என் மலர்
அந்த சமயத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தனக்கு ரீ-என்ட்ரி படமாக பெரிய நடிகரின் படம் இருப்பதை எண்ணாமல் வைகை காமெடி நடிகர் இயக்குனரிடம் தனக்கு சம்பளமாக ரூ.4 கோடி வரை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். இதனால், அதிர்ச்சியடைந்த லி இயக்குனர் தயாரிப்பாளரிடம் கேட்டுவிட்டு வருவதாக நைசாக அங்கிருந்து கிளம்பி விட்டாராம்.
அதன்பிறகே, மொட்டை நடிகரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைத்து அழகு பார்த்தாராம் இயக்குனர். தனது தவறை உணர்ந்துவிட்ட வைகை காமெடி நடிகர் அதற்கு பரிகாரமாக தற்போது லி இயக்குனரின் அடுத்த படத்தில் நடிப்பதாக சொல்லி ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம்.
கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு பிறகு இப்படத்தை ரீமேக் செய்ய பி.வாசு முடிவு செய்துள்ளார். அதற்கான கதாநாயகனையும் தேர்ந்தெடுத்துவிட்டார். பி.வாசு தற்போது இயக்கிவரும் ‘சிவலிங்கா’ படத்தின் கதாநாயகனான ராகவா லாரன்ஸையே ‘மன்னன்’ ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஜனவரி முதல் வாரத்தில் ‘சிவலிங்கா’ படத்தின் இசை மற்றும் டிரைலரையும், ஜனவரி 26-ந் தேதி படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ள பி.வாசு, அதன்பிறகு ‘மன்னன்’ ரீமேக்கிற்கான பணிகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. ‘மன்னன்’ படத்தில் ரஜினியுடன் நடித்த கவுண்டமணி வேடத்திற்கு வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், குஷ்பு, விஜயசாந்தி உள்ளிட்டோர் வேடங்களில் நடிப்பவர்களின் நடிகைகள் தேர்வும் நடைபெற்று வருகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, நடித்துள்ள படம் ‘கத்திச்சண்டை’. இதை சுராஜ் இயக்கி இருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்து இருக்கிறார். வருகிற 23-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் பேசிய வடிவேலு...
“மக்கள் முகத்தில் கொஞ்ச நாட்களாகவே சிரிப்பை பார்க்க முடியவில்லை. துன்பத்தையும், துயரத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பார்க்கிறதுக்கே சங்கடமாக இருக்குது. மக்கள் கஷ்டப்படும் போது படத்தை விட வேண்டாம் என்றுதான் ‘கத்திச்சண்டை’ ரிலீசை தள்ளி வைத்தோம். கொஞ்ச நாளுக்கு பிறகு ‘ரிலீஸ்’ பண்ணலாமுன்னு இருந்தோம். இப்ப நாமாவது மக்களை சிரிக்க வைப்போம் என்று ‘கத்திச்சண்டை’ படத்தை ரிலீஸ் செய்கிறோம்.
கடைசிவரை மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஒரே மாதிரி நடித்தால் மக்களுக்கு போரடித்து விடும். அதனால் தான் விதம் விதமாக ‘விக்’ வைக்கிறேன். மேக்கப் போடுகிறேன். காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறேன்.
லிங்கா படத்தில் நடிக்க கூப்பிட்ட போது அதில் இரண்டாம் பாதியில் ஒருசில காட்சிகளில் தான் என்னுடைய கதாபாத்திரம் வருவதாக இருந்தது. காமெடி குறைவாக இருந்ததால்தான் அதில் நடிக்கவில்லை. ஏன்னா என்னை நம்பி வர்ற மக்களை நான் ஏமாற்றிவிடக் கூடாது.
நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இளைஞர்கள் பொறுப்புக்கு வரவேண்டும் என்றுதான் விஷால் தம்பிக்கு நான் ஆதரவு தெரிவித்தேன். அவரிடம் பொய் இல்லை. உழைப்பு இருக்கு. இப்போது உள்ள நிர்வாகிகள் நல்லா பண்றாங்க. கவனமாக பார்த்து பார்த்து பண்றாங்க எப்படியோ அரை கிணறு தாண்டிட்டாங்க. இனி சங்கத்துல நடக்கிற எல்லா விஷயமும் வெற்றிதான்” என்றார்.
சமீபத்தில் கோரத்தாண்டவமாடிய ‘வார்தா’ புயல் காரணமாக சென்னை நகரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
எனவே புதிய மரங்களை நடவேண்டும் என்பதில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அக்கறை காட்டியுள்ளார். இதற்காக இலவச மரக்கன்றுகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது புவி வெப்பமயமாதல் காரணமாக குடிக்க குடிநீர் இல்லாமல் அனைத்து மக்களும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.இந்த வேளையில் சென்னையில் வார்தா புயல் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் சாய்ந்து விட்டன.
அதனால் மக்கள் மேலும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே லாரன்ஸ் தனது டிரஸ்ட் மூலம் சென்னை முழுவதும் மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருக்கிறார்.
தங்கள் வீடுகள் அல்லது தங்களது தெருக்களில் வைக்க மரக்கன்று தேவைப்படுகிறவர்கள் 9791500866, 9790750784, 9003037939 என்ற எண்களுக்கு போன் செய்தால் வீடு தேடி வந்து இலவச மரக்கன்றை தருவதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை முதல் மரக்கன்றுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபகாலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த வடிவேலு, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், விஜய் ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார். சமீபத்தில் வடிவேலுவை சந்தித்த அட்லி, விஜய் படத்தின் கதையை அவரிடம் கூறியுள்ளார். கதை பிடித்துப்போன வடிவேலு அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை வடிவேலுவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த படம் விஜய் - வடிவேலு இணையும் 10-வது படமாகும். இப்படத்தில் ஏற்கெனவே, நான் கடவுள் ராஜேந்திரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஷ்ணு என்பவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். ரூபன் எடிட்டிங் பணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
வடிவேலு நடிப்பில் ‘கத்திசண்டை’ படம் வருகிற டிசம்பர் 23-ந் தேதி வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் விஷால், தமன்னா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர், சுராஜ் இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’, ‘தெறி’ ஆகிய படங்களின் ஆடியோ வெளியீடு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. ஆனால், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் பணப்பிரச்சினை, ஜெயலலிதாவின் மரணம் என பல காரணங்களால் ‘பைரவா’ ஆடியோ வெளியீடு பிரம்மாண்டமாக வெளியாகாது என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
எனவே, ‘பைரவா’ பாடல்கள் திட்டமிட்டப்படி டிசம்பர் 23-ந் தேதி ஆன்லைனில் நேரடியாக வெளியிடுவார்கள் என்று தெரிகிறது. ‘பைரவா’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மொத்தம் 4 பாடல்களும், 1 தீம் சாங்கும் உள்ளது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதியுள்ளார். பொங்கல் தினத்தையொட்டி 2017, ஐனவரி 12-ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘கதாநாயகன்’ படப்பிடிப்பு முடிந்தபிறகு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் நிலையில், தற்போது இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கதையை கேட்ட ஹன்சிகா, பிடித்துப்போய் இதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும், ஹன்சிகா நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ‘இஷான் புரொடக்ஷனஸ்’ நிறுவனம் சார்பில் துஷ்யந்த் ராம்குமார் தயாரிக்கிறார்.
மிக் ஸ்டுடியோ தயாரிக்கும் புதிய படம் ‘வனமகன்’. இதில் ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் சாயிஷா சேகல், தம்பிராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
‘தேவி’ படத்துக்கு பிறகு ஏ.எல்.விஜய் இந்த படத்தை இயக்குகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்கு ‘குமரி கண்டம்’ என்று முதலில் பெயர் வைப்பதாக கூறப்பட்டது. இப்போது ‘வனமகன்’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம்ரவி-ஏ.எல்.விஜய் இணையும் இந்த படம் புதிய கதை களத்தில் உருவாகிறது. ஜெயம் ரவிக்கு வித்தியாசமான படமாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
பாலா இயக்கத்தில் ஆர்யாவுடன் நடித்த ‘நான் கடவுள்’ படம் பூஜாவுக்கு முக்கிய படமாக அமைந்தது. இதில் அவர் பார்வையிழந்த பெண்ணாக நடித்து இருந்தார். பூஜாவின் தந்தை கர்நாடகாவை சேர்ந்தவர். தாய் இலங்கையை சேர்ந்தவர். இதனால் இலங்கை தலைநகர் கொழும்பில் அவர் வசித்து வந்தார். சில சிங்கள படங்களிலும் நடித்து இருக்கிறார்.
பூஜாவுக்கும், இலங்கையில் தொழில் அதிபராக இருக்கும் தீபக் சண்முகநாதன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் திருமணம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் பூஜாவுக்கு கொழும்பில் நேற்று ரகசிய திருமணம் நடந்தது. இலங்கையை சேர்ந்த பிரஜன் டேவிட் வேதகன் என்பவரை, நடிகை பூஜா திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
அவருக்கு இந்த விருதைப் பெற்றுத்தந்த படங்கள்:-
1. சிந்து பைரவி
2. சாகர சங்கமம் ("சலங்கை ஒலி'')
3. ருத்ரவீணை.
இதில், "சிந்து பைரவி'' 11-11-1985-ல் வெளியானது. கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். சங்கீதத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதல் திருப்பம் அவன் வாழ்வையே புரட்டிப்போட்டு விடுகிறது. `இசை' பற்றி பாலபாடம் கூட தெரியாத அன்பே வடிவான மனைவி, இசை மூலம் ஈர்க்கப்பட்டு, இசைக் கலைஞராலும் ஈர்க்கப்படும் இளம் பெண் என இந்த மூவர் பின்னணியில் பாலசந்தர் காட்சிகளை உருவாக்கியிருந்தார். 25 வாரம் ஓடி `இசை'க்கு மரியாதை ஏற்படுத்திக் கொடுத்த படம்.
இதில் "ஜே.கே.பி'' என்ற இசைக் கலைஞராக சிவகுமார் வாழ்ந்து காட்டியிருந்தார். பாசத்தைக் கொட்டும் அப்பாவி மனைவியாக வந்து, கணவரின் இன்னொரு காதலில் வெந்து, அப்புறமாய் தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும் அப்பாவிப் பெண் கேரக்டரில் சுலக்ஷனா வெளுத்துக் கட்டியிருந்தார்.
ஜே.கே.பி.யின் இசையை நேசித்து பிறகு அவரையும் நேசிக்கும் கேரக்டரில் சுஹாசினி நடிப்பில் சிகரம் தொட்டிருந்தார். இந்த நடிப்புக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவரைத் தேடிவந்தது என்பது படத்துக்கு கிடைத்த இன்னொரு சிறப்பு.
இந்தப் படத்தில்தான் பின்னணி பாடகியாக சித்ராவை இளையராஜா அறிமுகம் செய்தார்.
சித்ரா பாடிய "பாடறியேன், படிப்பறியேன், பள்ளிக்கூடம் தானறியேன்'' பாடல் அவருக்கு பெரும் புகழ் தேடிக்கொடுத்து, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அதோடு தமிழில் நிலையான பாடகியாகவும் நிலை நிறுத்தியது.
தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத், பரத நாட்டிய கலைஞரின் வாழ்க்கைப் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கிய படம் "சாகர சங்கமம்.'' "சங்கராபரணம்'' என்ற தெலுங்குப்படம் மூலம் மிகப்பிரபலமான இந்த இயக்குனரின் சாகர சங்கமமும் வெற்றிப்படமே. நடனக் கலைஞராக, நடிப்பின் சிகரத்தைத் தொட்டார், கமலஹாசன். அவருடன் இணைந்து நடித்தார், ஜெயப்பிரதா.
தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் இந்தப்படம் "சலங்கை ஒலி'' என்ற பெயரில் மொழி மாற்று செய்து வெளியிடப்பட்டது. `மவுனமான நேரம்', `ஓம் நமச்சிவாய', `ததித ததித தந்தானா' போன்றவை, இளையராஜா இசையில் மிகவும் பிரபலமான
பாடல்கள்."ருத்ரவீணை'' இளையராஜாவின் இசைக்கு தேசிய விருது பெற்றுத்தந்த மூன்றாவது படம். கே.பாலசந்தர் இயக்கினார்.
தேசிய விருது பெற்றது குறித்து இளையராஜா கூறியதாவது:-
"ஒரு படத்துக்கு எந்த மாதிரி தேவையோ அதை சரியாக கொடுப்பது ஒரு இசையமைப்பாளரின் கடமை. நானும் அதைத்தான் செய்தேன். சில பாடல்கள் ரெக்கார்டிங்கின்போதே அதன் தனித்தன்மை தெரிந்து விடும். "சிந்து பைரவி'' படத்தில் "பாடறியேன் படிப்பறியேன்'' பாடல் பதிவாகும்போது, என்னுடன் இருந்த டைரக்டர் கே.பாலசந்தரிடம், "இந்தப் பாடல் மட்டும் உரிய வரவேற்பைப் பெறாவிட்டால் நான் இசையமைப்பாளரே அல்ல'' என்றேன். விருது கொடுத்தது, இசை மீதான என் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.''
இவ்வாறு இளையராஜா கூறினார்.
அதேபோல், ஒரே மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் நோ சொல்கிறாராம். இப்படியாக நிறைய கண்டிஷன்களுடன் நடித்து வரும் நயன நடிகை தற்போது கூடுதலாக ஒரு கண்டிஷனையும் தன்னுடைய கதை தேர்வில் வைத்திருக்கிறாராம். அதன்படி, அழுது நடிக்கும்படியான காட்சிகளை தன்னுடைய படங்களில் வைக்க வேண்டாம் என்று வற்புறுத்துகிறாராம்.
அப்படியிருக்கும் காட்சிகளில் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று சொன்னால், இவர் அந்த காட்சியில் ரொம்பவும் குலுங்கி குலுங்கி எல்லாம் அழமுடியாது என்று சொல்கிறாராம். இயக்குனர்களும் வேறு வழியில்லாமல் நடிகையின் வேண்டுகோளுக்கேற்ப காட்சிகளை மாற்றியமைத்து படமாக்குவது என்று முடிவு செய்கிறார்களாம்.
இந்நிலையில், தற்போது ரம்யா கிருஷ்ணனின் முகத்தை மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடலோடு பொருத்தி, போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமானால் எப்படியிருக்கும் என்ற யூகத்தோடு அந்த போஸ்டர் வெளிவந்தது. இவரை மட்டுமில்லாது, அஜித், விஜய், சிம்பு, மாதவன் உள்ளிட்டவர்களின் முகத்தையும் பிரபலங்களின் உடலோடு பொருத்தி போஸ்டர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆனால், இவற்றில் ரம்யா கிருஷ்ணன் அப்படியே அச்சு அசலாக ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருந்தார். எனவே, அவரிடம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமானால் அதில் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு அவர் கூறும்போது, நிறைய பேர் என்னிடம் பலமுறை உங்களுடைய கனவு கதாபாத்திரம் எது? என்று கேட்டுள்ளார்கள். அப்போதெல்லாம் நான் எந்த பதிலும் கூறவில்லை.
இப்பொழுது நான் கூறுகிறேன், என்னுடைய வாழ்நாள் கனவு கதாபாத்திரம் ஜெயலலிதா அம்மாதான். அவர்களுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது ரொம்பவும் சிரமமான ஒன்றுதான். நல்ல தயாரிப்பாளர்கள், நல்ல திரைக்கதையோடு இயக்குனர்கள் என்னை அணுகினால், அம்மாவின் கதாபாத்திரத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார்.








