரீராம் கூறும்போது, ‘எல்லோருடைய வாழ்க்கையிலும் பல தருணங்கள் இருக்கும். ஆனால் ஒரு சில தருணங்களில், நம்மை அறியாமலேயே நம்முடைய மனம் வழுக்கி விழுந்து விடும். இந்த கருத்தை மையமாக கொண்டு நான் உருவாக்கிய பாடல் தான் ‘மனசு எதை பார்த்து வழுக்கி விழுந்துச்சு'. நான் எழுதி இசையமைத்த இந்த பாடலில் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் பிரவீன்.
‘விருப்பம்’ - என்னுடைய இரண்டாவது பாடல். சிலருக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்ற ஆசை. சிலருக்கு கையேந்தி பவனில் சாப்பிட வேண்டும் என்ற ஆசை. சிலருக்கு நடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை. சிலருக்கு காரில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை. இப்படி எல்லோருக்கும் ஒருவித ஆசைகளும், விருப்பங்களும் இருக்கும். இதுபோன்ற விருப்பங்களை ஒன்றாக சேர்த்து உருவானதுதான் 'விருப்பம்' பாடல்.
தற்போது என்னுடைய இந்த இரண்டு பாடல்களும் இசை பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மகிழ்ச்சியாக இருக்கின்றது. Doopaadoo.com இணையத்தளத்தில் 'மனசு' மற்றும் 'விருப்பம்' பாடல்களை கேட்டு, தங்களின் கருத்தை பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்." என்று உற்சாகமாக கூறுகிறார் இசையமைப்பாளர் - பாடகர் அனுராதா ஸ்ரீராம்.
விரைவில் மகாகவி பாரதியாரின் பாடல்களுக்கு புத்துயிர் அளித்து, அதனை புதுப்பொலிவுடன் அனுராதா ஸ்ரீராம் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

கைதான நடிகை தன்யா மீது மேலும் மோசடி புகார்கள் குவிகின்றன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரபல மலையாள நடிகை தன்யா மேரி வர்கீஸ் ரூ.130 கோடி மோசடி புகாரில் கைதானது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தன்யா கணவர் ஜான் ஜேக்கப்பும் அவரது தந்தை ஜேக்கப் சாம்சனும் திருவனந்தபுரத்தில் சொந்தமாக கட்டுமான நிறுவனம் நடத்தி அதன்மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்கள்.
இந்த நிறுவனத்தில் நடிகை தன்யாவும் இயக்குனராக உள்ளார். திருவனந்தபுரத்தில் 12 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீடுகள் கட்டித்தருவதாக தன்யாவும் அவரது கணவரும் விளம்பரம் செய்து பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து உள்ளனர். 2014-ம் ஆண்டுக்குள் இந்த வீடுகளை கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்து இருந்தனர்.
ஆனால் திட்டமிட்டபடி வீடுகள் கட்டிக்கொடுக்காததால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தன்யா மற்றும் அவரது கணவர் ஜான்ஜேக்கப், மாமனார் ஜேக்கப் சாம்சன் ஆகியோரை கைது செய்து உள்ளனர்.
இந்த நிலையில் மேலும் பலர் தன்யாவும் அவரது கணவரும் தங்களிடம் பணமோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். அவர்கள் மீது புகார்கள் குவிகிறது. இதனால் மோசடி ரூ.130 கோடிகளை தாண்டும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தன்யா உள்ளிட்ட கைதான 3 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. தன்யாவிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தன்யா ஆரம்பத்தில் நகைகடை, ஜவுளி கடைகள், எண்ணெய், பெயின்ட் நிறுவனங்களின் விளம்பர படங்களில் மாடலிங் ஆக வந்தார். பிறகு சினிமாவுக்கு தாவினார். 2006-ம் ஆண்டு திருடி என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். வீரமும் ஈரமும் என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். அதன்பிறகு மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார். கேரளா கபே, தலப்பாவு, நாயகன், ரெட் சில்லீஸ் பிரணாயம் உள்பட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
கடைசியாக அவர் நடித்த என்னன்னும் ஓர்மக்கே என்ற மலையாள படம் 2012-ம் ஆண்டு வந்தது. அதன்பிறகு தன்யாவுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தொழில் அதிபர் ஜான்ஜேக்கப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கட்டுமான தொழிலில் ஈடுபட்டு தற்போது மோசடி வழக்கில் சிக்கியுள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் கே. பாக்யராஜ் -ரதி நடித்த "புதிய வார்ப்புகள்'' படத்துக்கு, புதுப்புது உத்திகளில் இளையராஜா இசை அமைத்தார்.

தனது இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-
"தேவராஜ் -மோகன் இயக்கிய "பூந்தளிர்'' படத்தில் ஒரு மலையாளப்பாடல் இடம் பெற்றது.
"ஞான் ஞான் பாடணும் ஊஞ்ஞால் ஆடணும்''- என்ற இந்தப்பாடலை எம்.ஜி.வல்லபன் எழுதியிருந்தார். இந்த பாடலில், ஒரு புதிய பாடகி பாடியிருப்பதும் எதிர்பாராமல் நடந்த விஷயம்.
முந்தின நாள் எனது இசையில் ஒரு பாட்டுக்கு பாட வந்த ஜேசுதாஸ், அவருடன் ஒரு பெண்ணையும் அழைத்து வந்திருந்தார். `இந்தப் பெண்ணை பாட வைத்து கேட்டுப்பாருங்கள்' என்று கேட்டுக்கொண்டார். கேட்டேன். குரல் பிடித்துப் போயிற்று. அடுத்த நாளே ரெக்கார்டிங்கில், அந்தப் பெண்ணை இந்த மலையாளப்பாடலை பாட வைத்தேன். அந்தப் பாடகிதான் ஜென்சி.
தேவராஜ் - மோகனின் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'' நல்ல கதையம்சம், பாடல்களுடன்அமைந்த படம். கவிஞர் புலமைப்பித்தனின் அருமையான தமிழும் அழகும் கிராமியப் பாடலிலும் கொஞ்சி வந்து மெட்டுக்களில் விளையாடிய படம்.
"உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி'', "என்ன பாட்டுப்பாட'', "வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலயோ'', "என்னுள்ளில் எங்கோ'' முதலான பாடல்கள் ரசிகர்களின் விருப்பப்பாடல்களாக அமைந்தன.
பாரதிராஜா "புதிய வார்ப்புகள்'' என்று ஒரு படத்துக்கு பெயர் சூட்டினார். நான், பாரதி எல்லாம் ஜெயகாந்தனின் ரசிகர்கள் என்பதால் அவரது ஒரு கதைத் தலைப்பை இந்த படத்துக்கு வைத்து, படத்தின் கடைசி பிரேமில் தலைப்பிற்கு ஒரு அழுத்தம் கொடுக்கும் வகையில் கதையை உருவாக்கிருந்தார்.
இந்தப் படத்தின் கம்போசிங் பிரசிடெண்ட் ஓட்டலில் நடந்தது. ஒரே மூச்சில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், பாடல்கள் எல்லாவற்றையும் முதலிலேயே பதிவு செய்து எடுத்துப்போனால்தான் அது சாத்தியம் என்றும் பாரதி சொன்னார்.
முதலில் பூஜைக்கு ஒரு பாடலை மட்டும் ரெக்கார்டு செய்வதற்காக இரவு பின்னணி இசை வேலை முடிந்து 9 மணிக்கு "ட்ïன்'' கம்போஸ் செய்தேன். கவியரசர் வந்து பாடலை எழுதிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார். 10 1/2 மணிக்கு வீட்டுக்குப் போய்விட்டேன்.
அப்போது பாரதியிடம் இருந்து போன் வந்தது. "இந்தப் பாட்டை நாளைக்கு பதிவு செய்யவேண்டாம். ஒரு நல்ல டூயட் பாட்டுக்கு டிïன் போட்டு, அதை பதிவு செய்தால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்'' என்றார்.
நான் பாரதியிடம், "யோவ்! என்ன விளையாடறியா? கவிஞர் வந்து பாட்டெல்லாம் எழுதிட்டுப் போயிட்டார். அவருகிட்ட புதுசா பாட்டு வேணாம்னு எப்படிய்யா கேட்கமுடியும்?'' என்றேன்.
பாரதியும் விடவில்லை. "அதெல்லாம் நான் சொல்லிக்கிறேன். வேறு பாட்டை நாளைக்கு காலையில் பூஜை ரெக்கார்டிங்கில் எடுக்கிறோம். சரியா?'' என்று கேட்டார்.
"சரி காலையில் பார்க்கலாம்'' என்று சொல்லி போனை வைத்தேன்.
மறுநாள் காலையில் ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவில் காலை 7 மணிக்கு ஒரு டிïனை பாடினேன். அது நன்றாக இருக்கிறது என்று பாரதி `ஓ.கே' சொல்ல, அப்படியே இசைக்குழுவுக்கு அதற்கான இசையை கம்போஸ்செய்து எழுதிக்கொடுத்து விட்டேன்.
டிபன் முடித்துவிட்டு 9 மணிக்கு இசைக்குழுவுடன் பாடலுக்கான ஒத்திகையும் முடித்தேன்.
கவியரசர் கண்ணதாசன் சரியாக 10 மணிக்கு வந்தார். ஒரு ஹாலில் அமர்ந்தோம். சுற்றிலும் இசைக்குழுவினர் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கண்ணதாசன் பாடல் எழுதுவதை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை அல்லவா? அதனால்தான் அத்தனை ஆர்வம்.
கவியரசர் முதல் நாளே கதையை கேட்டுவிட்டதால் "டூயட்தானே?'' என்று மட்டும் என்னிடம் கேட்டார்.
"ஆமாண்ணே'' என்றேன்.
"டிïனை பாடு'' என்றார்.
"இன்னொரு முறை பாடு'' என்றார்.
மீண்டும் பாடினேன்.
உடனே கவியரசரிடம் இருந்து டிïனுக்கேற்ற வார்த்தைகள் வந்து விழுந்தன.
"வான் மேகங்களே! வாழ்த்துங்கள்! பாடுங்கள்! நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை'' என்று அவர் உடனே சொல்ல சுற்றி நின்ற இசைக்குழுவினர் ஆச்சரியத்தில் திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அவர் சொன்னதை நான் டிïனோடு பாடிக்காட்டினேன். "கண்டுகொண்டேன் ராமனை'' என்று நான் பாடி முடித்தவுடன், இசையில் இருந்து இம்மியும் பிசகாது வார்த்தைகள் கவியரசரிடம் இருந்து விழுவதைக் கண்டு கைதட்டினார்கள்.
கவிஞருக்கோ ரசிகர்களை மொத்தமாக கூட்டி வைத்து அவர்கள் முன் பாடல் எழுதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது போலும். உற்சாகமாக அடுத்தடுத்த வார்த்தைகள் வெளிவந்தன.
மொத்தப்பாடலும் 20 நிமிடத்தில் முடிய அதை ஒரு 10 நிமிடத்தில் நகல் எடுத்துக்காட்ட, கவியரசர் சரி பார்த்தார். பாரதி "ஓ.கே'' சொன்னார்.
ஜானகியும், மலேசியா வாசுதேவனும் வந்தார்கள். பாடலை எழுதி, டிïனை கற்றுக்கொண்டு ஒத்திகை முடிந்து பாடல் பதிவானது.
அங்கேயே அப்போதே சுடச்சுட எடுத்த பாடல்தான். ஆனால் `பாஸ்ட் புட்' ரகம் அல்ல.
மற்ற பாடல்களை கம்போஸ் செய்ய ஓட்டலில் உட்கார்ந்தோம்.
ஊருக்குப் புதிதாய் வந்த ஆசிரியருக்கும், நாயகிக்கும் காதல் அரும்புகிறது. இப்போது பாடல் காட்சி. இந்தப்பாடல் எனக்கு வித்தியாசமாக வேண்டும் என பாரதி கேட்டார்.
பல மெட்டுக்கள் போட்டேன். ஒன்றும் பிடிக்கவில்லை. எனக்கே புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வந்த மெட்டுக்களை எல்லாம் வாசித்தபடி பாடிக்கொண்டிருந்தேன். எனக்கும் எதுவும் புதிதாகத் தெரியவில்லை.
ஆர்மோனியத்தை மூடிவிட்டு "சரி வாய்யா! அப்படி பீச் பக்கம் போய் வரலாம்'' என்றார் பாரதி. பிரசிடென்ட் ஓட்டலில் இருந்து கொஞ்ச தூர நடையில் கடற்கரையை அடைந்தோம்.
கூட்டம் அவ்வளவாக இல்லை. வழக்கமாக நாங்கள் மாலை நேரங்களில் பொழுது போக்கிய அதே கடற்கரை.
சுண்டல் வாங்கி கொறித்தபடி கடற்கரையில் நடந்தோம். கடல் அலைகளில் கால்கள் நனைய நனைய நின்றோம். இப்படியே சிறிது நேரம் பீச்சில் பொழுது போக்கிவிட்டு திரும்பவும் ரூமுக்கு வந்தோம். அதுவரை பாடலைப் பற்றி பேசவும் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை.
இந்த இடைவெளியில் என்ன நடந்ததோ தெரியவில்லை. வந்து ஆர்மோனியத்தை தொட்டேன். அவ்வளவுதான். ஆரம்பம் முதல் கடைசி வரை `தம் தனனம்' என்று தொடங்கி முடியும் வரை அதே `தம்தனன'வில் பாடலின் முழு டிïனும் வந்துவிட்டது.
பாரதியைப் பார்க்கணுமே "சூப்பர்! பிரமாதம்'' என்றவர், ஆடாத குறைதான். அத்தனை உற்சாகம் அவருக்கு!
பாக்யராஜ் ஹீரோ ஆனது எப்படி?
"புதிய வார்ப்புகள்'' படத்திற்கு சரியான ஹீரோ கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பாடல்கள் முடிந்ததும் ஷூட்டிங் போக ஏற்பாடாகி இருந்தது.
"ஹீரோ கிடைக்காவிட்டால் ஷூட்டிங் கிடையாதா?'' கேட்டேன், பாரதியிடம்.
"நாளை ஒருநாள் கடைசி. எப்படியாவது யாரையாவது நடிக்க வைப்பேன். படப்பிடிப்பு ஏற்கனவே முடிவு செய்த தேதியில் தொடங்கும்'' உறுதியாகவே சொன்னார், பாரதி.
மறுநாள் என்னைப் பார்த்தவர், "என் உதவி டைரக்டர் பாக்யராஜ்தான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார்'' என்றார்.
கொஞ்ச நேரத்தில் பாக்யராஜ் வந்தார். நான் அவரிடம், "என்ன பாக்யராஜ்! நீங்கள் நடித்தால் நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா?'' என்று கிண்டல் செய்தேன்.
அவரோ, "இல்லே சார்! டைரக்டர் சொல்லிவிட்டார். அதுக்கு மேல பேச முடியாது சார்'' என்று யதார்த்தமாக சொன்னார்.
அந்தப்படம் வெற்றி பெற்று பாக்யராஜ×ம் ஹீரோ - இயக்குனர் என்று வளர்ந்து விட்டார். பிற்காலத்தில் பாக்யராஜின் திறமை கண்டு, அன்றைக்கு நான் சொன்ன முட்டாள்தனமான கிண்டல் பேச்சை எண்ணி பலமுறை வருந்தியிருக்கிறேன். "ஒருவரின் தகுதியை எடைபோட நீ யார்? உனக்கென்ன தகுதி இருக்கிறது?'' என்று பலமுறை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.

ஆண்டிப்பட்டி அருகே அனுமதியின்றி படப்பிடிப்பை நடத்திய உதயநிதி ஸ்டாலின் மற்றும் படக்குழுவினர் வெளியேற்றப்பட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம், ஆண்டிப்பட்டி, வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என்ற படப்பிடிப்பு நடந்து வருகிறது.
நேற்று ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வேலப்பர்கோவில் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. தகவல் அறிந்ததும் இந்து சமய அறநிலையத்துறையினர் படப்பிடிப்பு குழுவினரிடம் சென்று இங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கான அரசு வழங்கிய அனுமதியை கேட்டனர்.
ஆனால் படப்பிடிப்பு குழுவினர் அனுமதி வாங்காமல் படப்பிடிப்பு நடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து அனுமதி பெற்று படப்பிடிப்பினை நடத்துமாறு அறநிலையத்துறையினர் அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட வனப்பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த குழுவினர் ஆயத்தமாகி இருந்தனர். வனத்துறையினரும் அனுமதி பெற்றே படப்பிடிப்பு நடத்த வேண்டும் என கூறினர்.
இதனால் படப்பிடிப்புக்கு தயாராகி வந்த உதயநிதி ஸ்டாலின், கதாநாயகி நிவேதா மற்றும் குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

புதுமுக இயக்குனர் பர்னீஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்திற்கு 'ஒத்தைக்கு ஒத்த' என்று பெயர் வைத்துள்ளனர்.
அதர்வா தற்போது 'செம போதை ஆகாதே', 'ருக்குமணி வண்டி வருது', 'இமைக்கா நொடிகள்', 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அதர்வா நடிக்கும் புதிய படத்துக்கு 'ஒத்தைக்கு ஒத்த' என்று பெயர் சூட்டியுள்ளனர். இயக்குனர் பா.ரஞ்சித் உதவியாளர் பர்னீஷ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகர்கள் தியாகராஜன், நரேன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சண்டை, காதல் ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தின் கதையை பர்னீஷ் அமைத்திருக்கிறார். தற்போது அதர்வா இப்படத்துக்காக உடல் எடையைக் குறைக்க ஆரம்பிக்க, அவருக்கு நாயகி தேடும் படலத்தில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

விஷாலுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'பைரவா' வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய், சூர்யாவைத் தொடர்ந்து 'சண்டக்கோழி-2' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பிப்ரவரி மாதம் 'சண்டக்கோழி-2' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தற்போது இப்படத்தின் பிரீ-புரொடக்ஷன் பணிகளில் லிங்குசாமி கவனம் செலுத்தி வருகிறார்.
முதல் பாகத்தில் விஷாலின் தந்தையாக நடித்த ராஜ்கிரண் இப்படத்திலும் விஷாலின் தந்தையாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் சத்யராஜிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.