என் மலர்
தனுஷ் நடித்து வரும் 'விஐபி 2' படத்தில் விக்ரம் பிரபு ஹீரோயின் ஒருவர் இணைந்திருக்கிறார். அதுகுறித்த விவரங்களை கீழே பார்ப்போம்.
தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தற்போது இப்படத்தின் 2-வது பாகம் உருவாகி வருகிறது.தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் 'சிகரம் தொடு' பட ஹீரோயின் மோனல் கஜ்ஜார் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் இரண்டாவது ஹீரோயினாக சுரபி நடித்து போல, இப்படத்தில் மோனல் கஜ்ஜார் வரும் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழில் கடைசியாக 20 வருடங்களுக்கு முன் வெளியான 'மின்சார கனவு' படத்தில் கஜோல் கதாநாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிகர் விக்ரம் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
'என்னை நோக்கி பாயும் தோட்டா' படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் கவுதம் மேனன் அடுத்து, விக்ரமை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதி செய்த கவுதம் மேனன் 'துருவ நட்சத்திரம்' குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
'இருமுகன்' படத்திற்கு பிறகு 'வாலு' பட இயக்குநர் விஜய் சந்தர் படத்தில் நடித்து வரும் விக்ரம், அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் குன்னூரில் துவங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'துருவ நட்சத்திரம்' படத்தை உலக தரத்தில் எடுக்க கவுதம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது கவுதம் மேனன் - விக்ரம் கூட்டணி துபாயில் 'துருவ நட்சத்திரம்' படத்தின் 'பர்ஸ்ட் லுக்'கை உருவாக்கி வருகின்றனர். இதற்காக உலகின் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு கவுதம் மேனன் அழைப்பு விடுத்திருக்கிறாராம்.
படத்தின் முக்கால்வாசி பாகத்தில் 'சால்ட் அன்ட் பெப்பர்' லுக்கிலும், பிளாஷ்பேக்கில் இளமையான தோற்றத்திலும் விக்ரம் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் - கவுதம் மேனன் இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக 'காற்று வெளியிடை' அதிதி ராவை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருகிறதாம். விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு விசாரணையில் போது விஷால் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக மனு தாக்கல் செய்ததை அடுத்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
நடிகர் விஷால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு வார பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடு குறித்து சில கருத்துக்களை கூறி விமர்சனம் செய்து இருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், நடிகர் விஷாலை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு கடந்த 2-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘நடிகர் விஷால் தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்தால், அவரை இடைநீக்கம் செய்த உத்தரவு மறுபரிசீலனை செய்யப்படும்’ என்று கூறினார். இதற்கு விஷால் தரப்பு கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அவரது வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, விஷால் சார்பில் வருத்தம் தெரிவித்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘வார பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் யாருடைய மனதையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. என் மனதில் பட்ட தனிப்பட்ட கருத்துக்களை மட்டுமே தெரிவித்து இருந்தேன். எனவே, என்னுடைய கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய இந்த மனுவை ஏற்றுக்கொண்டு, ஐகோர்ட்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கு மீதான தீர்ப்பை 6-ந் தேதி (நாளை) பிறப்பிப்பதாக உத்தரவிட்டார்.

தலைமுடி மட்டுமின்றி சருமத்தை மிளிரவைக்கும் வல்லமை பீருக்கு உண்டு. இப்போது சருமத்தை அழகாக்கும் பீர் பேஷியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இன்றைய காலத்தில் முகத்திற்கு தேவையான பல பேஷியல்கள் வந்து விட்டன. பழங்கள், மூலிகை பொருட்கள், க்ரீம் போன்றவற்றை பயன்படுத்தி பேஷியல்கள் செய்யப்படுகின்றன.
அந்தவகையில், கூந்தலில் பீரை ஊற்றி அலசுகிற ஸ்பா டிரீட்மெண்ட் அனைவரும் அறிந்த விஷயம்தான். ஆனால் தலைமுடி மட்டுமின்றி சருமத்தையும் குளிர்ச்சியோடு மிளிரவைக்கும் வல்லமை பீருக்கு உண்டு.
சிறிதளவு வினிகர், தேனுடன் இரண்டு தேக்கரண்டி பீர் சேருங்கள். கெட்டியான கலவை கிடைக்கும். இதை முகத்தில் பூசி அரை மணிநேரம் கழித்து கழுவி விடுங்கள். உங்களின் இயல்பான அழகு குறைந்தபட்சம் 50 சதவீதமாவது அதிகரித்து இருக்கும். பீரில் விட்டமின் பி சத்தின் செறிவு அதிகம். இது சரும ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.
ஒரு சிலருக்கு பனி, மழை காலத்தில் சரும வறட்சி, முகப்பிசுக்கு அதிகமாக தென்படும். அப்படிப்பட்டவர்களுக்கு பீர் பேஷியல் ஒரு சிறந்த மருந்து.

மலையாள நடிகர் திலீப்பை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகை காவ்யா மாதவன் சினிமாவை விட்டு விலகி விட்டதாகவும் அவரை வீட்டில் முடக்கி வைத்து விட்டதாகவும் பரபரப்பு புகார் கிளம்பி இருக்கிறது.
மலையாள பட உலகில் ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருந்து, காசி, என்மன வானில், சாது மிரண்டா படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் காவ்யா மாதவன். இவர் 2009-ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை மணந்து ஒரு வருடத்திலேயே அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பிறகு மலையாள நடிகர் திலீப்பை கடந்த நவம்பர் மாதம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
திலீப்பும் தனது முதல் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து விட்டுத்தான் காவ்யா மாதவனை மணந்தார்.
காவ்யா மாதவனுக்கு திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை இருந்ததாகவும் முதல் கணவர் அதற்கு தடைவிதித்ததால் அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததாகவும் கூறப்பட்டது.
எனவே திலீப், காவ்யா மாதவனை தொடர்ந்து சினிமாவில் நடிக்க அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருமணத்துக்கு பிறகு காவ்யா மாதவன் இதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. சினிமாவை விட்டு அவர் விலகி விட்டதாக மலையாள பட உலகில் தகவல் பரவி உள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் நடிக்க தடை விதித்து வீட்டில் அவரை முடக்கி வைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். மஞ்சு வாரியரையும் இதுபோலவே திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க திலீப் அனுமதிக்கவில்லை என்றும் விவாகரத்துக்கு பிறகுதான் சினிமாவில் தற்போது முழுவீச்சில் அவர் நடித்து வருகிறார் என்றும் கூறுகிறார்கள்.
இதற்கு திலீப் மற்றும் காவ்யா மாதவனிடம் இருந்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. காவ்யா மாதவனை வீட்டில் யாரும் முடக்கவில்லை என்றும் சினிமாவில் நடிக்காமல் இருப்பது அவர் சுயமாக எடுத்த முடிவு என்றும் நெருக்கமானவர்கள் கூறினார்கள்.

நடிகை சாந்த்ரா தாமசை தாக்கிய நடிகர் விஜய்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
எர்ணாகுளம் நகரில் மலையாள பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர்கள் நடிகை சாந்த்ரா தாமஸ் மற்றும் நடிகர் விஜய்பாபு. இவர்கள் நிறுவனம் சார்பில் 10-க்கும் மேற்பட்ட மலையாள படங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலான படங்கள் வெற்றியடைந்து பல நாட்கள் ஓடின. இந்தநிலையில் சம்பவத்தன்று சாந்த்ரா தாமஸ் தனது கணவரான தாமசுடன் பட தயாரிப்பு நிறுவனத்தில் இருந்தார்.
அப்போது அங்கு நடிகர் விஜய்பாபு வந்தார். அந்தநேரத்தில் சாந்த்ரா தாமசுக்கும், விஜய்பாபுவுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜய்பாபு நடிகை சாந்த்ரா தாமஸ் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் கீழே மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அவருடைய கணவர் தாமஸ் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சாந்த்ரா தாமசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சாந்த்ரா தாமஸ் எலமக்கரை போலீசில் புகார் தெரிவித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சாந்த்ரா தாமசை தாக்கியதாக விஜய்பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகையை, சக நடிகர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ‘பைரவா’ உள்பட 4 படங்கள் வெளியாகின்றன. இது குறித்த செய்தியை விரிவாக கீழே பார்க்கலாம்.
பொங்கல் பண்டிகையில் சிறு பட்ஜெட் மற்றும் அதிக பொருட்செலவில் தயாரான ஆறு அல்லது ஏழு படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் பைரவா, கோடிட்ட இடங்களை நிரப்புக, புரூஸ்லி, புரியாத புதிர் ஆகிய 4 படங்கள் மட்டுமே வெளிவருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிறு பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் அவை திரைக்கு வருவது தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
பைரவா படத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து உள்ளனர். இது விஜய்க்கு 60-வது படம் ஆகும். ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சரத் லோகித்சவா, ஹரிஷ் உத்தமன், சதீஷ் ஆகியோரும் இந்த படத்தில் உள்ளனர். பரதன் டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கியவர். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
மருத்துவ கல்வி பிரச்சினைகளை மையப்படுத்தி அதிரடி கதையம்சத்தில் இந்த படம் தயாராகி உள்ளது. பைரவா படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தை பார்த்திபன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். சாந்தனு-பார்வதி நாயர் ஆகியோர் நாயகன்-நாயகியாக நடித்து இருக்கிறார்கள்.
தவறான மனிதர்களுக்குள் நடக்கும் சச்சரவுகளை மையப்படுத்தி திகில் படமாக உருவாகி உள்ளது. ‘புரியாத புதிர்’ படத்தில் விஜய் சேதுபதி-காயத்ரி ஜோடியாக நடித்துள்ளனர். ரஞ்சித் ஜெயக்கொடி டைரக்டு செய்துள்ளார். திகில் படமாக தயாராகி உள்ளது.
‘புரூஸ்லி’ படத்தில் ஜி.வி.பிரகாஷ்-கிர்த்தி கர்பந்தா ஜோடியாக நடித்துள்ளனர். பிரசாந்த் பாண்டிராஜ் டைரக்டு செய்துள்ளார். நகைச்சுவையும், அதிரடியும் கலந்த படமாக உருவாக்கி உள்ளனர்.

நடிகை ஸ்ரீபிரியா, நடிகை லதாவின் தம்பி ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்குமாரும் நடிகர் ஆவார். "காஷ்மீர் காதலி'' உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஸ்ரீபிரியா, நடிகை லதாவின் தம்பி ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்குமாரும் நடிகர் ஆவார். "காஷ்மீர் காதலி'' உள்பட சில படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீபிரியா -ராஜ்குமார் காதல் திருமணத்துக்கு, இரு குடும்பத்தினரின் சம்மதத்தை பெறச் செய்வதில் முக்கிய பங்கு எடுத்துக் கொண்டவர் நடிகை ராதிகாவின் தாயாரான கீதா. இலங்கையைச் சேர்ந்த கீதா, தமிழ்நாட்டுக்கு வந்து நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவியானார்.
ராதிகா பிறந்த நேரத்தில் மைலாப்பூர் வாரன் ரோட்டில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். ஸ்ரீபிரியாவின் தாயார் அந்த குடியிருப்புக்கு சொந்தக்காரர். அடிக்கடி தன் சொந்த பூமியான இலங்கைக்கு சென்றுவந்த கீதா, தன் பிள்ளைகளுக்கு புது டிரெஸ் எடுத்து வருவார். அப்போது ஸ்ரீபிரியாவுக்கும் அவர் அக்காவுக்கும்கூட புதிய துணிகள் எடுத்து கொடுத்தார். இப்படி ஒரு குடும்பமாய் பழக நேர்ந்த அந்த நாட்களை நினைவு கூர்ந்தார், ஸ்ரீபிரியா.
"ராதிகா பிறந்திருந்த நேரத்தில் எனக்கு 3 வயது. இந்த வகையில் எனக்கும் ராதிகாவுக்கும் 3 வயது வித்தியாசம். இந்த வகையில் நான் வளர்ந்த அதே இடத்தில்தான் ராதிகாவும் வளர்ந்தார். சிறுவயதிலேயே நாங்கள் நல்ல தோழிகளாக இருந்தோம். எங்கள் நட்பு பிரிக்க முடியாமல் இறுகிய நேரத்தில் கீதாம்மா மறுபடியும் குடும்பத்துடன் இலங்கைக்கு போய்விட்டார்கள். ராதிகா என்னைப் பிரிந்த இழப்பு, என் சின்ன வயதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
நானும் வளர்ந்து நடிக்க வந்தேன். படங்களும் `ஹிட்'டாகி வளர்ந்த நிலையில், "ஆட்டுக்கார அலமேலு'' படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா என்னிடம், "ராதிகான்னு ஒரு புதுப்பொண்ணு இலங்கையில் இருந்து வந்திருக்கு. இப்ப பாரதிராஜாவின் "கிழக்கே போகும் ரெயில்'' படத்துல நடிச்சிக்கிட்டிருக்கு. அந்தப்படத்தில் அவர் பாடற "பூவரசம்பூ பூத்தாச்சு'' பாட்டுக்கு நான்தான் மாஸ்டர்'' என்றார். அப்போதே என் சிறு வயதுத்தோழி மறுபடியும் கிடைத்து விட்ட சந்தோஷத்தை எனக்குள் உணர்ந்தேன். மறுபடி எங்கள் குடும்பங்கள் கைகோர்த்தபோது முன்பிருந்த அதே அன்பு மீண்டும் நிரந்தரமாகியது.
"ராதிகா என் தங்கச்சி'' என்று நான் சொல்லிக் கொள்கிற அளவுக்கு நாங்கள் ஒரே குடும்பம் மாதிரி ஆனோம். ராஜ்குமாரை (கணவர்) நான் விரும்பிய நேரத்தில் எங்கள் வீட்டில் ராஜ்குமார் பற்றி நல்லவிதமாய் சொல்லி எங்கள் காதலை திருமணம் வரை கொண்டு வந்தவர் கீதாம்மாதான்.
எனக்கு திருமணமாகி 6-வது மாதத்தில் அபார்ஷன் ஆனது. முதல் குழந்தை இப்படி ஆகிவிட்ட ஒரு தாய்மையின் வேதனையை அப்போது அனுபவித்தேன். இந்த சமயத்தில் ராதிகாவின் தம்பி மோகனின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. பிறந்த அந்தக் குழந்தையை குளிக்க வைத்து கையில் வாங்கிய கீதாம்மா அதைக் கொண்டு வந்து என் கையில் கொடுத்தார். "இதே மாதிரி ஒரு குழந்தை அடுத்த வருஷம் இதே நேரம் உன் கையிலும் இருக்கும்'' என்று `அருள் வாக்கு' மாதிரி சொன்னார்.
அருள்வாக்கு என்று ஏன் சொன்னேன் என்றால், அவர் சொன்னதுபோலவே நடந்தது. ஒரே வருடத்திற்குள் என் மகள் சிநேகா பிறந்து என் தாய்மையை அர்த்தமுள்ளதாக்கினாள்.
குழந்தையை இழந்த தாயிடம் அந்த மாதிரி சமயங்களில் சென்டிமென்டாக யாருமே தங்கள் வீட்டு குழந்தையை கொடுக்கமாட்டார்கள். ஆனால் அந்த மாதிரியான தடைகளையெல்லாம் எண்ணிக் கொள்ளாமல் தன் பேரக்குழந்தையை மகனிடம் கொடுப்பதற்கு முன்பு என்னிடம் கொடுத்து வாழ்த்தினாரே, அந்த அன்பு யாருக்கு வரும்? இப்போதும் எங்கள் இரு குடும்பத்தினரிடையே அன்பு அப்படியே நீடிக்கிறது.'' நெகிழ்ச்சியுடன் சொன்னார், ஸ்ரீபிரியா.
சினிமாவில் நடித்து புகழ் பெற்ற நிலையில், திருமணத்துக்குப் பின் 10 வருடங்கள் நடிக்காமல் இருந்தார் ஸ்ரீபிரியா. அதற்குப் பிறகு, அவர் தொட்டது சின்னத்திரை சீரியல்கள். "விடுதலை'', "மறக்க முடியுமா?'', "சாரதா'', "விக்ரமாதித்தன்'', "சிந்துபாத்'' என சீரியல்களை தொடர்ந்தவர், இப்போதும் "இம்சை அரசிகள் தொடரை தயாரித்து நடித்தும் வருகிறார்.
இந்த பிசியிலும் தோழி ராதிகா தயாரித்த "சின்ன பாப்பா பெரிய பாப்பா'' காமெடித் தொடரில் "சின்ன பாப்பா''வாக வந்து காமெடி செய்து சின்னத்திரை வட்டாரத்திலும் நடிப்புக்காக பெயர் பெற்றார் ஸ்ரீபிரியா.
முதலில் இந்தத் தொடரை தயாரிக்க இருந்தவர் ஸ்ரீபிரியா. இந்தியில் வெளியான "தூது மேமே'' நகைச்சுவைத் தொடர், ரொம்பவும் பிரபலமானது. இந்த தொடரை பார்க்கும் ரசிகர்கள் அதை இப்பவும் முதலிடத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு மவுசு குறையாமல் இப்போதும் அந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடர் பற்றி கேள்விப்பட்ட ஸ்ரீபிரியா அதை பார்த்தார். பார்த்ததுமே வெற்றி பெறக்கூடிய தொடர் என்பது தெரிந்து தமிழில் அதை தயாரிக்கும் உரிமைக்கு முயற்சித்தார். அப்போது தான் கொஞ்சம் முன்னதாக அந்த உரிமையை ராதிகா பெற்றுக்கொண்டதை அறிந்தார். இதன் பிறகு தோழிகள் சந்தித்தார்கள். "நான் தயாரிக்கிறேன். நீங்கள் நடியுங்கள்'' என்று ராதிகா சொல்ல, தொடரில் "சின்னபாப்பா''வாக வந்து காமெடி துவம்சம் செய்தார், ஸ்ரீபிரியா.
இந்த "சின்ன பாப்பா'' கேரக்டரில் தொடர்ந்து 2 வருடம் நடித்தார். பிறகு சொந்த தொடர் தயாரிப்பில் ஈடுபட்டதால், நடிப்புக்கு நேரமின்றி விலகிக்கொண்டார். அதன் பிறகு "சின்ன பாப்பா'' கேரக்டரில் ஊர்வசியின் சகோதரி கல்பனாவும், அவரைத் தொடர்ந்து சீமாவும் நடித்தார்கள்.
ஸ்ரீபிரியா "இம்சை அரசிகள்'' தொடரை விரைவில் முடிக்கிறார். அடுத்து புராணப் பின்னணியில் ஒரு தொடரை உருவாக்கும் வேலையில் பிசியாக இருக்கிறார். இதற்காக பெரியபுராணத்தை படித்து வருகிறார்.
சொந்த தொடர் தவிர, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் "ஆனந்தம்'' தொடரிலும் நடித்து வருகிறார். இதுபோக தோழி ராதிகா தயாரிக்கும் "கண்ணாமூச்சி ஏனடா'' படத்தில் தோழி கேட்டுக் கொண்டதற்காக நடிக்கிறார். "எனக்கு கணவர், குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பு இருப்பதால் மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தாக வேண்டும். இந்த கண்டிஷனுக்கு தோழி ஒத்து வந்ததால் அவர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். "ஆனந்தம்'' தொடரிலும் மாலை 5 மணிக்குள் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்து விடுவார்கள். இப்படி குடும்பத்தின் பொறுப்புக்கு பங்கம் ஏற்படாதபடி நடிக்கிறேன்'' என்கிறார்.
ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகா இப்போது சர்ச் பார்க்கில் 9-வது படிக்கிறார். அம்மா படித்த அதே பள்ளியில் மகளும் படிக்கிறார் என்பதில் இந்த அம்மாவுக்குள் நிறையப் பெருமை. மகன் அர்ஜுன் `ஷேர்வுட் ஹார்ட்' பள்ளியில் 5-வது படிக்கிறான்.
"பிள்ளைகள் உங்கள் மாதிரி கலைத்துறைக்கு வருவார்களா?'' ஸ்ரீபிரியாவைக் கேட்டால், "பிள்ளைகள் விஷயத்தில், பெற்றோர் எந்த விருப்பத்தையும் திணிக்கக் கூடாது. கணவர் ராஜ்குமாரும் நானும் கலைத்துறையில் இருந்தாலும், பிள்ளைகள் விஷயத்தில் அவர்களின் விருப்பம் எதுவோ அதுதான் எங்கள் விருப்பமாகவும் இருக்கும். என் அக்காவின் மகன் சிவாஜி, திடீரென நடிக்க ஆசைப்பட்டான்.
அக்கா மீனா ராம்குமார், அம்மா கிரிஜா பக்கிரிசாமி, தம்பி சந்திரகாந்த் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகும் "சிங்கக்குட்டி'' படத்தில் அவன்தான் ஹீரோ, டைரக்டர் வெங்கடேஷ் இயக்கத்தில் படம் வளர்ந்து வருகிறது. எந்த ஆர்வமும் தானாக வந்தால் அதில் அதிக கருத்தூன்றி வெற்றி பெற முடியும்.''
ஒரு அம்மாவுக்கு உரிய நெகிழ்ச்சியுடனே சொல்லி முடித்தார், ஸ்ரீபிரியா.
'துருவங்கள் 16' படக்குழுவினரைப் நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியிருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'துருவங்கள் 16'. ரகுமான் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார்.
கிரைம் திரில்லராக வெளியான இப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக இப்படத்தின் புதுமையான திரைக்கதை, எடிட்டிங் ஆகியவற்றைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் 'துருவங்கள் 16' படக்குழுவினரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்துப் பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் " 'துருவங்கள் 16' தொழில்நுட்ப ரீதியில் சிறப்பாக எடுக்கப்பட்ட வலுவான திரைப்படம். ரகுமான், கார்த்திக் நரேன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று கூறியிருக்கிறார்.
தமிழின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஏற்கனவே தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இளம் நாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயனும் 'துருவங்கள் 16' படக்குழுவினரைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

14-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நாளை தொடங்குகிறது. அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் தமிழ் சினிமா தயாரிப்பு தொடர்பான பல சங்கங்களை சேர்ந்த ’இன்டோ சினி அப்ரிசிசேஷன்’ என்ற அமைப்பு கடந்த ஐந்தாண்டுகளாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச திரைப்பட விழாவை சென்னை மாநகரில் நடத்தி வருகிறது.
அவ்வகையில், கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதியில் இருந்து 22-ம் தேதிவரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
இதையடுத்து, சென்னை சர்வதேச திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட சர்வதேச திரைப்பட விழா நாளை தொடங்கி (ஜனவரி 5) முதல் 12-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. சென்னை கேசினோ தியேட்டரில் நடைபெறும் இவ்விழாவில் 65 நாடுகளை சேர்ந்த 165 சிறந்த படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்நிலையில் நடிகை சுஹாசினி சினிமாவிற்கென சின்னம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் இன்று மனு கொடுத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் "திரைப்படங்களின் நினைவாக சினிமாவிற்கென சின்னம் உருவாக்க வேண்டும். சினிமா அருங்காட்சியகம், பழைய திரைப்படங்களை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு கொடுத்துள்ளேன்" என்றார்.

வீடியோ விளையாட்டாக பலரை கவர்ந்த ‘அஸஸின்ஸ் கிரீட்’ என்ற ஆட்டம், அதே பெயரில் ஹாலிவுட் திரைப்படமாக உருவாகியுள்ளது. கடும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
வீடியோ விளையாட்டுகளாக உருவான கதாபாத்திரங்களை மையப்படுத்தி, பெரிய திரைக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் பல பெரிய அளவிலான வெற்றியை தரவில்லை என்ற மனக்குறையும், அதிருப்தியும் பலகாலமாக ரசிகர்கள் மத்தியில் நிலை கொண்டுள்ளது.
அவ்வகையில், வீடியோ விளையாட்டாக பலரை கவர்ந்த ’அஸஸின்ஸ் கிரீட்’ என்ற ஆட்டம், ஹாலிவுட்டில் பெரிய திரைக்கான சினிமாப் படமாக உருவாகவுள்ளது என்ற செய்திகளும், இந்தப் படத்தில் இடம்பெறவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியலும், அதையடுத்து வெளியான ஆர்ப்பாட்டமான டிரெய்லரும் ரசிகர்களின் நெஞ்சங்களில் ஒருவிதமான ஆர்வத்தீயை மூட்டி விட்டிருந்தன என்றால், அது மிகையல்ல.
சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ’அஸஸின்ஸ் கிரீட்’ திரைப்படம், அந்த ஆர்வத்தீயை கொளுந்துவிட்டு எரியச் செய்துள்ளதா? அல்லது, நீர்த்துப்போக வைத்துள்ளதா? என்பதை இங்கே பார்ப்போம்!
விபச்சார தரகரை கொன்ற குற்றத்துக்காக படத்தின் நாயகன் கேல்லம் லின்ச்-க்கு (மைக்கேல் ஃபாஸ்பென்டர்) மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், அவனது நன்னடத்தையை காரணம் காட்டி, தண்டனை ரத்து செய்யப்பட்டு, சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறான்.
இந்த மன்னிப்புக்கும், விடுதலைக்கும் பின்னணியில் பிரபல கோடீஸ்வரருக்கு சொந்தமான ஒரு தொழில் நிறுவனம் இருந்துள்ள ரகசியம் கேல்லம் லின்ச்சுக்கு தெரியாமல் பாதுகாக்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் காலத்திலும், சாலமன் மன்னரின் காலத்திலும் நடைபெற்ற சிலுவை யுத்தங்களை எதிர்த்துவந்த புனிதப் போராளிகளின் வம்சாவழியை சேர்ந்த அகுலய்ர் டி நெர்ஹா என்பவரின் நேரடி வழித்தோன்றலான கேல்லம் லின்ச்சை வைத்து, உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அவன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கோடீஸ்வரரின் ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனம் தெரிவிக்கிறது.
‘அனிமஸ்’ என்ற இயந்திரத்துடன் கேல்லம் லின்ச் இணைக்கப்படுகிறான். அந்த இயந்திரத்தின் உதவியுடனும், அவனது மூதாதையரான அகுலய்ர் டி நெர்ஹாவின் பழைய நினைவலைகளின் துணையுடனும் ’ஏடனின் ஆப்பிள்’ என்ற கருவியைத் தேடி, கண்டுபிடிக்கும் காரியத்தில் கடந்தகாலத்தை நோக்கி, கேல்லம் லின்ச் களமிறக்கப்படுகிறான்.
ஆனால், இந்த சாகசத் தேடலில் எல்லாமே திட்டமிட்டப்படி நடக்க சாத்தியமில்லை. தனது வாழ்க்கையைப்பற்றி அறியவந்த சில உண்மைகள் பொய்யான புனைக்கதைகள் என்பதை உணருகிறான்.
அவனை இந்த அரிதான காரியத்தில் களமிறக்கிய ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனம் உண்மையிலேயே உலக அமைதியை விரும்புகிறதா?, ஏடனின் ஆப்பிளை அந்த நிறுவனம் பெறுமா? என்ற கேள்விக்கு ’அஸஸின்ஸ் கிரீட்’ படம் பதில் தருகிறது.
புவிஈர்ப்பு விசைக்கு வசப்படாமல் அந்தரத்தில் உயரப் பறக்கும் சாகச காட்சிகள், கடந்த காலத்தின் பக்கம் பின்நோக்கி செல்லுதல் போன்ற ’அஸஸின்ஸ் கிரீட்’ விளையாட்டின் சிறப்பம்சங்களையும், இந்தப் படத்தின் டிரெய்லரையும் ஒப்பிட்டு பார்த்து, பரவசப்பட்ட ரசிகர்களின் பரவலான எதிர்பார்ப்பை இந்தப் படம் ஓரளவுக்கு நிறைவு செய்கிறது.
படத்தின் முதுகெலும்பாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் சிலிர்ப்பை ஊட்டினாலும், கடந்த காலத்தில் நடைபெற்றதாக காட்டப்பட வேண்டிய திரைக்கதையின் அமைப்பு நிகழ்காலத்தை சுற்றியே வட்டமடிப்பதால், அந்த காட்சிகளை எல்லாம் சுவைபட ரசிக்கவும், ருசிக்கவும் இயலவில்லை என்பது மிகப்பெரிய குறையாகவே தோன்றுகிறது.
கதாநாயகன் மீட்பதற்காக செல்லும் ’ஏடனின் ஆப்பிள்’ கருவியின் செயல்பாடு என்ன?, அது அளிக்கக்கூடிய பலன் என்ன? எப்போது, எந்தச் சூழலில் அதை பயன்படுத்தலாம்? போன்ற விளக்கங்கள் எதுவும் விவரிக்கப்படாததால், இந்த விளையாட்டை பயன்படுத்தி வரும் பலருக்கு படத்தின் திரைக்கதை என்ற அம்சம் ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்துள்ளது.
இதற்கிடையில், ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனத்தின் உரிமையாளரான ஆலன் ரிக்கின்ஸ் (ஜெரெமி அயர்ன்ஸ்) மற்றும் அவரது மகளும் படத்தின் நாயகியுமான சோபியா (மேரியன் கோட்டிலார்ட்) இடையிலான அதிகாரப் போட்டி, நாயகனின் உண்மையான நோக்கம் என்ன? ஆகியவற்றை படத்தின் இயக்குனரான ஜஸ்ட்டின் கர்ஸல் உரிய முறையில் பதிவு செய்ய தவறிவிட்டதால், படத்துக்கும் ரசிகர்களுக்கும் இடையில் உணர்வுப்பூர்வமான ஒட்டுறவு இல்லாமல் போனதை, சில தொய்வான காட்சிகள் நிரூபிக்கின்றன.
மிகசிறந்த நட்சத்திரங்களை தேர்வு செய்திருந்தும், அவர்களுக்கான திறமை பளிச்சிடும் காட்சி அமைப்புகளை வைக்க தவறியதால் ’சும்மா’ திரையில் வந்துபோகும் நடிகர்கள் அளவுக்கே அவர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது இயக்குனரின் மிகப்பெரிய குறை என்றும் கூறலாம்.
மிகப் பிரபலமான வீடியோ விளையாட்டாக அறியப்படும் ’அஸஸின்ஸ் கிரீட்’ பலவீனமான திரைக்கதை மற்றும் அழுத்தமில்லாத பாத்திரப் படைப்பால் ரசிகர்களை பெரிதாக கவர்ந்து, ஈர்க்கத் தவறிவிட்டது.
மொத்தத்தில், ’அஸஸின்ஸ் கிரீட்’ ‘அசட்டு கிரீட்’ ஆகவே தோன்றுகிறது.

இந்த பொங்கலுக்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் இரண்டு படங்களுடன் களமிறங்குகிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'கடவுள் இருக்கான் குமாரு' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும் வர்த்தக ரீதியில் நல்லவிதமாக அமைந்தது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் 'புரூஸ்லீ' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதுதவிர 'ஈட்டி' புகழ் ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்கை பொங்கலுக்கு வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. புரூஸ்லி படத்துடன் பர்ஸ்ட் லுக்கும் வெளியாவதால் ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுக்கு இது இரட்டை விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷ் தற்போது 'அடங்காதே', '4ஜி', 'சர்வம் தாளமயம்' மற்றும் இரண்டு பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பைரவா' பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், ஜி.வி.பிரகாஷும் தனது படத்துடன் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.