என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர கடினமாகவும் நேர்மையாகவும் உழைப்போம் என்று நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
    பிப்ரவரி 5-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். விஷால் அணி சார்பில் அவர் நிறுத்தப்பட்டு இருக்கிறார். டைரக்டர் டி.ராஜேந்தர், ராதாகிருஷ்ணன், டைரக்டர் திருமலை ஆகியோரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

    தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டு இருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    “விஷால் அணியினர் என் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற பெரிய பொறுப்புக்கு போட்டியிட நிறுத்தி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விஷால் மற்றும் அவரது அணியினர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடன் சேர்ந்து சிறப்பாக பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சி.

    நாங்கள் வித்தியாசத்தை ஏற்படுத்துவோம். வாழ்க்கை என்பது எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவது. மாற்றத்தை கொண்டு வர கடினமாகவும் நேர்மையாகவும் உழைப்போம்.”

    இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
    கமலஹாசனும், ஸ்ரீபிரியாவும் நடித்த "வாழ்வே மாயம்'' பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

    கமலஹாசனும், ஸ்ரீபிரியாவும் நடித்த "வாழ்வே மாயம்'' பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

    தெலுங்கில், 'பிரேமபாசம்' என்ற பெயரில் காதலுக்கு புது இலக்கணம் சொன்ன படம் பெரும் வெற்றி பெற்றது. ஒரு அழகான இளம் பெண்ணை விரட்டி விரட்டி காதலிக்கும் இளைஞன் ஒருவன், அவள் காதல் கிடைக்கப் பெற்ற பிறகு அவளை உதாசீனம் செய்கிறான். காதலியை பல்வேறு கட்டங்களில் வெறுப்பேற்றி, அவளை வேறொரு திருமணமும் செய்ய வைத்து விடுகிறான். அதன் பிறகுதான் அவனுக்கு ரத்தப் புற்று நோய் வந்த விஷயமே காதலிக்கு தெரியவருகிறது.

    இந்த உணர்ச்சிபூர்வ காதல் கதையை தமிழில் எடுக்க விரும்பினார், பாலாஜி. அதுவே கமல், ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா நடிக்க "வாழ்வே மாயம்'' என்ற பெயரில் படமானது.

    இந்தப் படத்தில் கதாநாயகி என்ற இடத்தில் ஸ்ரீதேவிதான் இருந்தார். நோயுற்ற பிறகு தன்னைத் தேடிவரும் நாயகனுக்கு ஆதரவும், அடைக்கலமும் கொடுக்கும் 'விலை மாது' கேரக்டரில் நடித்திருந்தார், ஸ்ரீபிரியா.

    இந்தக் கேரக்டரிலும் நடிப்பது தொடர்பாக முதலில் தன் அதிருப்தியை வெளியிட்டார், ஸ்ரீபிரியா. ஆனால், படத்தில் ஸ்ரீதேவி கேரக்டருக்கு இணையாக அவரும் பேசப்பட்டார்.

    இந்தப் படத்தில் கமலின் காதலியாக வரும் ஸ்ரீதேவியும், விலைமாது கேரக்டரில் வரும் ஸ்ரீபிரியாவும் சந்திக்கும் இடத்தில் ஸ்ரீபிரியா பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல் கிடைக்கும்படி செய்திருந்தார், வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன். ஏற்கனவே "பில்லா'' படத்தில் ஸ்ரீபிரியாவின் கேரக்டரை ஏ.எல்.நாராயணன் மெருகேற்றியிருந்தார். இந்தப் படத்தில் அது இன்னும் அதிகமாகப் பளிச்சிட்டது.

    இந்தப் படத்தில் நடித்த வகையில் ஸ்ரீபிரியாவுக்குள் இன்னொரு சந்தோஷமும் இருக்கிறது. பாலாஜி தயாரிக்கும் எல்லாப் படங்களிலுமே கதாநாயகன் பெயர் 'ராஜா' என்றும் கதாநாயகி பெயர் 'ராதா' என்றும் இருக்கும். "வாழ்வே மாயம்'' படத்தில், கதாநாயகன் ராஜாவாக கமல் நடித்தார். 'ராதா' கேரக்டரில் ஸ்ரீபிரியாதான் நடித்தார். ஸ்ரீதேவி, 'தேவி' என்ற கேரக்டரில் நடித்தார். இப்படி பாலாஜி பட 'நாயகி' பெயரில் நடிக்க நேர்ந்ததே பெரிய திருப்திதான் ஸ்ரீபிரியாவுக்கு.

    அடுத்தடுத்து 2 படங்களில் பெரிய கேரக்டர் அமையாததால், தயாரிப்பாளர் பாலாஜி தனது புதிய தயாரிப்பில் ஸ்ரீபிரியாவாலேயே மறக்க முடியாத கதாநாயகி கேரக்டரை கொடுக்க நினைத்தார். அப்போது இந்தியில் ரண்தீன்கபூர், ஹேமமாலினி நடித்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த "ஹாத் கீ சபாய்'' என்ற படத்தின் தமிழ் உரிமை வாங்கி அதில் கமலஹாசனையும், ஸ்ரீபிரியாவையும் ஜோடியாக நடிக்க வைத்தார். அந்தப் படமே "சவால்.'' படம் தமிழிலும் வெற்றி பெற்றது. ஸ்ரீபிரியாவின் நட்சத்திர அந்தஸ்தையும் உயர்த்தியது.

    எத்தனையோ நடிகைகளுடன் நடிக்க நேர்ந்த போதிலும், ஸ்ரீபிரியாவின் "மரியாதைக்குரிய நடிகை'' பட்டியலில் இருந்தவர் மனோரமாதான்.

    அதற்கான காரணத்தை ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-

    "மற்ற நடிகர் - நடிகைகள் நலனில் எப்போதுமே அக்கறை செலுத்துபவர் 'ஆச்சி' மனோரமா. புதுமுகம் ஆயிற்றே என்றெல்லாம் ஒதுங்கிப் போகமாட்டார். என் நான்காவது படமான "தொட்டதெல்லாம் பொன்னாகும்'' படத்தில் ஆச்சியும் இருந்தார். படத்தில் ஜெய்சங்கர் - ஜெயசித்ரா ஜோடியாக நடித்தனர். நான் தேங்காய் சீனிவாசனின் ஜோடியாக நடித்தேன்.

    இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு சேலத்தில் நடந்தது. 'ஆச்சி'யும் வந்திருந்தார். நான் நடிக்க வருவதற்கு முன்பே, எங்கள் குடும்பத்துடன் ஆச்சிக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அதனால் நான் சினிமாவுக்கு வந்தபிறகு, என்னை ரொம்பவும் அக்கறையுடன் பார்த்துக் கொள்வார்.

    எப்போதும் படப்பிடிப்புக்கு என்னுடன் பாட்டி வருவதுண்டு. 'ஆச்சி'யுடன் எனக்கு படப்பிடிப்பு என்றால், பாட்டி வரமாட்டார். இந்த வகையில் ஆச்சி என் இன்னொரு அம்மா ஸ்தானத்தில் இருந்தார்.

    "தொட்டதெல்லாம் பொன்னாகும்'' படப்பிடிப்பில் அன்று எனக்கும் ஆச்சிக்கும் சீன் இருந்தது. முதலில் எனக்கு மேக்கப் போட்டார்கள். எனக்கு மேக்கப் போட்டவர் ஏதோ பெயருக்கு அவசரமாக போட்டு விட்டு போய்விட்டார். நான் நடிக்க வேண்டிய அன்றைய காட்சிக்கு எனக்கு கொடுக்கப்பட்டிருந்த உடையும் 'ஏனோதானோ' என்றிருந்தது.

    நான் மேக்கப் ரூமை விட்டு வெளியே வரவும் 'ஆச்சி' என்னைப் பார்த்து விட்டார். 'மேக்கப்' என்ற பெயரில் என் முகம் இருந்த விதம் ஆச்சிக்குள் கோபத்தை உண்டுபண்ணிவிட்டது. என் கையைப்பிடித்து மறுபடியும் மேக்கப் ரூமுக்கு அழைத்துப் போனார்.

    மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவர்களிடம், "ஒரு தமிழ்ப்பொண்ணு நடிக்க வந்தா அவளுக்கு இந்த மாதிரிதான் மரியாதை கொடுப்பீங்களா?'' என்று உரத்த குரலில் கண்டித்ததுடன், எனக்கு மறுபடியும் மேக்கப் போட ஏற்பாடு செய்தார். சரியான உடைகளையும் தரச்செய்தார்.

    அன்றைக்கு என்னுடன் என் அம்மாவோ, பாட்டியோ இருந்திருந்தாலும், 'ஆச்சி' அளவுக்கு நிச்சயம் செய்திருக்க முடியாது. இந்த வகையில் ஆச்சி, எனக்கு இன்னொரு அம்மா.

    இப்படிப்பட்ட ஆச்சியிடமே ஒரு தடவை ஏதோ ஒரு காரணத்துக்காக கோபித்துக்கொண்டு விட்டேன். அம்மா - பெண்ணுக்கிடையே வந்து போகும் சாதாரண மோதலாக அதை ஆச்சி எடுத்துக் கொண்டார். எனக்கு அப்போது ஆச்சி அளவுக்கு பக்குவம் ஏது?

    ஒருநாள் ஷெட்டில் என் கண்ணில்பட்ட ஆச்சியின் ஹேர் டிரஸ்ஸரிடம், "மேடம் நல்லா இருக்காங்களா?'' என்று கேட்டுவிட்டேன். அடுத்த கணம் எங்கிருந்துதான் ஆச்சி வந்தாரோ, என்னை பிலுபிலுவென பிய்த்துவிட்டார்.

    "என்னை மேடம்னு கூப்பிடற அளவுக்கு நீங்க பெரிய மனுஷி ஆகிட்டீங்களா?'' என்று கோபத்துடன் கூறினார். அவர் அப்படி உரிமையுடன் என் மீது கோபப்பட்டு, மீண்டும் என்னுடன் சமரசமாகிவிடவேண்டும் என்பதுதான் என் திட்டம்! அது நன்றாகவே நடந்தேறியது.

    இப்போது நான் நடிக்கும் "இம்சை அரசிகள்'' சீரியலில்கூட எனக்கும் ஆச்சிக்கும் சமமான கேரக்டர்கள். ஆச்சி அவருக்கே உரிய ஆற்றலில் சின்னத்திரை ரசிகர்களையும் குலுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

    எப்போதும் என்னை வாய் நிறைய 'ஆலு' (ஒரிஜினல் பெயரான அலமேலுவின் சுருக்கம்) என்று வாய் நிறைய அவர் அழைப்பதே தனி அழகு.''
    ஜெயலலிதா மரணத்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினியால் மட்டுமே முடியும் என்று திருச்சி மாவட்ட நிர்வாகி கூறினார்.

    திருச்சி:

    ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று சென்னை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருச்சி மாவட்ட தலைமை ரஜினி மன்ற அமைப்பாளர் ராயல் ராஜூ ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தால் தமிழக அரசியலில் மிகப் பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினியால் மட்டுமே முடியும்.

    நடுநிலையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சியில் இருப்பவர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள், ஆட்டோ டிரைவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர். ரஜினி அரசியலுக்கு வர இதுவே சரியான நேரம்.

    தமிழகத்தில் புரையோடிய நிலையில் இருக்கும் லஞ்சம், வன்முறையால் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் லஞ்சமும், வன்முறையும் முற்றிலுமாக ஒழிக்கப்படும். மக்கள் செழிப்பாக இருப்பார்கள்.

    மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்தே 1996-ம் ஆண்டு ஆட்சிக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தார். அதேபோல் தற்போதும் அவர் குரல் கொடுப்பதோடு மட்டுமின்றி நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும். இனியும் பல்லக்கு தூக்க வேண்டாம், பல்லக்கில் நாம் ஏறவேண்டும்.

    வாய்ப்பு தானாக வராது, நாம் தான் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ரஜினியின் வாக்கிற்கு ஏற்ப உடனடியாக ரஜினி தனது முடிவை அறிவிக்க வேண்டும்.

    விரைவில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து ரஜினி மன்ற நிர்வாகிகளும் ரஜினியை சென்னையில் நேரில் சந்தித்து எங்கள் நியாயமான கோரிக்கையை தெரிவிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விஜய் பட இயக்குனர் ஒருவர் 15 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர் ரவி. இப்படம் 2001-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்கு பிறகு ரவி எந்த படமும் இயக்கவில்லை. இந்நிலையில், தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரவி புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார்.

    இவர் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஆனால், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி முடிந்துள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கேரளாவில் நடத்தவுள்ளனர். இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

    இப்படத்திற்கு ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு இசையமைத்த சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்த வருடத்தின் இடையில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.கல்யாணசுந்தரம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், நடிகர் விஷால் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தயாரிப்பாளர் சங்கம் குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்துள்ளார். இதை அவர் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஆனால், அவர் பேசியது பத்திரிகையில் செய்தியாக வெளியாகியுள்ளது.

    இப்போது தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக நடிகர் விஷால் கூறினால், அவரது இடைநீக்கம் உத்தரவை மீண்டும் பரிசீலிக்கலாம் என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதுகுறித்து விஷால் தரப்பின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அவரது வக்கீலுக்கு உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை நாளைக்கு (செவ்வாய்க்கிழமை) தள்ளி வைத்தார்.
    சிரஞ்சீவிக்காக காஜல் அகர்வால் தான் நடிக்க ஒப்பந்தமான படங்களில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

    ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி நடித்திருக்கும் படம் ‘கைதி எண் 150’. இதை விநாயக் இயக்கி இருக்கிறார். இது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்.

    சிரஞ்சீவி ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கும் இதில், ராய்லட்சுமி ஒரு பாட்டுக்கு ஆடி இருக்கிறார். வருகிற 13-ந் தேதி சங்கராந்தியையொட்டி இந்த படம் ‘ரிலீஸ்’ ஆகிறது.

    இதில் காஜல் அகர்வால் நடித்தது குறித்து கூறிய இயக்குனர் விநாயக், “இந்த படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க அனுஷ்கா தேர்வு செய்யப்பட்டார். அவர் ‘பாகுபலி-2’ உள்ளிட்ட படங்களுக்கு ஏற்கனவே கால்ஷீட் கொடுத்து விட்டதால் இதில் நடிக்க முடியவில்லை.

    இதன் பிறகு காஜல் அகர்வாலை அணுகினோம். அவரும் வேறு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். எனவே முதலில் தயங்கினார்.

    இந்த படத்தின் தயாரிப்பாளர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். அவர் காஜலின் நண்பர். அவரது நட்பை மதித்து காஜல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். சிரஞ்சீவியுடன் நடிப்பதற்காக காஜல் ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஒரு படத்தில் இருந்து விலகி ‘கைதி எண் 150’ படத்தில் நடித்தார்” என்றார்.

    இந்த படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. சிரஞ்சீவிக்கு வயது 61. காஜலின் அப்பா வயது. என்றாலும் சிரஞ்சீவியின் ஸ்டைலும், அழகும் அப்படியே இருக்கிறது. ஜோடி பொருத்தம் சூப்பர் என்று தெலுங்கு ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி அவரது ரசிகர்கள் சென்னையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்..

    இந்தியா முழுவதும் அறியப்பட்ட முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஜெயலலிதா. அவரது திடீர் மரணம் தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தற்போது ஆளும் கட்சியாக அ.திமு.க. இருந்து வருகிறது. எனவே, ஆட் சியை காப்பாற்றுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    சசிகலாவை அந்த கட்சி நிர்வாகிகள் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்ந்து எடுத்துள்ளனர். அடுத்து சசிகலா முதல்- அமைச்சர் ஆக வேண்டும் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளும், சில அமைச்சர்களும் கூறி வருகிறார்கள்.

    தமிழ்நாட்டில் ஜெயலலிதாவைப்போல மக்கள் செல்வாக்கு பெற்ற புதிய தலைவர்கள் அரசியலில் இல்லை. எனவே ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடும் வகையில் சென்னை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் பரபரப்பான போஸ்டர் கள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை கோட்டையில் ரஜினி கை அசைப்பது போன்ற படத்தை இணைத்துள்ளனர். அதில், “தலைமை ஏற்க மக்கள் அழைக்கிறார்கள்... தொண்டர்கள் இருக்கிறோம்” என்ற வாசகம் இடம் பெற் றுள்ளது.

    இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும். நேர்மையான ஆட்சியாக அது நடக்க வேண்டும். அதை வழிநடத்த செல்வாக்குமிக்க நல்ல தலைவர் தேவை. அந்த தகுதி ரஜினிக்கு மட்டுமே உள்ளது. எனவே, இந்த தருணத்தில் அவர் அரசியலுக்கு வரவேண்டும். என்பதை வற்புறுத்தவே இந்த அழைப்பை விடுத்துள்ளோம்”.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    போஸ்டரில் இடம்பெற்றுள்ள திருச்சி மாவட்ட ரஜினி மன்ற அமைப்பாளர் ராயல் ராஜு கூறியதாவது:-

    தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ரஜினியால் மட்டுமே முடியும். அனைத்து தரப்பினரும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர்.

    ரஜினி அரசியலுக்கு வர இதுவே சரியான நேரம். தமிழகத்தில் புரையோடிய நிலையில் இருக்கும் லஞ்சம், வன்முறையால் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் லஞ்சமும், வன்முறையும் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

    மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்தே 1996-ம் ஆண்டு ஆட்சிக்கு எதிராக ரஜினி குரல் கொடுத்தார். அதேபோல் தற்போதும் அவர் குரல் கொடுப்பதோடு மட்டுமின்றி நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும். உடனடியாக ரஜினி தனது முடிவை அறிவிக்க வேண் டும்.

    விரைவில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து ரஜினி மன்ற நிர்வாகிகளும் ரஜினியை சென்னையில் நேரில் சந்தித்து எங்கள் நியாயமான கோரிக்கையை தெரிவிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ‘ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்‘ என்று அவரது ரசிகர்கள் நீண்ட காலமாகவே வற்புறுத்தி வருகிறார்கள். என்றாலும் அதை ரஜினி ஏற்கவில்லை. இப்போது மீண்டும் அவரை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினிக்கு அழைப்பு விடுத்து அவரது ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளனர்.

    ரஜினி இந்த அழைப்பை ஏற்பாரா என்பது தெரியவில்லை. என்றாலும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் ரஜினி ரசிகர்களின் திடீர் போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜெயலலிதா மறைவினால் சினிமா துறையினருக்கு 2016 மோசமான ஆண்டாக கழிந்தது என்று நடிகை ரோஜா கூறியுள்ளார். இது குறித்த செய்தியை விரிவாக கீழே பார்க்கலாம்.
    ஐதராபாத்தில் நடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நடிகை ரோஜா கலந்துகொண்டு பேசியதாவது:-

    “ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதிக்கலாம் என்று நிரூபித்தவர் ஜெயலலிதா. சட்டமன்றத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கியபோது வேறு பெண்ணாக இருந்தால் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பார். ஆனால் ஜெயலலிதா அதை எதிர்கொண்டு கஷ்டப்பட்டு போராடி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். இது அவரது விடாமுயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெகுமதி.

    சாதாரண பெண்கள்தானே இவர்களால் என்ன செய்து விட முடியும்? என்று அலட்சியமாக பார்க்கும் ஆண்களுக்கு எதையும் செய்ய முடியும் என்று நிரூபித்து விட்டு போய் இருக்கிறார். அவர் சினிமாவில் இருந்தவர் என்பது பெருமை. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பது பெருமை. முதல்-அமைச்சர் ஆனது பெருமை.

    நானும் ஜெயலலிதாவைப்போலவே சட்டமன்றத்தில் இருந்து ‘சஸ்பென்ட்’ செய்யப்பட்டேன். அப்போது எனது மகள், ‘அரசியல் வேண்டாம் அம்மா. சினிமாவில் சம்பாதித்து நிறைய பேர் குடும்பம் குழந்தைகள் என்று சந்தோஷமாக இருக்கிறார்கள். நாமும் அப்படியே இருந்து விட்டு போகலாம் இப்படியெல்லாம் எதற்கு அவமானப்படவேண்டும்? அரசியலை கைகழுவி விட்டு வந்து விடு’ என்றாள்.

    நான் அவளிடம், ஜெயலலிதா கஷ்டத்தில் 10 சதவீதம் கூட எனக்கு இல்லை. அவர் தனியாக வாழ்ந்து அவமரியாதைகளை சந்தித்து போராடி உயர்ந்த இடத்துக்கு வந்தார். அதை நினைக்கும்போது எனக்கு வருவதெல்லாம் கஷ்டமாக தெரியவில்லை என்றேன். சினிமா, அரசியல் உள்ளிட்ட எல்லா துறைகளில் இருக்கும் பெண்களுக்கும் ஜெயலலிதா வாழ்க்கை பாடமாகவும் வழிகாட்டியாகவும் உந்து சக்தியாகவும் இருக்கிறது. அவரைப்போல் துணிச்சலாக வாழவேண்டும்.

    ஜெயலலிதா மறைவால் 2016 சினிமா துறையினருக்கு மோசமான ஆண்டாக கழிந்து இருக்கிறது”

    இவ்வாறு ரோஜா பேசினார்.
    இந்த படம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கக்கூடிய, சமூக பொறுப்புடன் உருவாக்கப்பட்டு உள்ளது என்று இயக்குனர் ஹரி கூறியுள்ளார்.
    திரைப்பட இயக்குனர் ஹரி தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிங்கம் படத்தின் 3-வது பாகம் “எஸ்-3“ என்ற பெயரில் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ள இந்த படத்தில் சிங்கம் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் நடித்து உள்ளனர்.

    புதிதாக சுருதிஹாசன், சூரி, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க ஆந்திர மாநிலத்தை சுற்றி நடக்கக்கூடிய கதையை வைத்து படம் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் இந்தி சினிமாவில் இருந்து புதிய வில்லன்கள் நடித்துள்ளனர். படத்தின் சில காட்சிகள் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் எடுக்கப்பட்டு உள்ளன.

    “எஸ்-3“ படம் வருகிற 26-ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தில் 7 விமான நிலையங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. மேலும் 8 வகையான விமானங்களை இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளோம். இந்த படம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கக்கூடிய, சமூக பொறுப்புடன் உருவாக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் எதிர்பார்ப்பை “எஸ்-3“ கண்டிப்பாக பூர்த்தி செய்யும்.அடுத்து நடிகர் விக்ரமுடன் சாமி படத்தின் 2-ம் பாகத்தை தயாரிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்த படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார்.
    பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். அவர் 1.89 மீட்டர் உயரம் தாண்டி அசத்தினார்.

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். இதற்காக அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே மாரியப்பனை சந்தித்து, அவரது அனுபவங்களை சேகரித்து பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தில் மாரியப்பன் தங்கவேலு கதாபாத்திரத்தில் நடிகர் தேர்வு நடக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த படம் உருவாகிறது.

    வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களை இயக்கிய ராஜூமுருகன் வசனம் எழுதுகிறார். இந்த படத்துக்கு ‘மாரியப்பன்’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

    இந்த படத்துக்கான முதல் தோற்றம் (போஸ்டர்) புத்தாண்டையொட்டி நேற்று வெளியிடப்பட்டது. இந்தி நடிகர் ஷாருக்கான் இதனை வெளியிட்டார்.
    படங்கள் தோல்வி அடைந்ததால் அதிர்ஷ்டம் இல்லாத நடிகை என்று தன்னை ஒதுக்கியதாக நடிகை ரகுல்பிரீத்சிங் கூறினார்.
    தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    “சினிமாவில் யார், எப்படி மாறுவார் என்றெல்லாம் கணிக்க முடியாது. பல ஆண்டுகள் சினிமாவில் இருக்கும் ஒருவர் நிலைமை ஒரே நாளிலேயே தலைகீழாய் மாறிவிடும். எனக்கு ஆரம்பத்தில் படங்கள் குறைவாகவே வந்தன. கடந்த வருடம் 3 படங்கள் தோல்வி அடைந்தன. இதனால் என்னை அதிர்ஷ்டமில்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள். நான் நடித்தால் படம் ஓடாது என்றும் முத்திரை குத்தினார்கள்.

    இதற்காக நான் துவண்டு விடவில்லை. தொடர்ந்து போராடினேன். அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் வெளியான படங்கள் வெற்றிகரமாக ஓடின. தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்கள் குவிகிறது. என்னை அதிர்ஷ்டமில்லாதவள் என்றவர்கள் இப்போது அதிர்ஷ்டக்கார நடிகை என்று கொண்டாடுகிறார்கள். நாளை படங்கள் ஓடாவிட்டால் மீண்டும் அதிர்ஷ்டம் இல்லாத நடிகை என்பார்கள்.

    இந்த இடத்துக்கு வருவதற்கு நான் நிறைய உழைத்து இருக்கிறேன். கஷ்டப்பட்டு இருக்கிறேன். வெற்றியை பார்த்து எனக்கு தலைக்கனம் வரவில்லை. தற்போது திரைக்கு வந்து தோல்வி அடைந்த பல படங்களில் என்னைத்தான் கதாநாயகியாக நடிக்க அழைத்தனர். கதை பிடிக்காததால் மறுத்தேன். நல்ல கதைகளை இப்போது என்னால் கணிக்க முடிகிறது.

    நான் அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டேன். உழைப்புதான் முக்கியம். கடின உழைப்புக்கு பலன் உடனே கிடைக்காவிட்டாலும் காத்திருந்தால் நிச்சயம் கிடைக்கும். படங்களின் வெற்றிக்கு நடிகர், இயக்குனர், தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டு முயற்சியே காரணம். இயக்குனர் திறமை இல்லாதவராக இருந்தால் படம் ஓடாது.

    உணவு, உடற்பயிற்சிகள் மூலம் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறேன். பழம், காய்கறிகள் அதிகம் சாப்பிடுகிறேன். சொந்தமாக உடற்பயிற்சி கூடமும் வைத்து இருக்கிறேன். சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறேன். அனாதை குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறேன். அவர்களின் படிப்பு செலவுகளையும் கவனிக்கிறேன். எதிர்காலத்தில் இன்னும் நிறைய பேரை தத்தெடுத்து வளர்ப்பேன்.”

    இவ்வாறு அவர் கூறினார்.
    சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘அடிமைப் பெண்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகியப் படங்கள் சிறப்பு பிரிவின்கீழ் திரையிடப்படுகின்றன.
    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினால் தள்ளிவைக்கப்பட்ட சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘அடிமைப் பெண்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகியப் படங்கள் சிறப்பு பிரிவின்கீழ் திரையிடப்படுகின்றன.

    தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் தமிழ் சினிமா தயாரிப்பு தொடர்பான பல சங்கங்களை சேர்ந்த ’இன்டோ சினி அப்ரிசிசேஷன்’ என்ற அமைப்பு கடந்த ஐந்தாண்டுகளாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச திரைப்பட விழாவை சென்னை நகரில் நடத்தி வருகிறது.

    அவ்வகையில், கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதியில் இருந்து 22-ம் தேதிவரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.

    இதையடுத்து, சென்னை சர்வதேச திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, ஜனவரி 5 முதல் 12 வரை ஒருவார காலத்துக்கு இந்த விழா நடைபெறவுள்ளது. 65 நாடுகளை சேர்ந்த 165 சிறந்த படங்கள் இவ்விழாவில் திரையிடப்படுகின்றன.

    இந்நிலையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை கேசினோ தியேட்டரில் நடைபெறும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பிரிவின்கீழ், எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா முதன்முதலாக சேர்ந்து நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ஜெயலலிதா இருவேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் ஜீவாவாகவும், இளவரசி பவளவல்லியாகவும் நடித்துள்ள ‘அடிமைப் பெண்’ ஆகியப் படங்கள் திரையிடப்படுகின்றன.
    ×