என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    இந்தி நடிகர் பர்ஹான் அக்தருடன் கள்ளக்காதல் தொடர்பில் இருந்த மகள் ஷிரத்தா கபூரை நடிகர் சக்தி கபூர் அடித்து இழுத்து சென்றதாக மும்பை பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஷிரத்தா கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
    பிரபல இந்தி நடிகர் சக்தி கபூரின் மகள் ஷிரத்தா கபூர். இவரும் ஏராளமான இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்தி நடிகர் பர்ஹான் அக்தருக்கும் ஷிரத்தா கபூருக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாக இந்தி பட உலகில் கிசுகிசுக்கள் வெளியானது.

    பர்ஹான் அக்தர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவரது மனைவி பெயர் அதுனா. 15 வருடங்களாக சந்தோஷமாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் திடீர் பிளவு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த வருடம் விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

    இந்த பிரிவுக்கு ஷிரத்தா கபூர்-பர்ஹான் அக்தர் கள்ளக்காதலே காரணம் என்று இந்தி நடிகர்-நடிகைகள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. விவாகரத்துக்கு பிறகு பர்ஹான் அக்தர் வீட்டிலேயே ஷிரத்தா கபூர் தங்கி விட்டதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடித்தனம் நடத்துவதாகவும் கூறப்பட்டது.

    ஷிரத்தா கபூரின் தந்தையும் நடிகருமான சக்தி கபூருக்கு இந்த கள்ளத்தொடர்பு பிடிக்கவில்லை என்றும், இரு தினங்களுக்கு முன்பு பர்ஹான் அக்தர் வீட்டுக்கு ஆவேசமாக சென்ற அவர் மகளை அடித்து தரதரவென்று இழுத்து சென்று விட்டதாகவும் தகவல்கள் பரவின. இதற்கு ஷிரத்தா கபூர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    “பர்ஹான் அக்தர் வீட்டில் இருந்து எனது தந்தை என்னை தரதரவென்று இழுத்து சென்றதாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதில் சிறிதும் உண்மை இல்லை. ஏற்கனவே நடிகர் ஆதித்யா ராய் கபூரும் நானும் காதலிப்பதாக வதந்தி பரப்பினார்கள். இப்போது பர்ஹான் அக்தருடன் இணைத்து பேசுகிறார்கள்.

    என்னைப்பற்றி எது சொன்னாலும் தாங்கிக்கொள்வேன். ஆனால் எனது குடும்பத்தினரை இதில் இழுப்பதைத்தான் பொறுக்க முடியவில்லை. எனது பெற்றோர்கள் வீட்டில்தான் வசிக்கிறேன். எனக்கு தனியாக வீடு இருந்தாலும் அங்கு நான் இருப்பது இல்லை.”

    இவ்வாறு ஷிரத்தா கபூர் கூறினார்.
    தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீபிரியா வியந்து பார்த்த ஒரு நடிகை லட்சுமி. அவருடன் 'அவன் அவள் அது'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு டைரக்டர் முக்தா சீனிவாசன் மூலம் வந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு அளவு கடந்த சந்தோஷம்.

    தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீபிரியா வியந்து பார்த்த ஒரு நடிகை லட்சுமி. அவருடன் 'அவன் அவள் அது'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு டைரக்டர் முக்தா சீனிவாசன் மூலம் வந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு அளவு கடந்த சந்தோஷம். லட்சுமியின் கருவை சுமந்து குழந்தையைப் பெற்றுக்கொடுக்கும் "வாடகைத் தாயாக'' ஸ்ரீபிரியா நடித்துள்ளார். வெள்ளி விழா கொண்டாடிய படம் இது.

    இந்தப் படத்தில் நடிக்க ஸ்ரீபிரியாவுக்கு அழைப்பு வந்தபோது, படத்தில் லட்சுமியும் இருக்கிறார் என்பது தெரிந்து ரொம்பவும் மகிழ்ந்திருக்கிறார். அந்த நேரம் ஏற்பட்ட பரவசத்தை ஸ்ரீபிரியாவே பகிர்ந்து கொள்கிறார்:-

    "எனக்கு லட்சுமியை ரொம்ப பிடிக்கும். அவங்களோட "சட்டைக்காரி'' படத்தையெல்லாம் ரொம்ப ரசித்துப் பார்த்திருக்கிறேன். நடிப்பில் தனித்துவம் வாய்ந்தவர். அவருடன் நடிக்கப் போகிறேன் என்றதும் எனக்கு வேண்டியவர்களே கொஞ்சம் பயமுறுத்தினார்கள். "லட்சுமி பிரமாதமான நடிகை. அவர் கூட நடிக்கும்போது நீ காணாமல் போயிடப்போறே'' என்று பயமுறுத்தினார்கள். ஆனால் படத்தில் நடிக்கும்போது நட்பில் நாங்கள் ரொம்பவே ஒன்றிப் போனோம். படத்தில் 'ஆச்சி'யும் இருந்தார். மூன்று பேரும் செட்டில் இருந்து விட்டால் அரட்டை! அரட்டை! ஒரே அரட்டைதான்!

    ஒரு கட்டத்தில் எங்கள் லூட்டியை தாங்கிக்கொள்ள முடியாத டைரக்டர் முக்தா சீனிவாசன், "உங்களை கட்டி மேய்க்க என்னால் முடியவில்லை. கடவுள் சத்தியமா உங்க மூணு பேரையும் ஒண்ணா வெச்சு இனிமே படம எடுக்கவே மாட்டேன். எனக்கு வேலையே நடக்க மாட்டேங்குது'' என்றார்.

    எந்த நேரத்தில் அப்படிச் சொன்னாரோ அதன் பிறகு நாங்கள் மூன்று பேரும் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்க முடியாமலே போய்விட்டது. ஒன்று நானும் ஆச்சியும் இருப்போம். இல்லேன்னா லட்சுமியும், நானும் இருப்போம். எப்படியோ டைரக்டர் முக்தா சீனிவாசன் சொன்னது நடந்துவிட்டது.''

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.

    டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சிவகுமார் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்த முதல் படம் "ஆண்பிள்ளை சிங்கம்.''

    திட்டமிட்டு படமாக்கும் ஆற்றல் இவரிடம் இருப்பதை ஸ்ரீபிரியா தெரிந்து கொண்டார். தேவையில்லாமல் நடிகர் - நடிகைகளை காக்க வைக்கிற பழக்கமும் இவருக்கு இருந்ததில்லை. தொழிலில் இவர் காட்டிய ஈடுபாடு ஸ்ரீபிரியாவை பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது. தொடர்ந்து இவரது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். இப்படி அவர் "ஒரு கொடியில் இரு மலர்கள்'', "சொந்தமடி நீ எனக்கு'', "எனக்குள் ஒருவன்'', "மோகம் முப்பது வருஷம்'' என படங்களை தொடர்ந்தார்.

    இதில், "மோகம் முப்பது வருஷம்'' படத்தில் மட்டும், தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் ஸ்ரீபிரியாவுக்கு திருப்தி இல்லை. தைரியமாக, "இந்த கேரக்டரில் நான் நடிக்கத்தான் வேண்டுமா?'' என்று டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடமே கேட்டும்விட்டார்.

    இந்த நேரத்தில், ஸ்ரீபிரியாவுக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது. அதற்காக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது, இப்படத்துக்கு திரைக்கதை - வசனம் எழுதிய மகேந்திரன் அவரை சந்தித்தார். "படத்தில் 3 பெண் கேரக்டர்கள் இருந்தாலும் நீங்கள் நடிக்கிற பாமா கேரக்டரோடுதான் ரசிகர்கள் ஒன்றிப் போவார்கள். படம் வெளிவரும்போது ரசிகர்கள், பாமா பற்றிதான் பேசிக்கொண்டு வருவார்கள். அந்த அளவுக்கு வித்தியாசமும் அழுத்தமும் கொண்ட கேரக்டர்'' என்று விளக்கம் தந்தார்.

    அதன் பிறகு பாமா கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஸ்ரீபிரியா. அவர் குணமானதும் படப்பிடிப்பு தொடங்கியது. படம் ரிலீசானபோது மகேந்திரன் சொன்னது போலவே நடந்தது. படம் பார்த்த ரசிகர்கள் பாமா கேரக்டர் பற்றியே பேசினார்கள்.

    ஸ்ரீபிரியாவை கவர்ந்த இன்னொரு இயக்குனர் டி.என்.பாலு. டைரக்டர் ராமண்ணாவிடம் உதவியாளராக இருந்தபோதே "நான்'', "மூன்று முகம்'' போன்ற வெற்றிப்படங்களுக்கு கதை எழுதியவர். இவர் டைரக்டரானதும் இயக்கிய "சட்டம் என் கையில்'' படத்தில் கமலஹாசன் கதாநாயகன். அவருக்கு ஜோடி ஸ்ரீபிரியா.

    டி.என்.பாலு பற்றி ஸ்ரீபிரியா இப்படிச் சொன்னார்:-

    "பாடல் காட்சியின்போது எனக்கு சரியாக வாயசைக்க வராது என்பதை கண்டுபிடித்து திருத்தியவர் இவர்தான். பாட்டு சீனில் வாயை ஒரு மாதிரி வைத்துக் கொண்டிருப்பேன். 'இப்படிச் செய்தால் நீ பாடுகிற மாதிரி திரையில் எப்படித் தெரியும்? முதலில் அதை சரி பண்ணு' என்றார். ஒரு ஆர்ட்டிஸ்ட்டிடம் இருக்கும் திறமையை பட்டியலிட்டு பாராட்டும் குணம் இருந்த அளவுக்கு, குறைகளை பக்குவமாக சொல்லி சரி செய்யும் பண்பும் இவரிடம் இருந்தது. இவரது "ஓடி விளையாடு தாத்தா'' காமெடிப்படம் எனக்கு காமெடியில் ரொம்ப நல்ல பெயர் தேடித் தந்தது. "நல்லதுக்கு காலமில்லை'' படத்திலும், எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தார்.

    கமல் நடித்த "சங்கர்லால்'' படத்தை, இவர் இயக்கியபோதுதான் எனக்கும் அவருக்கும் சின்ன பிரச்சினை. படத்தில் கமல் ஜோடியாக என்னை ஒப்பந்தம் செய்தவர், நான் இரண்டொரு தடவை தேதிகளை மாற்றினேன் என்பதற்காக, உணர்ச்சிவசப்பட்டு கவுன்சிலில் என் மீது புகார் கொடுத்துவிட்டார். பிறகு பிரச்சினை சுமூகமாக தீர்ந்து போயிருந்தாலும், நாங்கள் சந்திக்கும் வாய்ப்பு இல்லாது போயிற்று.

    திடீரென அவர் இறந்தபோது, மனது தாங்காமல் அஞ்சலி செலுத்தப் போனேன். அப்போது என்னை கட்டிக்கொண்டு அழுத அவர் மனைவி, "அய்யோ அது (ஸ்ரீபிரியா) எவ்வளவு நல்ல பொண்ணு. நான் அவசரப்பட்டு புகார் கொடுத்து அது மனதை புண்படுத்தி விட்டேனேன்னு என்கிட்ட அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பாரே!'' என்று அழுதார். ஏற்கனவே சோகத்தில் இருந்த நான், அவங்க அப்படிச் சொன்னதும் உடைந்து கதறிவிட்டேன்.''

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.

    இந்தியில் சஞ்சீவ்குமார்- ஷர்மிளா தாகூர் இணைந்து நடித்த படம் "மாசூன்.'' இந்தப் படத்தில் நடித்த இருவருக்குமே சிறந்த நடிப்புக்காக தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தை தமிழில் "வசந்தத்தில் ஓர் நாள்'' என்ற தலைப்பில் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்ரீபிரியா நடித்து முடித்தபோது கைதட்டி பாராட்டினார்.

    "நிஜமாகவே உயரத்தில் மட்டுமல்ல... பண்பிலும் உயர்ந்தவர் அவர்'' என்று திருலோகசந்தரைப் பாராட்டிய ஸ்ரீபிரியா, மேலும் சொன்னார்:-

    "ஏவி.எம். ஸ்டூடியோவில் சின்னத்திரை தொடர் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தேன். நான் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த இடத்தைத் தாண்டி ஒரு கார் வேகமாக சென்றது. திடீரென அந்தக் கார் நிறுத்தப்பட்டு, அதில் இருந்து உயரமான மனிதர் ஒருவர் என்னை நோக்கி வந்தார். பார்த்தால் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர்! என்னைப் பார்த்ததும், "என்னம்மா எப்படி இருக்கீங்க?'' என்று பாசத்துடன் விசாரித்தார். என்னைப் பார்த்ததும், வந்த வேலையை கூட தள்ளிவைத்துவிட்டு தேடிவந்து நலம் விசாரிக்கும் அந்த மாதிரியான அன்பை யாரிடம் எதிர்பார்க்க முடியும்?

    ஒருமுறை அவர் இயக்கிய, சிவாஜி - கே.ஆர்.விஜயா நடித்த "பாரத விலாஸ்'' படத்தை, டிவி.யில் பார்த்தேன். தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உணர்ச்சிப்பூர்வமாக காட்சிகளை அவர் அமைத்திருந்தார். மனம் நெகிழ்ந்துபோய், உடனே அவர் போன் நம்பரை தேடிப்பிடித்து பாராட்டினேன். "படம் இயக்கி இத்தனை வருஷம் கழித்தும் பாராட்டுகிற பண்பு உன்போன்ற சிலருக்கு இருப்பதை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது'' என்று மகிழ்ச்சி தெரிவித்தார். "தெய்வமகன்'' போன்ற படங்கள் எப்போதும் சினிமாவில் அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும்'' என்றார், ஸ்ரீபிரியா.
    'அழகு குட்டி செல்லம்' படத்தின் இயக்குனர் சார்லஸ் வாழ்க்கைக்குத் தேவையான சமூகக் கருத்தை மையமாக வைத்து 'சாலை' என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். அதுகுறித்த செய்தியை விரிவாகப் பார்ப்போம்.
    குழந்தைகளை மையமாக வைத்து சார்லஸ் இயக்கிய 'அழகு குட்டி செல்லம்' விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் வாழ்க்கையை மையமாக வைத்து 'சாலை' என்னும் பெயரில் தனது அடுத்த படத்தை சார்லஸ் இயக்கியிருக்கிறார்.

    உறையவைக்கும் கடுங்குளிரில் முழுக்க முழுக்க காஷ்மீரை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் 'சாலை' படம் குறித்து இயக்குனர் சார்லஸ் கூறுகையில் "வாழ்க்கையும் ஒரு சாலை போன்றதுதான். வாழ்க்கை என்னும் சாலையில் ஒருவன் எதை நோக்கி பயணிக்கிறான் என்பதைப் பொறுத்தே அவனது வாழ்வு அமையும். இதனை மையக்கருத்தாகக் கொண்டு இப்படத்தின் கதையை அமைத்துள்ளேன். ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை இந்தியாவில் இயக்க வேண்டும் என்ற எனது கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.

    10 அடிக்கு ஒரு ராணுவ வீரர் இருக்கும் காஷ்மீரில் முதல் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்தும்போது பயமாக இருந்தது. பின்னர் அதுவே பழகிவிட்டது. வழக்கமான தமிழ்ப்படங்கள் போல இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக சாலை இருக்கும்" என்றார்.

    தயாரிப்பாளர்கள் கிரேஸ் தியாகராஜ், ரஞ்சித் சக்கத் தயரித்திருக்கும் இப்படத்துக்கு பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய,சங்கர் சுகவனம் இசையமைத்திருக்கிறார். ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் விஷ்வா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கிரிஷா குரூப்பும், முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், அஜித் மணியன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

    'அழகு குட்டி செல்லம்' திரைப்படத்தைப் போல இப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    'விஜய் 61' படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    விஜய்-ஜோதிகா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'குஷி'. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இப்படம் இன்றளவும் விஜய் ரசிகர்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக இருக்கிறது.

    வெற்றிப்பட இயக்குனர்களில் ஒருவராக வலம்வந்த எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தை மூட்டை கட்டிவைத்து விட்டு தற்போது நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

    இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் 'விஜய் 61' படத்தில் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக படக்குழு எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் படக்குழு இன்னும் வெளியிடவில்லை.
    விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் தயாரிக்க உள்ளனர். அதுகுறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
    ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த ‘சைத்தான்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. விரைவில் ‘எமன்’ படம் திரைக்கு வரத்தயாராக இருக்கிறது.

    அடுத்து 'ஐ பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் சரத்குமார்-ராதிகா தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். புதிய இக்குனர் சீனுவாசன் இயக்குகிறார்.

    தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் நடிப்பது குறித்து கூறிய விஜய் ஆண்டனி “நான் என் தாய் வீட்டுக்கு வந்துள்ள மன நிலையில் இருக்கிறேன். என் திரை பயணத்தை நான் ஒரு இசை அமைப்பாளனாக தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில் எனக்கு வாய்ப்பளித்தவர் ராதிகா மேடம்.

    அதன் அடிப்படையில் தான் எனக்கு இசை அமைப்பாளர் வாய்ப்பளித்த இந்த நட்சத்திர தம்பதியினருக்கு படம் செய்து கொடுக்க ஒப்புக் கொண்டேன்.பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது, வழக்கம் போலவே இந்தப் படத்தின் தலைப்பும் வித்தியாசமாகவே இருக்கும். என்ன என்பது சஸ்பென்ஸ்” என்றார்.
    கடந்தாண்டில் 100 நாட்களைத் தொட்ட படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்.
    இன்றைய கால கட்டத்தில் ஒரு படம் ஒரு வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினாலே போதும். போட்ட பணம் கிடைத்துவிடும். அதுதான் படத்தின் வெற்றி என்று ஆகிவிட்டது. இரண்டு வாரங்களை கடந்து விட்டால் மிகப்பெரிய வெற்றி.
    பல படங்கள் பல தியேட்டர்களில் ஓடும் காலம் இருந்தது. இந்த காலம் மாறி ஒரு படமாவது 100 நாள் ஓடுமா? என்ற நிலை உருவாகி இருக்கிறது. அப்படி ஓடினாலும் அது தினமும் ஓரு காட்சி ஓடும் படமாகவே உள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு 204 படங்கள் திரைக்கு வந்து இருக்கின்றன. இவற்றில் விரல்விட்டு எண்ணும் படியான படங்களே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. ஒன்றிரண்டு படங்கள் 100 நாட்களை தொட்டிருக்கின்றன.ஆனால், ரஜினியின் ‘கபாலி’ படம் மட்டும்தான். சென்னையில் 3 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்தது. மதுரையில் ஒரு திரை அரங்கில் 150 நாட்களை தாண்டி ஓடியது.

    நூறு நாட்கள் ஓடிய படங்கள் பட்டியலில் ‘தெறி’, ‘இறுதிச்சுற்று’, ‘ரஜினிமுருகன்’,  ‘தர்மதுரை’ ஆகிய படங்கள் இடம் பிடித்துள்ளன.
    ஆரம்ப காலத்தில் ஆபாச படத்தில் நடிக்க தயாராக இருந்தேன் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    ‘கேங்ஸ்டர்’ படம் மூலம் நடிகை ஆனவர் கங்கனா ரனாவத். இந்த படத்தில் நடித்ததற்காக 5 விருதுகள் பெற்றார். இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படும் இவர் 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

    தனது திரையுலக பயணம் குறித்து கங்கனா ரனாவத் கூறுகையில் “நான் சினிமாவில் நடிக்க தயாரானபோது முதலில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. போட்டோ ஷூட்டும் நடத்தினார்கள். உடல் முழுவதும் தெரியும்படி ஒரு உடையை கொடுத்து அணியச் சொன்னார்கள். வேறுவழியில்லாமல் அதை அணிந்தேன். அது ஆபாச படம் என்று தோன்றியது. இந்த படத்தில் நடிப்பது சரிப்பட்டு வருமா என்று யோசித்தேன். என்றாலும், வேறு வழியில்லாமல் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

    அது நீலப்படம் என்பது தெரிந்தும் நடிக்க இருந்த நேரத்தில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதனால் முதலில் ஒப்புக்கொண்ட ஆபாச படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். அந்த படத்தின் தயாரிப்பாளர் கோபப்பட்டார்.

    அதையும் மீறி நான் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்தேன். அது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் வராமல் இருந்தால் அந்த ஆபாச படத்தில் நடித்து இருப்பேன். என்னைத் தேடிவரும் அனைத்து படவாய்ப்புகளையும் ஏற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு” என்றார்.
    சந்தானத்தின் 'சக்கப்போடு போடு ராஜா' படத்தின் பாடல்களை நடிகர் சிம்பு முடித்து விட்டதாக அறிவித்திருக்கிறார். அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முகங்களைக் கொண்ட சிம்பு தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். சந்தானம் நடிப்பில் உருவாகவிருக்கும் 'சக்கப்போடு போடு ராஜா' படத்தின் இசையமைப்பாளர் சிம்பு தான்.

    இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் முடித்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து சிம்பு அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார். இப்படம் குறித்து சிம்பு தனது டுவிட்டரில் " சக்கப்போடு போடு ராஜா படத்தின் அனைத்து பாடல்கள் கம்போசிங்கையும் முடித்து விட்டேன். ரெக்கார்டிங் மட்டும் தான் மீதமுள்ளது" என தெரிவித்துள்ளார்.

    'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும், நண்பன் சந்தானத்துக்காக 'சக்கக்போடு போடு ராஜா' பாடல்களை சிம்பு முடித்துக் கொடுத்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
    வெளியான 3 நாட்களில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்து விஜய்யின் 'பைரவா' டிரெய்லர் சாதனை படைத்துள்ளது.
    விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பைரவா. 'அழகிய தமிழ்மகன்' புகழ் பரதன் இயக்கியிருக்கும் இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தற்போது மும்முரமாக உள்ளது.

    இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் தற்போது 50,62,677 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் மிகப்பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

    பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்தாலும் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    2008-ல் நடைபெற்ற மும்பை தாக்குதலை மையமாகக் கொண்ட கதையில் திரிஷா நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

    தமிழின் முன்னணி நாயகிகளில் ஒருவரான திரிஷா சமீபகாலமாக நடிக்க வாய்ப்புள்ள படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக திரிஷா நடிக்கவிருக்கும் படம் '1818'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தை ரிதுன் சாகர் இயக்குகிறார்.

    இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமனும், பாடல்களுக்கு மதன் கார்க்கியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக்கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திரிஷா தற்போது மாதேஷ் இயக்கும் 'மோகினி', அரவிந்த் சுவாமி ஜோடியாக 'சதுரங்க வேட்டை 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது தவிர விஜய் சேதுபதி ஜோடியாக திரிஷா நடிக்கும் '96' படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
    எனது காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை விரிவாக கீழே பார்க்கலாம்.
    நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து தற்போது திருமணத்துக்கு தயாராகிறார்கள். ஏப்ரல் மாதம் இவர்கள் திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணம் மற்றும் புத்தாண்டு சபதங்கள் குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-

    “கடந்த வருடம் எனக்கு சிறப்பாக அமைந்தது. தமிழ், தெலுங்கில் நடித்த படங்கள் நன்றாக ஓடின. தெறி படத்தில் எனது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்தன. இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அத்துடன் எனது காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டது, இரட்டிப்பு மகிழ்ச்சி தந்தது.

    சினிமா உலகம் உயர்வானது. இதில் நடிப்பதற்கு என்று வந்து விட்டோம். பெரிய வேலை, சிறிய வேலை என்று பார்க்காமல் கடமையாக நினைத்து ஒவ்வொன்றையும் செய்து முடிக்க வேண்டும். அதிர்ஷ்டத்தை விட கடினமான உழைப்பைத்தான் நான் நம்புகிறேன். உழைப்புதான் என்னை பெரிய உயரத்துக்கு கொண்டு சென்று இருக்கிறது.

    வெற்றி, தோல்விகள் பற்றி கவலைப்படுவது இல்லை. ஒவ்வொரு விஷயத்திலும் நான் என்ன நினைக்கிறேன் என்று புரியாமல் சிலர் முந்திக்கொண்டு அபிப்பிராயங்கள் சொல்கிறார்கள். இப்படி கருத்து சொல்பவர்களை எனக்கு பிடிக்காது. கடந்த வருடம் சில கஷ்டங்கள் வந்து போனது. அதன் மூலம் நிஜமான சந்தோஷம் எங்கு கிடைக்கும் என்ற தெளிவு பிறந்து இருக்கிறது.

    இந்த வருடத்தில் 4, 5 படங்களில் நடித்து விட வேண்டும் என்ற குறிக்கோள் வைத்து இருக்கிறேன். நிச்சயமாக அது நிறைவேறும். உடற்பயிற்சியில், நான் பைத்தியம். எந்த நிலையிலும் அதை விடமாட்டேன். உணவு கட்டுப்பாடும் இருக்கிறது. இந்த இரண்டும்தான் எனது அழகின் ரகசியங்கள்.

    ஒவ்வொரு புதிய வருடத்திலும் புத்தாண்டு சபதம் எடுத்து அதை நிறைவேற்ற உழைக்கிறேன். இந்த வருடமும் அதுபோன்று சில சபதங்கள் உள்ளன. அவை என்ன என்பதை வெளியில் சொல்ல மாட்டேன்.

    இவ்வாறு சமந்தா கூறினார்.
    தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர கடினமாகவும் நேர்மையாகவும் உழைப்போம் என்று நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
    பிப்ரவரி 5-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். விஷால் அணி சார்பில் அவர் நிறுத்தப்பட்டு இருக்கிறார். டைரக்டர் டி.ராஜேந்தர், ராதாகிருஷ்ணன், டைரக்டர் திருமலை ஆகியோரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

    தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டு இருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    “விஷால் அணியினர் என் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற பெரிய பொறுப்புக்கு போட்டியிட நிறுத்தி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விஷால் மற்றும் அவரது அணியினர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடன் சேர்ந்து சிறப்பாக பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சி.

    நாங்கள் வித்தியாசத்தை ஏற்படுத்துவோம். வாழ்க்கை என்பது எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவது. மாற்றத்தை கொண்டு வர கடினமாகவும் நேர்மையாகவும் உழைப்போம்.”

    இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
    ×