என் மலர்
“நயன்தாரா, திரிஷா, கரீனாகபூரை போன்று திறமையான நடிகைகளால்தான் சினிமாவில் நிலைக்க முடியும்” என்று தமன்னா கூறியுள்ளார். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
ஐதராபாத்தில் நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-
“எனது கட்டுக்கோப்பான உடல் அழகுதான் எனக்கு ‘பலம்.’ சினிமாவில் அறிமுகமானதில் இருந்து ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கிறீர்களே? இதற்கு என்ன சாப்பிடுகிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். கேரளாவை சேர்ந்தவர்கள் காப்பியுடன் நெய்யையும் சேர்த்து குடிக்கிறார்கள். நான் காப்பி அல்லது பிளாக் காப்பியுடன் வெண்ணெயை கலக்கி குடிக்கிறேன்.
நிறைய காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்கிறேன். முட்டை சாப்பிடுகிறேன். பருப்பு வகைகளை தொடுவது இல்லை. உடற்பயிற்சிகளும் செய்கிறேன். இதுதான் எனது அழகு ரகசியம். வீட்டில் இருக்கும்போது, ‘மேக்கப்’ போட மாட்டேன். பைஜாமா அணிவேன். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது புடவை கட்டிக் கொள்வேன்.
புடவைதான் சவுகரியமான உடையாக இருக்கிறது. சினிமாவில் உடை விஷயங்களில் சில நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. சினிமா வேறுமாதிரியான உலகம். இங்கு மனதில் இருப்பதை மறைத்து வெளியில் சிரித்து பேச வேண்டும் என்று கற்று இருக்கிறேன். சினிமா என்பது ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. நானும் அந்த தாக்கத்தில்தான் நடிகையானேன்.
ஆனாலும் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதையெல்லாம் விட்டு விட வேண்டும். சினிமாவில் அனுஷ்காவுடன் எனக்கு நெருக்கமான நட்பு இருக்கிறது. உடை விஷயங்களில் அவரிடம்தான் ஆலோசனைகள் கேட்பேன். சினிமாவில் 5 வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நீடிப்பது அபூர்வம். திறமையான நடிகைகளால் மட்டும்தான் நிலைக்க முடியும்.
நயன்தாரா, திரிஷா, காஜல், கரீனாகபூர் உள்ளிட்ட நடிகைகள் தங்கள் திறமையால்தான் 10 வருடங்களை தாண்டியும் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். திருமணம் என்பது சிறந்த பந்தம். அதை மதிக்கிறேன். ஆனால், இப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.
சினிமாவில் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. மனதுக்கு பிடித்தவரை சந்தித்தால் பெற்றோர்களிடம் சொல்லி அவர்கள் சம்மதித்தால் திருமணம் செய்து கொள்வேன். அப்படி ஒருவர் கிடைக்காவிட்டால் பெற்றோர்கள் நிச்சயம் செய்யும் மாப்பிள்ளையை மணப்பேன். படப்பிடிப்புகள் இல்லாதபோது எனது தந்தையுடன் இணைந்து நகை வியாபாரம் செய்கிறேன்.”
இவ்வாறு தமன்னா கூறினார்.

நடிகை நந்திதா தாஸ் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு செய்து இருக்கிறார். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
பிரபல இந்தி நடிகை நந்திதா தாஸ். இவர் ‘லெஸ்பியன்’ கதையை மையமாக வைத்து இந்தியில் தயாரான ‘பயர்’ படத்தில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். தமிழில் ‘அழகி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘நீர்ப்பறவை’ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். சமூக சேவை பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். நந்திதா தாசுக்கும், சவுமியா சென் என்பவருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த 2007-ம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.
அதன் பிறகு, மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் சுபோத் மஸ்காராவுக்கும், நந்திதா தாசுக்கும் காதல் மலர்ந்தது. இதைத்தொடர்ந்து இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் விகான் என்ற ஆண் மகன் உள்ளான்.
இந்த நிலையில் நந்திதா தாசுக்கும், அவருடைய கணவர் சுபோத் மஸ்காராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து நந்திதா தாஸ் கூறும்போது, ‘எனது கணவரை விவாகரத்து செய்ய நான் திட்டமிட்டுள்ளேன். இருவரும் கலந்து பேசி, பிரிந்து விடுவது என்று ஒருமனதாக முடிவு எடுத்து இருக்கிறோம். குழந்தை இருக்கும் பெற்றோர்கள் விவாகரத்து செய்வது கடினமானது தான். ஆனாலும் வேறு வழியில்லை. எங்கள் குழந்தையின் நலனில் இருவரும் அக்கறை செலுத்துவோம்’ என்றார்.

நடிகையாகவே சினிமாவுக்குள் அறிமுகமாகியிருந்தாலும் ஸ்ரீபிரியாவுக்குள் கதை சொல்லும் ஆற்றலும் இருந்தது. "காதோடுதான் நான் பேசுவேன்'' என்ற கதையை, சினிமாவுக்காக எழுதினார். டைரக்டர் எம்.ஏ.காஜா இந்தப் படத்தை இயக்கினார்.
புகழ் பெற்ற நட்சத்திரமாக விளங்கியபோதே, சில படங்களை ஸ்ரீபிரியா டைரக்ட் செய்தார்.
நடிகையாகவே சினிமாவுக்குள் அறிமுகமாகியிருந்தாலும் ஸ்ரீபிரியாவுக்குள் கதை சொல்லும் ஆற்றலும் இருந்தது. "காதோடுதான் நான் பேசுவேன்'' என்ற கதையை, சினிமாவுக்காக எழுதினார். டைரக்டர் எம்.ஏ.காஜா இந்தப் படத்தை இயக்கினார்.
தமிழில் படம் அவ்வளவாக வெற்றி பெறாவிட்டாலும், கதை நன்றாக இருப்பதாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
இந்தப் படத்தின் கதை உரிமையை அனைத்து மொழிகளுக்கும் ஸ்ரீபிரியாவிடம் டைரக்டர் கே.பாலசந்தர் வாங்கினார். இது, ஸ்ரீபிரியாவுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. கதையை வாங்கியதும், தெலுங்கில் சரிதாவை வைத்து படத்தை இயக்கினார் பாலசந்தர். அங்கே படம் மிகப்பெரிய வெற்றி.
"ஒரு தோல்விப்படத்தை எப்படி வெற்றிகரமாக மாற்றமுடியும்'' என்பதை அன்றே செய்து காட்டினார், கே.பாலசந்தர். இதில் கதை என்னுடையது என்பதில் எனக்கொரு பெருமை. அவ்வளவுதான்'' என்கிறார், ஸ்ரீபிரியா. இதே காலகட்டத்தில் டைரக்டராகவும் தன்னை வெளிப்படுத்தினார், ஸ்ரீபிரியா. "சாந்தி முகூர்த்தம்'' என்ற படத்தை இயக்கினார்.
அந்தப் படம் ஸ்ரீபிரியாவை ஒரு தரமான இயக்குனராக நிலைநிறுத்த, தொடர்ந்து "நானே வருவேன்'' என்ற படத்தை இயக்கினார். இதே படத்தை கன்னடத்திலும் இயக்கினார். இந்தக் காலக்கட்டத்தில், தெலுங்கில் பிரபல இயக்குனராக திகழ்ந்த தாசரி நாராயணராவ் தெலுங்கில் இயக்கிய "சிவரஞ்சனி'' படம் தமிழில் தயாரிக்கப்பட்டது. தமிழில் "நட்சத்திரம்'' என்ற பெயரில் தயாரான இந்தப் படத்தில் ஸ்ரீபிரியா நடிகையாகவே நடித்திருந்தார். இந்தப்படம் தெலுங்கில் பெற்ற வெற்றியை, தமிழில் எட்டவில்லை.
டைரக்டர் ஸ்ரீதர் இயக்கிய "இளமை ஊஞ்சலாடுகிறது'' படம் ஸ்ரீபிரியாவுக்கு இன்னொரு திருப்பு முனையாக அமைந்தது. இந்தப் படத்தில் கமலஹாசனின் காதலியாக இருந்து ரஜினியின் மனைவியாக மாறும் கேரக்டரில் பிரமாதமாக நடித்திருந்தார், ஸ்ரீபிரியா.
முதலில் இந்தக் கேரக்டரில் ஸ்ரீபிரியா நடிப்பதாக இல்லை. அதுபற்றி ஸ்ரீபிரியா கூறுகிறார்:-
"படத்தில் ஜெயசித்ரா நடித்த கேரக்டரில்தான் நான் நடிப்பதாக இருந்தது. கதைப்படி அந்த கேரக்டருக்கு அத்தனை முக்கியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. டைரக்டர் ஸ்ரீதர் இந்தப்படத்தை தெலுங்கிலும் எடுத்துக் கொண்டிருந்தார். தெலுங்கில் அப்போது புகழின் உச்சியில் இருந்த ஜெயசுதா நடித்தார். நான் ஸ்ரீதரிடம், "படத்தில் நீங்கள் எனக்கு தருவதாக சொன்ன கேரக்டர் எனக்கு பிடிக்கவில்லை. மெயின் ரோல் தந்தால் பண்ணுகிறேன். சின்ன கேரக்டரில் நான் நடிக்க விரும்பவில்லை'' என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வந்து விட்டேன்.
நான் இப்படி மனதில் இருப்பதை படபடவென கொட்டிவிட்டு வந்தது ஸ்ரீதர் சாருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கக் கூடும் என்று எண்ணினேன். ஆனால் என் தைரியத்தைப் பார்த்தோ, அல்லது நம்பிக்கை வந்தோ அந்த மெயின் கேரக்டரில் என்னை நடிக்க வைத்தார். நான் நடிக்க மறுத்த கேரக்டரில் சில நாட்களில் ஜெயசித்ரா நடித்தார்.
படம் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெற்றி. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, ஆடை நேர்த்திக்காக இந்தப் படத்தில்தான் நான், பேசப்பட்டேன். ஸ்ரீதர் சாரின் கலை அழகுணர்வுக்கு கிடைத்த மரியாதையாக இந்தப் பாராட்டை எடுத்துக் கொண்டேன். இந்தப்படம் இந்தியிலும் எடுக்கப்பட்டது. ராஜேஷ்கன்னா, சத்ருகன்சின்கா நடித்தார்கள். என் கேரக்டரில் ஜெயபிரதா நடித்தார். என்ன காரணத்தாலோ இந்தியில் படம் சரியாக ஓடவில்லை.''
இவ்வாறு கூறினார், ஸ்ரீபிரியா.
நடிகர் பாலாஜி அப்போது பட அதிபராகவும் மாறி நிறைய படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார். ரஜினியின் புகழ் ஏறுமுகமாக இருந்தபோது, அவரை கதாநாயகனாக்கி "பில்லா'' என்ற படத்தை தயாரித்தார். படத்தில் ரஜினிக்கு ஜோடி ஸ்ரீபிரியா.
இந்தப் படத்தில் தனது கேரக்டர் சின்னதாக இருப்பதாக கூறி ஆரம்பத்தில் நடிக்க மறுத்திருக்கிறார், ஸ்ரீபிரியா. படத்தில் தனது கேரக்டர் வலுவில்லாததாக இருக்கிறது என்று அவர் கதை வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனிடம் கூறினார்.
ஸ்ரீபிரியா இப்படிச் சொன்னதும் வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன், "வேண்டுமானால் பார். படத்தில் உன் கேரக்டரும் பேசப்படும். அதற்கு நான் பொறுப்பு'' என்றார்.
இந்தப்படத்தில் நடித்தது பற்றி ஸ்ரீபிரியா கூறுகிறார்:-
"தயாரிப்பாளர் பாலாஜி எப்போதுமே என் போன்ற கலைஞர்களின் மரியாதைக்குரியவர். அவர் கம்பெனியில், சின்ன நடிகர்கள், பெரிய நடிகர்கள் என்ற பேதம் கிடையாது. ஒவ்வொரு நடிகர் - நடிகைக்கும் நாற்காலி போட்டு அதில் எம்பிராய்டரியில் அவர்கள் பெயரை பதித்து இருப்பார்கள்.
அதுமாதிரி சம்பள விஷயத்திலும் அவர்களின் அணுகுமுறை புதுமையானது. யார் நடிக்கிறார்களோ அவர்கள் கையில்தான் சம்பளப் பணத்தையே கொடுப்பார்கள். அதுவரை நான் நடித்த படங்களில் என் சம்பளத்தை அம்மாவிடம்தான் கொடுத்திருக்கிறார்கள். முதன் முதலாக இந்தப் படத்தில்தான் என் சம்பளத்தை நான் வாங்கினேன்.
அப்போது கூட பாலாஜி சாரிடம், "அம்மாவிடம் கொடுத்து விடுங்களேன் சார்'' என்று சொல்லிப் பார்த்தேன். அவரோ, "என் படத்தில் நடிப்பவர் யாரோ, அவர்தான் சம்பளத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்'' என்று கூறிவிட்டார்.
பாலாஜி சாரின் "பில்லா'' படம் இந்தியில் வந்த `டான்' படத்தின் ரீமேக். அமிதாப்பச்சனும், ஜீனத் அமனும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை எனக்குப் போட்டுக் காட்டியபோது முழுவதும் பார்க்காமல் தூங்கிவிட்டேன். கடைசியில் என் கேரக்டர் இதுதான் என்று வந்தபோது `சின்ன ரோல்' என்று தயங்கினேன்.
கதை வசன கர்த்தா ஏ.எல்.நாராயணன், இந்தியில் சின்னதாக இருந்த கேரக்டரை, தமிழில் பெரிதாக உருவாக்கித் தருகிறேன் என்றார்.
ஆனாலும் படம் வந்தபோது என் கேரக்டர் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாமே என்று எனக்குத் தோன்றவே செய்தது. என்றாலும் அந்த கேரக்டரில் நான் பேசப்பட்டேன். ஏ.எல்.நாராயணன் சார் சொன்னது உண்மையாயிற்று.
இந்தப் படத்தில் என் கேரக்டர் பெரிய அளவில் இல்லை என்பதை தயாரிப்பாளர் பாலாஜி சாரும் தெரிந்தே வைத்திருந்தார். "பில்லா'' படப்பிடிப்பு சமயத்தில் ஒரு நாள் என்னைப் பார்த்தவர், "என்னுடைய அடுத்த படத்தில் உங்களுக்கு பெரிய கேரக்டர் உண்டு'' என்று சொன்னார்.
இப்படி எல்லோருமே நம்பிக்கையூட்டுகிற விதமாக சொல்லவே செய்வார்கள். ஆனால் காலப்போக்கில் மறந்து விடுவார்கள். பாலாஜி சார் அப்படியில்லாமல், அவரது அடுத்த படத்தில் எனக்கு பெரிய கேரக்டரே கொடுத்தார். "சவால்'' என்ற அந்தப் படத்தில் கமல் ஜோடியாக நடித்தேன். இப்போதுகூட மறக்க முடியாத கேரக்டர் அது.''
இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.
சிவலிங்கா படத்தைப் பற்றி அதன் டைரக்டர் பி. வாசு இன்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அப்போது படத்தின் கதைப் பற்றி கூறினார்.
கன்னடத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ‘சிவலிங்கா’ படத்தை இயக்குநர் பி. வாசு தமிழில் மறுபதிப்பு செய்துள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, ஊர்வசி, பானுப்பிரியா, சந்தான பாரதி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து இந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் இயக்குனர் பி.வாசு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிவலிங்கா திரைப்படம் ஒரு கிரைம் ஹாரர் திரில்லர் படம். கடந்த பிப்ரவரி 12-ம்தேதி கன்னடத்தில் இப்படத்தை இதே பெயரில் ரிலீஸ் செய்தேன். சிவராஜ் குமார் நடித்திருந்தார். 85 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. மிகப்பெரிய வெற்றிப்படம். சந்திரமுகிக்குப் பிறகு கன்னடத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யும் படம் சிவலிங்கா.
ஒரு பையன் ரெயிலில் சென்றுகொண்டிருக்கிறான். அவன் தனது வளர்ப்பு புறாவையும் உடன் கொண்டு செல்கிறான். கடைசி ரெயில் என்பதால் அந்த கம்பார்ட்மென்டில் யாரும் இல்லை. எனவே, அவன் தூங்கலாம் என நினைத்து படுக்கிறான். அப்போது அந்த கம்பார்ட்மென்டில் இருந்து கண்தெரியாத ஒருவன் எழுந்து நடந்து வாசல் பக்கம் செல்கிறான்.
உடனே புறா அந்த பையனை எழுப்புகிறது. அவன் எழுந்து குருடனை காப்பாற்ற முயற்சிக்கிறான். ஆனால், அவனோ திடீரென காப்பாற்ற வந்த பையனை கீழே தள்ளி கொல்கிறான். அவனது ரத்தம் புறாவின் மீது விழுகிறது. இப்போது அந்த புறாதான் கொலைக்கு சாட்சி. அந்த புறா, இந்த கொலையை செய்தது யார் என்பது குறித்து கதாநாயகனிடம் சொல்வதுதான் கதை. புறா எப்படி சொல்கிறது? என்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
இது தற்கொலை என்று கோர்ட் முடிவு செய்கிறது. ஆனால், அவனது காதலி இந்த வழக்கை மறுபடியும் விசாரிக்க முறையிடுகிறார். எனவே, மிகவும் ரகசியமாக சிபிசிஐடி மூலம் விசாரிக்கிறார்கள். லாரன்ஸ் இதுவரை செய்யாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிபிசிஐடி அதிகாரியாக வருகிறார். அவரது நடிப்பு வித்தியாசமாக இருக்கும். அதேசமயம் வழக்கமாக அவரது படத்தில் இருக்கும் தன்மைகளும் இருக்கும்.
ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். சந்திரமுகிக்குப் பிறகு வடிவேலுவுக்கு இதில் பெரிய கேரக்டர். அந்த அளவுக்கு நன்றாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிபிசிஐடியிடம் மாட்டிக்கொண்ட திருடன் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தின் கிளைமாக்சும் வித்தியாசமாக இருக்கும்.
சந்திரமுகி போன்று சிவலிங்காவும் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெளியாகிறது. இப்படத்தை உலகம் முழுவதும் திரையிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். வெளிநாடுகளில் உள்ள அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப ‘சப்-டைட்டில்’ கொடுக்க உள்ளோம். அதற்காகவே கூடுதல் 30 நாட்கள் அவகாசம் எடுத்துள்ளோம். ஜனவரி 26-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்.
ஊர்வசி லாரன்சின் தாயாராகவும், கதாநாயகின் தாயாராக பானுப்பிரியாவும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் சிறப்பாக செய்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு குஷ்பூ போட்டியிடுவார் என விஷால் அறிவித்திருக்கிறார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த தேர்தல் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. இதில் தலைவராக எஸ்.தாணு, செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர்களாக கதிரேசன், தேனப்பன், பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பில் உள்ளனர்.
இவர்களின் பதவிக் காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்ரவரி மாதம் நடக்கிறது.
இந்த தேர்தலில் 3 அணிகள் போட்டியிட தயாராகி வருகின்றன. ஒரு அணி சார்பில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார். இன்னொரு அணியில் டி.சிவா, தனஞ்செயன் உள்ளிட்ட சிலர் போட்டியிடுகிறார்கள். இதேபோல் விஷால் தரப்பும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் விஷால் தரப்பில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு குஷ்பூ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து வாழ்த்து தெரிவித்து, குஷ்பூ தலைவர் பதவிக்கு போட்டியிடும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
விஷால் தரப்பில் போட்டியிடும் மற்ற நிர்வாகிகளுக்கான வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தெரிகிறது.

‘தங்கல்’ படத்தில் மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவராக தோன்றும் பாத்திமா சனா ஷேக், கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
‘அவ்வை சண்முகி’ படத்தின் தழுவலாக கமல்ஹாசன் - தபு நடிப்பில் இந்தியில் வெளியான ‘சாச்சி-420’ படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்திருந்த குழந்தை நட்சத்திரம் பாத்திமா சனா ஷேக்.
தற்போது இளம்பெண்ணாக வளர்ந்துள்ள பாத்திமா, பாலிவுட்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தங்கல்’ படத்தில் மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவராக நடித்துள்ளார்.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாத்திமா சனா ஷேக், கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
‘சாச்சி-420 படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்தபோது, நான் மிகவும் சிறியவளாக இருந்தேன். குழந்தைப்பருவம் என்பதால் அப்போது நடிக்க வேண்டும் என்பதுபோல் எனக்கு தோன்றவில்லை. படத்தின் இயக்குனராக கமல்ஹாசன் சொன்னதை செய்தேன்.
அந்த அனுபவத்தை புதுப்பித்து கொள்ள இப்போது அவருடன் சேர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன்’ என்று பாத்திமா குறிப்பிட்டுள்ளார்.

“நயன்தாரா, திரிஷா, கரீனாகபூரை போன்று திறமையான நடிகைகளால்தான் சினிமாவில் நிலைக்க முடியும்” என்று தமன்னா கூறினார்.

இதுகுறித்து ஐதராபாத்தில் நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-
“எனது கட்டுக்கோப்பான உடல் அழகுதான் எனக்கு ‘பலம்.’ சினிமாவில் அறிமுகமானதில் இருந்து ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கிறீர்களே? இதற்கு என்ன சாப்பிடுகிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். கேரளாவை சேர்ந்தவர்கள் காப்பியுடன் நெய்யையும் சேர்த்து குடிக்கிறார்கள். நான் காப்பி அல்லது பிளாக் காப்பியுடன் வெண்ணெயை கலக்கி குடிக்கிறேன்.
நிறைய காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்கிறேன். முட்டை சாப்பிடுகிறேன். பருப்பு வகைகளை தொடுவது இல்லை. உடற்பயிற்சிகளும் செய்கிறேன். இதுதான் எனது அழகு ரகசியம். வீட்டில் இருக்கும்போது, ‘மேக்கப்’ போட மாட்டேன். பைஜாமா அணிவேன். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது புடவை கட்டிக் கொள்வேன்.
புடவைதான் சவுகரியமான உடையாக இருக்கிறது. சினிமாவில் உடை விஷயங்களில் சில நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. சினிமா வேறுமாதிரியான உலகம். இங்கு மனதில் இருப்பதை மறைத்து வெளியில் சிரித்து பேச வேண்டும் என்று கற்று இருக்கிறேன். சினிமா என்பது ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. நானும் அந்த தாக்கத்தில்தான் நடிகையானேன்.
ஆனாலும் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதையெல்லாம் விட்டு விட வேண்டும். சினிமாவில் அனுஷ்காவுடன் எனக்கு நெருக்கமான நட்பு இருக்கிறது. உடை விஷயங்களில் அவரிடம்தான் ஆலோசனைகள் கேட்பேன். சினிமாவில் 5 வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நீடிப்பது அபூர்வம். திறமையான நடிகைகளால் மட்டும்தான் நிலைக்க முடியும்.
நயன்தாரா, திரிஷா, காஜல், கரீனாகபூர் உள்ளிட்ட நடிகைகள் தங்கள் திறமையால்தான் 10 வருடங்களை தாண்டியும் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். திருமணம் என்பது சிறந்த பந்தம். அதை மதிக்கிறேன். ஆனால், இப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.
சினிமாவில் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. மனதுக்கு பிடித்தவரை சந்தித்தால் பெற்றோர்களிடம் சொல்லி அவர்கள் சம்மதித்தால் திருமணம் செய்து கொள்வேன். அப்படி ஒருவர் கிடைக்காவிட்டால் பெற்றோர்கள் நிச்சயம் செய்யும் மாப்பிள்ளையை மணப்பேன். படப்பிடிப்புகள் இல்லாதபோது எனது தந்தையுடன் இணைந்து நகை வியாபாரம் செய்கிறேன்.”
இவ்வாறு தமன்னா கூறினார்.
இதுகுறித்து ஐதராபாத்தில் நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-
“எனது கட்டுக்கோப்பான உடல் அழகுதான் எனக்கு ‘பலம்.’ சினிமாவில் அறிமுகமானதில் இருந்து ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கிறீர்களே? இதற்கு என்ன சாப்பிடுகிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். கேரளாவை சேர்ந்தவர்கள் காப்பியுடன் நெய்யையும் சேர்த்து குடிக்கிறார்கள். நான் காப்பி அல்லது பிளாக் காப்பியுடன் வெண்ணெயை கலக்கி குடிக்கிறேன்.
நிறைய காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்கிறேன். முட்டை சாப்பிடுகிறேன். பருப்பு வகைகளை தொடுவது இல்லை. உடற்பயிற்சிகளும் செய்கிறேன். இதுதான் எனது அழகு ரகசியம். வீட்டில் இருக்கும்போது, ‘மேக்கப்’ போட மாட்டேன். பைஜாமா அணிவேன். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது புடவை கட்டிக் கொள்வேன்.
புடவைதான் சவுகரியமான உடையாக இருக்கிறது. சினிமாவில் உடை விஷயங்களில் சில நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. சினிமா வேறுமாதிரியான உலகம். இங்கு மனதில் இருப்பதை மறைத்து வெளியில் சிரித்து பேச வேண்டும் என்று கற்று இருக்கிறேன். சினிமா என்பது ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. நானும் அந்த தாக்கத்தில்தான் நடிகையானேன்.
ஆனாலும் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதையெல்லாம் விட்டு விட வேண்டும். சினிமாவில் அனுஷ்காவுடன் எனக்கு நெருக்கமான நட்பு இருக்கிறது. உடை விஷயங்களில் அவரிடம்தான் ஆலோசனைகள் கேட்பேன். சினிமாவில் 5 வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நீடிப்பது அபூர்வம். திறமையான நடிகைகளால் மட்டும்தான் நிலைக்க முடியும்.
நயன்தாரா, திரிஷா, காஜல், கரீனாகபூர் உள்ளிட்ட நடிகைகள் தங்கள் திறமையால்தான் 10 வருடங்களை தாண்டியும் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். திருமணம் என்பது சிறந்த பந்தம். அதை மதிக்கிறேன். ஆனால், இப்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.
சினிமாவில் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. மனதுக்கு பிடித்தவரை சந்தித்தால் பெற்றோர்களிடம் சொல்லி அவர்கள் சம்மதித்தால் திருமணம் செய்து கொள்வேன். அப்படி ஒருவர் கிடைக்காவிட்டால் பெற்றோர்கள் நிச்சயம் செய்யும் மாப்பிள்ளையை மணப்பேன். படப்பிடிப்புகள் இல்லாதபோது எனது தந்தையுடன் இணைந்து நகை வியாபாரம் செய்கிறேன்.”
இவ்வாறு தமன்னா கூறினார்.
ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், "நீயா" என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.
ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், "நீயா'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். "நாகின்'' என்ற இந்திப்படத்தில் வந்த ஒரு பாடல்தான் அவரை படத்தயாரிப்பாளர் ஆக்கியது.
வைஜயந்திமாலா இந்திப்படங்களில் கொடிகட்டிப் பறந்தபோது "நாகின்'' என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடி பிரதீப்குமார். மகுடி வாத்தியத்தை வைத்து அற்புதமான மெட்டுகளில் இசை அமைத்திருந்தார், ஹேமந்தகுமார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு "நாகின்'' என்ற பெயரிலேயே இன்னொரு இந்திப்படம் வெளிவந்தது. இந்தப் படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. "வீடியோ சிடி'' எல்லாம் வராத காலம் அது. சென்னை ஸ்டார் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த இந்தப் படத்தை, தன் தாயாருடன் சென்று பார்த்தார், ஸ்ரீபிரியா.
படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடல் அவரை ரொம்பவும் கவர்ந்தது. அந்தப் பாடலுக்காகவே அந்தப் படத்தை 6 தடவை பார்த்து ரசித்தார். அதோடு நில்லாமல், தனது தாயாரிடம் "நான் நடிக்கிற படத்தில் இப்படியொரு பாட்டு இருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்'' என்று கூறினார். "அவ்வளவுதானே! கவலையைவிடு'' என்று அம்மா சொன்னார்.
அம்மா அப்படிச் சொன்னதன் பொருள் ஸ்ரீபிரியாவுக்கு ஒரு வாரம் கழித்தே புரிய ஆரம்பித்தது. "நாகின்'' படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை ஸ்ரீபிரியாவின் தாயார் வாங்கினார். அப்போது பிசியாக இருந்த டைரக்டர் துரையை அந்தப் படத்தை இயக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரும் சம்மதம் தெரிவித்தார். அப்போது முன்னணியில் இருந்த கமல், விஜயகுமார், ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், சந்திரமோகன் என 6 ஹீரோக்கள் நடித்தனர்.
இந்தப் படத்தில் கமல் நடித்த கேரக்டரில் முதலில் ரஜினி நடிக்க இருந்தார். ரஜினியின் கால்ஷீட் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் ரஜினிக்கு பதிலாக கமல் நடித்தார். இந்திப்படத்தில் ரேகா நடித்த "பாம்பு'' கேரக்டரில் ஸ்ரீபிரியாவும், அவருக்கு ஜோடிப் பாம்பாக சந்திரமோகனும் நடித்தார்கள்.
இந்திப் படத்தில் ஸ்ரீபிரியா எந்தப் பாட்டுக்கு மயங்கினாரோ, அதே டியூனில் தமிழிலும் அந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார்கள். "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா'' என்பதுதான் அந்தப் பாடல். 1979 பொங்கலுக்கு வெளிவந்த "நீயா'' பெரிய வெற்றி பெற்றது.
இந்தப் படம் வெளியானபோது, சிவாஜிகணேசனுடன் "திரிசூலம்'' படத்தில் ஸ்ரீபிரியா நடித்துக் கொண்டிருந்தார்.
"நீயா!'' படத்தை பார்த்து விட்டு, ஸ்ரீபிரியாவிடம் சிவாஜிகணேசன் செல்லமாகக் கோபித்துக் கொண்டார். அதுபற்றி ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-
"நடிகர் திலகம் எவ்வளவு பெரிய நடிகர். நடிப்பில் இமயம். அவர் "நீயா'' படம் பார்த்து விட்டு மறுநாள் "திரிசூலம்'' படப்பிடிப்பில் இருந்தபோது என்னிடம் பேசினார். "படம் பார்த்தேன் புள்ளே! பாம்பா உன் கூட சேர்ந்து நடனமாடற அந்தப் பையன் (சந்திரமோகன்) என்னமா டான்ஸ் ஆடறான்! அவன் `கெட்அப்'பும், கொண்டை போட்டிருந்த அழகும் அடடா! அடடா! இந்த கேரக்டருக்கு என்னை ஏன் புள்ளே கூப்பிடலை?'' என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சி ஒருபுறம்; ஆனந்தம் ஒருபுறம்'' என்றார், ஸ்ரீபிரியா.
டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய சில படங்களில் ஸ்ரீபிரியா நடித்து இருக்கிறார். அவற்றில் முக்கியமானது "தசாவதாரம்'' படம். இந்தப் படத்தில் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்க ஸ்ரீபிரியாவை கேட்டார் இயக்குனர். ஸ்ரீபிரியா மறுத்துவிட்டார். "நடிகர் திலகம் சிவாஜி எப்பேர்ப்பட்ட நடிகர்! அவர் ராமாயண நாடகத்தில் நடித்தபோது கைகேயி வேடத்தில் நடித்தார். ஒரு ஆர்ட்டிஸ்ட் என்றால் எந்த கேரக்டரிலும் நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உன்னால் இந்த சூர்ப்பனகை கேரக்டரிலும் நடித்து பெயர் வாங்க முடியும்'' என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறினார்.
இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்ததாலும், எந்த கேரக்டரிலும் தன்னால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையாலும் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்க சம்மதித்தார், ஸ்ரீபிரியா. கதாநாயகியாக திரைக்கு அறிமுகமாகியிருந்தாலும் காமெடி, அதிரடி என சகல விஷயமும் தொட்டவர், இவர். கமலஹாசனுடன் நடித்த "பட்டிக்காட்டுராஜா'' படத்தில் `வில்லி' கேரக்டரில் கூட வந்தார். அதுமாதிரி "தொட்டதெல்லாம் பொன்னாகும்'' படத்தில் கதாநாயகன் ஜெய்சங்கர் என்றாலும், படத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த மாதிரியான `சவால்' கேரக்டர்கள், சின்ன கேரக்டர்களிலும் நடித்த அனுபவம் இருந்ததால் சூர்ப்பனகை கேரக்டரையும் சிறப்பாகவே செய்தார், ஸ்ரீபிரியா.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ரீபிரியா கூறியதாவது:-
"பெரியப்பா தண்டாயுதபாணி பிள்ளை மீது டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சாருக்கு பிரியமும் அதிகம். மரியாதையும் அதிகம். அந்த அடிப்படையில் தன்னை `சித்தப்பா' என்றே அழைக்கச் சொல்வார். ஆரம்பத்தில் வாய் தவறி `சார்' வந்தாலும், "நான் உன்னிடம் என்ன சொல்லியிருக்கிறேன்?'' என்று குரலில் கடுமை காட்டி கேட்பார். வசனங்களை இவர் சொல்லித் தருவதே தனி அழகு. காட்சியை விவரிக்கும்போதே அவரிடம் இருந்து வசனங்கள் வந்து விழும். ஒத்திகையின்போது பேசவேண்டிய வசனத்தை சொல்லிக் கொடுப்பவர், மறுபடி `டேக்'கின் போது இன்னமும் கூடுதலாக சில வசனங்களை சேர்ப்பார். ஆனால் அப்படி புதிதாக சேர்க்கப்பட்ட வசனங்களும் அற்புதமாக இருக்கும்.
தசாவதாரம் படத்தில் சூர்ப்பனகையாக நடிக்கும்போதே, "வாய் வலிக்குது'' என்று அவரிடம் கிண்டல் செய்திருக்கிறேன். வசனம் அதிகம் இருப்பதைப்பற்றி கிண்டல் செய்கிறேன் என்பதை அவரும் புரிந்து கொள்வார். அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு, அதுபற்றி பேசாமல் சிரிக்க மட்டும் செய்வார். அவர் சொன்னபடி தசாவதாரம் படத்தில் எனக்கும் நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து, "வாயில்லாப்பூச்சி'', "பாலாபிஷேகம்'', "உள்ளத்தில் குழந்தையடி'' உள்பட ஏழெட்டு படங்களில் நடித்தேன். எல்லாமே எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள்.
நான் கதை கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்ட டைரக்டர்களில் இவரும் ஒருவர். "நாளை பூஜை. படத்தில் நீயும் இருக்கிறாய். பூஜைக்கு வந்துவிடு'' என்பது மட்டுமே இவரது திடீர் அழைப்பாக இருக்கும். ஒரு படத்தில் எத்தனை கேரக்டர்கள் இருக்கிறதோ அத்தனை கேரக்டர்களையும் உயிரோட்டமாகத் தரும் இயக்குனர் என்ற வகையில் நான் மட்டுமல்ல, பல நடிகர் - நடிகைகள் இவரிடம் `படத்தில் தங்களுக்கு என்ன கேரக்டர்' என்று கேட்கமாட்டார்கள்.
சமீபத்தில் நான் இயக்கும் டெலிவிஷன் சீரியல் ஒன்றுக்காக கற்பகம் ஸ்டூடியோவுக்குப் போயிருந்தபோது குதூகலத்துடன் என் அருகில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டார். "நீ டைரக்ட் பண்றதை பார்க்கும்போது எனக்கே நடிக்கணும் போல இருக்கு'' என்று சொல்லி என்னை பாராட்டினார். அப்போது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.'' இவ்வாறு ஸ்ரீபிரியா குறிப்பிட்டார்.
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏகனாபுரம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
ஏகனாபுரத்தில் வசித்து வரும் கதாநாயகன் ரவி பறை இசைக் கலைஞன். அந்த ஊரில் வாத்து மேய்க்க வரும் நாயகி ரித்திகா மீது அவருக்கு காதல் வருகிறது. ரித்திகாவும் ரவியை விரும்புகிறார். இந்நிலையில் வாத்து முட்டை வியாபாரியான ராஜசிம்மன் தவறான முறையில் ரித்திகாவை அடைய முயற்சிக்கிறார்.
இந்த விஷயம் ரித்திகா மூலம் ரவிக்கு தெரிய வருகிறது. ரித்திகாவை ராஜசிம்மனிடமிருந்து காப்பாற்றி அவளை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் ரவி. அந்த நேரத்தில் அந்த ஊரில் பெரிய மனுஷியாக இருக்கும் ஜோதிஷா, ரவியின் காதலுக்கு குறுக்கே நின்று ரவியையும், ரித்திகாவையும் சேரவிடாமல் தடுக்கிறார்.
ஜோதிஷா எதற்காக ரவியின் காதலை எதிர்த்து அவர்களை சேரவிடாமல் தடுக்கிறாள்? என்பதை இறுதியில் சொல்லியிருக்கிறார்கள்.
கதாநாயகனாக வரும் ரவிக்கு முதல் படம் என்றாலும், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுக்க ரொம்பவுமே முயற்சி செய்திருக்கிறார். நடனம், சண்டைக் காட்சிகளில் அனுபவம் இல்லையென்பதால் ரசிக்க முடியவில்லை. வாத்து மேய்க்கும் பெண்ணாக வரும் ரித்திகா, கிராமத்து இளம் பெண்ணுக்குண்டான தோற்றத்திற்கு பொருந்தியிருக்கிறார். அதேபோல், கிராமத்து பெண்ணுக்குண்டான நளினங்களையும் தனது நடிப்பால் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
ஊர் பெரிய மனுஷியாக வரும் ஜோதிஷா வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். வில்லனாக வரும் ராஜசிம்மன் பார்வையிலேயே மிரட்டுகிறார். மற்றபடி, படத்தில் உள்ள நிறைய கதாபாத்திரங்களும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயல்பான கிராமத்து கதையாக இப்படம் அழகாக மனதில் பதிகிறது. கிராமத்து மக்களின் முகங்கள், கிராமத்து பின்புலங்கள் என எதுவுமே செயற்கையாக தெரியாமல் அப்படியே நேரில் பார்ப்பது போன்ற உணர்வில் இயக்குனர் சுரேஷ் நட்சத்திரா படமாக்கியிருக்கிறார். அதேபோல், படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களிலும் ஹீரோயிசம் காட்டாமல் எதார்த்தமாக படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
முதல் பாதி மட்டும் ரொம்பவும் மெதுவாக நகர்வதுபோன்ற உணர்வை கொடுக்கிறது. அதேபோல் எடிட்டிங்கிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. மணிமாறன் இசையில் பாடல்கள் எல்லாம் இளையராஜாவை ஞாபகப்படுத்துகிறது. ஏ.எஸ்.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு கதையோடு ஒன்றி பயணிக்க உதவி செய்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஏகனாபுரம்’ எதார்த்தபுரம்.

சுரேஷ் ரவி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பேய் படமாக வெளிவந்துள்ள ‘மோ’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
நாயகன் சுரேஷ் ரவி மற்றும் அவரது நண்பர்களான ரமேஷ் திலக், தர்புகா சிவா ஆகியோர் இணைந்து நூதனமான முறையில் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் சினிமாவில் துணை நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முனிஸ்காந்தை வைத்து பேய் போல் மேக்கப் போட்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உலவ விடுகின்றனர். பின்னர், அங்கு பேய் இருப்பதாகவும் அதை விரட்டுவதாகவும் கூறி அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செகரட்டரியான செல்வாவை ஏமாற்றி பணம் பறித்து வருகிறார்கள்.
ஒருகட்டத்தில் சுரேஷ் ரவி மற்றும் அவர்கள் கூட்டாளிகளின் நாடகம் செல்வாவுக்கு தெரிய வருகிறது. இதனால், அவர் இவர்களை போலீசில் மாட்டிவிடப் போவதாக கூற, அவர்களோ பயந்து நடுங்குகிறார்கள். அவர்களின் பயத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட செல்வா, தனக்கு தொழில்முறை போட்டியாளராக இருக்கும் மைம் கோபி வாங்கவிருக்கும் பாழடைந்த பள்ளியில் பேய் இருப்பதாக கூறி, அந்த பள்ளியை அவர் வாங்கவிடாமல் செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறார்.
மைம் கோபிக்கும் கெட்ட சக்திகள் மீது நிறைய நம்பிக்கை இருக்கிறது. இதனால், இவர்கள் பேய் இருப்பதாக பயமுறுத்தினால் மைம் கோபி அந்த பள்ளியை வாங்கமாட்டார் என்பது தெரிந்தே செல்வா இந்த வேலையை இவர்களை வைத்து செய்யச் சொல்கிறார். சுரேஷ் ரவியின் கூட்டாளிகளும் வேறு வழியில்லாமல் இதற்கு ஒப்புக் கொள்கிறார்கள்.
இறுதியில் அந்த பாழடைந்த பள்ளிக்கு சென்ற நண்பர்களின் கதி என்னவாயிற்று? இவர்கள் திட்டம் பலித்ததா? என்பதே மீதிக்கதை.
சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம்வந்த சுரேஷ் ரவி இப்படத்தில் முழுநீள கதாநாயகனாக மாறியிருக்கிறார். கதைக்கு முக்கியத்துவமான படம் என்றாலும், இவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இரண்டாவது பேய் படம். இப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். முண்டாசு பட்டி படத்திற்கு பிறகு முனீஸ்காந்த் தனியொரு ஆளாக காமெடி செய்யும் வாய்ப்பு இப்படத்தில் கிடைத்திருக்கிறது. ஒருசில இடங்களில் இவரது காமெடி சிரிக்க வைத்தாலும், நிறைய இடங்களில் வலுக்கட்டாயமாக காமெடி திணிக்கப்பட்டிருக்கிறது.
ரமேஷ் திலக், தர்புகா சிவா, யோகி பாபு ஆகியோரும் படத்தின் காமெடிக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். செல்வா, மைம் கோபி ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஆரம்பம் முதல் இறுதி வரை கதையை விட்டு வெளியே செல்லாமல் கதையோடு காமெடி காட்சிகளை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம். படத்திற்கு பெரிய பலமே இந்த காமெடிதான். ஜெப கூட்ட காட்சிகள், யோகி பாபு இங்கிலீஸ் பேசும் காட்சிகள், முனிஸ்காந்த் பேய் வேஷம் போடும் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள் ஆகியவை தியேட்டர்களில் சிரிப்பு சரவெடி. யோகி பாபுவுக்கு இன்னும் காட்சிகள் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
படத்தில் பாடல் இல்லையென்றாலும, பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. அதேபோல், விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருப்பது சிறப்பு.
மொத்தத்தில் ‘மோ’ அமோகம்.

ராகவா லாரன்ஸ் இந்த புத்தாண்டை ஏழை குழந்தைகளுடன் கொண்டாடவுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்...
நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அம்பத்தூரில் ஸ்ரீராகவேந்திரா கோவில் கட்டி பராமரித்து வருகிறார். பொதுமக்களிடையே அந்த கோவில் மிகவும் பிரபலமாகி உள்ளது.
இந்த கோவிலை கட்டி நாளை (1-ந்தேதி)யுடன் 8 ஆண்டுகள் ஆகிறது. புத்தாண்டு அன்று லாரன்ஸ் தனது டிரஸ்ட் மூலம் ஆதரிக்கும் ஏழை குழந்தைகளுடன் புத்தாண்டை ஸ்ரீராகவேந்திரர் கோவிலில் கொண்டாடுகிறார். கோவிலில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ராகவா லாரன்ஸ் அன்னதானம் வழங்குகிறார்.
லாரன்ஸ் நடிப்பில் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. மேலும், பி.வாசு இயக்கத்தில் ‘சிவலிங்கா’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் கலாசாரம், நம் பாரம்பரியம். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக்கூடாது என்று நடிகர் சிம்பு தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிம்பு தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்துள்ள கருத்து வருமாறு:-
“ஜல்லிக்கட்டு தமிழனின் கலாசார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது. ஏதோ சில தனிப்பட்ட நபர்களும், சில தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய விலாச தேவைக்காக அதிகாரத்தில் இருப்போரையும், நீதித் துறையையும் தவறான தகவல்கள் மூலம் வழி நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நடத்தவிடாமல் செய்கின்றனர்.
அரசும், நீதித்துறையும் கடினமாக, கண்டிப்பாக நடந்துகொள்ள பல்வேறு கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினைகள் இருக்கும்போது, ஜல்லிக்கட்டை தடை செய்வது தான் முக்கிய கடமை என்று மல்லுக்கட்டுவது ஏன் என்பது எனக்கு புரியவில்லை.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர உணர்வை பறைசாற்றும் கெத்தான விளையாட்டு மட்டும் அல்ல; நம் நாட்டு மாட்டினங்கள் அழியாமல் காத்திடும் பாரம்பரிய முறை. ஆனால், உச்சநீதிமன்ற தடை காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது.
இந்திய நாட்டின் குடிமகனாக ஒவ்வொரு தமிழனும் நீதித்துறையை மதிக்கத்தான் செய்கிறான். ஆனால், அது தமிழ் கலாசாரத்தை மீறிய மதிப்பாக இருக்காது, இருக்கவும் முடியாது. நமது கலாசாரத்துக்கு எதிராக திணிக்கப்படும் எந்தச் சட்டமும் நமது தேசத்தின் இறையாண்மையை பாதிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். தனி ஒரு எஸ்.டி.ஆராக மட்டுமே இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த மண்ணின் மைந்தனாக, இந்த மண்ணின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் போற்றும் ஒரு கடைநிலை தூதுவனாகக்கூட என் கருத்தை உரக்கத் தெரிவிக்கிறேன்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு விழாவை நடத்த பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் மெத்தனம் காட்டாமல் ஜல்லிக்கட்டு நடத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாம் வணங்கும் தமிழ்க் கடவுளின் அருளால் வருகின்ற தைப்பொங்கல் திருநாளில் நமது பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட்டு, நமது கலாசார அங்கீகாரம் மீண்டும் வெளிப்படுத்தப்படும் என நம்புகிறேன். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக்கூடாது. இது நம்மொழி, நம் கலாசாரம், நம் பாரம்பரியம் எவருக்கும் எப்பொழுதும் வீட்டுக் கொடுக்க மாட்டோம்.”
இவ்வாறு அவர் கருத்து பதிவு செய்துள்ளார்.