என் மலர்
வீடியோ விளையாட்டாக பலரை கவர்ந்த ‘அஸஸின்ஸ் கிரீட்’ என்ற ஆட்டம், அதே பெயரில் ஹாலிவுட் திரைப்படமாக உருவாகியுள்ளது. கடும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
வீடியோ விளையாட்டுகளாக உருவான கதாபாத்திரங்களை மையப்படுத்தி, பெரிய திரைக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் பல பெரிய அளவிலான வெற்றியை தரவில்லை என்ற மனக்குறையும், அதிருப்தியும் பலகாலமாக ரசிகர்கள் மத்தியில் நிலை கொண்டுள்ளது.
அவ்வகையில், வீடியோ விளையாட்டாக பலரை கவர்ந்த ’அஸஸின்ஸ் கிரீட்’ என்ற ஆட்டம், ஹாலிவுட்டில் பெரிய திரைக்கான சினிமாப் படமாக உருவாகவுள்ளது என்ற செய்திகளும், இந்தப் படத்தில் இடம்பெறவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியலும், அதையடுத்து வெளியான ஆர்ப்பாட்டமான டிரெய்லரும் ரசிகர்களின் நெஞ்சங்களில் ஒருவிதமான ஆர்வத்தீயை மூட்டி விட்டிருந்தன என்றால், அது மிகையல்ல.
சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ’அஸஸின்ஸ் கிரீட்’ திரைப்படம், அந்த ஆர்வத்தீயை கொளுந்துவிட்டு எரியச் செய்துள்ளதா? அல்லது, நீர்த்துப்போக வைத்துள்ளதா? என்பதை இங்கே பார்ப்போம்!
விபச்சார தரகரை கொன்ற குற்றத்துக்காக படத்தின் நாயகன் கேல்லம் லின்ச்-க்கு (மைக்கேல் ஃபாஸ்பென்டர்) மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், அவனது நன்னடத்தையை காரணம் காட்டி, தண்டனை ரத்து செய்யப்பட்டு, சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறான்.
இந்த மன்னிப்புக்கும், விடுதலைக்கும் பின்னணியில் பிரபல கோடீஸ்வரருக்கு சொந்தமான ஒரு தொழில் நிறுவனம் இருந்துள்ள ரகசியம் கேல்லம் லின்ச்சுக்கு தெரியாமல் பாதுகாக்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் காலத்திலும், சாலமன் மன்னரின் காலத்திலும் நடைபெற்ற சிலுவை யுத்தங்களை எதிர்த்துவந்த புனிதப் போராளிகளின் வம்சாவழியை சேர்ந்த அகுலய்ர் டி நெர்ஹா என்பவரின் நேரடி வழித்தோன்றலான கேல்லம் லின்ச்சை வைத்து, உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அவன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கோடீஸ்வரரின் ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனம் தெரிவிக்கிறது.
‘அனிமஸ்’ என்ற இயந்திரத்துடன் கேல்லம் லின்ச் இணைக்கப்படுகிறான். அந்த இயந்திரத்தின் உதவியுடனும், அவனது மூதாதையரான அகுலய்ர் டி நெர்ஹாவின் பழைய நினைவலைகளின் துணையுடனும் ’ஏடனின் ஆப்பிள்’ என்ற கருவியைத் தேடி, கண்டுபிடிக்கும் காரியத்தில் கடந்தகாலத்தை நோக்கி, கேல்லம் லின்ச் களமிறக்கப்படுகிறான்.
ஆனால், இந்த சாகசத் தேடலில் எல்லாமே திட்டமிட்டப்படி நடக்க சாத்தியமில்லை. தனது வாழ்க்கையைப்பற்றி அறியவந்த சில உண்மைகள் பொய்யான புனைக்கதைகள் என்பதை உணருகிறான்.
அவனை இந்த அரிதான காரியத்தில் களமிறக்கிய ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனம் உண்மையிலேயே உலக அமைதியை விரும்புகிறதா?, ஏடனின் ஆப்பிளை அந்த நிறுவனம் பெறுமா? என்ற கேள்விக்கு ’அஸஸின்ஸ் கிரீட்’ படம் பதில் தருகிறது.
புவிஈர்ப்பு விசைக்கு வசப்படாமல் அந்தரத்தில் உயரப் பறக்கும் சாகச காட்சிகள், கடந்த காலத்தின் பக்கம் பின்நோக்கி செல்லுதல் போன்ற ’அஸஸின்ஸ் கிரீட்’ விளையாட்டின் சிறப்பம்சங்களையும், இந்தப் படத்தின் டிரெய்லரையும் ஒப்பிட்டு பார்த்து, பரவசப்பட்ட ரசிகர்களின் பரவலான எதிர்பார்ப்பை இந்தப் படம் ஓரளவுக்கு நிறைவு செய்கிறது.
படத்தின் முதுகெலும்பாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் சிலிர்ப்பை ஊட்டினாலும், கடந்த காலத்தில் நடைபெற்றதாக காட்டப்பட வேண்டிய திரைக்கதையின் அமைப்பு நிகழ்காலத்தை சுற்றியே வட்டமடிப்பதால், அந்த காட்சிகளை எல்லாம் சுவைபட ரசிக்கவும், ருசிக்கவும் இயலவில்லை என்பது மிகப்பெரிய குறையாகவே தோன்றுகிறது.
கதாநாயகன் மீட்பதற்காக செல்லும் ’ஏடனின் ஆப்பிள்’ கருவியின் செயல்பாடு என்ன?, அது அளிக்கக்கூடிய பலன் என்ன? எப்போது, எந்தச் சூழலில் அதை பயன்படுத்தலாம்? போன்ற விளக்கங்கள் எதுவும் விவரிக்கப்படாததால், இந்த விளையாட்டை பயன்படுத்தி வரும் பலருக்கு படத்தின் திரைக்கதை என்ற அம்சம் ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்துள்ளது.
இதற்கிடையில், ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனத்தின் உரிமையாளரான ஆலன் ரிக்கின்ஸ் (ஜெரெமி அயர்ன்ஸ்) மற்றும் அவரது மகளும் படத்தின் நாயகியுமான சோபியா (மேரியன் கோட்டிலார்ட்) இடையிலான அதிகாரப் போட்டி, நாயகனின் உண்மையான நோக்கம் என்ன? ஆகியவற்றை படத்தின் இயக்குனரான ஜஸ்ட்டின் கர்ஸல் உரிய முறையில் பதிவு செய்ய தவறிவிட்டதால், படத்துக்கும் ரசிகர்களுக்கும் இடையில் உணர்வுப்பூர்வமான ஒட்டுறவு இல்லாமல் போனதை, சில தொய்வான காட்சிகள் நிரூபிக்கின்றன.
மிகசிறந்த நட்சத்திரங்களை தேர்வு செய்திருந்தும், அவர்களுக்கான திறமை பளிச்சிடும் காட்சி அமைப்புகளை வைக்க தவறியதால் ’சும்மா’ திரையில் வந்துபோகும் நடிகர்கள் அளவுக்கே அவர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது இயக்குனரின் மிகப்பெரிய குறை என்றும் கூறலாம்.
மிகப் பிரபலமான வீடியோ விளையாட்டாக அறியப்படும் ’அஸஸின்ஸ் கிரீட்’ பலவீனமான திரைக்கதை மற்றும் அழுத்தமில்லாத பாத்திரப் படைப்பால் ரசிகர்களை பெரிதாக கவர்ந்து, ஈர்க்கத் தவறிவிட்டது.
மொத்தத்தில், ’அஸஸின்ஸ் கிரீட்’ ‘அசட்டு கிரீட்’ ஆகவே தோன்றுகிறது.

இந்த பொங்கலுக்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் இரண்டு படங்களுடன் களமிறங்குகிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'கடவுள் இருக்கான் குமாரு' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் வர்த்தக ரீதியில் நல்லவிதமாக அமைந்தது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் 'புரூஸ்லீ' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதுதவிர 'ஈட்டி' புகழ் ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்கை பொங்கலுக்கு வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. புரூஸ்லி படத்துடன் பர்ஸ்ட் லுக்கும் வெளியாவதால் ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுக்கு இது இரட்டை விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷ் தற்போது 'அடங்காதே', '4ஜி', 'சர்வம் தாளமயம்' மற்றும் இரண்டு பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பைரவா' பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், ஜி.வி.பிரகாஷும் தனது படத்துடன் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

சுந்தர்.சி இயக்கும் 'சங்கமித்ரா' படத்துக்காக சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆர்யா-ஜெயம் ரவி இருவரும் கால்ஷீட் கொடுத்துள்ளனர். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
காமெடிக்கு பெயர் பெற்ற இயக்குனர்களில் ஒருவரான சுந்தர்.சி அடுத்ததாக வரலாற்றுக் கதையொன்றை இயக்கவிருக்கிறார். 'சங்கமித்ரா' என பெயர் சூடப்பட்டிருக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் நாயகர்களாக ஆர்யா-ஜெயம் ரவி இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்துக்காக இருவரும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்துள்ளனர்.
இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பினை நடத்திட சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார். விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்திற்கான நாயகி தேர்வில் படக்குழு தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

வாடகை வீடு தொடர்பாக நடிகை நமீதாவை தொந்தரவு செய்யக்கூடாது என வீட்டின் உரிமையாளருக்கு சென்னை சிவில் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
'எங்கள் அண்ணா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நமீதா. இவர் சென்னை நுங்கம்பாக்கம் வீரபத்திரன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த வீட்டின் உரிமையாளர் கருப்பையா நாகேந்திரனுக்கும், நமீதாவுக்கும் வாடகை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசில் நமீதா புகார் செய்தார். நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், சென்னை 13-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் இன்று ஒரு அவசர வழக்கை தாக்கல் செய்தார்.
அதில், வீட்டின் உரிமையாளர் தனக்கு பல விதமான தொந்தரவுகளை கொடுக்கிறார். வீட்டை நான் காலி செய்யவேண்டும் என்பதற்காக இவ்வாறு அவர் செயல்படுகிறார். மேலும் ரவுடிகளை பயன்படுத்தி, என்னை வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார்.
எனவே, அமைதியான முறையில் வசிக்க எனக்கு உரிமை உள்ளது. என்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்று வீட்டின் உரிமையாளருக்கு உத்தரவிட வேண்டும்.என்னை ரவுடிகள் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகள் மூலமும் தொந்தரவு செய்ய வீட்டின் உரிமையாளருக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு 13-வது சிட்டி சிவில் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘நமீதாவை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்று வீட்டின் உரிமையாளருக்கு தடை விதித்து’ உத்தரவிட்டார்.

'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
‘அட்டகத்தி’ படம் மூலம் சிறந்த இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இரண்டாவது படம் ‘மெட்ராஸ்’. மூன்றாவது படம் ரஜினி நடித்த ‘கபாலி’ இதன் மூலம் உலகம் முழுக்க பேசப்பட்டார். ரஜினியின் அடுத்தபடத்தையும் இவரே டைரக்ட் செய்கிறார். இவர் இப்பொழுது தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளார். ‘நீலம்’ புரொடக்சன் என்று பெயரிட்ட இந்த படநிறுவனம் மூலம் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை தயாரிக்கிறார்.
இதற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் மாரி செல்வராஜ். இவர் இயக்குநர் ராமிடம் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த கதை எழுதப்பட்டிருக்கிறது. காதல், ஆக்ஷன் என எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக கதை அமைந்துள்ளது.
இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் நாயகனாக நடிக்கிறார். இவரது ஜோடி ஆனந்தி. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு- ஸ்ரீதர்.
இந்த மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. இதற்காக இயக்குனர் குழுவினர் இப்பொழுதே நெல்லையில் தங்கியுள்ளார்கள். படப்பிடிப்பு முழுவதும் நெல்லையில் நடைபெறுவதால் அந்த மாவட்ட மக்களை நடிக்க வைப்பதற்கான தேர்வு நடைபெற்றுவருகிறது.

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா போல மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன் என நடிகர் சக்திவாசு தெரிவித்துள்ளார்.
பி.வாசு கன்னடத்தில் இயக்கி வெளியிட்ட ‘சிவலிங்கா’ படம் தற்போது தமிழில் தயாராகி இருக்கிறது. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள இதில் சக்தி வாசு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
'சிவலிங்கா' படம் குறித்து நடிகர் சக்திவாசு கூறுகையில் ‘‘எனது அப்பா இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான ‘சிவலிங்கா’ படம் அங்கு 150 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நான் அந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்தேன்.
இப்போது தமிழில் உருவாகும் ‘சிவலிங்கா’ படத்திலும் ஏற்கனவே நடித்த அதே பாத்திரத்தில் நடிக்கிறேன். இதில் நாயகனாக நடித்துள்ள ராகவா லாரன்ஸ் கன்னடப் படத்தை பார்த்தார். அப்போது அதில் நான் நடித்திருக்கும் வேடத்துக்கு தமிழில் இன்னும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி எனது வேடம் இதில் பலமாக அமைந்திருக்கிறது.
‘சந்திரமுகி’ படத்தை கன்னடத்தில் இருந்து தமிழில் எடுக்கும்போது பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதுபோல இந்த படத்தையும் 3 மடங்கு மாற்றி இருக்கிறார்கள். கதை விவாதத்தின் போது நானும் பங்கேற்றேன். அந்த படத்தில் கன்னடம் பேசி நடித்தேன். இப்போது, எனக்கு தெரிந்த தமிழ்பேசி உற்சாகமாக நடித்து இருக்கிறேன்.
இதில் நான் புறா வளர்ப்பவர் கதைப்படி முஸ்லிம் ஆக வருகிறேன். இதற்காக டப்பிங்கிலும் உருது பேசி இருக்கிறேன். ராகவா லாரன்சுடன் சில காட்சிகளில் நடித்துள்ளேன். அப்பா டைரக்டர். அவர் சொன்னபடி நடிக்கும் போது எனக்குள் ஒரு வித பயம் இருந்தது. அவர் யாரையும் எளிதில் பாராட்டமாட்டார். நான் நன்றாக நடித்திருப்பதாக அப்பா பாராட்டிய போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் வருகிற 26-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.
அதன் பிறகு வேறு படங்களில் நடிப்பேன். விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா போன்றவர்கள் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் சேர்ந்து நடிக்கிறார்கள். நானும் நல்ல வேடம் என்றால் மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன்'' என்றார்.

படத்தயாரிப்பாளர் சங்கம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு நடிகர் விஷால் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் சொந்தமாகப் படங்களையும் தயாரித்து வருகிறார். சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்திருந்தார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் கடந்த மாதம் நீக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மனுத்தாக்கல் செய்தார். அதில் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து தன்னை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் குறித்த தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
விஷாலின் மன்னிப்பைத் தொடர்ந்து இதுகுறித்து செயற்குழுவில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என படத்தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.விஷால் வருத்தம் தெரிவித்தால் அவரது நீக்கம் ரத்து செய்யப்படும் என படத்தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பைரவா' திரைப்படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ளது.
விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பைரவா'. 'அழகிய தமிழ்மகன்' புகழ் பரதன் இயக்கியிருக்கும் இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து 'பைரவா' தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 'பைரவா'வுக்கு 'யு' சான்றிதழ் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஜனவரி 12-ம் தேதி 'பைரவா' வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஆங்கில புத்தாண்டு தினத்தில் வெளியான 'பைரவா' டிரெய்லர் இணையத்தில் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'அறம்' படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தற்போது 'கொலையுதிர் காலம்', 'இமைக்கா நொடிகள்', 'அறம்', 'டோரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் 'அறம்' படத்தின் பர்ஸ்ட் லுக் நயன்தாரா பிறந்தநாளில் வெளியானது. கலெக்டர் வேடத்தில் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை மீஞ்சூர் கோபி இயக்க, முக்கிய வேடங்களில் 'காக்கா முட்டை' புகழ் விக்னேஷ், ரமேஷ், வேல.ராமமூர்த்தி, ராமதாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது 'அதே கண்கள்', 'தீரன் அத்தியாயம் ஒன்று', 'சென்னை டூ சிங்கப்பூர்', 'மகளிர் மட்டும்' மற்றும் விஷ்ணுவின் பெயரிடப்படாத படம் ஆகிய படங்களுக்கு ஜிப்ரான் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு இசையமைப்பாளராக தர்புகா சிவா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், ராணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'. கவுதம் மேனன்-தனுஷ் இருவரும் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். ஒன்றாக எண்டர்டெயின்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், பாடல் டீசர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. டீசரை வெளியிட்டாலும் இசையமைப்பாளர் யார் என்பதை வெளியிடாமல் படக்குழு மவுனம் சாதித்தது. இதனால் இப்படத்தின் இசையமைப்பாளர் யார்? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இசையமைப்பாளராக தர்புகா சிவா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் விவரம் தற்போது வெளியாகியுள்ளது . 'கிடாரி' படத்தின் மூலம் இசையமைப்பாளரான தர்புகா சிவாவுக்கு 'என்னை நோக்கி பாயும் தோட்டா' வாய்ப்பு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறதாம்.

தாவூத் பற்றி படம் எடுத்த இந்தி பட தயாரிப்பாளருக்கு சோட்டா ஷகீல் என்பவன் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளான். அது குறித்த செய்தியை பார்ப்போம்...
மும்பை குண்டு வெடிப்பு தாதா தாவூத் இப்ராகீமை மையமாக வைத்து ‘காப்பி வித் டி’ என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், டி. என்ற வார்த்தை தாவூத் இப்ராகிமை குறிப்பதாகும்.
டெல்லியை சேர்ந்த நிருபர் ஒருவர் கடும் சிரமத்துக்கு பிறகு தாவூத் இப்ராகிமை சந்தித்து பேட்டி எடுப்பது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், தாவூத் இப்ராகீமை கிண்டல் செய்து சில காட்சிகள் இருந்தன.
இந்த நிலையில் தாவூத் இப்ராகிமுக்கு தளபதி போல் செயல்பட்ட கூட்டாளி சோட்டா ஷகீலிடம் இருந்து பட தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து தயாரிப்பாளருக்கு போன் ஒன்று வந்தது. அதில் பேசியவன், நான் சோட்டா ஷகீலுடன் பணியாற்றுபவன் பேசுகிறேன். நீங்கள் தாவூத் இப்ராகீமை மையமாக வைத்து எந்த படம் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். ஆனால், அவரை அவமதித்து படம் எடுப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இந்த படத்தில் உள்ள சில காட்சிகளை நீங்கள் அகற்ற வேண்டும். இனிமேல் தாவூத் இப்ராகீமை மையமாக வைத்து வரும் படங்களுக்கு முதலீடு செய்யக்கூடாது.
நீங்கள் இன்னும் உயிரோடு இருந்து படம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினால் காட்சிகளை உடனடியாக அகற்றுங்கள்.
இவ்வாறு போனில் பேசியவன் கூறினான்.
5 நிமிடம் அவன் போனில் பேசி இருக்கிறான். இது தொடர்பாக தயாரிப்பாளர் டெல்லி போலீசில் புகார் கூறி இருக்கிறார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 2 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் 1950, 60 மற்றும் 70-களில் 310-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, சினிமா படமாக தயாராகிறது. பாசமலர், தேவதாஸ், திருவிளையாடல், குறவஞ்சி, கந்தன் கருணை, படித்தால் மட்டும் போதுமா, பாவமன்னிப்பு, கர்ணன், பரிசு, களத்தூர் கண்ணம்மா என்று சாவித்திரி நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடின.
கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கியவர், முதன் முதலாக சென்னையில் நீச்சல் குளத்துடன் ஆடம்பர பங்களா கட்டி வாழ்ந்த நடிகை என்ற பெருமைகள் சாவித்திரிக்கு உண்டு. கடைசி காலத்தில் சொந்த படம் எடுத்து நஷ்டமடைந்து சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்களையெல்லாம் இழந்து, ஏழ்மை நிலையில் நோய்வாய்ப்பட்டு பல மாதங்கள் கோமா நிலையில் இருந்து உணர்வு திரும்பாமலேயே பரிதாபமாக இறந்தார்.
சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கு டைரக்டர் நாக அஸ்வின் படமாக எடுக்கிறார். இதற்கான திரைக்கதையை பழைய நடிகர்-நடிகைககள் மற்றும் சாவித்திரியின் குடும்பத்தினரை சந்தித்து பேசி தயார் செய்து இருக்கிறார். தமிழ், தெலுங்கில் இந்த படம் தயாராகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகை தேர்வு நடந்து வருகிறது.
2 கதாநாயகிகள் இதில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நித்யா மேனன், வித்யாபாலன் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். தற்போது சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர்களிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்களில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிப்பவர் யார் என்பது ஓரிரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் கதாபாத்திரங்களில் நடிக்கவும் நடிகர்கள் தேர்வு நடக்கிறது.