என் மலர்
“ஜல்லிக்கட்டு தமிழனின் கலாசார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது. ஏதோ சில தனிப்பட்ட நபர்களும், சில தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய விலாச தேவைக்காக அதிகாரத்தில் இருப்போரையும், நீதித் துறையையும் தவறான தகவல்கள் மூலம் வழி நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நடத்தவிடாமல் செய்கின்றனர்.
அரசும், நீதித்துறையும் கடினமாக, கண்டிப்பாக நடந்துகொள்ள பல்வேறு கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினைகள் இருக்கும்போது, ஜல்லிக்கட்டை தடை செய்வது தான் முக்கிய கடமை என்று மல்லுக்கட்டுவது ஏன் என்பது எனக்கு புரியவில்லை.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர உணர்வை பறைசாற்றும் கெத்தான விளையாட்டு மட்டும் அல்ல; நம் நாட்டு மாட்டினங்கள் அழியாமல் காத்திடும் பாரம்பரிய முறை. ஆனால், உச்சநீதிமன்ற தடை காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது.
இந்திய நாட்டின் குடிமகனாக ஒவ்வொரு தமிழனும் நீதித்துறையை மதிக்கத்தான் செய்கிறான். ஆனால், அது தமிழ் கலாசாரத்தை மீறிய மதிப்பாக இருக்காது, இருக்கவும் முடியாது. நமது கலாசாரத்துக்கு எதிராக திணிக்கப்படும் எந்தச் சட்டமும் நமது தேசத்தின் இறையாண்மையை பாதிக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். தனி ஒரு எஸ்.டி.ஆராக மட்டுமே இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த மண்ணின் மைந்தனாக, இந்த மண்ணின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் போற்றும் ஒரு கடைநிலை தூதுவனாகக்கூட என் கருத்தை உரக்கத் தெரிவிக்கிறேன்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு விழாவை நடத்த பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் மெத்தனம் காட்டாமல் ஜல்லிக்கட்டு நடத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாம் வணங்கும் தமிழ்க் கடவுளின் அருளால் வருகின்ற தைப்பொங்கல் திருநாளில் நமது பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட்டு, நமது கலாசார அங்கீகாரம் மீண்டும் வெளிப்படுத்தப்படும் என நம்புகிறேன். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக்கூடாது. இது நம்மொழி, நம் கலாசாரம், நம் பாரம்பரியம் எவருக்கும் எப்பொழுதும் வீட்டுக் கொடுக்க மாட்டோம்.”
இவ்வாறு அவர் கருத்து பதிவு செய்துள்ளார்.
நேற்று சென்னையில் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பின்னணி பாடகர் ஜேசுதாசையும், அவரது மனைவி பிரபாவையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், அவரது மனைவி சாவித்ரியும் பாத பூஜை செய்து, கால்களில் விழுந்து வணங்கினார்கள்.
பின்னர் அவர், நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
50 வருடங்கள் என்பது சாதனை அல்ல. ஜேசுதாஸ் அண்ணா 55 வருடங்களாக பாடி வருகிறார். ஜானகி, சுசிலா, லதா மங்கேஸ்கர் போன்றவர்கள் 75 வருடங்களுக்கு மேல் பாடி வருகிறார்கள். என் குரு ஜேசுதாஸ். அவருக்கு காணிக்கை செலுத்தும்விதமாக நான் பாத பூஜை செய்தேன். அவர் ஒரு ரிஷி, யோகி. அவர் மாதிரி ஒரு குரல் கிடைப்பது பூர்வஜென்ம புண்ணியம். பூர்வஜென்மத்தில் அவர் புண்ணியம் செய்திருக்கிறார்.
நான் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ளாமல், சினிமாவுக்கு பாட வந்தேன். என் தாய்மொழி இசை. 16 அல்லது 17 வயது இருக்கும்போது, ஒரு மேடை கச்சேரியில் பாடினேன். அப்போது என் பாடலை கேட்டு, ஜானகி அம்மா, “நீ சினிமாவுக்கு வந்தால் பெரிய பாடகராகிவிடுவாய், முயற்சி செய்” என்று சொன்னார். எனக்கு பிடித்த பாடகர் முகமது ரபி. அவரை அடுத்து எனக்கு பிடித்தமான பாடகர் ஜேசுதாஸ் அண்ணா. நான் எதிர்பார்த்ததற்கு மேலாக கடவுள் எனக்கு கொடுத்துவிட்டார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பாடிவிட்டேன். பல நடிகர்களுக்கு இரவல் குரல் கொடுத்திருக்கிறேன். சில அற்புதமான கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறேன். என் உயர்வுக்கு காரணம், படத்தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், இசையமைப்பாளர்கள், சக பின்னணி பாடகர், பாடகிகள், நடிகர்-நடிகைகள். அவர்கள் எல்லோருக்கும் நன்றி.
இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்.
பின்னணி பாடகர் ஜேசுதாஸ் பேசியதாவது:-
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என் உடன்பிறந்த சகோதரரை போன்றவர். அவருக்கு சரஸ்வதியின் ஆசி இருக்கிறது. அவர் எனது சொந்த தம்பி. எங்கள் இருவருக்கும் சரஸ்வதியின் அருள் இருக்கிறது. நாங்கள் ஒருதாய் வயிற்றில் பிறக்காத சகோதரர்கள்.
நான் பாரிஸ் நகரில் ஒருமுறை கச்சேரி செய்துவிட்டு, ஓட்டலுக்கு திரும்பியபோது சாப்பாடு எதுவும் இல்லை. ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு பசியாறலாம் என்று ஆப்பிள் பழத்தை கையில் எடுத்தேன். அப்போது “ரூம் சர்வீஸ்” என்று ஒரு குரல் கேட்டது. கதவை திறந்துபார்த்தால், கையில் சாப்பாடு பிளேட்டுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நின்றுகொண்டிருந்தார். அன்று நான் சாப்பிட்டது, என் வாழ்க்கையில் மறக்கமுடியாத சாப்பாடு.
மேற்கண்டவாறு ஜேசுதாஸ் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண், அவருடைய மனைவி அபர்ணா ஆகிய இருவரும் செய்து இருந்தார்கள்.
“எனக்கு இந்த வருடம் சிறந்த படங்கள் அமைந்தன. பாராட்டுகளும் கிடைத்தன. தெறி, 24 ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தேன். தெறி படத்தில் நான் மரணம் அடைவது போன்ற காட்சியை பார்த்து பலரும் அழுததாக கூறினார்கள். இது எனது நடிப்புக்கு கிடைத்த விருதாகவே கருதுகிறேன்.
சினிமாவில் நான் அழகாக இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு காரணம் ஒளிப்பதிவு. ஒரு நடிகையை அழகாகவும் அழகில்லாமலும் காட்டுவது ஒளிப்பதிவாளர்கள்தான். எனக்கு மணிரத்தனம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது இன்னும் நிறைவேறாத ஆசையாகவே இருக்கிறது. அவர் படங்களில் நடிக்க விரும்பாத நடிகர்-நடிகைகளே கிடையாது. எனக்கும் அந்த ஆர்வம் நீண்ட நாட்களாகவே இருக்கிறது.
ஒரு தடவை மணிரத்னம் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்து கைநழுவிப் போனது. தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அந்த படத்தில் நடிக்க இயலவில்லை. அதை நினைத்து வருத்தப்படுகிறேன். புத்தாண்டில் மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். நல்ல கதை, கதாபாத்திரங்கள் இருக்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதுபோன்ற கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன். ஆனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில்தான் நடிப்பேன் என்ற பிடிவாதம் எதுவும் எனக்கு இல்லை. அதுபோன்ற கதைகளை தேடி ஓடவும் மாட்டேன்.
இந்த வருடம் 5 படங்களில் நடித்து இருக்கிறேன். வரும் புத்தாண்டிலும் தரமான கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்.”
இவ்வாறு சமந்தா கூறினார்.
இதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அபார சாதனைகள் நிகழ்த்தி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகி வருகிறது. இந்த படத்துக்கு ‘சச்சின்’ என்று பெயர் சூட்டி உள்ளனர். இதில் சச்சின் தெண்டுல்கரே அவரது கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.
ஜேம்ஸ் எர்ச்கின் டைரக்டு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. சச்சின் தெண்டுல்கர் மும்பையில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிகளில் விளையாடி, அவரது திறமை அடையாளம் காணப்பட்டு இந்திய கிரிக்கெட் அணியில் 16-வது வயதில் சேர்க்கப்பட்டார். பிறகு சர்வதேச போட்டிகளில் சதங்கள் குவித்து மளமளவென உயர்ந்தார்.
அவரது சிறுவயது வாழ்க்கை, உலக போட்டிகளில் நிகழ்த்திய சாதனைகள் அனைத்தும் படத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீடியோ பதிவுகளையும் அப்படியே படத்தில் பயன்படுத்துகின்றனர். சச்சின் படத்தை பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக இந்தி நடிகர் ஷாருக்கான் கருத்து வெளியிட்டு உள்ளார்.
இந்த படம் குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறும்போது, “எனது வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவதை விட நடிப்பது கடினமானது என்பதை புரிந்து கொண்டேன்” என்றார். படப்பிடிப்பு மும்பை பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். 1,000 திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்படுகிறது.
இந்தி பட உலகின் மூத்த நடிகர் அமிதாப்பச்சன். பலமுறை தமிழ்படங்களில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். என்றாலும், அதற்கான வாய்ப்பு இதுவரை அவருக்கு அமையவில்லை. இப்போது அதற்கான முயற்சி நடந்து வருகிறது.
எஸ்.ஜே.சூர்யா - நயன்தாரா நடித்த ‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிவன் தமிழ்வாணன். இவர் மீண்டும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்கினார். இதற்கு ‘உயர்ந்த மனிதன்’ என்ற பெயரை வைக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ‘உயர்ந்த மனிதன்’ என்ற பெயரில் ஏ.வி.எம். தயாரித்த சிவாஜி படம் ஒன்று உள்ளது. எனவே இந்த தலைப்புக்கு ஏ.வி.எம். நிறுவனத்துடன் அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபெரிய மனிதர் ஒருவரைப்பற்றிய கதை. எஸ்.ஜே.சூர்யா நாயகன் என்றாலும் பெரிய மனிதரை சுற்றியே கதை நடக்கிறது. எனவே இந்த பாத்திரத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
கதையை அமிதாப் பச்சனுக்கு அனுப்பி உள்ளனர். நிச்சயம் அவர் இந்த படத்தில் நடிப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
இன்றைய கால கட்டத்தில் ஒரு படம் ஒரு வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினாலே போதும். போட்ட பணம் கிடைத்துவிடும். அதுதான் படத்தின் வெற்றி என்று ஆகிவிட்டது. இரண்டு வாரங்களை கடந்து விட்டால் மிகப்பெரிய வெற்றி.
பல படங்கள் பல தியேட்டர்களில் ஓடும் காலம் இருந்தது. இந்த காலம் மாறி ஒரு படமாவது 100 நாள் ஓடுமா? என்ற நிலை உருவாகி இருக்கிறது. அப்படி ஓடினாலும் அது தினமும் ஓரு காட்சி ஓடும் படமாகவே உள்ளது.
இந்த 2016-ம் ஆண்டு 200-க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வந்து இருக்கின்றன. இவற்றில் விரல்விட்டு எண்ணும் படியான படங்களே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. ஒன்றிரண்டு படங்கள் 100 நாட்களை தொட்டிருக்கின்றன.
ஆனால், ரஜினியின் ‘கபாலி’ படம் மட்டும்தான். சென்னையில் 3 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்தது. மதுரையில் ஒரு திரை அரங்கில் 150 நாட்களை தாண்டி ஓடியது.
நூறுநாட்கள், ஓடிய படங்கள் பட்டியலில் ‘தெறி’, ‘இறுதிச்சுற்று’, ‘ரஜினிமுருகன்’, தற்போது ‘தர்மதுரை’ படங்கள் இடம் பெற்றுள்ளன.
"நல்ல வாய்ப்பு வரும்போது சொல்லி அனுப்புகிறேன்'' என்று கூறியிருந்த டைரக்டர் பி.மாதவன், ஸ்ரீபிரியாவுக்கு அழைப்பு அனுப்பினார்.
ஸ்ரீபிரியா அவரைச் சந்தித்தார். மாதவன் "முருகன் காட்டிய வழி''யின் கதையைச் சொன்னார். ஏவி.எம்.ராஜனின் தங்கை வேடத்தில் ஸ்ரீபிரியா நடிக்க வேண்டும் என்று கூறினார்.
சிறு வேடங்களில் நடிப்பதில் ஸ்ரீபிரியாவுக்கு ஆரம்பத்திலேயே விருப்பம் இல்லை. ஆனால், "முருகன் காட்டிய வழி''யில் ஏவி.எம்.ராஜனுக்கு தங்கை என்றாலும், படத்திலேயே மிக முக்கியமான பாத்திரம். எனவே ஸ்ரீபிரியா ஒப்புக்கொண்டார்.
மேக்கப் டெஸ்ட்டின் போது, ஸ்ரீபிரியா கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. நெற்றி சின்னதாக இருப்பதாகக் கூறி, முன்புற நெற்றி முடியை பிளேடு வைத்து அகற்றி, மேக்கப் டெஸ்ட் நடத்தினார்கள்! இதனால் பள்ளிக்கு பஸ்சில் போய் வந்து கொண்டிருந்த ஸ்ரீபிரியா, பஸ்சில் ஏறியதும் கையிலிருக்கும் நோட்டுப் புத்தகத்தால் நெற்றியை மறைத்துக்கொண்டு பயணம் செய்தார்!
பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் சமயங்களிலும் இந்த `முகமறைப்பு' தொடர்ந்து இருக்கிறது.
முகத்தைக்கூட காட்ட முடியாத சோகம், ஸ்ரீபிரியாவுக்குள் ஒரு கட்டத்தில் கோப அலைகளை எழுப்பியது. தன்னை சினிமாவில் நடிக்க அழைத்த டைரக்டர் பி.மாதவன் மீதே கோபப்பட வைத்தது.
ஒருநாள் பள்ளி முடிந்ததும், நேராக டைரக்டர் பி.மாதவன் ஆபீசுக்கு போனார். ஏதோ, பட விஷயமாகப் பேச வந்திருப்பதாக மாதவன் நினைத்தார்.
ஆனால் ஸ்ரீபிரியாவோ, "எனக்கு நடிக்க விருப்பமில்லை. தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்'' என்று கெஞ்சல் குரலில் சொன்னார்.
"வீணாக பயப்படாதே. மேக்கப் டெஸ்ட் `ஓகே' ஆகிவிட்டது. உன்னை நன்றாக நடிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!'' என்று மாதவன் கூறினார்.
ஆனால் ஸ்ரீபிரியாவோ, சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்ல, கோபம் அடைந்தார், மாதவன்.
"எத்தனையோ பேர் நடிப்பதற்கு ஆசைப்பட்டு தவம் கிடக்கிறார்கள். உனக்கு வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. இப்போது நீ மறுத்துவிட்டால், பிறகு இந்த வாய்ப்பு மீண்டும் வராது!'' என்று கூறினார்.
ஆனால் ஸ்ரீபிரியாவோ, "எனக்கு அதுபற்றிக் கவலை இல்லை சார்!'' என்று கூறிவிட்டு விடுவிடுவென்று அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.
ஆனால் டைரக்டர் மாதவன் விடுவதாக இல்லை. 2 மாதம் கழித்து, ஸ்ரீபிரியாவுக்கு மீண்டும் அழைப்பு அனுப்பினார். `ஏன் திரும்பவும் அழைக்கிறார்' என்று யோசித்தபடியே அவரைப் போய் சந்தித்தார்.
"என்ன ஆனாலும் சரி. நடிக்கமாட்டேன் என்று தைரியமாக கூறிவிட்டுப் போனாய் அல்லவா? அந்த தைரியம்தான் எனக்கு ரொம்பவும் பிடிக்கிறது. என் கதையின் அந்தக் கேரக்டர், உனக்கு ரொம்பப் பொருத்தமாக இருக்கும். பிடிவாதம் செய்யாமல் நடி!'' என்று மாதவன் கூறினார்.
ஸ்ரீபிரியாவின் தாயாரும், மாதவன் கருத்தை ஆதரித்தார். "டைரக்டர் சார் இவ்வளவு சொல்லும்போது நீ மறுப்பது சரியல்ல'' என்று எடுத்துச் சொன்னார். எனவே, நடிப்பதற்கு சம்மதித்தார், ஸ்ரீபிரியா.
முதல் படத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஸ்ரீபிரியா கூறியதாவது:-
"நடிப்பது என்று முடிவு எடுத்ததும், அதற்கேற்ப என்னை பக்குவப்படுத்திக் கொண்டேன். எங்கள் சர்ச் பார்க் பள்ளியின் எதிரே `சினிமா கட்- அவுட்கள் வைப்பார்கள். அதில் பிரபல நடிகர் -நடிகைகள் படங்கள் பெரிய அளவில் பளிச்சென்று காணப்படும். `நாம் இப்போது நடிக்கப்போகிறோம். இனி நமக்கும் இதே இடத்தில் `கட்அவுட்' வைப்பார்கள்!' என்று எண்ணிக் கொண்டேன்.
அன்றைய பிரபல சினிமா பத்திரிகைகளில் என் படத்தை அட்டையில் பிரசுரித்தார்கள். அதனால், பள்ளி மாணவிகள் மத்தியில் என் புகழ் பரவியது.''- இப்படிச் சொன்ன ஸ்ரீபிரியா, முதல் படம் "முருகன் காட்டிய வழி''யில் வசனம் பேசத்தான் ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார்.
டைரக்டர் பி.மாதவனிடம் உதவியாளர்களாக இருந்த தேவராஜ் -மோகன் இருவரில் மோகன்தான் ஸ்ரீபிரியாவுக்கு வசனம் பேச கற்றுக் கொடுத்தார். அதுவரை தமிழில் பேச, எழுதத் தெரியாத ஸ்ரீபிரியாவுக்கு தமிழில் சரளமாக பேசிப்பழக அவர் கொடுத்த வசனம் "தங்கப்பதக்கம்'' படத்தில் சிவாஜியிடம் மருமகளாக நடிக்கும் பிரமிளா பேசும் வசனம்.
`மாமா! காஞ்சுப்போன நதியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா?''
இந்த வசனத்தை ஸ்ரீபிரியா சொன்ன பிறகு, படத்துக்கான 2 பக்க வசனத்தை படித்துக்காட்டினார், மோகன்.
இந்த வசனத்தை ஸ்ரீபிரியா தயங்கித் தயங்கி பேசினார். அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த டைரக்டர் பி.மாதவன், `பொண்ணு தேறுமா?' என்பது போல் மோகனிடம் கை அசைவில் கேட்டிருக்கிறார். மோகனோ, உதட்டைப் பிதுக்கி `தேறாது' என்பதுபோல் சொல்லியிருக்கிறார்!
ஆனால், வெகு விரைவிலேயே எல்லோரும் ஆச்சரியப்படும்படி வசனத்தை தெளிவான உச்சரிப்புடன் பேசத்தொடங்கினார், ஸ்ரீபிரியா.
"எனக்கு தமிழ் சரியாகத் தெரியவில்லை என்றாலும், இரண்டு தடவை படித்துக் காட்டினால் போதும். அப்படியே மனதுக்குள் கிரகித்துக் கொண்டு திருப்பிச் சொல்லிவிடுவேன். மோகன் சார் எனக்கான வசனத்தை இரண்டாவது தடவையாகச் சொன்னபோது, அப்படியே கடகடன்னு திருப்பிச் சொல்லி, அவரை ஆச்சரியப்படுத்தி விட்டேன். நான் பேசி முடித்ததும் கேமராமேன் பி.என்.சுந்தரம் சார் கைதட்டி பாராட்டினார்'' என்று `மலரும் நினைவு'களை பகிர்ந்து கொண்டார், ஸ்ரீபிரியா.
இதன் பிறகு ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீபிரியா நடித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அங்கு நடிகர் சிவகுமார் வந்தார்.
"படத்தின் சில காட்சிகளை டைரக்டர் மாதவன் சாருடன் சேர்ந்து பார்த்தேன். நன்றாக நடித்திருக்கிறாய். வசனத்தையும் அழகாகப் பேசியிருக்கிறாய். எதிர்காலத்தில் சிறந்த நடிகையாக வருவாய்!'' என்று வாழ்த்தினார்.
பூரித்துப்போனார், ஸ்ரீபிரியா.
இந்நிலையில், அதே குடியிருப்பில் வசிக்கும் நாயகி ஊர்மிளா காயத்ரியை இவர்கள் கிண்டல் செய்ய, அவள் நண்பர்களில் ஒருவரை அடித்து விடுகிறாள். இதனால், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஊர்மிளாவை பழிவாங்க துடிக்கிறார்கள். அன்றிலிருந்து நண்பர்களில் ஒருவன் திடீரென கொல்லப்படுகிறார். அந்த கொலையை செய்தது ஒரு பூனை என்று அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் நம்புகிறார்கள்.
ஆனால், கொல்லப்பட்டவனின் நண்பர்களோ இதற்கு ஊர்மிளாதான் காரணம் என்று அவள்மீது பழியை போடுகிறார்கள். இந்த கொலை விசாரணை போலீஸ் வசம் செல்ல, அடுத்ததாக மற்றொரு நண்பரும் கொல்லப்படுகிறார். இவரும் பூனையால் கொல்லப்பட்டதாக கூற, போலீஸ் குழம்புகிறது.
இறுதியில், நண்பர்கள் பூனையால்தான் கொல்லப்பட்டார்களா? பூனை உருவத்தில் மிரட்டும் அந்த நபர் யார்? மற்ற நண்பர்கள் அந்த பூனையிடம் இருந்து தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகர்களான ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இருப்பினும், வசதியான இளைஞர்கள் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்கள்.
மாடல் அழகியாக நடித்திருக்கும் நாயகி ஊர்மிளா காயத்ரி, துணிச்சலான பெண்ணாகவும், தன் மேல் விழுந்த பழியை துடைக்க போராடும் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பிற்பாதியில் வரும் ஷைய்னி கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார்.
ஷெல்பி என்னும் கதாபாத்திரத்தில் பூனை நடித்திருக்கிறது. பூனையை வைத்து சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் யுவினாவும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறாள். வாட்ஸ் அப் மணி கதாபாத்திரத்தில் வரும் டேனியலின் காமெடி படத்தில் எடுபடவில்லை.
பேய் பழி வாங்கும் வழக்கமான கதையையே படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி. எல்லா பேய் படங்களிலும் வரும் வழக்கமான கதை, வழக்கமான காட்சிகள் என கொடுத்திருந்தாலும், புது முயற்சியாக பூனை பழி வாங்குவதாக அமைத்திருப்பது படத்திற்கு புதுமையாக இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது.
ஸ்ரீஜித் எடவனா இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் தேவை. போஜன் கே.தினேஷின் ஒளிப்பதிவு ஓரளவுக்கு ரசிக்கும்படி உள்ளது.
மொத்தத்தில் ‘மியாவ்’ சத்தம் போதவில்லை.
பின்னர் அரசியலில் இறங்கினார். இதனால் திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தவில்லை. தற்போது ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் தமிழ் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், 9 வருடங்களுக்குப் பிறகு குஷ்பு தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஒரு நற்செய்தி. 9 ஆண்டுகள் கழித்து தெலுங்கில் திரிவிக்ரம், பவன் படத்தில் நான் நடிக்கிறேன். திரிவிக்ரம் அருமையான திரைக்கதையை எழுதி இருக்கிறார். எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். எனது கடைசி படம் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன். இப்போது அவரது சகோதரருடன் நடிக்கிறேன். படத்தில் நடிக்கும் முடிவை எடுக்க நீண்ட காலம் ஆனது. தமிழில் 7 ஆண்டுகள் கழித்து நடித்தேன். தெலுங்கில் நடிக்க 9 அண்டுகள் ஆகி இருக்கிறது.
ரசிகர்கள் ஏமாற்றம் அடையாத வகையில் நடிப்பேன் என்று நினைக்கிறேன்’ என்று குஷ்பு கூறியுள்ளார்.
இவரது மகள் கேர்ரி பிஷர். இவரும் ஒரு நடிகை ஆவார். ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். லண்டனில் இருந்து லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு விமானம் வந்த போது இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 4 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் பரிதாபமாக மரணம் அடைந்தார்.
எனவே, மகளின் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த அவர் மிகவும் துக்கத்துடன் காணப்பட்டார். மிகவும் மன உளைச்சலில் இருந்த அவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது.
உடனே அவரை லாஸ்ஏஞ்சல்சில் உள்ள கீடர்ஸ்-சீனால் மெடிக்கல் சென்டர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இத்தகவலை அவரது மகன் டாட் பிஷர் தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் ஆனந்தராஜ் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் எனக்கு ஒருவர் மிரட்டல் விடுத்தார். அவர் நிச்சயம் அ.தி.மு.க. தொண்டராக இருக்க மாட்டார். அவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவராக இருந்தால் கட்சி தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கும். தலைமை அவரை கண்டித்து வைக்க வேண்டும். இதை பெரிதாக்க நான் விரும்பவில்லை.
இதுபற்றி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளேன். மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை காவல்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும். காவல்துறையினர் தங்கள் கடமையை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் கட்சியை விட்டு விலகக்கூடாது என்று மிரட்டினால் என்ன சொல்வது? எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் விலகுகிறேன். தேவையில்லாமல் மிரட்டுவது போன்ற விஷயங்கள் வளர்ச்சிக்குரிய விஷயங்களாக தெரியவில்லை.
2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுங்கட்சி தலைமையை மிக கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். அந்த விமர்சனம் தரமான விமர்சனமாக இருந்தது.
அதேபோல் கட்சியில் சிறிய தவறுகூட செய்தது கிடையாது. யார் மீதும் குற்றம் சொன்னதும் கிடையாது. என்னைக் காயப்படுத்தியவர்களைக்கூட காட்டிக் கொடுத்தது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், ஒருநாள் பஸ்ஸில் விஜய் வசந்தை சந்திக்கிறாள் சிருஷ்டி டாங்கே. இவர்களுடைய முதல் சந்திப்பே மோதலாக மாறி, போலீஸ் நிலையம் வரை செல்கிறது. ஒரு கட்டத்தில் தனது தவறை உணர்ந்த சிருஷ்டி டாங்கே, விஜய்யிடம் மன்னிப்பு கேட்கிறார். அதன்பிறகு, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.
இந்நிலையில், சமுத்திரகனி காதலிக்கும் வித்யா ஒரு விபத்தில் இறக்கிறாள். அது விபத்து இல்லை, திட்டமிட்டு செய்த கொலை என்று சமுத்திரகனிக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க களமிறங்க நினைக்கும்போது, அவரது உயரதிகாரி, போலீஸ் மற்றும் ரவுடி கும்பலின் உதவியோடு இவரை கொலை செய்ய திட்டமிடுகிறார்.
அதிலிருந்து தப்பித்து செல்லும் சமுத்திரகனி, உயிர் பயத்தோடு ஓடிவரும் நாயகனையும் நாயகியையும் சந்திக்கிறார். சமுத்திரகனியை கொல்ல துடிப்பவர்களே, இவர்களையும் கொலை செய்ய துடிக்கிறார்கள் என்பதை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்கிறார்கள். மூன்று பேரும் இணைந்து தங்களை கொலை செய்ய நினைப்பவர்களை எதிர்க்க களமிறங்குகிறார்கள்.
அப்போது தங்களை கொல்லத் துடிக்கும் ரவுடி கும்பலின் பின்புலத்தில் கல்வியமைச்சர் ராதாரவியின் உதவியாளர் ஜெயக்குமார் ஜானகிராமன் இருப்பது தெரியவருகிறது. சமுத்திரகனி, விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே மூன்று பேரையும் அவர் கொல்ல துடிப்பதன் காரணம் என்ன? இந்த கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்களா? வித்யாவை யார்? எதற்காக கொன்றார்கள்? என்பதற்கு விறுவிறுப்புடன் கூடிய பதிலை பிற்பாதியில் சொல்லியிருக்கிறார்கள்.
பிக்பாக்கெட் திருடனாக வரும் விஜய் வசந்த் தனது நகைச்சுவை கலந்த எதார்த்த நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். முதல் பாதியில் இவரது கதாபாத்திரம் நகைச்சுவையாக நகர்ந்தாலும், சமுத்திரகனியிடம் இணைந்த பிறகு ஆக்சனுக்கு மாறுகிறது. ஆக்சன் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். தனக்கேற்ற சரியான கதையை தேர்வு செய்து, நாயகன் அந்தஸ்தை முழுமையாக காட்டிக் கொள்ளாமல், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை முழுமையாக கொடுத்திருக்கிறார்.
சிருஷ்டி டாங்கே அழகு பதுமையாக படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். காதல் காட்சிகள் மட்டுமில்லாது, செண்டிமெண்ட் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். பரபரப்பான காட்சிகளில் தனது நடிப்பை சிறப்பாக செய்து தனது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார்.
பொறுப்பான போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரகனி, வழக்கம்போல் தனது அசாத்தியமான நடிப்பை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். தான் காதலித்த பெண்ணின் மரணத்திற்கு பிறகு செண்டிமெண்ட் கலந்த கோபத்தோடு எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் எல்லாம் பலே சொல்ல வைக்கிறது.
ராதாரவியின் கதாபாத்திரத்தை ஆரம்பத்தில் வில்லத்தனமாக சித்தரித்து, இறுதியில் அவர் மிகவும் நேர்மையானவர் என்பதுபோல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இதை உணர்ந்து சிறப்பாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு பெயர் வரும்படி செய்திருக்கிறார் ராதாரவி. குறிப்பாக, இறுதிக் காட்சியில் நீதிமன்றத்தில் இவர் பேசும் வசனங்கள் மிகவும் யோசிக்கக்கூடியதாக உள்ளது.
இதுவரையிலான படங்களில் பிரியமான அம்மாவாக வந்த சரண்யா பொன்வண்ணன், இந்த படத்தில் பிடிவாத சரண்யாவாக நடித்துள்ளார். கல்வி நிறுவனங்கள் நடத்தும் மிகப்பெரிய தொழிலபதிரான இவர், தனது கட்டுப்பாட்டுக்குள் அனைவரையும் கொண்டு வரும் மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக வலம் வந்திருக்கிறார். இவருக்கு இந்த கதாபாத்திரம் புதிது என்றாலும் அதை அழகாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இனிமேல், சரண்யா பொன்வண்ணன் இதுமாதிரியான கதாபாத்திரங்களிலும் நடித்து அவரது நடிப்பு திறமையை இன்னும் மேலே கொண்டுவர வேண்டும் என்பதுதான் படம் பார்த்தவர்களின் ஆவலாக உள்ளது.
வாய் பேசமுடியாமல் வரும் வித்யா, வக்கீலாக வரும் ரோகிணி, கலெக்டராக வரும் தலைவாசல் விஜய், கும்கி அஸ்வின் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கருணாஸ், தேவதர்ஷினி, சண்முக சுந்தரம் கூட்டணியில் காமெடி ரசிக்கும்படி இருக்கிறது.
ஏற்கெனவே, விஜய் வசந்தை வைத்து ‘என்னமோ நடக்குது’ என்ற ஹிட் படத்தை கொடுத்த ராஜபாண்டியே இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களும், அரசாங்கமும், மக்களும் கல்வியை எப்படி நாடுகிறார்கள்? என்பதை விவாதத்துக்கு கொண்டு வந்து, அதற்கான தீர்வையும் சொல்லியிருக்கிறார். படத்தில் இவர் சொல்லியிருக்கும் கருத்தை எல்லோருக்கும் எளிதில் புரியும்படி திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பது படத்திற்கு பெரிய பலம். அதேபோல், கல்வி முறையில் கட்டாயம் மாற்றம் வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு படத்தை எடுத்திருக்கும் இந்த குழுவை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
பிரேம்ஜி அமரனின் இசையில் பாடல்கள் எல்லாம் இளையராஜாவின் சாயல் இருக்கிறது. சுட்ட பழமாக இருந்தாலும் சுவையாக இருக்கிறது. பின்னணி இசையும் ரசிக்கும்படி இருக்கிறது. வெங்கடேஷின் ஒளிப்பதிவும் அருமையாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் எல்லாம் இவரது கேமரா சுழன்று படமாக்கியிருக்கிறது.
மொத்தத்தில் ‘அச்சமின்றி’ ஒரு கல்வி புரட்சி.








