என் மலர்
தி.மு.க. செயல்தலைவர் பதவி வழங்கி இருப்பது என் தந்தையின் உழைப்புக்கு கிடைத்த உன்னத பரிசு என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘‘பொதுவாக என் மனசு தங்கம்’’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், நகைச்சுவை நடிகர் சூரி உள்பட பலர் நடித்து வருகிறார்கள்.
சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.
ஓய்வின் போது உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேள்வி:- மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க செயல் தலைவர் பதவி அளிக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- எனது தந்தை மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அவருடைய உழைப்புக்கு கிடைத்த உன்னத பரிசு.
கேள்வி:- நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் நீங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் யாருக்கு ஆதரவு அளிப்பீர்கள்?
பதில்:- என்னுடைய படங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கமோ, நடிகர் சங்கமோ இதுவரை எந்த உதவியும் செய்தது கிடையாது. இதனால் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.
கேள்வி:- ஜல்லிக்கட்டு பிரச்சனையில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்:- அரசியல் ரீதியாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகிறது. எனது தந்தை தலைமையிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் இதுகுறித்து நான் பேச விரும்பவில்லை. இருப்பினும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
கேள்வி:- பொதுவாக எம்மனசு தங்கம் படம் குறித்து?
பதில்:- நான் முதன் முதலாக வேறு தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன். நானும் சூரியும் ஏற்கனவே 'சரவணன் இருக்க பயமேன்' என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தோம். அதன் பின்னர் இந்த படத்தில் மீண்டும் ஒன்றாக நடிக்கிறோம். தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த படத்தில் நடிகர் பார்த்திபன் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார். முதன்முதலாக அவருடன் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய நடிப்பில் வழக்கமாக இருக்கும் நக்கல் இந்த படத்திலும் நிறையவே எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஜெய்யுடன் நடிப்பதின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வரும் பிரணிதா தான் அந்த படத்தின் வில்லியாம். இதுகுறித்த தகலை கீழே பார்க்கலாம்.
மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய், பிரணிதா நாயகன்-நாயகியாக நடிக்கும் படம் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. இந்த படத்தில் நாயகியாக நடிக்க பல நடிகைகளிடம் கேட்டும் நடிக்க மறுத்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. காரணம் இதில் நாயகி, நாயகனை காதலித்து ஏமாற்றி வில்லத்தனம் செய்வது போன்ற வேடம்.
இந்த கதையை பிரணிதாவிடம் சொன்னவுடன், ‘இந்த மாதிரியான கதாபாத்திரத்தை தான் எதிர் பார்த்தேன்’ என்று கூறி மகிழ்ச்சியுடன் நடித்து இருக்கிறார். நடிப்பு சிறப்பாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
எப்படியோ ‘சகுனி’ படத்துப்பிறகு இதில் மீண்டும் தமிழ் பட நாயகியாகி இருக்கிறார். இதுதவிர ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்திலும் பிரணிதா நடித்து வருகிறார்.

ஒரு வருடமாக நடந்து வந்த ‘பாகுபலி-2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிவரும் படம் ‘பாகுபலி-2’. ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது அதன் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே 2-ம் பாகத்துக்கான 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மீதம் உள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு 2015-ம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. ஒரு வருட காலமாக நடந்து வந்த இந்த படப்பிடிப்பு நேற்று (6-ந் தேதி) பிரபாஸ் சம்பந்தப்பட்ட காட்சியுடன் நிறைவு பெற்றது.
‘பாகுபலி’ இரண்டு பாகங்களையும் சேர்ந்தால் மொத்தம் 613 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. இந்திய திரையுலகில் வேறு எந்த படத்துக்கும் இவ்வளவு நாள் படப்பிடிப்பு நடந்தது இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
‘பாகுபலி’ படத்துக்காக மட்டும், பிரபாஸ் தன்னை 3½ வருடங்கள் ஈடுபடுத்திக் கொண்டார் என்று இயக்குனர் ராஜமவுலி மனம் திறந்து பாராட்டியுள்ளார். இத்தனை நாள் ஒரே குடும்பமாக ‘பாகுபலி’ படப்பிடிப்பில் பங்கேற்ற படக்குழுவினர் மனநெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ஒருவரை ஒருவர் பிரிவது குறித்து வருத்தப்பட்டார்கள். படப்பிடிப்பின் நினைவுகளை பகிர்ந்து கொண்டபடியே நீண்டநோரம் பேசிக்கொண்டிருந்தனர்.
இது பற்றி இணைய தளத்தில் தெரிவித்துள்ள ராஜமவுலி, ஒரு பூசணிக்காய் படத்தை வெளியிட்டு இன்று ‘பாகுபலி’ படப்படிப்பு நிறைவு, என்று குறிப்பிட்டுள்ளார். இது போல் பிரபாஸ் ஒரு பூசணிக்காயுடன் போஸ் கொடுக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.

கணவர் ஏ.எல்.விஜயை பிரிய தனுஷ் காரணம் என்று கூறப்பட்டதற்கு அமலாபால் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
அமலாபால் அவரது கணவர் விஜய்யை பிரிந்து வாழ்கிறார். இதற்கு காரணம் தனுஷ் என்று முன்பு புரளி கிளம்பியது. இதற்கு அமலாபால் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்...
“ நானும் என் கணவர் விஜய்யும் விவாகரத்து கேட்டு பிரிந்ததற்கு காரணம் தனுஷ் என்று கூறுகிறார்கள். இதில் உண்மை இல்லை. இந்த விஷயத்துக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. நானும் விஜய்யும் பிரிய முடிவு செய்ததை அறிந்த தனுஷ் அதிர்ச்சி அடைந்தார். பிரிய வேண்டாம் என்று எவ்வளவோ சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
தனுஷ் எனக்கு நல்ல நண்பர். அவ்வளவுதான். அதைத் தவிர எங்களுக்குள் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் போது அவருடன் என்னை சேர்த்து பேசுவது மோசமானதாக இருக்கிறது. வருத்தம் அளிக்கிறது.
தனுஷ் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். எதுவுமே இல்லாமல் என்னையும், தனுசையும் பற்றி ஏதேதோ பேசப்படுவதால் அவரைப் பார்க்க கூட சங்கடமாக இருக்கிறது” என்றார் ஆவேசமாக.

தனுஷ்-வெற்றி மாறனின் 'வட சென்னை' படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் 'புரியாத புதிர்' பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது. இதுதவிர 'கவண்', 'கருப்பன்', 'விக்ரம்-வேதா', '96', 'அநீதி கதைகள்' உள்ளிட்ட அரை டஜன் படங்களில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் தனுஷின் 'வட சென்னை' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வட சென்னை' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் தனுஷின் கால்ஷீட் பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் தனுஷுக்காக காத்திருப்பதால் இப்படத்துக்காக விஜய் சேதுபதி பலமுறை கால்ஷீட் கொடுத்தும் அவரின் கால்ஷீட் தேதிகள் வீணாகி விட்டதாகவும், இதனால் தான் இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தனுஷின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த வெற்றிமாறன் தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார்.

பொங்கலுக்கு ரிலீசாக உள்ள விஜயின் 'பைரவா' முதல்நாள் வசூலில் சாதனை படைக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
பொங்கல் பண்டிகையில் சிறு பட்ஜெட் மற்றும் அதிக பொருட்செலவில் தயாரான ஆறு அல்லது ஏழு படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் 'பைரவா', 'கோடிட்ட இடங்களை நிரப்புக', 'புரியாத புதிர்' ஆகிய 3 படங்கள் மட்டுமே வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறு பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் அவை திரைக்கு வருவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ்-கிர்த்தி கர்பண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'புரூஸ்லி' படமும் பொங்கல் ரேஸில் இருந்து விலகி பிப்ரவரியில் ரிலீசாகிறது.
'பைரவா' பொங்கல் ட்ரீட்டாக 12ம் தேதியே திரைக்கு வர உள்ளது. அன்று ஒரே நாளில் தமிழகத்தில் அதிகளவிலான (சுமார் 450) திரையரங்குகளில் 'பைரவா' வெளியாக உள்ளது. இதன்மூலம் முதல்நாள் வசூலில் 'கபாலி', 'வேதாளம்', 'தெறி' படங்களின் வசூலை 'பைரவா' முந்த வாய்ப்பு உள்ளது.
'பைரவா'-வை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் 'புரியாத புதிர்' ஜனவரி 13-ம் தேதியும், பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' 14-ம் தேதியும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

'ரேணிகுண்டா' பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்திற்கு 'கருப்பன்' என பெயர் வைத்துள்ளனர். அதுகுறித்த செய்தியை விரிவாகப் பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவரும் விஜய் சேதுபதி தனது அடுத்தடுத்த படங்களை கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். கடந்த வருடம் இவரது நடிப்பில் ஆறு படங்கள் வெளியாகி சாதனை படைத்தன. அதேபோல இந்த வருடக் கணக்கை தனது 'புரியாத புதிர்' படத்தின் மூலம் தொடங்கவிருக்கிறார்.
இந்நிலையில் 'ரேணிகுண்டா' புகழ் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு 'கருப்பன்' என படக்குழு பெயர் சூட்டியுள்ளது. விஜய் சேதுபதிக்கு நாயகியாக ரித்திகா சிங் நடிக்கவிருக்கிறார். மற்றொரு நாயகி வேடத்துக்கு லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 11-ம் தேதி தொடங்குகிறது. 'பீட்சா', 'சூது கவ்வும்', 'ஜிகர்தண்டா', 'இறைவி' ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாபி சிம்ஹா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை(ஞாயிற்றுக்கிழமை) திருப்பதி கோவிலை அலங்காரம் செய்வதற்காக பூக்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சேலத்தில் இயங்கி வரும் திருமலை ஸ்ரீ திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு சிறப்பு உற்சவத்திற்கும் பக்தர்களிடம் இருந்து பூக்கள் பெற்று அனுப்பப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை(ஞாயிற்றுக்கிழமை) திருப்பதி வெங்கடேசபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி கோவிலை அலங்காரம் செய்வதற்காக மேரிகோல்டு, துளசி, சாமந்தி, சம்பங்கி, அரளி ஆகிய பூக்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று சேலம் சங்கர் நகரில் உள்ள வன்னியர்குல சத்திரியர் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பூக்களை இலவசமாக மண்டபத்திற்கு கொண்டு வந்து தொடுத்தனர். பூக்கள் கட்டும் நிகழ்ச்சி மாலை 4 மணி வரை நடந்தது. அதன் பின்னர் 2½ டன் பூக்கள் லாரி மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை திருமலை ஸ்ரீ திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

சற்குணம் இயக்கத்தில் பழங்குடியைச் சேர்ந்த இளைஞராக மாதவன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகர் மாதவன் 'ரீ-என்ட்ரி' ஆகியிருக்கிறார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், புஷ்கர் காயத்ரி இயக்கும் விக்ரம் வேதா படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதில் மாதவனுடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடித்து வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விக்ரம்-வேதா படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் மாதவனும், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்க்ஸ்டராக விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாதவன், இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய், ரெக்க படத்தை தயாரித்த காமன் மேன் பி.கணேஷ் தயாரிக்க உள்ளார். இப்படம் முழுக்கமுழுக்க காடுகளில் எடுக்கப்பட உள்ளது. இதற்காக தாய்லாந்து, மங்கோலியா, தஜகஸ்தான் காடுகளில் படத்தை பிரம்மாண்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். குழந்தைகள் ரசித்து பார்க்கும் வகையில் இப்படம் எடுக்கபப்பட உள்ளதாக சற்குணம் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதுகுறித்த விவரங்களை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். 'அடங்காதே', '4ஜி', 'சர்வம் தாளமயம்', ரவி அரசுவின் புதிய படம், சசி இயக்கத்தில் ஒரு படம் என ஐந்து படங்கள் தற்போது இவரின் கைவசம் உள்ளன.இதுதவிர இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் 'புரூஸ்லி' திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கி வரும் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போனதால், தற்போது படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த இடைவெளியைப் பயன்படுத்தி புதிய படமொன்றை இயக்கத் திட்டமிட்ட வெற்றிமாறன் ஜி.வி.பிரகாஷை சந்தித்து கதை சொல்ல, கதை பிடித்துப் போனதால் ஜி.வி.பிரகாஷும் உடனே கால்ஷீட் கொடுத்து விட்டார். தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்ரீகிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்', 'ஆடுகளம்','விசாரணை' போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் தற்போது அவரது இயக்கத்திலேயே நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

'ஏஏஏ' படப்பிடிப்பு செட்டுக்கு நேரடியாக வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அனிருத். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வருகிறார். முதன்முறையாக 3 வேடத்தில் நடிக்கும் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா நடித்து வருகின்றனர். மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சிம்பு எழுதி பாடிய 'டிரெண்ட் சாங்'கை படக்குழு வெளியிட்டது. சமூக வலைதளங்களில் டிரெண்ட்டான இந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு செட்டுக்கு நேராக வந்த இசையமைப்பாளர் அனிருத், சிம்பு மற்றும் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து, 'ஏஏஏ' பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் அனிருத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“சினிமா ஆசையில் இளம்பெண்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்” என்று நடிகை இலியானா கூறியுள்ளார். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
நடிகை இலியானா அளித்த பேட்டி வருமாறு:-
“சினிமா எனது உயிர் போன்று இருக்கிறது. ஆனால் அதிலேயே மூழ்கி விடாதே என்று எனது இதயம் சொல்கிறது. இதயம் சொல்வதைத்தான் நான் கேட்கிறேன். சினிமாவே உலகம் என்று இருக்க மாட்டேன். சினிமா நிறைய பெண்கள் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமாவில் நடித்து பெரிய கதாநாயகியாக உயர வேண்டும் என்று வெறியோடு வந்த பல இளம் பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை. அந்த பெண்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி, வாழ்க்கையையே தொலைத்து விட்டு நிற்பதை நேரில் பார்த்து இருக்கிறேன். அவர்களை பார்த்து என்னை பக்குவப்படுத்தி உள்ளேன்.
சினிமாவில் எந்த திட்டமிடுதலும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறேன். பட வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன். இல்லாவிட்டால் கவலைப்பட மாட்டேன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய பட உலகில் 7 ஆண்டுகள் நிலைத்து இருந்தேன். அதன் பிறகு இந்திக்கு வந்தேன். தென்னிந்திய மொழி படங்களில் நடிப்பது எளிதானது. ஒரு படத்தை மூன்று, நான்கு மாதங்களில் எடுத்து விடுவார்கள். இந்தியில் தொழில் நுட்ப பணிகளுக்கு நிறைய காலம் எடுத்துக்கொள்கிறார்கள்.
சினிமாவில் நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்ற எதிர்பார்ப்பெல்லாம் எனக்கு இல்லை. அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியாத அளவுக்கு வாழ்க்கை பயணத்தை நகர்த்த வேண்டும். எனக்கு 30 வயது ஆகிறது. வயதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. வயது என்பது வெறும் நம்பர்தான். 23 வயதானவர் போல் இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் சொல்லும்போது மகிழ்கிறேன்.
திருமணம் பற்றி திட்டமிடவில்லை. நேரம் வரும்போது அது நடக்கும். நானும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனது சொந்த வாழ்க்கை பற்றி பேச விரும்பவில்லை. ஆண்ட்ரூ மிகச்சிறந்த மனிதர். என்னையும் சிறந்த பெண்ணாக மாற்றி இருக்கிறார். அவரிடம் உண்மை இருக்கிறது.”
இவ்வாறு இலியானா கூறினார்.