என் மலர்
சென்னையில், சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் 150 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவை டைரக்டர் பாரதிராஜா தொடங்கி வைத்தார்.
சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா தமிழக அரசு ஆதரவுடன் வருகிற 12-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 50 நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 150 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
ஐநாக்ஸ், கேசினோ, ரஷியா கலாசார மையம், பெலாஷோ தியேட்டர், ஆர்.கே.வி. திரைப்பட பள்ளி திரையரங்கம் ஆகிய 5 தியேட்டர்களில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த திரைப்பட விழாவில் 12 தமிழ் படங்களும் திரையிடப்படுகின்றன. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘சூரியகாந்தி’ ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன.
சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழா நிகழ்ச்சி சத்யம் திரையரங்கில் நடந்தது. டைரக்டர் பாரதிராஜா இதில் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில், அவர் பேசியதாவது:-
தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த நான் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஆகியோரின் படங்களால் கவரப்பட்டேன். சினிமாவை சொர்க்க பூமியாக கருதி ஒரு மாய மானை போல, இந்த துறைக்கு ஓடிவந்தேன். இங்கு வந்த பிறகு தான் சினிமா என்பது சொர்க்க பூமி அல்ல, ஒரு சமூக ஊடகம் என்பது புரிந்தது.
உலகிலேயே வலிமையான ஊடகம் சினிமா தான். சினிமாவின் கலாசார பரிவர்த்தனைகள் மூலம் உலகமே சுருங்கிவிட்டது. 14 வருடங்களாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருவது பெரிய விஷயம்.
தமிழ் திரைப்பட துறையில் இருப்பவர்கள் தொழில்நுட்பத்தில் உலக அளவில் போட்டிபோடும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்கள். சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் வெளிநாட்டு படங்களை பார்த்து தொழில்நுட்ப அறிவை அவர்கள் மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டும். அதேநேரம் நமது கலாசாரம், பண்பாட்டை வெளிநாட்டவர்களுக்கு சொல்லவேண்டும்.
இவ்வாறு பாரதிராஜா பேசினார்.
விழாவில், டைரக்டர் பாக்யராஜுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, நடிகைகள் சுஹாசினி, ரோகிணி, ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் அருள்பதி, கல்யாண், காட்றகட்ட பிரசாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்தோசினி அப்ரிசியேஷன்ஸ் அமைப்பின் தலைவர் கண்ணன் வரவேற்றார். தங்கராஜ் நன்றி கூறினார்.

பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய "தூயவன்'', ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர்.
பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய "தூயவன்'', ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர். "வைதேகி காத்திருந்தாள்'', "அன்புள்ள ரஜினிகாந்த்'' உள்பட சில படங்களை சொந்தமாகத் தயாரித்தவர்.
திரை உலகில் புகுந்த எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தோல்வியைத்தான் தழுவினர். வெற்றி பெற்ற சில எழுத்தாளர்களில் ஒருவர்
"தூயவன்.''இவர் நாகூரைச் சேர்ந்தவர். இயற்பெயர் எம்.எஸ்.அக்பர். இவருடைய தந்தை ஷாகு ஒலியுல்லா, அந்தக் காலத்திலேயே ஆங்கில இலக்கியத்தில் "பி.ஏ'' பட்டம் பெற்று, தஞ்சையில் ரிஜிஸ்திரார் ஆகப் பணியாற்றியவர்.
ஐந்து பெண்களுக்கு மத்தியில் பிறந்த ஒரே ஆண் வாரிசு என்ற முறையில், தூயவன் மீது பெற்றோர் மிகுந்த அன்பு செலுத்தினர்.
தூயவன், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தந்தை திடீரென்று மறைந்ததால், படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இளமையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார், தூயவன். நாகப்பட்டினம், இலக்கியவாதிகள் நிறைந்த ஊர். அப்துல் வகாப் சாப் என்ற ஆன்மீக இலக்கியவாதியின் தொடர்பு கிடைத்ததால், தன் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள முடிந்தது.
"தினத்தந்தி'', "ராணி'', "ஆனந்தவிகடன்'', "தினமணி கதிர்'' உள்பட பல பத்திரிகைகளில் தூயவனின் கதைகள் பிரசுரமாகி வந்தன.
1967-ம் ஆண்டில், "ஆனந்த விகடன்'' அதன் முத்திரைக் கதைகளுக்கு வழங்கி வந்த நூறு ரூபாய் பரிசுத்தொகையை, 500 ரூபாயாக உயர்த்தியது.
"தூயவன்'' எழுதிய "உயர்ந்த பீடம்'' என்ற கதை, 500 ரூபாய் பரிசு பெற்ற முதல் முத்திரைக் கதையாகும். இதனால், தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்ற எழுத்தாளரானார்.
அது, டெலிவிஷன் இல்லாத காலம். மேடை நாடகங்கள் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தன. மேஜர் சுந்தரராஜன் மேடையிலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கினார்.
தூயவன் சென்னை சென்று, மேஜர் சுந்தரராஜனை சந்தித்தார். தன்னை ஒரு எழுத்தாளர் என்று மட்டும் அறிமுகப்படுத்திக் கொண்டு, கதை-வசனம் எழுதும் வாய்ப்பு கேட்டார்.
உடனே மேஜர், "நீங்கள் எல்லாம் என்னப்பா எழுதுகிறீர்கள்! ஆனந்த விகடனில் தூயவன் என்ற எழுத்தாளர் முத்திரைக்கதை எழுதியிருக்கிறார். கதை என்றால் அப்படி எழுதவேண்டும்! என்ன நடை... என்ன எழுத்து!'' என்றார்.
அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்த தூயவன், "நீங்கள் பாராட்டுகிற அந்தக் கதையை எழுதிய தூயவன் நான்தான்!'' என்று நிதானமாகக் கூறினார்.
மலைத்துப்போய் விட்டார், மேஜர். பிறகு தூயவனை உள்ளே அழைத்துச் சென்று, அவரைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டறிந்தார். மேடை நாடகம் எழுதும் வாய்ப்பை அளித்தார்.
மேஜருக்காக "தீர்ப்பு'' என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார், தூயவன்.
இதே சமயத்தில் ஏவி.எம்.ராஜனும் தூயவனுடன் தொடர்பு கொண்டு நாடகம் கேட்டார். அவருக்காக தூயவன் எழுதிய நாடகம் "பால்குடம்.'' இந்த நாடகம்தான் முதலில் அரங்கேறியது.
"தீர்ப்பு'' நாடகத்தின் 100-வது நாள் விழாவுக்கு, எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.
"நாடகம் மிகச்சிறப்பாக உள்ளது. இந்து சமய கோட்பாடுகளில் எவ்வித பிழையும் நேரிடாமல், மிகவும் நுட்பமாக ஆராய்ந்து நாடகத்தை எழுதியிருப்பவர் ஒரு இஸ்லாமிய சகோதரர் என்பது, ஆச்சரியமான விஷயம்'' என்று எம்.ஜி.ஆர். பாராட்டிப்பேசி, தூயவனுக்கு கெடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார்.
"பால்குடம்'' நாடகமும், அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. அப்போதுதான் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றிருந்தார். நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் இந்த நாடகத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு தூயவனுக்கு பரிசு வழங்கினார்.
இந்த சமயத்தில் தூயவனுக்குத் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் விரும்பினர். தனக்கு மனைவியாக வரும் பெண், இலக்கியத் துறையைச் சேர்ந்தவளாக - எழுத்தாளராக இருக்க வேண்டும் என்று தூயவன் விரும்பினார்.
"தினமணி கதிர்'' வார இதழின் ஆசிரியராக "சாவி'' இருந்த நேரம் அது. "தூயவன்'' எழுதிய "சிவப்பு ரோஜா'' என்ற கதை, பரிசுக் கதையாக அதில் பிரசுரமாகியிருந்தது. அதே இதழில், "செல்வி'' என்ற பெண் எழுத்தாளர் எழுதிய கதையும் பிரசுரமாகியிருந்தது.
"செல்வி'' என்ற புனைப்பெயரில் அந்தக் கதையை எழுதியவர் ஒரு முஸ்லிம் பெண்மணி என்பதும், பெயர் கே.ஜெய்புன்னிசா என்பதும் தூயவனுக்குத் தெரிந்தது.
உடனே தன் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். தூயவனின் தாயார், பெரியம்மா, அக்கா, மாமா ஆகியோர் கோவைக்குச் சென்று, பெண்ணைப் பார்த்தார்கள்.
இரு தரப்பினருக்கும் பிடித்துப்போகவே, தூயவன் என்கிற எம்.எஸ்.அக்பருக்கும், ஜெய்புன்னிசாவுக்கும் 27-9-1968-ல் கோவையில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு ஏவி.எம்.ராஜன் - புஷ்பலதா, மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.
திருமணம் நடந்தவேளை, பட வாய்ப்புகள் தூயவனைத் தேடி வந்தன.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பைரவா' படத்தின் நீளம் குறைக்கப்படுகிறது. அதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பைரவா'. 'அழகிய தமிழ்மகன்' புகழ் பரதன் இயக்கியிருக்கும் இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகக் கூறிய, எடிட்டர் பிரவீன் படத்தின் நீளத்தைக் குறைக்குமாறு இயக்குநர் பரதனைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். குறிப்பாக விஜய் நடித்துள்ள காட்சிகளில் சிலவற்றை நீக்க நினைத்த எடிட்டர் பிரவீன், விஜய்யிடம் இதுகுறித்து கேட்க தயங்கியுள்ளார். பின்னர் ஒருவழியாக விஜய்யிடம் இதுகுறித்து பேசியுள்ளார்.
அதற்கு நடிகர் விஜய் "திரையில் படம் சிறப்பாக வர தேவையானவற்றை செய்யுங்கள். நமக்கு படம்தான் முக்கியம்'' என்று கூறியிருக்கிறார். விஜய்யின் பதிலைத் தொடர்ந்து, தற்போது படத்தின் நீளத்தைக் குறைக்கும் வேலையில் எடிட்டர் பிரவீன் இறங்கியிருக்கிறார். பொங்கல் விருந்தாக 'பைரவா' வரும் ஜனவரி 12-ம் தேதி வெளியாகிறது.

படப்பிடிப்பில் பார்த்திபன் சார் என்னை ரகசியமாகக் கண்காணித்தார் என நடிகர் சாந்தனு தெரிவித்திருக்கிறார். அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
பார்த்திபனின் இயக்கத்தில், சாந்தனு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், டிரைலர் தமிழக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 14-ம் தேதி 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பார்த்திபன் தன்னை ரகசியமாகக் கண்காணித்து வந்ததாக நடிகர் சாந்தனு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் "பார்த்திபன் சார் என்னை ஒரு நாள் அழைத்து, 'நான் கோடிட்ட இடங்களை நிரப்புக' என்கின்ற படத்தை இயக்குகிறேன். அதில் நீ தான் கதாநாயகன். நாளை முதல் படப்பிடிப்பு' என்று கூறினார்'.
ஆரம்பத்தில் எனக்கு சற்று மகிழ்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தாலும், பார்த்திபன் சார் மீதும், அவருடைய கதை மீதும் நான் வைத்திருக்கும் ஆணித்தரமான நம்பிக்கையால், என்ன கதை என்பதை கூட கேட்காமல், படப்பிடிப்புக்கு தயாராகி விட்டேன். சிறிது நாட்களுக்கு பிறகு தான், பார்த்திபன் சார் என்னை இந்த படத்திற்காக ரகசியமாக கண்காணித்து வந்தார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
ஒரு திரைப்படத்தில் வழக்கமாக இருக்கும் அம்சங்களை மாற்றி, ஒரு வித்தியாசமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குபவர் பார்த்திபன் சார். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. நிச்சயமாக 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் மூலம், ரசிகர்கள் ஒரு புதிய சாந்தனுவை காண்பார்கள்'' என்றார்.

'ஏகே 57' படத்தின் பர்ஸ்ட் லுக்கை குடியரசு தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
'வீரம்', 'வேதாளம்' படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் 'ஏகே 57' படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'ஏகே 57' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். அஜித்துக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 'ஏகே 57' படத்தின் பர்ஸ்ட் லுக்கை குடியரசு தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக பொங்கலுக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அமீர்கான் நடிப்பில் வெளியான 'தங்கல்' திரைப்படம் இந்தியா முழுவதும் சுமார் ரூ.300 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் 'தங்கல்'. கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறிப்பாக இப்படத்தில் அமீர்கானின் நடிப்பும், படத்தின் திரைக்கதையும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டுப்படுகிறது. இந்நிலையில் வெளியான 13 நாட்கள் முடிவில் 'தங்கல்' திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன் சல்மான்கான் நடிப்பில் வெளியான 'சுல்தான்', 'பஜ்ரங்கி பைஜான்' அமீர்கான் நடிப்பில் வெளியான 'பிகே' ஆகிய படங்கள் 300 கோடியை வசூலித்து சாதனை படைத்திருந்தது. இதன் மூலம் 300 கோடி கிளப்பில் இணைந்த நான்காவது பாலிவுட் திரைப்படம் என்ற பெருமை 'தங்கல்' திரைப்படத்துக்குக் கிடைத்திருக்கிறது.

சிம்புதேவன் இயக்கத்தில் 24-ம் புலிகேசியாக வடிவேலு நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
கடந்த 2006ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படம் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், வர்த்தக ரீதியிலும் நல்லவிதமாக அமைந்தது.
இப்படத்தைத் தொடர்ந்து, வடிவேலு ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்தும் தயாரிப்பாளர்களுக்கு தோல்வியையே அளித்தன. இதனால் சில காலம் நடிப்பில் இருந்து விலகியிருந்த வடிவேலு விஷாலின் 'கத்திச்சண்டை' படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அடுத்ததாக இவரது நடிப்பில் 'சிவலிங்கா' திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், வடிவேலு மீண்டும் சிம்புதேவனுடன் இணைந்து '23-ம் புலிகேசி'யின் 2-ம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் 23-ம் புலிகேசி அரசருக்கு பிறக்கும் வாரிசுகள் தான் படத்தின் நாயகர்கள். இதில், புலிகேசி அரசரின் மகன்களாக காமெடி மற்றும் சீரியஸ் என இரட்டை வேடங்களில் வடிவேலு நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு '24-ம் புலிகேசி' என படக்குழு பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம்-வேதா படத்தில் நடிகர் மாதவனின் கதாபாத்திரம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகர் மாதவன் 'ரீ-என்ட்ரி' ஆகியிருக்கிறார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், புஷ்கர் காயத்ரி இயக்கும் ‘விக்ரம் வேதா’ படத்தில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டார். இதில் மாதவனுடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
'விக்ரம்-வேதா' படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் மாதவனும், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்க்ஸ்டராக விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் மாதவனின் தோற்றம் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகர் மாதவன் 'விக்ரமாதித்யன்' என்னும் பெயரில் தான் நடித்து வருவதாகக் கூறி புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மாதவனின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

பகவதி பாலா, செல்வா, காயத்ரி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘தலையாட்டி பொம்மை’ திரைப்படம் எப்படியிருக்கிறது? என்பதைக் கீழே பார்ப்போம்.
ஒரு வீட்டில் வசிக்கும் மூன்று நண்பர்கள் பெண்களை ஏமாற்றி தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களைக் கெடுத்துக் கொன்று விடுகின்றனர். ஒருநாள் ஹீரோயின் காயத்ரி தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வருகிறார். மூன்று நண்பர்களில் ஆட்டோ டிரைவராக வரும் பகவதி பாலா காயத்ரி மற்றும் அவரது காதலனை ஏமாற்றி தங்களது வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து காயத்ரியின் காதலனைக் கொன்று விடுகின்றனர். காதலனை காப்பாற்றப் போராடும் காயத்ரியையும் அடித்து விடுகின்றனர். இதில் காயத்ரி மயக்கமடைந்து விடுகிறார். ஆனால், காயத்ரி இறந்து விட்டதாகக் கருதும் மூவரும் வீட்டின் தோட்டக்காரனை அழைத்து நாயகியை வீட்டிற்கு பின்னால் புதைத்து விடும்படி கூறுகின்றனர்.
இதற்கிடையில் காயத்ரி உயிரோடு இருப்பதை அறிந்த தோட்டக்காரன் அவர் மீது இரக்கம் கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுக்கிறார். நண்பர்கள் மூவரும் தங்கியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர் அமெரிக்காவிலிருந்து வர, தோட்டக்காரன் மற்றும் வீட்டின் உரிமையாளர் உதவியுடன் காயத்ரி அந்த வீட்டில் வந்து தங்குகிறார்.
வீட்டில் அவரைப் பார்க்கும் நண்பர்கள் மூவரும் காயத்ரி பேய் வடிவில் வந்து விட்டதாக பயப்படுகின்றனர். அதற்கேற்றவாறு காயத்ரியும் பேய் போல நடித்து நண்பர்கள் மூவரையும் மிரட்டுகிறார். ஒருகட்டத்தில் காயத்ரிக்கு உண்மையிலேயே பேய் பிடிக்கிறது. இறுதியில் காயத்ரியைப் பிடித்த பேய் அவளைவிட்டு விலகியதா? நண்பர்கள் மூவரும் திருந்தினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
'தலையாட்டி பொம்மை' என தலைப்பு வைத்து பேய்க்கதை ஒன்றை திகிலுடன் சொல்ல இயக்குனர் பகவதி பாலா முயற்சி செய்திருக்கிறார். ஆனால், தொடர்பில்லாத கதை, வலுவில்லாத திரைக்கதை, மோசமான ஒளிப்பதிவு, தெரிந்த நடிகர்கள் இல்லாதது போன்றவற்றால் அவரின் முயற்சி ரசிகர்களைக் கவரவில்லை.
மொத்தத்தில் 'தலையாட்டி பொம்மை' தள்ளாட்டம்.

குழந்தைகளிடம் நல்ல பழக்கத்தை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் வலியுறுத்த வேண்டும் என நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி கூறியிருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
நெய்வேலி என்.எல்.சி. அதிகாரிகள் சங்கம் சார்பில், சங்க வளாகத்தில் புத்தாண்டு தினவிழா நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக 'சாட்டை', 'அப்பா' உட்பட பல வெற்றிப்படங்களை தயாரித்து இயக்கியவரும், நடிகருமான சமுத்திரக்கனி கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசும்போது "ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தை அமர்க்களமாக நாம் கொண்டாடுகிறோம். பெற்றோர்களாகிய நாம், நமது குழந்தைகளிடம் நல்ல பழக்கத்தை மேற்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்.
உதாரணமாக, இந்த புத்தாண்டு முதல் யாரிடமும், எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசமாட்டேன், இப்படி ஏதாவது ஒன்றை மனதில் ஏற்று நடக்க குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். எனது திரைப்படங்களில் குழந்தைகளை விட பெற்றோர்கள் கையாள வேண்டியவை குறித்து தான் அதிகமாக வலியுறுத்தியுள்ளேன்" என்றார்.
'தொண்டன்', 'கிட்ணா' ஆகிய படங்களை இயக்கி வரும் சமுத்திரக்கனி தற்போது தனுஷின் 'விஐபி2' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் 'எஸ் 3' திரைப்படம் தணிக்கையில் 'யு' சான்றிதழைப் பெற்றுள்ளது.
'சிங்கம்', 'சிங்கம் 2' படங்களைத் தொடர்ந்து சூர்யா-ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் 'எஸ் 3'. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா, சுருதிஹாசன், கிரிஷ், சூரி, ராதிகா சரத்குமார், நாசர், ராதாரவி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். இந்நிலையில் எஸ் 3 படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் இப்படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
முன்னதாக தணிக்கையில் இப்படம் 'யு/ஏ' சான்றிதழ் பெற்றது. இதனால் படத்தின் சில காட்சிகளை நீக்கிய படக்குழு மீண்டும் தணிக்கைக்கு இப்படத்தை அனுப்பி வைத்தது. படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் தற்போது இப்படத்துக்கு 'யு' சான்றிதழை வழங்கியுள்ளனர்.
'எஸ் 3' படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள். ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.

இளைஞர் காங்கிரஸ் எதிர்ப்பால் கேரளாவில் 'பைரவா' வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த 'பைரவா' படம் வருகிற 12-ந்தேதி திரைக்கு வருகிறது. விஜய்க்கு கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளதால், அங்கும் 75 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாகிறது. இதற்கான தீவிர ஏற்பாடுகளை பட விநியோகஸ்தர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் 'பைரவா' படத்தை வெளியிட கேரள மாநில இளைஞர் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளாவில் மலையாள படத்தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி முதல் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.
இதனால் மலையாள படங்கள் வெளியாவது தடைபட்டுள்ளது. மலையாள படங்கள் வெளியாகாத நிலையில், பிறமொழி படங்களை மாநிலத்தில் வெளியிடக்கூடாது. எனவே அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படங்களை தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க முடியாது என்று இளைஞர் காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த திடீர் எதிர்ப்பால் கேரளாவில் 'பைரவா' மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் 'எஸ் 3' ஆகிய படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணுமாறு கேரளாவில் உள்ள விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.